குறும்படப் பக்கம்

எத்தனை நாள் ஆச்சு, இந்த மாதிரி ஒரு குறும் படம் பார்த்து !

எவ்வளவு பரிசுகள்? எவ்வளவு  பார்வையாளர்கள்?

பார்த்து ரசியுங்கள்!

 

ஒரு படிப்பினையான குறும் ஆவணப் படம் 

குழந்தை மனநலம் பற்றி யோசிக்கும் மக்கள் , ஆசிரியர் மன நலம் பற்றி யோசித்ததன் விளைவோ ?

 

 

 

 

குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – அக்டோபர் 2023 – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாதக் குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:

பரிசு வழக்கம்போல்  ரூபாய் 100 ; சரியான விடையை எழுதியர்களில் குலுக்கலில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு!

 

https://beta.puthirmayam.com/crossword/51F75E54FE

 

சென்ற ( செப்டம்பர்) மாத குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதியவர்கள்:

  1. மதிவாணன்
  2. மெய்யழகி
  3. அம்புஜவல்லி 
  4. கௌரிசங்கர்
  5. ராதிகா பட்டாபிராமன்
  6. மோனிஷா
  7. கதிர் கண்ணன்
  8. தயாளன்
  9. துரை தனபாலன்
  10. விஜயலட்சுமி கண்ணன்
  11. ரேவதி பாலு
  12. ஜெயாஸ்ரீராம்
  13. இந்திரா ராமநாதன்
  14. ராமசாமி
  15. மனோகர்
  16. ஜானகி சாய் 
  17. பச்சைமால் கண்ணன்
  18. ராய செல்லப்பா
  19. ராமமூர்த்தி
  20. உஷா ராமசுந்தர் 
  21. கமலா முரளி   
  22. ரேவதி ராமச்சந்திரன் 

அதில் குலுக்கலில் வெற்றி பெற்றவர்: ஜெயா ஸ்ரீராம் 

 

அனைவருக்கும் பாராட்டுதல்கள்!

 

 

விண் ஈர்ப்பு விசை – இரஜகை நிலவன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவிதை தொடர்கிறது ……..

இன்னும் கனவுகள் ….

என்னையே தேடி
இன்று போல் கனவுகளும் என்னை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
எப்போதும் கனவுகளிலே

இருப்பினும்
காணாமல் போகிறது
இந்த விந்தையான தினங்கள்!

விடியல் எப்போதும்
எல்லோருக்கும் விடிந்து கொண்டிருக்க….
எனக்கு மட்டும் இருட்டை
உருட்டிக் கொண்டிருக்கிறது
இதய அறைக்குள்ளே…..

ஆதவனின் கதிர்கள்
சுட்டெரிப்பதற்கு பதிலாக
அசட்டையாக
கேலி செய்கிறது ….

தேடி ஓடும் வேளையில்
எல்லாம் எதைத் தேட வேண்டுமோ
அதை விட்டு மற்றவற்றை
தேடிக் கொண்டிருக்கிறது
மனசில் விழுந்த கீறல்கள்

விழுந்தால் விதையாக
விதையின் விருட்சமாக விரிந்து

இன்னும் விதையாகி விருட்சமாக
விரிந்து கொண்டிருக்கிறேன்

விழும் போது புவி ஈர்ப்பு விசையும்
மண்ணில் விழுந்த விதையாக
இருப்பவன் விருட்சமாக
விண் ஈர்ப்பு விசையில்
இன்னும் புவியியலை
மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கும்
தளிர்களாக …..

முற்றுப்புள்ளிகளாக மாற
துடிக்கும் வாழ்க்கை
இன்னும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது

போலியாகவும் புலால் உண்ணாத
புலியாகவும் இருக்க
மனதில் போட்டிகள்…..

விதைகளின் வீரியத்தில்
தளிர்கள் புவியியலை மாற்றி
முளைத்தெழும் ….
விண் ஈர்ப்பு விசைக்கு
இழுத்துச் செல்கிறது
நிசங்களின் தங்க முலாம்கள்…

வாழ்க்கையின் வழியில்
எங்கே பயணம்
எங்கே பாதை புரியாமல்
கால்கள் எங்கும் தடுமாறி
பயணம் செய்து கொண்டிருக்கிறது ….

இன்னும் தேடுகிற மனம்
எதையோ தேடி கிடைக்காமல்
கிடைத்ததை குரங்கு கையில் மாலையாக
பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறது

நாளைகளின் வாழ்க்கை
எங்கு தேடினும் கிடைக்காமலே
கனவுகளின் ஓரத்து
கடல் அலைகளில் ஓரத்தில்
ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியில் நுரை தள்ளிய குதிரை
வாடிக்கையாக …..

என்ன சொல்ல
என்ன புரிய
இன்னும் இழுத்து கொண்டு ஓடுகிறது
சாட்டையின் வலி தாங்காமல்……

இலக்கியத்தில் வானிலைச் செய்திகள் – முனைவர் கு.வை.பா

 

  1. சங்கப் புலவர்களின் அறிவியல் அறிவு

சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகும். பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல், மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல்  பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள  முடியும்.

சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் பி.எல். சாமி “சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்” என்ற நூலில் செடி, கொடிகள் பற்றிப் பல செய்திகளை விளக்குகிறார். அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist) கண்டுபிடித்தவையோடு  ஒத்திருக்கின்றன.

தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம், வானவியல், சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தாலஸ் (கிமு 639-544), அனாக்ஸிமாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் (கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம்.

உயிரினப் பாகுபாட்டை உலகில் முதன்முதலில் தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே’

(தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், நூற்பா 26-27)

உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும்  பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.

புறநானூற்றில் இடம் பெறும் ஒரு பாடல் பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு எத்தகையது என்பதைப் பாடுகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந்து அறிந்தோர்போல என்றும்

இனைத்து என்போரு முளரே

(புறநானூறு, பாடல் எண் 30, வரிகள்1-7, பாடியவர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி)

 

‘செஞ்ஞாயிற்றின் செலவு’ என்றால் அதன் இயக்கம் எனக் கருதலாம்; அதாவது கதிரவன் பயணிக்கும் வீதி எனக் கருதலாம்; தற்போது சூரியன் நிலநடுக்கோட்டிலிருந்து 30 டிகிரி வடக்கு அட்சரேகை வரை சென்று, பின்னர் நிலநடுக்கோட்டை கடந்து 30 டிகிரி தேற்கு அட்சரேகை வரை சென்று, மீண்டும் நிலநடுக்கோடு வரை வருவதை சூரியனின் தோற்ற இயக்கம் (apparent motion) எனச் சொல்லுகிறோம்; இதைப் பற்றியும் சங்கலாலப் புலவர்கள் அறிந்திருக்கக்கூடும்.

இவ்வாறு ஞாயிற்றின் செலவும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமாகிய கோள்களும் இந்த அண்டமும் காற்று இயங்குகின்ற திசையையும் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

சூரியக்குடும்பம்

சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.

சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழு துணரும்

சான்ற கொள்கைச்சாயா யாக்கை

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்

( மதுரைக்காஞ்சி, வரிகள் 477-481 )

 

பழங்காலத்தில் வாழ்ந்து வந்த துறவியர் சிலர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என ஒரு கருத்து உண்டு. இதனைக் குறிப்பிடும் வண்ணம் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது.

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரும் உளரோநம் காதலோரே.

 

இந்தப் பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தின் உள்ளே சென்றிருக்க மாட்டார்; கடலின் மீது நடந்து சென்றிருக்க மாட்டார்; கவலைப்படாதே என்ற தேற்றுவதாக ஒரு  அறிவியல் செய்தி வருகின்றது.

வான வெளிப் பயணம்

வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத தானியங்கி விமானங்களை (ட்ரோன்களை) வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது.  இக்கருத்தினை

வலவன் ஏவா வானவூர்தி எய்துப ………….

(புறநானூறு, பாடல் 27)

என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர் என்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

 

 

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I - தமிழர் உலகம்

‘சோழன் அதிராஜேந்திரன் மர்ம மரணம்! அடுத்த மன்னர் யார்’ என்று அந்நாளில் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. நாட்டில், குழப்பம் குடிகொண்டிருந்தது. அடுத்த சோழமன்னன் ‘யாரோ’ என்று மக்கள் குழம்பியிருக்க, அநபாயன் சோழமன்னன் ஆனான். குலோத்துங்கன் என்ற பட்டப்பெயர் கொண்டான். அந்த சந்தர்ப்பங்களைப் பற்றியோ, அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியோ விவரங்கள் கிடைக்கவில்லை. அதைப்பற்றி நாம் ஏதாவது எழுதி, நமக்கு எதுக்கு வம்பு! விஜயாலய சோழனின் நேரடி வாரிசு இன்றி, அதிராஜேந்திரனின் மறைவில், சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது.

நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam - குலோத்துங்க சோழன் வரலாறு! உடன்  பிறந்த பெண்டிர் மதுராந்தகியும் குந்தவையும்மேற் கொண்டு இருந்த அறப்பணிகள் ...குலோத்துங்கனுடைய குலக் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்: முதலாம் ராஜராஜ சோழனுடைய மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனுக்கும் பிறந்து, கீழைச் சாளுக்கிய நாட்டை, வேங்கியைத் தலைநகராகக் கொண்டு, ராஜராஜ நரேந்திரன் (கி.பி. 1011-1060) ஆண்டான். முதலாம் ராஜேந்திர சோழன், தன் மகள் அம்மங்காதேவியை ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் முடித்துத் தந்திருந்தான். ராஜராஜ நரேந்திரனுக்கும் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் (நமது குலோத்துங்கன்). சோழ நாட்டில், தாய் வீட்டில் பிறந்து, தாய்ப்பாட்டனுடன் வளர்ந்து, தமிழ் கற்று, போர்க்கலைகளையும் பயின்றான். இளம்பருவத்திலேயே சோழநாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருந்தான். கி.பி. 1060 இல் தந்தை ராஜராஜ நரேந்திரன் இறந்தது முதல், சுமார் பத்து ஆண்டுகள் இவனது வரலாறு அறியப்படவில்லை. அதை சாண்டில்யன் கடல்புறாவில் காட்டியிருப்பார். இக்காலத்தில், கீழைச் சாளுக்கிய நாட்டை, அநபாயனின் சிற்றப்பன் மகன் இரண்டாம் சக்திவர்மன், சிற்றப்பன் ஏழாம் விசயாதித்தன் ஆகியோர் அடுத்தடுத்து ஆண்டனர். (நீங்கள் நினைத்தது சரி தான்..மகன் சக்திவர்மன் இறந்த பிறகு தான் தந்தை விசயாதித்தன் ஆண்டான்)

குலோத்துங்கனின் ஆரம்ப காலங்கள் போர்க்காலங்கள். ஆட்சியை நிலைப்படுத்தும் பொருட்டு ஏற்பட்ட போர்கள் ஆதலால், அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் இருந்தது. துணை நின்று போர் புரிய தலை சிறந்த படைத் தலைவர்கள் இருந்தனர்.

பட்டமேற்ற உடனே, சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர். சில காலங்கள் போரிலும், கலகங்களை அடக்குவதிலுமே செலவிட நேர்ந்தது. இவ்வாறு, அருகே நிகழ்ந்த குழப்பத்தினில், நூறு ஆண்டுகள் இருந்து வந்த ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப்பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆறாம் விக்கிரமாதித்தன், சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான். குலோத்துங்கன், விக்ரமாதித்த சாளுக்கியனுடன் போர் புரிந்தான். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவியாக (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனைப் பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழப் படைகளோ சாளுக்கியப் படைகளை முன்னே வேகமாக தாக்க ஆரம்பித்தன. குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை வென்று, சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து, சோழநாடு திரும்பினான். வழியில், கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.

சாளுக்கியப் போரினை வென்று, அவன் நேராக பாண்டிய நாடு நோக்கி சென்றான். சோழப்படைத்தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே, அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான். சோழர்களின் படைத் தளபதி கருணாகரத்தொண்டைமானும், உடையான் ஆதித்த வேடவனாமுடையானும், பொன்னமராவதி அருகே முகாமிட்டு, குலோத்துங்கனுக்காகக் காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன், படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து, கலகத்தில் ஈடுபட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கினர். குலோத்துங்கன், இளவரசன் விக்கிரமனைப் பாண்டிய சோழன் என்ற பெயருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான்.

சேர யுத்தம்:

ராஜராஜ சோழனின் காலம் தொட்டு, காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. ஆயுதக் கிடங்காக இருந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள், பாண்டியர்கள் தோற்பதைக் கண்டு பின்வாங்கினர். காந்தளூர் அருகே, சேரமன்னன் ரவி மார்த்தாண்டவர்மன் தயாராக இருந்தான்- குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கலகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன், சேரர்களை எதிர்நோக்கிச் சென்றான். சேரர்கள், பாண்டியர்களைவிட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை, பின் வாங்கி கடலோடியது. பாண்டியப்படையும், இலங்கைப்படையும், சேரப் படைக்கு உதவினார்கள்.

கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் இருவரது தலைமையில் போரில் ஈடுபட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால், அவர் நேராக காந்தளூர் போரிற்குப் படையுடன் வந்தார். குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்துப் போரிட்டான். சேர ரவி மார்த்தாண்டவர்மன், குலோத்துங்கனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து, மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு, உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும், கப்பம் வாங்கவும் ஆணையிட்டுத் திரும்பினான் சோழன்.

இலங்கைப் போர் :

வீரராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய சிங்களத்து விஜயபாகு, குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக்காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். விஜயபாகு, சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்கச் செய்தான். குலோத்துங்கன், சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில், இலங்கை தேசத்தில், சோழ அரசின் பலம் குன்றியது. சிங்கள தேசத்தை இழக்க விருப்பப்படாத குலோத்துங்கன், தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே, சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள், அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். இத்தோல்வியினால் மனம் குன்றாத விஜயபாகு, புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து, சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும், அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான்.  சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.

குலோத்துங்கன், ராஜேந்திரனை சோழதேசம் திரும்பும்படிக் கட்டளை இட்டான். விஜயபாகு, சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும், வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது.

குலோத்துங்கன் காலத்துப் போர்கள் முடிந்து விட்டது என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்தே போவீர்கள். ரத்தக்களரியான ஒரு கொடூரமான பெரும்போர் வரவிருக்கிறது!

சோழநாட்டின் பொற்காலக் கதைகளை, சரித்திரம், இன்னும் பேசும்.

தூங்க 108 வழிகள் – மனோகர் மைசூரு

பெண்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் இதுதான் நடக்குமாம்! - ஆய்வுத் தகவல்-  Dinamani

வளர்ந்து வரும் புதிய ‘வளர் பதிப்பகம்’ நிலையத்திற்கு ஒரு அன்பர் போனில் விசாரித்தார்.

“ஹலோ, மிஸ்டர் சுகப்பிரியன் எழுதிய ‘நிம்மதியா தூங்க 108 வழிகள்’ புத்தகம் கிடைக்குமா?. எங்க அப்பார்ட்மண்ட்லே ஒரு 108 புக்ஸ் வேண்டியிருக்கு. எங்க ஊரிலே ஸ்டாக் இல்லேங்கறாங்க. அதான் கேட்கிறேன்”.

பதிப்பாளர் வியப்புடன் பதிலுரைத்தார். “எங்களுக்கே ஆச்சர்யம் சார். இத நாங்க எதிர்பாக்கலே. முதல் பதிப்பில ஆயிரம் புக் தான் பிரிண்ட் பண்ணினோம். அதையே அதிகமென்று நினைத்தோம். ஒரே மாசத்தில் தீர்ந்துப் போயிருக்கு. ரெண்டாவது பதிப்பு போடப் போறோம். நீங்க உங்க பேரு அட்ரஸ் கொடுங்க. நாங்களே உங்கள காண்டாக்ட் பண்றோம். உங்க விமர்சனம் எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும். நூல் எழுதின ஆசிரியர் கூட இங்கே தான் இருக்காரு. நீங்களே அவர்கிட்டப் பேசுங்க. அவரும் சந்தோசப்படுவாரு”.

பதிப்பாளர் போனை அந்த நூல் எழுத்தாளரிடம் கொடுத்தார்.

“இது என்னோட மொதல் புத்தகம். இந்த புக்கு-க்கு இந்த அளவு டிமாண்ட் இருக்கிறதப் பார்த்து எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு. ஒரு வருஷம் இரவும் பகலும் தூக்கமில்லாம ஆராய்ச்சிப்பண்ணி எழுதின ஆயிரம் பக்க சாதனை புத்தகம் இது. லாபம் எதுவும் வைக்காம மலிவு விலையில் ரிலீஸ் பண்ணியதால் இவ்வளவு சீக்கிரம் விற்பனை ஆகியிருக்கு. ஒன்னுத் தெரியுமா உங்களுக்கு? உலகத்தில 18 வயதுக்கு மேற்பட்டோரில் மூணுல ஒருத்தர் தூக்கமின்மையால் அவதிப்படுறாங்க. தூக்கமின்மை எப்படி எதனால வருதுன்னு அறிவியல் பூர்வமா இன்னும் கண்டுப்பிடிக்க முடியல. ஆண்களை விடப் பெண்கள் தான் இந்த தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வியட்நாமை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 60 வருசமா தூங்கவே இல்லையாம். ஆனா பெரிசா ஒன்னும் பாதிக்கப்படவும் இல்லையாம். தூக்கம் ஜாஸ்தி ஆனா என்னவாகும், கம்மியானா என்னவாகும் – இந்த மாதிரி நெறய தகவல் இருக்கு. ஆயுர்வேதத்தின் படி, நம்ம உடலில் 108  உயிர் சக்தி புள்ளிகள் இருக்கு. அதையெல்லாம் எப்படி நம்ம தூக்கத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கேன். புக்-ல சொல்லியிருக்கிற ஒவ்வொரு டிப்ஸ் பத்தியும் நானே அனுபவிச்சி எழுதியிருக்கேன்னு சொல்லலாம். அந்த விதத்தில், என் படைப்பு நிறையப் பேருக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன். உங்க சைடிலிருந்து புத்தகத்தைப் பத்தி நிறை-குறை எதாவது இருந்தாச் சொல்லுங்க. ரெண்டாவது பதிப்பில் அதைச் செயல் படுத்துவோம். பதிப்பாளரும் ஒத்துக்குவார்னு நினைக்கிறேன். உங்க ஆதரவு என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பா நல்ல ஊக்கமளிக்கும்”. மூச்சு விடாமல் பேசிய நூல் ஆசிரியர் கொஞ்சம் விட்ட இடைவெளியில் மறுமுனை அன்பர் பேச நுழைந்தார்.

“கண்டிப்பா !. என்னைப் பொறுத்த வரை ஒரே ஒரு குறை இருக்கு. அதை நிவர்த்திச் செய்ய நீங்க முயற்சிக்கணும். என்னென்னா, அது ரொம்ப சிம்பிள். உங்கப் புத்தகத்திற்கு நல்லதா உறை ஒன்னு போட்டுக் கொடுக்கணும். தலையணைக்குப் போடற உறை மாதிரி. உங்க புத்தகத்தைத் தலைக்குத் தலைகாணியா யூஸ் பண்ணா ரொம்ப நல்லா தூக்கம் வருதுன்னு நெறய பேர் சொல்றாங்க. உறை  இருந்திச்சின்னா புத்தகம் ரொம்ப நாளைக்கு உழைக்கும் இல்லையா!. இந்த வேண்டுதல் மாத்திரம் நீங்க பரிசீலனைச் செஞ்சாப் போதும்”

எழுத்தாளர் மூர்ச்சையாகி விழ, பதிப்பாளர் மறுமுனையில் இருந்த நபர் அப்படி என்னப் பேசியிருப்பார்? இவர் ஏன் இப்படி தடாலென்று மயங்கி விழறார் என்றுத் தவித்தவாறு மயக்கம் தெளிய வைக்கத் தண்ணீர் பாட்டிலைத் தேடினார்.

 

குவிகம் – சிறுகதைத் தேர்வு – ஆர் முருகேசன்

================================================================================

செப்டம்பர் 2023 ல் வெளியான சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சிறுகதைகளில்  நான் இம்மாதச் சிறந்த சிறுகதையாக நான்  தேர்ந்தெடுத்த கதை  கல்லடிப் பாலம்

===============================================================================

செப்டம் பர் 2023 ல் வெளியான சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் பற்றிய எனது பார்வை

கதை 1: கல்லடிப் பாலம்

       SOURCE  : குங்குமம் 01.09.2023

       ஆசிரியர் : ஹெச் . என் . ஹரிஹரன்

இன்ஸ்பெக்டர் கந்தவேல் அந்தப் பாலத்தில் நடந்து வருகிறார். அந்தப் பாலத்தில் இருந்து பலர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நிகழ்கிறது. அன்றும் ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பாலத்திற்கு கல்லடிப் பாலம் என்று பெயர் வந்திருக்கிறது. பாலத்தில் இருந்து குதிக்கும் இடத்தில் பரவிக் கிடந்த பாறாங்கற்களால் அந்தப் பெயர்.

அன்றைய தற்கொலை நிகழ்வை டீல் செய்து விட்டு வீட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். அந்த நேரத்திலும் அவரது மகனின் அறையில் விளக்கு  எரிந்து கொண்டிருக்க , பையன் டேபிளில் கவிழ்ந்தபடி தூங்கிக் கொண்டிருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு வரை நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பையன் இன்ஜினியரிங் கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் முற்றிலும் மாறிப் போய்விட்டான். ஹாஸ்டலில் இருந்த காலத்தில் போதைப் பழக்கமும் சேர்ந்திருக்கிறது. இரவில் தூக்கமின்றித் தவிக்கிறான்.

இன்ஸ்பெக்டருக்கு அன்றைய தற்கொலை பற்றிய அப்டேட் வருகிறது.

அன்று  தற்கொலை செய்து கொண்டவன் காதல் தோல்வியால் அந்த முடிவுக்கு வந்தான் என்றும் அவனது பெற்றோர் அவன் பிரச்னையைப் பற்றி காது கொடுத்துக் கூட கேட்காததால் அப்படி முடிவெடுத்தான் என்றும் அவருக்கு செய்தி எட்டுகிறது.

தானும் கூடத் தன் மகனுடன் பேசுவதே இல்லை என்ற உண்மை அவரை உறுத்துகிறது. மகனிடம் பேசுவதை இன்னமும் தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்கிறார். அவர் வீட்டினுள் நுழையும் போது அவன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறான். அவனுடன் பேச முற்படுவதற்குள் அவன் கடந்து போய் விடுகிறான்.

அவனது தாயோ டிவி சீரியல்களில் மூழ்கி இருப்பவள்.அவரது மகன் ஒரு ‘ தற்கொலை குறிப்பு’ எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான். ‘ யாரும் தன்னோடு பேசுவது இல்லை என்றும் தற்கொலை செய்து கொள்ளப்  போவதாகவும் எழுதி இருக்கிறான். அவன் கிளம்பி போன போது நிறுத்தி ஒரு வார்த்தை பேசி இருந்தால் அவன் தற்கொலையைத் தடுத்திருக்கலாமோ எனத் தவித்து கல்லடிப் பாலத்திற்ககு விரைகிறார்.

அவனைத் தடுத்து ,வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்புகிறார் . இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் ; கதை முடிகிறது.

மன அழுத்தம் என்பது சாதரணமாகி விட்ட இந்த தலைமுறையில் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்படும் தொடர்பு இடைவெளியையும் அது எத்தனை எளிதாக தீர்க்கப் படக்  கூடியது என்பதையும் இயல்பான நடையில் தந்திருக்கிறார் இந்தக் கதையின் ஆசிரியர். காலத்திற்கேற்ற கருத்து அமைந்த சிறுகதை.

“ சிறு கதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை “ என்று எளிமையாக வரையறை செய்யலாம் “ என்று ஜெயமோகன் ஒரு புத்தகத்தில் கூறியிருப்பார். “ சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது என்பார். இந்தச் சிறுகதையின் முடிவும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது. 

கதை 2 : மணம்

       SOURCE  : தினமணி கதிர்  24 .09.2023

       ஆசிரியர் :

ரோஜா ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள் . அவளது பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனோரஞ்சிதமும் செண்பகமும். விளையாட்டு நேரத்தில் இரண்டு மாணவிகளும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். செண்பகம் தன் ஆடையில் சேற்றை வீசி அழுக்காக்கி விட்டதாகப் புகார் கூறுகிறாள் மனோரஞ்சிதம். அவளது அம்மாவிற்கு சிறிய கறை கூடப் பிடிக்காதாம். அம்மாவின் தண்டனையிலிருந்து அவளைக் காப்பாற்ற பழியைத் தான் ஏற்றுக்கொண்டு அவள் அம்மாவின் திட்டையும் வாங்கிக் கொள்கிறாள் ரோஜா.

ரோஜாவின் அப்பா காச நோயால் மரணம் அடைந்ததையும் குடும்பத்தை காப்பாற்ற வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததையும் அந்த விஷயம் தெரிந்த போது ரோஜாவின் அம்மா அவருடன் சண்டையிட்டுப் பிரிந்ததையும் நினைத்துப் பார்க்கிறாள். அவள் வீட்டு ஜன்னலை திறந்த போது துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்து முடித்த ஒரு தொழிலாளி வெளியே வருகிறார். அவரிடம் பேச்சு கொடுத்த போது அவர் மாணவி மனோவின் தந்தை என்பதும் வீட்டுக்கு தெரியாமல் அந்த வேலையை செய்து வருவதும் தெரிய வருகிறது. அப்பாவின் திதி செலவுக்காக வைத்திருந்த இருபதாயிரம் ரூபாய் அடங்கிய கவரை அவரிடம் கொடுத்து ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்துமாறு அறிவுறுத்துகிறாள் ரோஜா என முடிகிறது கதை.

சிறுகதை இலக்கணத்தை ஒட்டி சரியாகத் துவங்கி மையக் கருத்தையொட்டிப் பயணித்து தலைப்பை நியாயப் படுத்தி முடித்து வைத்திருப்பது சிறப்பு.

கதை 3  :  கரித்த முகங்கள்

       SOURCE  : உயிரெழுத்து   23..09.2023

       ஆசிரியர் : கு . இலக்கியன்

மார்க்கெட்டில் துப்புரவுத் தொழில் செய்து வருகிறாள் கடுகி. அத்தனை கடை வாசல்களையும் கூட்டிப் பெருக்கி சாணம் மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு வருவது அவள் வேலை. அவளது நிஜப் பெயர் கற்பகம். எப்போதும் முகத்தை கடு கடு என வைத்திருப்பாள் ; எனவே கடுகி என்று பெயர் சூட்டி இருந்தனர் மற்றவர்கள். அவளது வேலையைக் கச்சிதமாக செய்பவள். மார்க்கெட்டின் மதில் சுவரோடு இணைத்து தகரத்தால் வேய்ந்த சின்னஞ்சிறு குடிசையில் வசித்து வரும் கடுகி தன் வயோதிகத் தாயைத் தன்னோடு வைத்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வருகிறாள்.

ஒருநாள் விடியற் காலை கடைகளின் வாசல்களில் குவீந்திருந்த குப்பை கூளங்களை கூட்டிப் பெருக்கிக் குவித்து வைத்து தீ இடுகிறாள். காகிதங்களோடு நெகிழிப் பைகளும் சருகுகளும் கனன்று எரிய ஆரம்பித்து ஒரு பந்தல் தீ பற்றிக்கொண்டு அவள் கன்னத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட, மயங்கி விடுகிறாள். ஆஸ்பிட்டலில் சேர்க்கப்படுகிறாள். ஆனால் மார்க்கெட்டின் கடைக் காரர்கள் யாரும் கடுகியை எட்டிக் கூடப் பார்க்க வரவில்லை. அவளது தாய் யாராலும் கவனிக்கப் படாமல் மரணம் அடைந்திருக்கிறாள்.   தன்னைப் பற்றியும் தன் தாயின் மரணம் பற்றியும் ஒரு வார்த்தை கூடக் கேட்காத அந்தக் கடை வீதிக காரர்களை விட்டு வெளியேறுகிறாள். அந்த மனிதாபிமானமற்ற மனிதர்களின் முகங்கள் கடுகியின் மனத் தீயில் வெந்து கருகத் தொடங்கின எனச் சிறு கதையை முடிக்கிறார் ஆசிரியர் .

மனிதர்களின் சுயநலம், குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட மறந்து விடுகிற ஒரு மக்கள் கூட்டத்தின் இயல்பு என்பன மிகச் சரியாக வெளி வந்திருக்கிறது இந்தக் கதையில். கரித்த முகங்கள் என்ற தலைப்பும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.

கதை 4  :  ஃபங்ஷன்

       SOURCE  : குங்குமம்    15 ..09.2023

       ஆசிரியர் : எம். எஸ்  அனுசுயா

ஆதி , அகிலேஷ் என இரண்டு ஆண் குழந்தைகளின் தாய் வாணி. ஆதிக்கு 13 வயது. ஆகிலேஷூக்கு 5. சிறிய மகனுக்கு இருந்த ஆட்டிசம் பாதிப்பு அவளைக் கவலை கொள்ள வைக்கிறது. ஆதிக்கும் ஆகிலேஷுக்கும் ஒத்து வருவதில்லை. ஆகிலேஷூக்கு அண்ணனுடன் விளையாட ஆசை. ஆனால் அதை உணர்த்த தெரியாமல் அவஸ்தைப் படுகிறான்.

ஆதி தனது தம்பியை அவமான சின்னமாகக் கருதுகிறானோ என வருந்துகிறாள் வாணி. ஆதி தனது நண்பர்களோடு விளையாட செல்லும் போது தம்பி உடன் வருவதை விரும்புவதில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்கள் கூட தங்கள் குழந்தைகளை அகிலேஷுடன் விளையாட அனுப்புவதில்லை.

 ஓரு நாள் எதிர் வீட்டுப் பிள்ளைக்குப் பிறந்த நாள் வருகிறது. அந்தக் கொண்டாட்டத்திற்கு ஆதியை மட்டும் அனுப்பும்படி வாணியிடம் கேட்கிறார்கள். அவனை மட்டும் அனுப்புவதா எனக் குழம்புகிறாள் அவள். அவள் கணவனோ ஆதி இப்படி ஃபங்ஷனுக்கு சென்று பல நாட்களாகி விட்டன என்றும் தான் போக முடியவில்லையே என்ற கோபத்தை அகிலேஷ் மீது காட்டக் கூடும் என்றும் கூறி ஆதியை அந்த பிறந்த நாள் விழாவிற்கு அனுப்பச் சொல்கிறான்.

நல்ல சட்டை, பேண்ட்டை எடுத்து ஆதியிடம் கொடுத்த வாணி “ பரிசுப் பொருள் ஒன்றும் வாங்கி வைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு எதிர் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் விழாவிற்க்கு போகுமாறு சொல்கிறாள். ‘ நீ புறப்படும் முன்னால்  சொல்லி விடு . இல்லாவிட்டால் உன் தம்பியும் வருவேன் என்று அடம்  பிடிப்பான். ‘ என்கிறாள்.

‘ தம்பி வரவில்லையா? ‘ எனக் கேட்கிறான் ஆதி. “ இல்லை ; உன்னை மட்டும் தான் அழைத்திருக்கிறார்கள்” என்கிறாள் வாணி. ‘ தம்பியை அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்களா? ‘ என்று கேட்டவன் தன் உடையை அணிய மறுத்து ‘ நான் போகவில்லை’ என்கிறான். “ என தம்பியை வேண்டாம் என்று சொன்னால் அவங்க எனக்கும் வேண்டாம் “ என்று கூறியவாறு தம்பியின் அருகில் அமர்ந்து கொள்கிறான்.

ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தையைப் பெற்றவள் மன நிலை, சிறு வயதுக் குழந்தையின் முதிர்ச்சியான அணுகுமுறை என மனதைத் தொடும் கதையாக வந்திருப்பது சிறப்பு.   

 

சங்கத்தமிழ் ஓர் எளிய அறிமுகம் – திருமுருகாற்றுப்படை – பாச்சுடர் வளவ. துரையன்

 

திருமுருகாற்றுப்படை: தெரிந்து கொள்வோம்..!

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைக்கப்பட்டிருப்பது திருமுருகாற்றுப்படை ஆகும்.  இந்நூலை இயற்றியவர் மதுரையைச் சேர்ந்த  நக்கீரன்  என்பவர் ஆவார்.  இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றும் கூறுவர்.

முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட  ஆசிரியப்பாவால்  இயற்றப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள் தருவதாகும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.  இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.

 இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை. ஆற்றுப்படைகள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில்  திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர்  பதிப்பித்தார். 1851- நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை.  உ. வே. சாமிநாதையர்  அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துப்பாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.

Thirumurugatrupadai: ( With Commentaries ) 9781979835268 | eBay

 இந்நூலானது உலகம் எனும் மங்கலச்சொல்லைக் கொண்டு தொடங்குகிறது.

உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .[05]
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்

”உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.. அதன்  அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இருக்கிகிறான்.  அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து எங்கும் பாய்கிறது. அது நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது. அவனது திருவடிகள் துன்பத்தைப் போக்கும். அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.”என்பது இதன்பொருளாகும்.

முதலில் திருப்பரங்குன்றத்தைச் சொல்லவருவதால் அங்கு முருகப்பெருமான் திருமணம் செய்துகொண்ட தெய்வயானையும் நூலின் தொடக்கத்திலேயே நக்கீரர் கூறிவிடுகிறார்.

அடுத்துத் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரைக் காட்டுகிறார். இந்தப் படைவீட்டில் முருகப்பெருமான் யானை மீது திருவீதி உலா வரும் காட்சி காட்டப்டுகிறது.

கூற்றம் போல் முருகனின் யானை விரைந்து நடக்கும். அப்போது இருமருங்கிலும் தொங்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த வேழம் வலிமையில் புயல் காற்று கிளர்ந்து வீசுவது போன்றது. அம்பின் நுனி குத்தி ஆறிய வடுக்களைப் புள்ளிகளாகக் கொண்ட நெற்றியை உடையது. நெற்றியில் வாடா மாலையும், ஓடை என்னும் அணிகலனும் அதற்கு உண்டு. இத்தகைய யானைமேல் முருகன் காட்சி தந்தான்.

”வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் . . . .[80]
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்” என்பன பாடல் அடிகளாகும்.

திருவாவினன்குடி எனும் பழநியைப் பற்றி இப்பாடல்  அடிகள் பேசுகின்றன 

மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் . . . .[170]

தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் . . . .(175)
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று, . . . .(175 – 17×

 அவனைக் காண வருவோர் எந்தப் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் ஒன்றாகக் கூடிக் கண்டு களித்தனர். எல்லாருமே உலகம் உயர்நிலை பெறுவதற்காக வானத்தில் விண்மீன் பூத்திருப்பது போல் தோன்றி முருகனை வழிபட்டனர். இவர்கள் அனைவரும் காற்றைப்போல் விரைந்து செல்லக் கூடியவர்கள். தீயைப்போல் அழிக்கும் திறம் பெற்றவர்கள். முருகன் பெயரை மின்னலில் தோன்றும் இடியைப்போல் முழங்கினர். வரிசை முறையில் காத்திருந்து தம் குறையைச் சொல்லி வரம் பெற வேண்டி அந்தரத்திலும் சுழன்று வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கெல்லாம் தன் மனைவியோடு காட்சி தந்தவண்ணம் முருகன் ஆவினன்குடியில் சிலநாள் அசைந்தாடும் உரிமையும் உடையவனனாக வீற்றிருந்தான்..

அடுத்துத் திருஏரகம் என்னும் சுவாமிமலை கீழ்க்கண்ட பாடல் அடிகளில் காட்டப்படுகிறது

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து . . . .(185)

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, . . . .(183 – 189)

திருஏரகம் என்னும் சுவாமிமலையில் இருபிறப்பாளர் வழிபாடு காட்டப்படுகிறது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன், பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக்கும் உணவு சமைப்பதே முத்தீ. பூணூலுக்குமுன் பூணூலுக்குப்பின் என்று அவர்களுக்கு இரண்டு பிறப்புக்கள் உண்டு. முப்புரிநூல் ஒன்பது கொண்டது அவர்களின் பூணூல். இவர்கள் நல்லநேரம் பார்ப்பவர்கள். ஈர ஆடையை உடுத்திக்கொண்டு புலர விடுபவர்கள். உச்சியில் கைகளைக் கூப்பித் தாம் வழிவழியாகச் சொல்லக் கேட்ட ஆறெழுத்து மந்திரத்தைத் தாமும் சொல்லி முருகனைப் புகழ்ந்து வாய்விட்டுப் பாடுவர். மணம் மிக்க மலர்களைத் தூவிப் பூசை செய்வர். இதனை விரும்பி முருகன் ஏரகத்தில் வாழ்தலும் உண்டு.

குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணியைப் பற்றி நக்கீரர் குறிப்பிடும்பொழுது முருகப்பெருமானின் தோற்றத்தையும் ஆட்டத்தையும் காட்டுகிறார்.

“செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .[210]

கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையி னியல வேந்தி . . . .[215]

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே, யதாஅன்று

 முருகப்பெருமான் சிவந்த மேனியும்  சிவந்த ஆடையும் கொண்டிருப்பவன்; தளிர் ஆடும் காதுடையவன்; இடுப்பில் கச்சும் காலில் கழலும் அணிந்திருப்பவன்; தலையிலே வெட்சிப்பூக்களால் ஆன  கண்ணி சூடியவன்;  கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைக் கொண்ட தோளை உடையவன்; செம்மறியாட்டுக் கடாமீதும் மயில்மீதும் ஏறி வருபவன்; உயர்ந்த சேவல்கொடி கொண்டவன்; தொடி அணிந்த தோளுடன் யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டுடன் உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடையுடன் கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடையுடையவன்.  இப்படிப்பட்ட நிலையில் உள்ள  அவன் மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் குன்றிருக்கும் இடமெல்லாம் கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.

அடுத்துப் பழமுதிர்சோலை காட்டப்படுகிறது.

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .(220)

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், . . . .(225)

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் . . . .(218 – 226)

 ”பழமையான முதிர்ந்த மலையில்  சோலைகள் நிறைய உள்ளன. அங்கே தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்கு ஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா கொண்டாடுவார்கள். ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சி தரும் நிலையில் வேலன் வெறியாட்டம் நிகழும். ஆடுகளங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்; ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிருக்கும் துருத்தி நிலம்; ஆறு, குளம், வளைநிலம், ஊர்மேடை, தெரு முட்டுமிடம், பூத்திருக்கும் கடம்ப மரத்தடி, பொதுமக்கள் விளையாடும் மன்றம், பொதுமக்கள் கூடிப்பேசும் பொதியில் நிழலுக்காக அமைத்த தூண் மண்டபங்கள், ஆண்டலை என்னும் போர்ச்சேவல் கொடிநட்ட இடம் முதலான இடங்களில் முருகன்  ஆங்காங்கு குடிகொண்டிருப்பான் என்று நக்கீரர் பழமுதிர்சோலையைக் காட்டுகிறார்.

அடுத்துத் தாங்கள் கருதிவந்ததைக் கூறுகின்றனர் அவர்கள் முருகனிடம் பரிந்துரை செய்தனர். ”முருகா ! உன்னிடம் வேண்டும் இவன் இரங்கத் தக்கவன். மழைபோல் அருள் பொழியத் தக்கவன். முதிர்ச்சி பெற்ற வாயால் ஏதோ சொல்லி இரக்கிறான். இரந்தாலும் இரக்காவிட்டாலும் உன் புகழைக் கேட்டு நயந்து உன்னை நாடி வந்திருப்பவன்.”என்றெல்லாம் இனியனவும் நல்லனவுமான சொற்களால் எடுத்துச் சொல்லி முருகனைப் புகழ்ந்தனர்.

அடுத்து அவர்கள் வேண்டுவதை இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.

“தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி . . . .[290]

யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் . . . .[295]

  முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டுக் கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குபவன். இந்தத் தன்மையையெல்லாம் அவன் என்னிடம் வெளிப்படுத்த வேண்டும். அஞ்சாதே என்று சொல்லிப் பாதுகாக்க வேண்டும். நின் வரவை அறிவேன் என்று ஆறுதல் கூற வேண்டும். அன்பு மொழி கலந்து பேச வேண்டும். இருண்ட கடலால் சூழப்பட்ட உலகில் காத்தளிக்கும் கடவுளாக நீ மட்டுமே விளங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டும் பரிசில்”

இப்படித் தங்கள் தன்னலத்துகாக எவற்றையும் வேண்டாத அந்த அடியார்களைத் திருமுருகாற்றுப்படை காட்டுகிறது.

 

 

 

 

 

 

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? ஜி.பி.சதுர்புஜன்

புத்தகம் : அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )

எழுதியவர் : பூர்ணம் விஸ்வநாதன்

 

சிறுவாணி வாசகர் மையத்திற்காக பவித்ரா பதிப்பகம் வெளியிட்ட ஜூலை 2023 பதிப்பு

பக்கம் : 192  விலை : ₹ 200  (முதல் பதிப்பு டிசம்பர் 1989  )

 

சிறுவாணி வாசகர் மையத்தின்  “மாதம் ஒரு நூல் “ திட்டத்தில் நானும் இணைந்திருக்கிறேன்.  சமீபத்தில் அவர்களிடமிருந்து நான் பெற்ற மூன்று நூல்களில் இதுவும் ஒன்று.

எழுத்தாளர் பூர்ணம் விஸ்வநாதனின் குடும்பத்தாரிடமிருந்து அனுமதி பெற்று டிசம்பர் 1989ல் வெளிவந்த அவருடைய சிறுகதைத் தொகுப்பை 34 வருட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார்கள்.

நம்மில் பலருக்கும் பூர்ணம் விஸ்வநாதனை மேடை நாடக ஜாம்பவானாகவும், பாரதம் சுதந்திரம் அடைந்த நற்செய்தியை அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளராக நமக்கெல்லாம் அறிவித்த அதிர்ஷ்டக்காரராகவும், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த உருக்கமான நடிகராகவும் மட்டுமே தெரியும்.

“மேடை நாடகம் எனது முதல் காதல் என்றால், எழுத்து எனது இரண்டாவது காதல்” என்று சொல்லிவந்த பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தமிழுக்கு தந்திருக்கிறார் என்பதே இந்தக் காலத்து வாசகர்களுக்கு புதிய செய்திதான்.

பூர்ணம் விஸ்வநாதனின் நாடக பேராளுமையும் திரைப்பட ஜொலிப்பும் அவருடைய எழுத்தாளர் முகத்தை சற்று மறைத்திருந்தனவோ  என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதற்கு இன்னொரு காரணம், பூர்ணம் தில்லியிலிருந்து சென்னை வந்த பிறகு அவருடைய எழுத்தை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டதுதான்.

சரி, இந்தப் புத்தகத்துக்கு வருவோம் .இதில் இடம் பெற்றுள்ள 14 சிறுகதைகள் அனைத்தும் தமிழின் முன்னணி பத்திரிகைகளில் (ஆனந்த விகடன், கல்கி ,குமுதம், கணையாழி ) 1960 மற்றும் 1970 ஆம் வருடங்களில் வெளிவந்தவை..

பூர்ணம் அவர்களின் மகன் சித்தார்த்தன் அவர்களின் நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளது போல அவருடைய பல படைப்புகள் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்புகள். அதில் அவருக்கே உரிய தாயிடம் இருந்த பக்தி (அம்மா அம்மா), மனைவியின் பால் இருந்த அதீத காதல் (மனைவி என்னும் மாய தத்துவம்), தின வாழ்க்கையில் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வு (நான் என்னும் அதிர்ஷ்டக் கட்டை) மிக சுவாரசியமான கதைகளாக உருவெடுத்தி ருக்கின்றன.

அந்த காலத்து சிறுகதைகள் சில சமயம் வளவளவென்று இழுத்தடித்து எழுதப்பட்டிருக்கும். ஆனால் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் கதைகள் இன்றைய கதைகள் போல இளமையாக இருக்கின்றன. அதே நேரம், பல கதைகள் கனமான கரு கொண்ட முதிர்ச்சியான கதைகள்.

நூலின் இறுதியில் இலவச இணைப்பாக பாரதி மணி அவர்களின் “பூர்ணம் விஸ்வநாதன் நினைவுகள்” என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. வாசிக்க மிகவும் சுவாரஸ்யமானது. பூர்ணத்தை இன்னும் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.

. இந்த சிறுகதைத் தொகுப்பை படித்து ரசிக்க உங்களுக்கு நாடக ஆர்வம் தேவையில்லை. நல்ல சிறுகதைகளில் உங்கள் மனதை பறி கொடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை தவற விடாதீர்கள் !

 

ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

 

  1. The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel)                June 2023
  2. BITS of Social Impact” ( English)

  எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru  July 2023

  1. Adventures Of A Countryside Doctor

    ( By Dr.Thomas T. Thomas )                                                    August 2023

    தமிழில்: ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்

    ( தமிழாக்கம் : துரை தனபாலன் ) 

  1. 4. பாரதி கண்ட தெய்வ தரிசனம் September 2023

   எழுதியவர் : நஜன் 

 

வத்சலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் – புத்தக வெளியீட்டு விழா – நாகேந்திரபாரதி

வத்சலா மேடம் அவர்களின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா ( வத்சலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் -1991-2023)  அக்டோபர் ஏழாம்  தேதி மாலை தியாகராய நகர் அம்தாவதி குஜராத்தி ஸ்நாக் ஹவுஸ் ஸில்  மிகச் சிறப்பாக நடந்தது .
அரங்கத்தில் நுழைந்தவுடன் கிடைத்த ஸ்வீட், காரம், டீ யுடன் கூடிய வரவேற்பு நம் உற்சாகத்தை அதிகப்படுத்தியது .
தொடர்ந்து  அழகியசிங்கரின் ‘இசை புதிது ‘  குழும சாந்தி மேடம்’ அவர்களின் குழுவினரின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது . 
நிகழ்வை நடத்திய  பிரகிருதி பௌண்டஷன் வரவேற்பைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து  உரை  வழங்கிய தோழர் நா. வே. அருள் அவர்கள் வத்சலா மேடம் அவர்களின் கவிதை  மேற்கோள்களோடும்  தனது கவிதை நடைப் பேச்சோடும் , இடையில் பேசிய அனைத்து சிறப்புப் பேச்சாளர்களின் அறிமுகங்களோடும் சிறப்பாகத் தொகுத்து  உரை ஆற்றினார். 
முதன்மைப் பேச்சாளர் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் இலக்கிய உரை சங்க காலம் தொட்டு தற்காலம் வரை, மரபுக் கவிதை, புதுக் கவிதை ஆகிவற்றின் வரலாற்றை நமக்கு அறிமுகப்படுத்தியது . வத்சலா மேடம் அவர்களின் கவிதைகளை புதுக்கவிதை வகையிலே ‘ சிறுகதைக் கவிதை’ என்று சிறப்பித்து அவர் உதாரணம் காட்டிய ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை தான்.
தொடர்ந்த சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் அழகரசன் அவர்கள்  ஆங்கிலக் கவிதைகளின்கூறுபாடுகளை விளக்கி வத்சலா மேடம் அவர்களின் கவிதைகளை , ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில்  உள்ள சவால்களைக் குறிப்பிட்டு , சிறப்பான பல கவிதைகளை வாசித்தார். இவை எல்லாம் ‘ஏமாற்றும் எளிமை வாய்ந்த கவிதைகள்’ என்று அவர் குறிப்பிட்டது சிரிக்கவும் ,  சிந்திக்கவும்  வைத்தது . 
இந்த உரைகளுக்கு இடையே தனக்கு மிகவும் பிடித்தமான தனது கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட கவிதாயினி வத்சலா மேடம் அவர்கள் இறுதியாக தனது ஏற்புரையில் மனம் நெகிழ்ந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்துப் பேசிய பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது .
விழாவின் ஆரம்பத்தில் நூலைப் பிரசுரம் செய்த பிரகிருதி பௌண்டேஷன் முக்கியஸ்தர்கள், நவீன விருட்சம் ‘ அழகியசிங்கருக்கும் , குவிகம் ‘ கிருபானந்தன் ‘ அவர்கட்கும் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது .
மொத்தத்தில் திருப்பூர் கிருஷ்ணன்  அவர்களும் அழகரசன் அவர்களும். தொகுப்பாளர் அருள் அவர்களும் வழங்கிய சிறப்புரைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அவர்கள் எடுத்துரைத்த வத்சலா மேடம் அவர்களின் கவிதைத் திறத்தை அவரவர் வார்த்தைகளில் ஒரே வரியில் சொல்வதானால் முறையே , ‘சிறுகதைக் கவிதை’, ‘ ஏமாற்றும் எளிமைக் கவிதை’, ‘வாழ்க்கைக் கவிதை’ என்று சொல்லலாம் .
வத்சலா அவர்கள் ஏற்புரையில் குறிப்பிட்டது போல் மூன்றையும் இணைத்து ‘ காலத்தின் கவிதை ‘ என்றும் சொல்லலாம். காலம் போல் என்றும் நிலைத்து நின்று அவர் தம் கவிதைத் திறத்தை நிறுவும் கவிதைகள் இவை . 
அவரது கதைகளையும் கவிதைகளையும் படித்தவன் என்ற முறையில் நான் உணர்ந்தது. இது தனி ஒரு மனுஷியின் குரல் அல்ல, இது சமூகத்தின் சோகக் குரல், பகடிக் குரல், சுதந்திரக் குரல் என்று பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு சரித்திரத்தின் குரல் . மகளிர் சமூகத்தின் குரல் . அவருக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள் .
நிகழ்வின் முடிவில்  வத்சலா மேடம் அவர்களின் படத்தை வரைந்து அவருக்குப் பரிசளித்த நமது அழகியசிங்கரின் ‘ கலை புதிது ‘ குழும ஓவியர்   உமா பாலு அவர்களின் ஓவியப்  பரிசு வத்சலா மேடம் அவர்களை மிகவும் மகிழ்வித்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். 
இறுதியில் ‘இசை புதிது ‘ சாந்தி மேடம் குழுவினருடன் சேர்ந்து வந்திருந்தோர் அனைவரும் சேர்ந்து தேசீய கீதம் பாடிய விதம் விழாவின் சிறப்பான முடிவாக இருந்தது .
எங்களை இந்த சிறப்பான கவிதை நிகழ்விற்கு அழைத்துச் சிறப்பித்த வத்சலா மேடம் அவர்கட்கு மிக்க நன்றி 

இடம் பொருள் இலக்கியம் – 10 . முனைவர் வ.வே.சு.

ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

DD Podhigai NEWS - YouTube

‘கேள்வியை நீர் கேட்கிறீரா ? அல்லது நான் கேட்கட்டுமா?

“இல்ல இல்ல நானே கேட்கிறேன்” என்பார் நடிகர் நாகேஷ் சிவாஜியிடம்; திருவிளையாடல் படத்தின் பாப்புலர் டயலாக்.

ஆக கேள்வி கேட்பது சுலபம்; பதில் சொல்வதே கடினம் என்பது பல  பேர்களின் கருத்து. ஆனால் ஒரு குவிஸ் மாஸ்டராக கேள்விகள் தயாரிக்க நான் பட்ட கஷ்டம் தாளம் படுமோ? தறிதான்  படுமோ ?

நினைவாற்றலைச் சோதிக்காமல் அறிவாற்றலைச் சோதிக்குமாறு வினாக்கள் தயார் செய்வது மிகக் கடினம். அதற்கு நம் அறிவை அதிகம் செலவழிக்க வேண்டும். அதென்ன ? நினைவாற்றல் அறிவாற்றல் வித்தியாசம்? கேள்விக்கு ஆன் தி ஸ்பாட் சிந்தித்து பதில் சொல்லவேண்டும்.

வினாடி வினா நிகழ்வில் இதற்காக பல வித்தியாசமான சுற்றுக்களை அறிமுகம் செய்தேன். ( இப்ப அதெல்லாம் பழசு. நான் சொல்லறது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் செய்தது சென்னைத் தொலைக்காட்சிக்கு  .. அப்ப அது புதுசு.)

மறைபொருள் சுற்று: விஷுவலாக பல பொருட்கள் உள்ள  ஒரு படத்தை பதினைந்து வினாடிகள் காட்டுவோம். பிறகு பதினைந்து  விநாடிக்குள் எந்த அணி அதிகமான பொருட்களைக் கண்டு சொல்கிறதோ அது வெற்றி அடையும்.

சரியா? தவறா? சுற்று . குவிஸ் மாஸ்டர் ஒரு வாக்கியத்தைப் படிப்பார். அது சரியா தவறா என்று சொல்லவேண்டும். இதில் நான் பலதுறைக் கருத்துகளையும் வாக்கியங்களாக்கிக் கேள்வி கேட்டுள்ளேன்.

வீட்டுச் சுவற்றில் பல்லி இருப்பது நல்லது

சோப்புத் தயாரிப்பில் எண்ணெய் கலப்பார்கள்

சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்று மகாத்மா காந்தி கூறினார்.

எல்லா ரத்தமும் சிவப்பு அல்ல.

இது போன்று பல கேள்விகள். பதில் சொல்ல வரப்போகும் ஆடியன்ஸ் எப்படிப் பட்ட பின்னணி கொண்டவர்கள்  என்று தெரியாத நேரத்தில் இது போன்ற சுற்றுக்கள் கை கொடுக்கும். கேள்வியை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கேட்டுக் கொள்ளலாம்.

பத்து செகண்ட் பதில்: இந்தச் சுற்றில் விடையை பத்து செகண்டிற்குள் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு ஒரு கணக்கு. இதுல இரண்டுக்கு வேல்யூ மூன்று; மூன்றுக்கு வேல்யூ இரண்டு. இப்ப பதில் சொல்லுங்க. இருபத்து மூன்றையும் முப்பத்து இரண்டையும் கூட்டினால் என்ன விடை ? எந்த அணி முந்திச் சொல்கிறதோ அதற்கே மதிப்பெண். பத்து செகண்டுக்கு மேல யோசித்தால் எல்லாரும் இதற்கு விடை சொல்லிடலாம் ; ஆனால் டி. வி. நிகழ்ச்சியில் உடனே சொல்பவரே வெற்றி அடைவார். இது போன்ற வினாக்கள் என் புரோக்கிராமில் இருந்ததால் சுறுசுறுப்பானவர்கள் வெற்றி பெற்று நிகழ்ச்சிக்கு சுவையைச் சேர்த்தார்கள்.

ஆடியோ சுற்று: ஒலிச்சுற்று என்றும் இதனை நான் குறிப்பதுண்டு. பொதுவாக யாரேனும் பாடியதை வினாவாகக் கேட்பார்கள். பாட்டு என்ன ? பாடியது யார்? பாடலை எழுதியது யார் என்றெல்லாம் கேட்பதுண்டு. நான் இதிலே பேச்சுகளையும் இடம்பெறச் செய்தேன். இரண்டு மூன்று பிரபலங்கள் பேசியதை எடிட் செய்து இணைத்து அதிலிருந்து கேள்விகள் கேட்பேன்.

ஒருமுறை ஐ. டி. பி. ஐ வங்கிக்காக நான் நடத்திய இண்டர் பேங்க் குவிஸ் நிகழ்ச்சியில் ஆடியோ சுற்றில் இந்தியாவின் பல மாநில மொழிகளை ஒலிக்கச் செய்து அது என்ன மொழி என்று கண்டு பிடிக்கச்  சொன்னேன். அஸ்ஸாமீஸ் , பங்காளி, ஒரியா ,மராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளை அன்று பலர் கண்டுபிடிக்கவே இல்லை. ( செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்ற தலைப்பில் வானொலிக்காக இதையே ஒரு தனி நிகழ்ச்சியாக அமைக்க அந்த வினாடி வினா எனக்கொரு தூண்டுதலாக அமைந்தது. )

இலக்கியம் தமிழ் இரண்டையும் இணைத்து “வினாடி வினா” நிகழ்த்தினால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் சொல்ல எனது தொலைக்காட்சி தயாரிப்பாளர் திருமதி புவனேஸ்வரி சந்திரசேகர் அதற்கு உடனே ஒப்புதல் தந்தார். அப்படிப் பிறந்ததுதான் எனது “சொல் என்ன சொல்” என்ற தமிழ்ச் சொல் விளையாட்டுத் தொடர். அதிலிருந்து சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உதாரணத்திற்குச்  சில கேள்விகள் .

அந்தப்புரத்தைப் பார்த்தால் ஆண்டவனின் நினைவு வரும் – இது ஒரு நான்கு எழுத்துத் தமிழ்ச் சொல்லுக்கான குறிப்பு.

குத்துகின்ற மேலாடை குழம்புக்கும் உதவும். – இது ஐந்து எழுத்துச் சொல்லுக்கான குறிப்பு.

வாசிக்கவும் செய்யலாம் வாரி முடியவும் செய்யலாம்.- மூன்று எழுத்துச் சொல்லுக்கான குறிப்பு.

காவியுடை தரித்த வேந்தரிவர் நம்புங்கள். ( இந்த வாக்கியத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி , ஓர் ஏழு எழுத்து ஆளுமையைக் கண்டுபிடிக்க வேண்டும்.)

விடை என்னவா ? தொலைக்காட்சியில் இதற்கு விடை சொல்ல பதினைந்து நொடிகளே தரப்படும். எளிதாக நீங்களே கண்டுபிடித்து விடலாம். இதைப் போல ,புதிர்க்கட்டம், பழமொழிச் சுற்று, ஒரு சொல் பலபொருள் சுற்று, தமிழ் இலக்கண இலக்கிய சுற்று எனப் பலவகைகள். அனைத்துக்கும் வரவேற்பு அதிகரிக்க மேலும் புதியதாக ஏதேனும் செய்ய விரும்பினேன்.

பல பத்திரிக்கைகளில் அக்காலத்தில் இடம் பெற்றுவந்த “கிராஸ் வேர்ட்” புதிரை தொலைக்காட்சியில் நடத்த நினைத்தேன். ஆனால் அதில் பல சவால்கள் இருந்தன.  

முதல் சவால் :குறுக்கெழுத்துப் புதிரை இதழ்களில் விடுவிப்போர் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக்காட்சியிலோ ஒரு சில நிமிடங்களுக்குள் அவர்கள் பதில் சொல்லவேண்டும். எனவே கேள்விகள் எளிமையாக அமையவேண்டும். எனினும் அதற்காக  “ கம்பராமாயணத்தை எழுதியது யார்? இரண்டெழுத்து பூனையின் இரண்டெழுத்து எதிரி எது?” போன்ற  நகைப்புக்கு இடம் தரும் கேள்விகளையும் கேட்க இயலாது. அரை நொடிக்குள் பொறிதட்டி பதில் சொல்லக் கூடிய “பளிச்” கேள்விகளைத் தயார் செய்வது மிகக் கடினம்.

இரண்டாவது சவால்: குறுக்கெழுத்துக் கட்டத்தை தயார் செய்வது. நான்கு அணிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் சுற்றுகள் சமமாக இருக்கவேண்டும். மொத்தம் பதினாறு கேள்விகள் நான்கு சுற்றுக்கள் என வைத்துக் கொண்டால் , ஒவ்வொரு சுற்றிலும் கண்டுபிடிக்கப்பட  வேண்டிய சொற்களின் எழுத்தெண்ணிக்கை ஒரே அளவாக அமையவேண்டும். ஒரு சுற்றில் முதல் அணிக்கான விடை நான்கு எழுத்து கொண்ட சொல்லாக அமையும் என்றால் ,மற்ற மூன்று அணிகளுக்கும் அதே போன்றுதான் அமையவேண்டும். இல்லையென்றால் “அவுங்களுக்கு ஈஸி எங்களுக்கு கஷ்டம்” என்று குறை சொல்லிவிடுவார்கள். இத்தகைய விமரிசனம் வராமல் கவனமாக இருக்கவேண்டும்.  அக்காலத்தில் எங்கள் நிகழ்ச்சி பாப்புலர் ஆக இருந்ததால் இதை கவனத்தில் கொண்டோம்.  அப்படியும் சில எதிர் மறைக் கடிதங்கள் எதிரொலி நிகழ்ச்சிக்கு வந்துள்ளன.

மூன்றாவது சவால்: இப்போதுள்ள தொழிநுட்பம் அப்போது கிடையாது. “நேரடி” நிகழ்ச்சியாக எடுக்கும் போது பலகையில் எழுதி அழித்துக் கொண்டிருக்கமுடியாது. எனவே ஒரு “மேக்னேடிக் பலகை “ யில் எழுத்துக்களை ஒட்டுமாறு செய்தோம். அணியினர் பதில் சொன்னவுடன் ஒரு அசிஸ்டெண்ட் அந்த எழுத்தைப் பலகையில் ஒட்டுவார். தவறென்று குவிஸ் மாஸ்டர் சொன்னால் அதை எடுத்துவிடுவார் ; அடுத்த அணிக்கு வாய்ப்பு செல்லும். (சில ஆண்டுகள் கழித்து நான் தொலைக்காட்சியிலும் , வேறு சேனல்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது கம்ப்யூட்டர் உதவியில் இவையெல்லாம் மிக எளிதாகிவிட்டன,)

நான்காவது சவால்: ஒரு குவிஸ் நிகழ்ச்சி சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நடக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள், கேள்விகளும், பங்கேற்பவர்களும்; கேள்விகளை நான் தயார் செய்துவிடுவேன். பங்கேற்பவர் திறமையை எப்படி கண்டறிவது? இதற்காகவும் நான் தயாரிப்பாளரிடம் விவாதித்து ஒரு தீர்வு கண்டேன்.

தொலைக்காட்சியிலே குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பெற விரும்புவோர்க்கு எங்கள் அறிவிப்பின் மூலமாகவே அழைப்பு அனுப்பி அவர்களுக்குள் போட்டி வைத்து அதில் முதல் எட்டு இடங்களில்  வந்தவர்களை நான்கு அணிகளாக அமைத்தோம். பிறகு போட்டியில் அறுபது விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களை பார்வையாளராக அமரவைத்தோம். இதனால் அணிகள் சொல்லாத சில கடினமான விடைகளையும் பார்வையாளர்கள் சொல்லிவிட்டனர். நிகழ்ச்சி சூப்பர் சக்ஸஸ்.

(பார்வையாளர்கள் உறங்க வந்த போர்வையாளர்கள் அல்ல: அவர்களும் பதில் சொல்வார்கள் – என்பது எனது பாப்புலர் டேக் லைன்)

“குறுக்கும் நெடுக்கும் “ என்பது எங்கள் நிகழ்ச்சியின் பெயர். தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் இதை நடத்தினேன்.

தூர்தர்ஷனில் ( அது அரசாங்க அமைப்பு என்பதால்) இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எனது அடுத்த தயாரிப்பாளர் திரு டி. கே. அஸ்வினிகுமார் . சிறந்த இலக்கியப் படைப்பாளியும், தாகூர் தொடங்கி பல வங்காள எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்தவருமான திரு. த. நா. குமாரசுவாமியின் புதல்வர். அவர் வானொலியில் பணிபுரிந்த காலத்திலிருந்தே என் நண்பர்.

நிகழ்ச்சிப் பொறுப்பேற்றவுடன் அவர் என்னை அழைத்தார். “ விவிஎஸ் ! பதினைந்து நாட்களுக்கு ஒரு குவிஸ் நடத்த வேண்டும். நீங்களே தொடர்ந்து குவிஸ் மாஸ்டராக இருக்கவேண்டும். நீங்க பல குவிஸ் நடத்தி இருக்கீங்க .. அவை போல இல்லாமல் வேறு ஏதேனும் புதியதாகச் செய்யவேண்டும். யோசித்துச் சொல்லுங்கள் “ என்றார்.

ஒவ்வொரு குவிஸ் நிகழ்விலும் வெவ்வேறு வித்தியாசமான சுற்றுக்களைப் புகுத்தி இருக்கிறேன். புதிர்கட்டம், சொல் என்ன சொல் , கண்ணாமூச்சி , சரியா தவறா, வாக்கியச் சுற்று, ஒலிச் சுற்று, (ஆடியோ), படச் சுற்று  {வீடியோ) , குறுக்கெழுத்து, என்று பல வகைகள் . இவற்றை எல்லாம் தாண்டி வேறென்ன புதிதாக செய்ய முடியும் ?

அஸ்வினி குமார் சொன்னதை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவந்து யோசித்துப் பார்த்தேன். “ ஏதாவது ஸ்பெஷலா செய்யணும் விவிஎஸ் .. வித்தியாசமா இருக்கணும்.. அதாவது ஒவ்வொரு குவிஸும் வித்தியாசமா இருக்கணும் “ என்ற வார்த்தைகள் மனத்துள் ஓடியன.  

அடுத்த வாரம் அவரிடம் சென்று “இதோ நீங்கள் கேட்ட ஸ்பெஷல் குவிஸ் “ என்று ஒரு “ முன் மாதிரியை” (ஃபார்மட் ) அளித்தேன்.

அது என்ன ஃபார்மட் ? அப்புறம் என்ன ஆச்சு ?

அடுத்த இதழில் பார்க்கலாம். சரியா !

 

   

 

 

 

என்னைப் புகுவிப்பாய் நின் உடலில்   – பானுமதி ந 

நோபல் மருத்துவப் பரிசு-2023 

COVID-19 vaccine: India's first homegrown mRNA COVID-19 vaccine currently  under final clinical trial stages: Govt - The Economic Times

அன்று காலையே சஞ்சய் வந்து மாலை ஆறு மணிக்கு அவர்கள் வீட்டிற்கு சரவணன் தன் அம்மா, அப்பாவுடன் வரவேண்டுமென்றும் இரு முக்கிய நபர்களைச் சந்தித்து விட்டு பின்னர் அவர்கள் வீட்டிலேயே இரவு உணவை அனைவரும் சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தான். அவன் அம்மாவும், அப்பாவும் சரூவின் பெற்றோரை அலைபேசியில் அழைத்தனர். 

சரூவிற்கு ஒரே குடைச்சல்- யார் அந்த முக்கிய நபர்கள்? எதற்கு விருந்து? எதுவாக இருந்தால் என்ன, இரவுணவை ஒரு கை பார்க்க வேண்டியதுதான்! 

இவர்கள் மாலை ஆறு மணிக்கு அழைப்பு மணி அழுத்தியதும் திறந்தவர் வட இந்தியரைப் போலிருந்தார். புன்னகையுடன் கை குலுக்கி வரவேற்றவர் ‘நீங்கள் சரவணன் மற்றும் அவனோட பேரன்ட்ஸ் என நினைக்கிறேன். ஐ அம் ஈஸ்வர் சந்தர், மைக்ரோ பயாலிஜிஸ்ட்டாக (Micro Biologist) வேல பாக்கறேன்; இவுங்க என் வொய்ப், விரூபாக்ஷி, சுருக்கமா விரூ. அவங்களும் மைக்ரோ பயாலஜிஸ்ட். சஞ்சயோட அம்மாவும், இவங்களும்  ஸ்கூல்ல ஒண்ணாப்  படிச்சவங்க. நாங்க இன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு ப்ராஜெக்ட்-கம்-ரிசர்சுக்காக இலண்டன் போறோம்.’ அவர் பேசும் ஆங்கிலம், வங்காளியரின் உச்சரிப்பு போலிருந்தது. அதற்குள்,சஞ்சய், பவானி அவர்களின் பெற்றோர் எல்லோரும் ஹாலுக்கு வந்தனர். 

சூடான இஞ்சித் தேநீரும், பக்கோடாக்களும் சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் பேசத் தொடங்கியதும் இடமே கலகலப்பாகி விட்டது. 

“சரூ, நீ நன்னாப் படிப்பயாமே? என்னவா வர ஆசப்படறே? பவானிதான் நீ ரொம்ப கெட்டிக்காரன்னு சொன்னா” 

பவானியைப் பார்த்து வெட்கப் புன்னகை செய்த அவன், ‘அப்டில்லாம் ஒண்ணுமில்ல, மேம்.’ என்றான். 

“இங்க பாருடா, எம் புள்ளக்கிக் கூட அடக்கமெல்லாம் இருக்கு” என்று சரூவின் அப்பா சொன்னதும் அனைவரும் சிரித்தார்கள். 

‘ஏ ஐ ஆர்கிடெக்ட், (AI Architect) மேம்’ 

“குட், பவானி நீ?” 

‘ஸ்பேஸ் சயின்டிஸ்ட்’ 

“நைஸ், சஞ்சய் நீ?” 

‘மருத்துவத் துறையில் ஆய்வுகள் செய்பவனாக’ 

‘க்ளியராக இருக்கீங்க நீங்கள்லாம்; உங்க வயசுல என்னக் கேட்டிருந்தா பேய் முழி முழிச்சிருப்பேன்’ என்று சிரித்தார் ஈஸ்வர். 

“சஞ்சய், உங்கிட்டேந்து ஆரம்பிக்கிறேன். இந்த வருஷம் மருத்துவதற்கான நோபல் யாருக்குக் கெடச்சிருக்கு?” 

‘ரெண்டு பேருக்கு ஆன்டி, கேடலின் கேரிகோ,(காதலீன் கரிகோ- Katalin Karico) ட்ரூ வைய்ஸ்மன்.’(Drew Weissman) 

“குட்” என்ற ஈஸ்வர், அந்தப் பரிசு எதுக்காக?” என்று கேட்டார். 

‘அவங்க இரண்டு பேரும் பண்ண ஒரு ஆராய்சியினால, கோவிட்-19க்கான தடுப்பூசிய பெரிய அளவுல தயாரிக்க முடிஞ்சது.’ என்று முந்திக் கொண்டாள் பவானி. 

“கரெக்ட், 13 பில்லியன் தடுப்பூசி மருந்த மிகக் கொறஞ்ச நாள்ல ஃபைஸர், (Pfizer) மடெர்னா (Moderna)தயாரிச்சு கோடிக்கணக்குல உயிர்கள காப்பாத்தியிருக்காங்க. சரூ நீ சொல்லு, அந்த வேக்சினுக்குப் பேரென்ன?” 

‘அது எம் ஆர் என் ஏ (mRNA)-மெசஞ்சர் ரிபோ ந்யூக்ளிக் அமிலம்’(Messenger Ribo Nucleic Acid) 

“மூணுமே நல்ல சமத்து” என்ற விரூ “ஏன் இந்த வழில தடுப்பூசி செய்யறாங்க?” என்று கேட்டார். 

‘நம்மோட செல்லுல அதாவது, திசுவுல இருக்கற மையக் கரு டி என் ஏ (DNA); அதுதான் நம் உறுப்ப, உடல அமைக்கறத்துக்கான செய்தியை வச்சுண்டு இருக்கு.’ 

“ஓ, ஃபைன், ஆனா, சரூ, ஆர் என் ஏயை பத்தின்னா சொன்னான்?” 

‘நான் சொல்றேன், ஆன்டி; டி என் ஏ சொல்ற செய்திய திசுக்களுக்குக்  கொண்டு போறத் தூதுவன் ஆர் என் ஏ.’ 

“கரெக்ட்” என்றார் ஈஸ்வர். 

‘அங்கிள், எனக்கொரு சந்தேகம். இந்த எம் ஆர் என் ஏ நம்ம உடம்புலயே இருக்கறச்சே ஏன் அதத் தடுப்பூசியாப் போடணும்?’ 

“வெரி குட், பவானி, நல்ல கேள்வி. சரூ, சஞ்சய் உங்களுக்குத் தெரியுமா?” 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘கொஞ்சம் தெரியும், மேம் ‘என்றான் சரூ 

“பயப்படாம தெரிஞ்சத சொல்லு சரூ” 

‘நம்ம உடம்புல இருக்கற நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நம்ம எம் ஆர் என் ஏ வோட புரத அமைப்பு தெரியும். ஆனா, வெளிலேந்து வரதோட அமைப்பு தெரியாததால அத எதுக்கும்.” 

“ஏன் அப்படி ஏத்துக்காம எதுக்கறதுன்னு தெரியுமா?” 

‘எனக்குக் கொஞ்சம் தெரியும்.  நம்முடைய எம் ஆர் என் ஏவுல இருக்கும் புரதக் குறியீடுகள், நம்ம நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தெரியும்; ஆனா, அந்தக் குறியீடில்லாதது வந்தா அது அத ஏத்துக்காது. உடம்பு வீங்கும், நெறய ஜூரம் வரும்.’ என்றான் சஞ்சய் 

வியந்து போனார் ஈஸ்வர். “அந்த மேடம் காதலீன் ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட்; ட்ரூ வைய்ஸ்மன் ஒரு இம்யூனலாஜிஸ்ட்- (Immunologist) அதவது நோய் எதிர்ப்பைப் பற்றி ஆராயறவர். அமெரிக்காவுல, பென்சில்வேனியால கிட்டத்தட்ட 15 வருஷமா ஆராஞ்சு, அவங்க ஒரு எம் ஆர் என் ஏவ அமைச்சாங்க. அது நம்ம நோய் எதிர்ப்பு மண்டலம் இதை எதிர்க்காத வண்ணம் உருவாச்சு.” 

“தடுப்பூசிங்கறது, நோய்த் தொற்றைத் தடுக்கற ஒரு வேக்ஸின். நோய்த் தொற்றோட அமைப்ப ஆராய்ந்து, வரிசைப்படுத்தி, அத மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு (Immune system) தடுப்பூசி மூலம் அறிமுகம் செஞ்சுடலாம். அப்போ, நோய் தொற்றும் போது, அந்தக் கிருமிகளை, நம்ம நோய் எதிர்ப்பு மண்டலம் கண்டு பிடிச்சு ‘டேய், எதிரி, நம்ம பேட்டக்குள்ள வராண்டா, அடிச்சு துரத்துடான்னு’ செயல்ல இறங்கி தொற்று நோய்லேந்து நம்மக் காப்பாத்தும்.” 

‘அப்ப்டின்னா, ஆன்டி, நம்ம கோவேக்சின், கோவிஷீல்ட் இதெல்லாம் வேற மாறியா?’ 

“ஆமாம், பவானி. கோவேக்சின், வைரஸோட, எந்தப் பகுதி கிருமியை வச்சுண்டிருக்கோ அதக் கொண்டு இதுதான் கிருமி, இத வளரவிடாம அழிக்கிற வேலய அந்தக் கிருமி நம்ம உடம்புல தொத்தும் போது தடுக்கும்; நம்ம உயிரக் காப்பாத்தும். கோவிஷீல்ட் அந்தத் தொற்றை ஒரு ‘வெக்டர்’ (Vector) மூலமா உள்ளே செலுத்தி, அதப் போல நிஜத் தொற்றுக் கிருமி வந்தா அதப் போராடி ஜெயிச்சு நம்மக் காப்பாத்தும்.” 

‘ஹெபாடிடஸ் பி தடுப்பூசி எந்த வகைல செஞ்சாங்களோ, அந்த வழி கோவேக்சின். எபோலா வேக்சின் வழி முற கோவிஷீல்ட்.’ 

“ஆமாம், மேம், ஏன் இந்தியாவுல எம் ஆர் என் ஏ வைப் பயன்படுத்தல?” 

“அந்த வேக்சினுக்கு மைனஸ் 120-130 டிகிரி குளிர்பதனம் வேணும் . கோவேக்சினுக்கும், கோவிஷீல்டுக்கும் ஃப்ரீஸர் குளிர் நிலயே போறும்.” 

“வைரச ஆராய்ந்து அதுலேந்து ஆண்டிஜெனப் பிரிச்சு சுத்தம் செஞ்சு அப்புறமா வேக்சின் மூலமா நம்ம உடம்புல செலுத்தறது ஒரு வக. உடம்பே அதுக்கப்பறமா நெறைய ஆண்டிஜெனை உண்டாக்கிக்கும்.ஆனா, இந்த வைரசை உண்டாக்குவதுலேந்து, பல  நிலைகள் இருக்கறதால, இதுக்கு மாசக் கணக்குல, வருஷக் கணக்குல ஆகும். இப்போ, எம் ஆர் என் ஏவ வச்சு செய்யற தடுப்பூசிக்கி அந்தக் கிருமியோட வரிசை முறை மட்டுமே போறும். டிஜிட்டல் மூலமா அந்தக் கிருமியோட அமைப்பை எந்த ஆய்வகத்திற்கும் அனுப்பி, ஒரு வாரத்துல வேக்சின் செஞ்சுடலாம். அந்த ஆய்வகத்தில் அதுக்குண்டான கட்டமைப்பு, தொழில் நுட்ப அறிவு, புரிந்து கொள்ளும் திறமை எல்லாமே இருக்கணும். 

பல சந்தேகங்கள் நிவர்த்தியான நிகழ்வில்  எல்லோருக்குமே ஒரு தெளிவு வந்திருந்தது. வெஜிடபில் புலாவ், பூந்தி ரைய்தா, பால் போளி என்று அனைவருக்கும் வயிறு நிறைந்தது. இரண்டையும் மனதில் கொண்டு ‘மேம், நீங்க எப்போ திருப்பியும்  வருவீங்க?” என்று சரூ கேட்ட கேள்வியைப் புரிந்து கொண்டு பவானி மனதிற்குள் சிரித்தாள். 

 

 

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

அறியாத வயசு

List of Nearest Canara Bank Branches in Global Village - Find Nearest Canara Bank ATM - Justdial

Chandramukhi 4K Movie Scenes | "இங்க என்ன கயிறும் கட்டையுமா தொங்குது?" |  Rajinikanth | Jyothika - YouTube

 

“பையனுக்கு அறியாத வயசு. அவன் எப்படி தனியாப் போவான். நீங்க அவன் கூடப் போய் தங்குறதுக்கு, சாப்பாட்டுக்கு நல்ல இடமா பார்த்துக் கொடுத்துட்டு வாங்க”. இது அப்பாவிடம் அம்மாவின் தாய்ப் பாசம் பேசியது.

“அம்மா! நான் என்ன பள்ளியிலா சேரப்போறேன். இரண்டு வருஷம் ஹாஸ்டல்ல வேற இருந்திருக்கேன். நான் தனியா போய் வேலையில சேந்துக்கிறேன். போய் சேர்ந்தவுடன் லெட்டர் போடுறேன் அம்மா” இது நான்.
கடைசியில் வென்றது நான்தான்.இருந்தாலும் அம்மா விடவில்லை. ஒரு நெருங்கிய உறவினரின் தூ……ரத்து உறவு பெரியகுளத்தில் இருக்கிறார் எனக் கண்டு பிடித்து முகவரியை வாங்கிக் கொடுத்தார்.அப்பா “ பத்திரமா போய் வாப்பா. சனிக்கிழமை 9-10.30 இராகு காலம். அதுக்கு அப்புறம் பேங்குக்கு போ” என்றார்.

“முதல் நாளே எப்படிப்பா லேட்டா போறது” மனசு நினைத்ததை வாய் கேட்க மறுத்து விட்டது. “சரிங்கப்பா” எனக்கூறி கிளம்பினேன்.சரியாக மணி 10.45 . தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஆனால் மேனேஜர் எப்படிப் பட்டவரோ?

சிடு மூஞ்சியாக இருந்தால் என்ன சொல்லித் திட்டுவார். அனுபவம் இல்லாததால் அறிவுக்கு எட்டவில்லை. வந்தது வரட்டும், எதுவாய் இருந்தாலும் அவர் ரூமில் வைத்துதானே திட்டப் போகிறார், பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டே வங்கியுள் நுழைந்தேன்.மேனேஜர் R. மகாதேவன் பெயர்ப் பலகை இருந்தது ஆனால் ரூம் காலியாக இருந்தது, அப்பாடி, நிம்மதி. ஒரு கண்டம் தாண்டியாச்சு.

‘மேனேஜர் எப்ப வருவார்’ முதல் கவுன்டரில் இருந்தவரிடம் மெதுவாகக் கேட்டேன்.
‘அங்கே உட்காந்திருக்காரே, அவர்தான்’ கையைக் காட்டினார்.

சரி, நமக்கு முதல் நாளே அதுவும் நடு ஹால்ல, நேரம் சரியில்லை. மேனேஜரைப் பார்த்தேன்.
கண்ணாடி அவர் மூக்கின் மேல் இருந்தது. மேஜை முழுதும் லெட்ஜர்கள். கையில் கத்தையாக வவுச்சர்கள், தொலைந்து போன எதையோ வவுச்சரை வைத்து லெட்ஜரில் தேடிக் கொண்டிருந்தார்.அருகில் சென்று நின்றேன். வேஷ்டி சட்டையில் இருந்தார். தொலைந்தது கிடைக்க வேண்டுமென வேண்டி அவர் கோவிலுக்குப் போய் வந்ததை நெற்றி காட்டியது. கண்ணாடியை மூக்கிலிருந்து கண்களுக்கு நகர்த்திக் கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தார். ஆர்டரைக் கொடுத்தேன்.படித்தார். கடிகாரத்தைப் பார்க்காமலே என்னிடம் ‘இப்ப மணி என்ன’ என்றார். நான் சற்று பயத்துடன் ‘11 சார்’ என்றேன். அவர் ‘சரி, இன்னைக்கு இராகு காலம் 10.30க்கே முடிஞ்சிருச்சு. All the best, போய் accountant ஐ பாருங்க’ என்று சொல்லிக் கொண்டே லெட்ஜருக்குள் மீண்டும் தேட ஆரம்பித்தார்.

வீட்டில் அவரும் ஒரு தந்தைதானே.காலைப் பொழுதை வங்கியை வேடிக்கை பார்த்தே கழித்து விட்டேன். மாலை ரூம் தேடும் படலம். முதலில் அம்மா கொடுத்த முகவரிக்குச் சென்றேன். P.D. சிதம்பர சூரிய நாராயணன் என பெயர்ப் பலகை கூறியது. பெயர்ப் பலகை வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஊரில் பெரிய மனிதர்தான். பெயரைப் போலவே அவரது மனசும் பெரிசு. முகவரி கொடுத்தவர் இவருடைய மனைவி வழிச் சொந்தம் எனவே வரவேற்பு பலமாக இருந்தது.

“உங்க பேங்க்  அருகில் எனது ஆபீஸ் பில்டிங் இருக்கு. மாடி காலியாக உள்ளது. இப்ப இருந்துக்கங்க, சீக்கிரம் ரூம் பார்த்திடலாம்” என்றார் அவர்.
எல்லாம் இவ்வளவு சுலபமாக நடக்குதே என்ற யோசனை ஒரு பக்கம், மறு பக்கம் பேங்கை ஒட்டி தங்கும் அறை, எதிர்த்தாற் போல ராவ் கேண்டீன், காலையில லேட்டா எழுந்தா போதும் என்ற சந்தோசம்.ராவ் கேண்டீனைப் பத்தி இரண்டு வரியாவது சொல்லாம மேலே போனா பெரிய பாவம்.
கிழங்குடன் பூரி, தோசை, காபி காலையில சாப்பிட ஒரு ரூபாய் ஆகும். இரவு ஒரு மாறுதலுக்காக தோசை, கிழங்குடன் பூரி, காபி சாப்பிட்டாலும் ஒரு ரூபாய்தான். அவ்வளவு அருமையாக இருக்கும். அதுக்கப்புறம், அந்த பூரி கிழங்கு நான் எங்கேயுமே சாப்பிட வில்லை.நம்ம கதைக்கு வருவோம். மாலை பேங்க்  கதவைப் பூட்டியவுடன் கொஞ்சம் ஊர் சுத்திட்டு 9 மணிக்கு படுத்து நிம்மதியாகத் தூங்கி காலையில 9 மணிக்கு எழுந்து நான்கு நாட்கள் நன்றாகப் போனது.

ஐந்தாவது நாள் வங்கியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தேன். அருகே நின்ற குருசாமி பாவா (sub staff) ‘எங்க சார் தங்கி இருக்கீங்க” என்றார். அவரை வங்கியே பாவா என்றுதான் அழைத்தது. நான் இடத்தைக்கூறினேன். பாவா ‘ அப்படியா’ என இழுத்தார். மேலே கேட்டும் வேறு ஒன்றும் கூற வில்லை. மதியம் நான் படுத்திய பாட்டில் பாவா ‘அங்க யாரும் தங்க மாட்டாங்க சார்,ராத்திரியிலே யாரோ நடக்கிற மாதிரி சத்தம் வருமாம், ஜன்னல் தானா சாத்திக்குமாம்’ என்றார். இது போதாதா நமக்கு.

அன்று இரவு ஜன்னல் கதவுகளை எல்லாம் சாத்திவிட்டு, எல்லா விளக்குகளையும் எரிய விட்டு கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். ராவ் கடையை 11 மணிக்கு சாத்தினார். இரவு ஒரு மணிக்கு இரண்டாவது ஷோ முடிந்து மக்கள் பேசிக்கொண்டே போனார்கள். மூன்று மணிக்கு இரண்டு நாய்கள் விடாது குரைத்தன. காலை நான்கு மணிக்கு பால் காரர் சைகிளில் சென்றார். காலை ஐந்து மணிக்கு ராவ் கடையைத் திறந்தார்.

விடாது என் அறையுள்ளும் யாரோ நடமாடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நான் கண்களைத் திறக்கவேயில்லை.
காலை எழுந்து பேஃனை நிறுத்திய உடன் நடமாடும் சத்தமும் நின்று விட்டது.

“சுதந்திரம் ததும்பும் பராமரிப்பு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

புரிதல் - சிறுகதைகள்தெரிந்த ஒருவர் பரிந்துரைத்து வந்ததாக 40 வயதான சுனிதா அறிமுகம் செய்து கொண்டாள். கூடவே கணவன் பார்கவ்(வயது 50), தம்பி சுந்தரம்(35), அவர் மனைவி ரித்திகா(35), இவர்களைத் தவிர, சுனிதாவின் தங்கைகள் மூவரும், இளைய தங்கை ராசியின் கணவரும் வந்திருந்தார்கள்.

சுனிதா ஜாடை செய்ய, பார்கவ் தொடங்கினார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருப்பதாகவும், சமீபத்தில் சுனிதாவின் பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் மூத்தவரானதால் குடும்பத்தலைவ பொறுப்பு தன்னுடையதாக ஆனதாகவும் விளக்கினார்.

சுந்தரத்தைத் தட்டிக் கொடுத்தவாறு பார்கவ் விவரித்தார். கடந்த ஆறு மாதங்களாகச் சுந்தரம் யாரிடமும் பேசாமல் தனிமையைத் தேடுகிறார், எரிச்சல் படுகிறார், சரியாக உணவைச் சாப்பிட மறுக்கிறார், வேலையில் கவனம் சரிகிறது என்றார். சுந்தரத்தை வற்புறுத்தி அழைத்து வந்ததால் எல்லோரும் வந்திருப்பதாகக் கூறினார்.

எங்கள் அணுகுமுறையை விவரித்து, சுந்தரத்தின் நிலையை அறிந்த பிறகு தேவைக்கேற்றபடி மற்ற குடும்பத்தினரை ஸெஷன்களுக்கு அழைப்பேன் என்று விளக்கினேன்.

சுந்தரம் ரித்திகாவைத் தவிர மற்றவர்கள் வெளியேறினார்கள். உடனடியாக ரித்திகா, சுந்தரம் தாங்கள் நன்றாக இருந்ததாகவும், ஏறத்தாழ ஆறு மாதத்திற்கு முன்னால், தங்களின் வளர்ப்புப் பெண் மஹிமாவை சுனிதா கூட்டிக்கொண்டு சென்று விட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது எனக் கூறினாள். சுந்தரத்தை விவரிக்க ஊக்குவித்தேன்.

முதுகலைப் பட்டதாரியான சுந்தரம் சொந்த நிறுவனம் இருப்பதாக விவரிக்க  ஆரம்பித்தார். வருமானத்தின் ஒரு சிறிய பங்கைச் சகோதரிகளுக்காக ஒதுக்கி வைத்திருப்பதைக் கூறினார். அக்காவின் வற்புறுத்தலில் வந்ததாகக் கூறி நிறுத்திக் கொண்டார். உடனே ரித்திகா எல்லாம் மஹிமாவால்தான் என்றதும் சுந்தரம் கோபித்துக் கொண்டு வெளியேறினார்.

மறுநாளே பார்கவ் சுந்தரத்தை மீண்டும் அழைத்து வந்தார், சுந்தரத்தின் ஒத்துழைப்பு முக்கியம் என்று நான் கூறியிருந்ததால்.

நிலைமையைத் தான் விவரிப்பதாகத் தொடங்கினார். ஒரே ஆண்பிள்ளையான சுந்தரம் கூடப்பிறந்தவர்களுக்கு எல்லா கடமைகளையும் முழு மனதுடன் செய்து வைப்பார். ஆனால் சுந்தரம்-ரித்திகாவிற்குக் குழந்தை இல்லாதது சங்கடப் படுத்தியதால் பிரசவம், குழந்தை பிறப்பு, பராமரிப்பு என்றால் நெருங்கி வரமாட்டார்கள். அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப் படுவதால் போவதைத் தவிர்த்தார்கள்.

இவர்களின் இந்த நிலையைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் பார்கவ்-சுனிதா தம்பதியர் தங்களுக்கு பிறக்கப்போகும் அடுத்த குழந்தையை சுந்தரம்-ரித்திகாவிற்குத் தத்துக் கொடுக்க முடிவு செய்தார்கள் எனக் கூறினார் சுந்தரம்.

மறுவினாடியே, சுந்தரம் குழந்தை மஹிமாவைத் தான் கண்ணும் கருத்துமாக வளர்த்ததாக வலியுறுத்தினார். திடீரென ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை பார்கவ் அழைத்துச் சென்று விட்டதாகவும் அதிலிருந்து மஹிமாவைப் பக்கம் அண்டவிடவில்லை என்று சொல்லும்போது கண்கலங்கியது. நிலைமையைப் புரிந்து கொள்ள வெளியிலிருந்த ரித்திகாவை அழைத்தேன். பார்கவ் வெளியேறினார்.

ரித்திகா விவரித்தாள். மஹிமா அவர்களுக்குத் தரப்பட்ட குழந்தை என்றதால் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். உதாரணத்திற்கு, கேட்டதை வாங்கித் தருவதும், எந்த இடத்திற்குப் போக வேண்டும் எனச் சொன்னாலும் அழைத்துச் செல்வதும். பணத்திற்குப் பஞ்சம் இல்லாததால் உத்தமமான நவீனமான சீர் உடைகள். முழு சுதந்திரத்தில் மஹிமாவை வளர்த்து வந்தார்கள்.

எப்போதும் அவளைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். யாரும் மஹிமாவை எதுவும் சொல்ல இடம் கொடுத்ததில்லை. மறைமுகமாக மஹிமாவைப் புகழ்வோருக்கே வரவேற்பு.

மஹிமா படிப்பில் மந்தம். அதைச் சரிக்கட்ட, சுந்தரம் ஆசிரியர்களுக்கு நன்கொடை தந்து, அழுத்தம் கொடுத்தார். இவையெல்லாம் தான் செய்தபின் அவளை அழைத்துச் சென்றது ஏன் என்றார் சுந்தரம். தன் அன்பை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே ஊர்ஜிதமாகிறது என்றார்.

தங்கை ராசிக்குப் பெயர் சூட்டப்பட்டதே அவள் ராசியானவள் என்பதால். சுந்தரம் அவளுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்தார். கல்யாணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வினோத் சுந்தரத்தைச் சில கடுமையான கேள்விகள் கேட்டுவிட்டு ராசியை இவர்களிடம் விட்டுச் சென்றார். தன்னைத் தவறாகக் கணக்கிட்டுத் தான் செய்வதில் தவறு  கண்டுபிடிக்கிறார்கள் என்று வருந்தினார் சுந்தரம். மஹிமாவைத் திரும்பப்பெற வழியைக் கேட்டார்.

ஸெஷன்கள் சுறுசுறுப்பாகப் போனது. சுந்தரத்தை தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை மற்றும் மிக அஞ்சிய தகவல்களைப் பல ஸெஷனில் ஆராய்ந்தோம். இதனைத் தொடர்ந்து, மஹிமாவைப் பார்த்துக் கொண்ட விதத்தையும்.

இதிலிருந்து விளக்கங்கள் வெளிவந்தது. ரித்திகாவின் கோணத்திலிருந்தும் பார்க்க, குழந்தைக்குக் கொடுத்த சலுகைகள் எந்த அளவுக்கு அதிகமானது என்றும், அதன் பாதிப்புகளையும் பல ஸெஷன்களுக்குப் பிறகு சுந்தரம் புரிந்து கொண்டார்.

எல்லாவற்றையும் தன்னால் முடிந்தவரை முற்பட்டுச் செய்தால் வாழ்க்கையில் கடமைகளை நன்றாகச் செய்கிறோம் என்று சுந்தரம் நினைத்தார். ஆனால் தாம் செய்வது சரிதானா என்பதை ஆழமாகப் பார்க்கவில்லை. இந்த அணுகுமுறையால் உறவுகள் பாதிக்கப் படுகின்றன என்று புரிந்து கொண்டார். பிறருக்கு நிறையச் செய்தால், நன்றிக்கடன் பிடியில் இருப்பார்கள், தனக்கு  முக்கியத்துவம், மரியாதை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் செய்கிறோம் என்ற புரிதல் ஸெஷன்களின் உரையாடலால் வந்தது.

தன்னை அறியாமல் எழும்பும் தீய எண்ணங்களை அடையாளம் கண்டார். உதாரணத்திற்கு, நற்செயல் செய்த சுனிதா-பார்கவ் மஹிமாவைத் திருப்பி எடுத்துக்கொண்ட பின்பு அவர்கள் மீது பழி உணர்வு மேலோங்கியது என்று அடையாளம் கண்டார்.

இதைச் சரிசெய்ய இரு வழிகளை விடுத்தேன். முதலாக, தினந்தோறும் சுந்தரம்-ரித்திகா இருவரும் கூடப்பிறந்தவர்களால் நடந்த ஓர் நன்மை மற்றும் ஒரு தீமை எழுத வேண்டும். முதலில் தீமைகள் குவிந்தது. இவற்றுடன் தன் உள்ளுணர்வையும் சேர்க்கச் சொன்னேன்.

வெளிப்பட்ட தகவல்களை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இது அவர்களின் கண்களைத் திறக்க உதவியது.

இரண்டாவதாக, சுனிதா-பார்கவிடம் இதைப்பற்றி நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். இதுவரை ஏன் செய்யவில்லை என்பதைப்பற்றி ஸெஷனில் ஆராய, அகம்பாவம்தான் அதற்குக் காரணம் என இப்போது புரிந்தது.

இந்த அறிதலைத் தொடர்ந்து சுனிதாவை தன் கோணத்திலிருந்து நிலைமையை எடுத்துக் கூறச் சொன்னேன். மஹிமாவுக்கு வயதிற்கு ஏற்ற பக்குவம் இல்லாதது சுனிதா-பார்கவை வாட்டியது. எட்டு வயதிலும் சில சமயங்களில் கொச்சையாகப் பேசுவாள். மிக நவீன வளர்ப்பில் முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது. மஹிமாவின் சுபாவத்தில் துளிகூட மென்மை இல்லாதது கவலை தந்தது. பார்கவ்-சுனிதா வளர்ப்பைச் சரி செய்ய வேண்டும் என்று அழைத்து வந்து விட்டார்கள்.

அவளுடைய பல பழக்கவழக்கங்களை எவ்வாறு மாற்றுவது எனத் தவித்தார்கள். அதுவும் இப்போது மஹிமா பதினோரு  வயதை அடைந்த நிலை. சட்டதிட்டங்கள் இல்லாமல் வளர்ந்ததில் யார் சொல்வதையும் கேட்டுக் கொள்வதில்லை. சுந்தரம் பண பலத்தைப் பள்ளியில் காட்டியதில் படிப்பு பின்தங்கிய நிலை நீடித்தது. முரண்டு பிடித்து எதிர் பேச்சுப் பேசுவதே சுபாவமாக ஆகியது. இப்படிப் பல எதிர்மறைகள்.

இவற்றைச் சுதாரிப்பது அவசியமாயிற்று. அதற்கு சுனிதா-பார்கவ் அவர்களுக்குள் மஹிமாவுக்கு எதை அனுமதிப்பது, எது செய்யக்கூடாது என்று பகிர்ந்து முடிவுசெய்ய ஸெஷன்கள் அமைத்தேன். அடுத்த கட்டமாக, முடிவு செய்ததை வீட்டில் அமல்படுத்திச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.

இதிலிருந்து சுனிதா-பார்கவ் புரிந்து கொண்டது, வளர்ப்புப் பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம், சலுகை தரவேண்டும் என்பதில்லை. குழந்தைகளுடன் கூட வசிக்கும் மற்ற பெரியவர்கள் சொல்வதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் முக்கியமான கொள்கையே. இவற்றைப் பார்த்துக்கூடப் பிள்ளைகள் பின்பற்றுவார்கள்.

மஹிமாவை அழைத்து வரப் பரிந்துரைத்தேன். அந்த முயற்சி இன்னும் போய்க்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் சுந்தரத்துடனும் ஸெஷன்கள் தொடர்ந்தது. ராசியின் நிலைமை அறிந்திருந்ததால் அதை எடுத்துக் கொண்டேன். சுந்தரம் ராசியை அழைத்து வந்தார்.

எப்போதும் ராசியிற்காக எல்லாவற்றையும் சிந்தித்துச் செயல் படுத்தியது சுந்தரம். கல்யாணத்திற்குப் பிறகும் நிலைமைகளை எவ்வாறு கையாளுவது என விழித்தால் சுந்தரத்தைக் கேட்டுக் கொள்வாளாம். இப்படி உல்லாசப் பயணம் போகும் இடம் தேர்வு செய்வதிலிருந்து, எல்லாவற்றையும் ராசி சுந்தரத்திடம் முதலில் பகிர்ந்து அவர் சொல்வதைச் செய்வாள். வினோத் இதை இடையூறாகக் கருதுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் சுந்தரம். தானே எல்லாம் செய்ததில் ராசி-வினோத் உறவில் ஒரு வெறுமை நிலை நிலவியதை அவர் அடையாளம் காணவில்லை.

ஸெஷன் போகப்போகச் சுந்தரத்திற்குப் புரிந்தது, ராசியைப் போலவே மஹிமாவையும் நடத்தியதை, அதாவது அவர்களைச் சொந்தமாகச் செய்து அடிபட்டு வளரவிடாமல், தானே அனைத்தும் செய்ததை. இது தன்னுடைய பாதுகாப்பற்ற உணர்வினால், அவர்கள் தனக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தரவேண்டும் என்பதற்காகவே, என்பதைச் சுந்தரம் இன்னும் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. உள்ளுணர்வில் தன்னை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சம். தன் குறைபாட்டால் இவர்கள் மீது ஆக்கிரமிப்பு செய்ததை உணர வேண்டும். இதனால் வினோத்-ராசி உறவில் பிளவு ஏற்பட்டதையும், மஹிமாவின் குணாதிசயங்கள் பாதிக்கப் பட்டதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இதெல்லாம் சுந்தரத்துக்குப் புரிய இன்னும் பல ஸெஷன் தேவைப்படும் போலிருக்கிறது.

 

 

கண்ணன் கதையமுது – 24 – தில்லை வேந்தன்

1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே !(கண்ணனைக் கொல்லக் கம்சன் அனுப்பிய கேசி என்ற குதிரை வடிவம் கொண்ட அரக்கனைக் கண்ணன் கொல்கிறான்….)

கம்சன் புலம்பல்

பூதனை மாண்டாள், பின்னர்ப் போனபல் லரக்கர் மாண்டார்;
ஏதமே செய்யும் கேசி இன்றவன் கையால் மாண்டான்;
மீதமே உள்ளார் யாரோ? வெல்லுதல் கானல் நீரோ?
யாதினிச் செய்வன் நானே? யாதவன் தப்பித் தானே!

( ஏதம்- துனபம்)

கம்சன் திட்டம்

(தந்திரமாகக் கண்ணனையும், பலராமனையும் வடமதுரைக்கு வரச் செய்து , குவலயாபீடம் என்ற யானையை விட்டுக் கொல்லலாம் என்றும், அது தவறினால் பெரும் வலிமையும் ஆற்றலும் உள்ள சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை விட்டுக் கொல்லலாம் என்றும் கம்சன் திட்டமிட்டான்)

முந்திநான் செய்த வற்றால் மூள்பயன் ஏதும் இல்லை.
வெந்திறல் அரக்கர் ஆற்றல் வீணென ஆன தந்தோ
தந்திர வழியில், நந்தன் தன்னிரு மிக்க ளோடு
வந்திடச் செய்வேன் இங்கு, மதுரையில் எளிதில் மாய்ப்பேன்

கூரிய கோட்டு வேழம் குவலயா பீடம் கொண்டு
நாரெனச் சிறுவன் மேனி நலிவுறக் கிழிக்கச் செய்வேன்
காரியம் தவறி விட்டால் கைகளால் நசுக்கிக் கொல்ல
யாருமே வெல்ல ஒண்ணா என்னிரு மல்லர் உள்ளார்

(தனுர் யாகம் செய்வதாகவும், அதைக் காண்பதற்குச் சிற்றரசனான நந்தன் தன் மக்களான கண்ணன், பலராமன் இருவருடன் வர வேண்டும் என்றும்,அவர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டுமென்றும் சொல்லி, யாதவர்களின் நண்பராகிய அக்ரூரர் என்பவரைக் கம்சன் அனுப்பி வைத்தான்)

நந்தனை மக்களோடு அழைத்து வர அக்ரூரரை அனுப்புதல்

வெல்வேந்தன் நான்செய்யும் வில்வேள்வி விழவிற்கு
நல்வேந்தன் சிற்றரசன் நந்தனவன் மக்களொடு
செல்வங்கள் திறையோடு சீர்கொண்டு வரச்சொல்லச்
செல்வீர்நீர் எனவுரைக்கச் சென்றாரே அக்ரூரர்

(வில்வேள்வி- தனுர் யாகம்)

அக்ரூரர் அழைப்பு

(கம்சன் ஆணையைக் கூறிய அக்ரூரர்,தனியே அழைத்து, அவன் வஞ்சகத் திட்டத்தையும் எடுத்துரைத்தார்)

அறம்தழைக்கும் அக்ரூரர் ஆணையினைக் கூறியபின்
புறமழைத்து வஞ்சகனின் பொல்லாத சூதுரைத்தார் .
நிறம்கறுத்த சின்னவனும் நெடுங்கலப்பை முன்னவனும்
திறங்கொழிக்கும் மன்னவனும் தேரேறிப் புறப்பட்டார்

(நெடுங்கலப்பை முன்னவன்- கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அண்ணன் பலராமன்)

கண்ணன் பிரிவினால் வருந்திய கோபியரின் கூற்று

பொற்றேர் ஏறிப் போவதுமேன் பொன்னே மின்னும் கருமணியே
நற்றேன் பிலிற்றும் குழலிசையை நாளும் பருகி உயிர்வளர்த்தோம்
உற்றே உனக்கே ஆளானோம் உன்னில் கலந்தோம் ஒன்றானோம்
எற்றே புரிவோம் இதுமுறையோ ஏங்கித் தவித்தல் எதுவரையோ

பெற்றம் கன்று புல்மறந்து பேத லித்து நிற்றல்காண்
அற்றார் துயர்கள் தீர்ப்பவனே ஆரோ உள்ளார் குறைகளைய
சிற்றில் சிதைத்து விளையாடிச் சிரித்து மகிழ யாருள்ளார்
முற்றம் நிறைந்த பால்வெண்ணெய் முழுதும் கொள்ள யாருள்ளார்

(பெற்றம். – மாடு / பசு)

வஞ்சி யர்கள் குழல்பின்னல் மறைந்து வந்து பிடித்திழுத்துக்
கெஞ்சிக் கொஞ்சிப் பேசியதைக் கிளிகள் சொல்லக் கேட்டிலையோ
மஞ்சு சிந்தும் மழைத்துளியும் வருந்தும் மடவார் கண்ணீரே
தஞ்சம் என்றே உனையடைந்த தைய லரைநீ எண்ணாயோ

கரிய முகிலின் நிறத்தினிலே கண்ணன் மேனிச் சிறப்பிருக்கும்
அரிய மலரின் இதழ்விரிப்பில் அழகன் குறும்பின் குறிப்பிருக்கும்
பெரிய மலையின் வீழருவி பிள்ளை முத்துச் சிரிப்பிருக்கும்
பிரியும் வேளை வந்துவிட்டால் பேதை எங்கள் தவிப்பிருக்கும்.

கண்ணன் கோபியரைத் தேற்றுதல்

கடமையைப் புரிவ தற்குக் கடிதுநான் போக வேண்டும்
மடமயில் அனையீர் நீவிர் வருந்துதல் விடுவீர், நெஞ்சத்
திடமுடன் இருப்பீர், மீண்டும் திரும்புவேன் விரைவில் என்று
கடல்வணன் உறுதி கூறக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

காற்றில் அசையும் மதுரையின் கோட்டைக் கொடிகள் கண்ணனை வரவேற்றல்

ஆற்றலே, அருளே, வாவா! அறிவதன் பொருளே வாவா!
சாற்றிய மறையே வாவா! தண்மலர் நறையே வாவா!
போற்றிடும் மதுரை என்னும் புகழ்நகர் வாவா!, என்று
காற்றினில் கோட்டை உச்சிக் கொடிகளும் அசைந்து கூறும்!

 

தனுர் யாக வில்லை முறித்தல்

வில்வேள்வி இயற்றுமிடம் போனார், அங்கு
   மின்னுமொளிர் மணிபதித்த வில்லைக் கண்டார்
நல்வேலி போல்வீரர் சுற்றி நின்றார்
  நண்ணியவர் தமையண்ணன் தாக்கித் தள்ள,
வல்வேழம் இளையவனும் வில்லெ டுத்து
  வாகாக நாணேற்றி முறிந்தெ றிந்தான்
கொல்வாளை ஓங்கிவந்த வீரர் எல்லாம்
  குலைவுறவே தாக்கிப்பின் கொன்று போட்டார்.

கம்சனின் கனவில் வந்த தீக்குறிகள்

கொலைசெய்யும் கொடுங்கம்சன், தீக்குறிகள் காட்டிக்
குலைநடுங்க வைக்கின்ற கனவுபல கண்டான்.
தலையற்ற தன்னுடலைக் கண்ணாடி தன்னில்
தவிப்புடனே தான்நோக்கும் தீக்கனவு கண்டான்;
நிலையற்றுப் போகுமவன் வாழ்வென்று காட்டும்
நிழல்தனிலே ஓட்டைவிழும் நெடுங்கனவு கண்டான்;
அலைகின்ற கழுதையதன் மீதேறி ஊரை
ஆடையின்றிச் சுற்றுவதாய் இழிகனவு கண்டான்!

( தொடரும்)

திரைக்கதம்பம் செப்டெம்பர் 2023 – சிறகு ரவிச்சந்திரன்

 

குஷி

Kushi : குஷி படத்தின் முதல் சிங்கிள் வெளியானது | kushi movie first single  released in tamil | HerZindagi Tamil

அடிப்படை கருவை விட்டு விட்டு சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் திரை அழகை வைத்து ஓட்டப் பார்த்திருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா. ஆனாலும் மனதில் ஒரு குஷியை ஏற்படுத்த மூவரும் அரும்பாடுபட்டு இருக்கின்றனர் என்பது படம் பார்க்கும்போது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சில ரம்மியமான காட்சிகள், நகைச்சுவை, மணிரத்தினம் ரக திரைக்கதை என்று கவனமாக போகிறது படம். சுவாரஸ்யமான படமா என்றால் ஆமாம். இன்னும் கூட கவர்ந்திருக்கும் விஞ்ஞானத்தையும் மதத்தையும் இன்னும் சரியான வகையில் காட்டி இருந்தால்!- தி ஹிந்து.

சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ரசிகனை விலக விடாதபடி கட்டி போடுகிறார்கள் தங்கள் திரை ஆளுமையால். சற்று இழுபறியான கட்டங்கள் இருந்தாலும் உண்மைக் காதல் வெல்லும் எனும் இனிப்பு முடிவு எல்லோருக்கும் பிடிக்கும். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

முந்தைய படங்களைப் போலவே காதலை விட்டு வெளியே வரவில்லை இயக்குனர் ஷிவ நிர்வான். இதில் காதலை மதத்தோடு மோத விட்டு யார் விட்டுக் கொடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார். அது கொஞ்சம் குழப்படியாக இருக்கிறது. – இண்டியா டுடே.

அருமையான காட்சி படிமங்கள்; அற்புத இசையோடு வந்திருக்கிறது இந்த கலகல படம். – இந்தியா ஹெரால்டு.

கிக்

சந்தானம் நடிக்கும் 'கிக்' முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | Santhanam's next  film titled as Kick first look poster released - hindutamil.inகொட்டாவி வருமளவுக்கு கேவலமாக இருக்கிறது கிக். விளம்பரங்களை உருவாக்கும் நிறுவனராக வரும் சந்தானம், கதைக்காக படத்தில் அவர் உருவாக்கும் விளம்பரங்கள் படத்தை விட நன்றாக இருக்கின்றன. – தி ஹிந்து.

வழமையாக சொல்வது போல பல சமையல்காரர்கள் இருந்தால், செய்யும் சமையல் கோவிந்தா. அதே போல இந்தப் படத்தில் எண்ணிலடங்கா காமெடியன்கள். சரியான காட்சிகளோ வசனங்களோ இல்லாமல் அவர்கள் செய்யும் காமெடி குறி தப்புகிறது. அதோடு முகம் சுளிக்க வைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் எரியும் தீயில் எண்ணை. முக்கியமான குறை, சரியாக எழுதப்படாத படத்திற்கு வடிவம் கொடுப்பதிலும் சிதைவு – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்காத சிறுபிள்ளைத்தனமான படம். அலுப்பை விதைத்து கொட்டாவியை வரவழைக்கும் இந்த  சந்தானம் படம். – சினிமா எக்ஸ்பிரஸ்.

கருமேகங்கள் கலைகின்றன

நல்ல உணர்ச்சிக் காவியமாக மாற வேண்டிய கதை, சராசரி படமாக மாறிப் போயிருக்கிறது. மையப் பாத்திரங்களை ஏற்ற அதிதி பாலன், யோகி பாபு, கவுதம் மேனன் எனப் பலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருந்தாலும், சில கட்டங்களை இன்னும் ஆழமாக விதைத்திருந்தால் மனதில் தைத்திருக்கும். ஜி வி பிரகாஷின் பின்னணி இசையும், கடைசியில் ஒலிக்கும் ‘மன்னிக்கச் சொன்னேன்’ பாடலும் பொட்டில் அறைந்து நம்மை அதிர வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

நல்ல கதைதான்..ஆனால் அதற்கான திரைக்கதை எழுதப்படாமல் போனதால் மனதில் தங்காமல் கலைந்து போகின்றன இந்த கருமேகங்கள். மூன்று கதைகளைச் சொல்ல ஆரம்பித்து, நடுவில் எங்கோ தொலைந்து போகிறார் இயக்குனர் தங்கர் பச்சான். முக்கியமான கதை மாந்தர்கள் படம் நடுவில் காணாமல் போவது, திரைக்கதையின் பெரிய ஓட்டை. பாராட்ட வேண்டுமென்றால் சீனியர் இயக்குனர் பாரதிராஜாவின் உழைப்பை சொல்ல வேண்டும். தன் அனுபவத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அவர். – தி ஹிந்து.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதிராஜா), பரோட்டோ மாஸ்டர் வீரமணியும் (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை. ராமநாதன், வீரமணி இருவரது தேடலின் பயணம் வழியே தற்காலத் தமிழ் சமூகத்தில், குடும்ப உறவுகளில் மண்டிக்கிடக்கும் அகச் சிக்கல்களை, அதனால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது இப்படம். தனது சிறுகதை என்றபோதும், அதைத் திரைக்குத் தழுவும்போது சுற்றிவளைக்காமல் விரல் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் நேரடியாகக் கதைச்சொல்லியிருக்கும் தங்கர் பச்சானின் திரைக்கதை வடிவம் இறுதிவரை இதம். தவறியும் வணிக அம்சங்கள் எதனையும் நுழைத்துவிடாமல், ஒரு நவீன இலக்கியப் பிரதியைப் போல் கதையின் முடிவைக் கையாண்டிருக்கும் இந்தப் படத்தை ,பிரெஞ்சு, பெர்ஷியன், இட்டாலியானோ தொடங்கி உலக சினிமா செழித்து விளங்கும் எந்த மொழியில் ‘டப்’ செய்து வெளியிட்டாலும் கண்களைக் குளமாக்கி, மனதைக் குணமாக்கும் கார் மேகம் இப்படம். – தமிழ் இந்து.

பரம்பொருள்

பரம்பொருள் அடுத்த போர் தொழிலா, திரை விமர்சனம் - சினிஉலகம்

க்ரைம் திரில்லருக்கு ஏற்ற வகையில் கதையும் அதன் சம்பவங்களும். கட்டிப் போட்டதா? கதை மட்டும் தெறிப்பாக இருந்தால் போதாது. அதை சுவாரஸ்யமாக திரைக்கதையில் சொல்லத் தெரிய வேண்டும். இதில் பாதி வெற்றி அடைந்திருக்கிறது பரம்பொருள். அடிப்படையை கனமாக எழுதாமல் லப்டப்பை எகிறச் செய்யும் முயற்சிகள் தோற்றுப் போகின்றன. காட்சிகளின் நீளம் ரசிகனின் பொறுமையைச் சொதிக்கிறது – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

மலையளவு பழசு. கடுகளவு புதுசு. காட்சிகளின் பழைய பாணியும் நீளமும் ரசிகனை அலுப்படைய வைக்கிறது. எதுவும் சுவையில்லையா? அதிக நேரத்தை வீணாக்காமல் சட்டென்று மைய புள்ளியான சிலைக் கடத்தலுக்கு வந்து விடுகிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். சொல்ல வந்த கதையை இழுத்துச் சொல்லியிருப்பது பெரும் குறை. அதோடு அனாவசிய பாடல்களும் வேகத் தடைகள். – தி ஹிந்து

சில தடங்கல்களுக்கு மத்தியில் ‘விறுவிறுப்பு’ முயற்சி. நடிப்பால் முத்திரை பதிக்கிறார் சரத்குமார். அமிதாஷ் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் இன்னும் கூட மெனக்கெடல் வேண்டுமோ என தோன்ற வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தேவையான பங்களிப்பை செய்ய, கானா பாலா குரலில் வரும் பாடல் கவனிக்க வைக்கிறது. பாண்டிகுமாரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் ஈர்க்கின்றன. மேலும், அவரின் லென்ஸ் மொத்தப் படத்தின் குவாலிட்டியையும் கூட்ட உதவுகிறது. – தமிழ் இந்து.

ரங்கோலி

Rangoli review in Tamil | Rangoli Padam Eppadi Irukku | Rangoli release date | புதுமுகங்களின் அட்டகாச நடிப்பில் ரங்கோலி படம் எப்படி இருக்கு?வாலி மோகன்தாஸின் யதார்த்த சினிமா. ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாய் ஸ்ரீ பிரபாகரன் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். – சௌத் ஃபர்ஸ்ட்.

கல்வி குறித்தும், குடும்ப சிக்கல்கள் குறித்தும் இன்னுமொரு படம். சில குறைகள் இருந்தாலும் நெஞ்சம் நெகிழ வைக்கும் தருணங்கள் இதில் அதிகம். – க்ளைமேக்ஸ் ஆஹ்

வடசென்னை சலவைக் கூடங்கள், அத்தொழிலாளர்களின் பொருளாதார / சமூக வாழ்க்கை, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் விளையாட்டு / பள்ளி உலகம் என தொடக்கத்தில் சுவாரஸ்யமாகவும் புதிய கதைக்களத்துடனேயே நகர்கிறது. சத்யாவாக நடித்திருக்கும் ஹமரேஷ் தொடக்கக் காட்சியில் இருந்தே தன் நடிப்பால் கவர்கிறார். தன் நேர்த்தியான நடிப்பால் தனியாளாகவே பல காட்சிகளை தன் தோளில் தாங்கி இருக்கிறார். புதுமையில்லாத அதே அப்பா-அம்மா கதாபாத்திரம்தான் என்றாலும், தங்களின் யதார்த்தமான நடிப்பால் இருவரும் அழகாக நம் மனதில் நிறைகிறார்கள். பார்வதி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரார்த்தனா சந்தீப், அக்கா வேம்பாக வரும் அக்‌ஷயா, தமிழாசிரியராக வரும் அமித் ராகவ், மாணவர்களாக வரும் சஞ்சய், ராகுல், விஷ்வா என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். கதைக்களங்களான சலவைத் தொழிற்கூட்டத்தையும், இராயபுரத்தின் தெருக்களையும் தன் கச்சிதமான ஒளிப்பதிவால் திரைப்படத்தின் முதுகெலும்பாக ஆக்கியிருக்கிறார் ஐ.மருதநாயகம். படம் முழுவதுமே பாடல்கள் விரவிக் கிடந்தாலும், எதுவுமே அலுப்பத்தட்டாத வகையில் இசையமைத்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ். அதற்கு கார்த்திக் நேத்தா, வேல்முருகன், இயக்குநர் ஆகியோரின் வரிகளும் துணை நின்றிருக்கின்றன. பின்னணி இசையிலும் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ்.

திரைக்கதை திருப்பங்கள், கதாபாத்திரங்களின் பரிணாமங்கள், சில காட்சிகளில் வசனங்கள் கூட நாம் யூகித்தப்படியே நகர்கிறது. மேலும், எழுதப்பட்டிருக்கும் காதல் காட்சிகளும் பள்ளி பருவத்தின் இயல்பில் இருந்து விலகி, முழுக்க முழுக்க ‘சினிமாத்தன்மையாக’ இருக்கிறது.- விகடன் இணைய இதழ்

ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் இப்படத்தில் பிராப்பர் திரைக்கதைக்கான எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் எதார்த்த சினிமா பாணியில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்தும்படியான திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், முடிவு காட்சிகளில் ஏனோ சற்றுத் தடுமாறி இருக்கிறார். படத்தின் முடிவாகச் சொல்ல வரும் மெசேஜ் சற்றே எதார்த்த வாழ்வுக்குத் தள்ளி இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. – நக்கீரன் இணைய இதழ்

லக்கி மேன்

Lucky Man: Yogi Babu as a real estate broker in his next Tamil Movie, Music Reviews and News

இயக்குனர் பாலாஜி வேணுகோபாலின் காமெடி வசனங்கள் திணிப்பு இல்லாமல் ஆங்காங்கு தூவப்பட்டு புன்னகையை வரவழைக்கின்றன. யோகி பாபுவும் வீராவும் தங்கள் பங்கை சரியாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சில வசனங்கள் தெறிப்பாக நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கின்றன. தனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று நம்பும் யோகி பாபுவுக்கு ஒரு மகிழுந்து பரிசாக கிடைத்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறுகிறது என்பது ஒன்லைன். இதை நோக்கி பயணிக்கிறது படத்தின் முதல் பாதி. ஆனால் இரண்டாம் பாதியில் வீரா மற்றும் யோகியின் ஈகோ பிரச்சினையை மையமாக்கியதில் படம் ஜவ்வாக மாறி விடுகிறது. -ஃபில்மி கிராஃப்ட் அருண்.

ஈர்க்கும் யோகி பாபு. வசப்படுத்தும் வசனங்கள். இவைதான் லக்கி  மேன் படத்தின் யூ எஸ் பி. படம் பார்த்து வெளியில் வரும்போது நமக்கு பரவசம் இல்லை என்றாலும், நாம் அன்லக்கி எனும் எண்ணம் தோன்றுகிறது- சினிமா எக்ஸ்பிரஸ்.

சின்ன முடிச்சு. அதை சற்று உயர்த்தும் வசனங்கள். ஆனாலும் கடைசி வரை சுவாரஸ்யத்தை தக்க வைக்கத் தவறுகிறது படம். ரேச்சல் ரெபெக்கா, யோகி பாபுவின் மகன் வரும் காட்சிகள் மகிழ்வு புதையல். ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான அளவு. மொத்தத்தில் லக்கி மேன் நம்மைக் கவிழ்த்தும் போடவில்லை.. கவிழ்ந்தடித்து படுக்கவும் செய்யவில்லை- டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மொத்த படத்தையும் தன் தோள்களில் சுமக்கிறார் யோகி பாபு. பாலாஜி வேணுகோபாலின் திரைக்கதை நம்மை புரட்டிப் போடும் அளவிற்கு இல்லை. சொப்பன சுந்தரி போல திரில்லர் இல்லை. ஆனாலும் தேவையற்ற சதை (காட்சிகள்) இந்த லக்கி மேனை ஜெயிக்க விடவில்லை. – தி ஹிந்து

நூடுல்ஸ்

Noodles (film) - Wikipedia

அய்யப்பனும் கோஷியும் போல முதல் பாதி. திரிஷ்யம் போல இரண்டாம் பகுதி. இந்த வாரம் வந்த  படங்களில் நம்மை சற்று அசைத்துப் பார்த்த படம் இது தான்! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

தமிழில் ஒரு மலையாளப்படம். எதிலும் எங்கும் யதார்த்தம். தமிழின் பல படங்களில் வில்லனாக அறிந்த மதன் தட்சிணாமூர்த்தி இதில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். காவல் துறை அதிகாரியான மதனும் உடல் பயிற்சி பயிற்றுநராக வரும் ஹரீஷ் உத்தமனும் காட்சிக்கு தேவையான நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்தி இருக்கின்றனர். இயல்பான கதைக்களத்தை எடுத்து சுவையான படத்தை தந்ததற்காக நூடுல்ஸை சுவைக்கலாம். -தினமணி

இந்தப் படம் சிந்தனையைத் தூண்டும் பிரச்சினைகளை எழுப்புகிறது. சிக்கலான விசயங்களைச் சரியாகக் கையாள்கிறது – சென்னை விஷன்.

வழக்கமான கதைதான் என்றாலும் இதன் திரைக்கதை ரசிகனைக் கட்டிப் போடுகிறது. இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தியின் கதை சொல்லும் பாணி சிறப்பு. மெல்ல லப் டப்பை எகிற விடும் வித்தையை அவர் முழுமையாக கற்றிருக்கிறார். ராபர்ட் சற்குணத்தின் இசை பல இடங்களில் நம்மை சபாஷ் போட வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஜவான்

Jawan Collection: 15 நாளில் பெரும் சாதனை.. ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான் வசூல்-jawan movie to cross 900 crore worldwide - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

பதானின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னுமொரு பிளாக் பஸ்டரை அட்லியின் கூட்டணியில் தந்திருக்கிறார் ஷாருக்கான். இதில் போனஸாக இரட்டை வேடம் என்பது குல்ஃபியுடன் கோன் ஐஸ்கிரீம். அதிரடி சண்டைக் காட்சிகளிலுடன் கிங் கானை புது அவதாரில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஐம்பத்தி எட்டு வயதில் கான் காட்டும் அதி வேக சண்டைகளோடு ஒப்பிட்டால் பதானின் காட்சிகள் வெறும் டீசர் என்றும் தோன்றும். கடைசி சில நிமிடங்கள் தவிர எங்கும் பிரச்சார தொனி இல்லை என்பதும் இதன் சிறப்பு. -ஹிந்துஸ்தான் டைம்ஸ்

அட்லி உங்களை சாய்ந்து உட்கார விடவில்லை. மூன்று மணி நேரப்படம் ஒரு நொடி கூட அலுப்பில்லை என்பது இதன் வர்த்தக சாதனை. ஷாருக்கானை கொண்டாடும் படம். அதில் சில சொட்டுகள் நயன்தாரா, சார்லீஸ் ஏஞ்சல்ஸ் போல ஆறு களவாணிகள், ஒரு குரூர வில்லன் என்று போட்டு கலக்கினால் அதுதான் ஜவான். குறைகள் இல்லையா என்றால் இருக்கிறது. எடிட்டிங் கத்தரியை இன்னும் கூட சாணை பிடித்திருக்கலாம். ஆனாலும் இது அட்லியின் திருவிழா கொண்டாட்டம், குலசாமி ஷாருக் கானிற்காக! – டைம்ஸ் நௌ.

சமூகக் கடமை ஏற்றப்பட்ட திரில்லர் ஜவான். பாரதத்தைச் சுத்தப்படுத்த ஷாருக் கையிலெடுக்கும் திட்டமே கவனம் ஈர்க்கும் இந்தப்படம். இதுவரை வந்த அத்துணை இந்திப்பட நாயகர்களின் பிம்பத்தை ஒட்டி இருக்கிறது இந்த நாயகனின் வேடம். அதனால் ஆறிலிருந்து அறுபது வரை அசை போட நிறைய தீனி. நடுவில் கிங் கானின் பழைய வெற்றிகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை இயக்குனர் அட்லி. நிச்சயம் பதானைக் கடந்து வெல்லப்போகும் படம். -தி ஹிந்து.

ஒரு சமூகக் குறிக்கோளுடன் எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். இதில் வரும் பெண்கள்  ஆட்டம் போட மட்டுமல்ல. அவர்களுக்கு கதையில் பங்கு இருக்கிறது. இது அனிருத் இசையில் வரும் படம் எனும் விளம்பரம் பொய்யில்லை என்று நிரூபித்திருக்கிறார் அனி. பாடல்கள் ஹனி. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

பொழுதுபோக்கிற்கு குறைவில்லை. அதோடு நல்ல மெசேஜையும் கொடுக்கத் தவறவில்லை இந்தப் படம். நயன்தாராவும் தீபிகா படுகோனும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறார்கள் திரையில் தோன்றும் போதெல்லாம்.  மகளிர் சிறைச்சாலை குறித்த பகுதி படத்தின் தொய்வான ஒன்று. மற்றபடி அப்பா மகன் என விஸ்வரூபம் எடுக்கும் கானின் வேடங்கள் ரசிகனுக்கு மாப்பிள்ளை விருந்து – சினிமா எக்ஸ்பிரஸ்.

ஒரு மாஸ் மசாலா படத்தில் சம கால அரசியலை பேசியதற்காக இயக்குனர் அட்லிக்கு சல்யூட். ஆனாலும் இரட்டை வேடங்களில் அப்பா ஷாருக் தான் கவர்கிறார். அவரது அறிமுகக் காட்சி அரங்கில் தெறிக்கிறது. இந்தப் படத்திற்கு பாடல்கள் தேவையில்லை. ஆனாலும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு நடுவே பாடல்களைப் போடும் பழைய பாணியை ஏன் இயக்குனர் தன் முதல் இந்தி படத்தில் வைத்திருக்கிறார் எனும் கேள்வி எழுகிறது. நயன்தாராவைப் பொறுத்தவரை வெறும் காதலியாக ஆடிப் பாடி விட்டுப் போகாமல் கதையில் சமரசம் பேசும் காவல் அதிகாரியாகவும் எழுதபட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. வழக்கமான விஜய் சேதுபதிக்கு உண்டான நக்கல் நையாண்டி இந்த வில்லன் பாத்திரத்தில் பரிமளிக்கவில்லை. அட்லி படங்களில் ஒன்றிரண்டு உணர்வு பூர்வமான காட்சிகள் இருக்கும் என்றாலும், அவை சட்டென்று தோன்றி மனதில் தைக்கும் முன் கடந்து போகின்றன. தீபிகா படுகோன், அப்பா ஷாருக் காட்சி மட்டும் இதில் விதிவிலக்கு. தீபிகா அசத்துகிறார். பழைய அட்லி, ஷாருக், ஷங்கர் படங்களை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் உண்டு. தயாரிப்பு நிறுவனம் செலவழித்த தொகை படத்தின் பிரம்மாண்டத்தில் தெரிகிறது. ஷாருக், அனிருத் மற்றும் பிரம்மாண்டத்திற்காக பார்க்கலாம். மொத்தத்தில் இது ஷாருக்கின் திரை பிம்பத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட அட்லியின் படம் சோடை போகவில்லை. – விகடன் விமர்சனக்குழு.

தமிழ்குடிமகன்

எனக்கான விடுதலையை நானே போராடி வாங்கணும்: தமிழ்க்குடிமகன் டிரைலர்சாதியையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பற்றி இன்னொரு படம். வழக்கமான டெம்ப்ளேட்டில் பயணித்தாலும் சில இடங்களில் மனதுக்கு நெருக்கமாக நெருடலான காட்சிகளும் உண்டு. சேரனின் சின்னச்சாமி பாத்திரம் புதுசில்லை. அதோடு படத்தில் சில அருமையான வசனங்கள்  தவறான இடங்களில் பேசப்பட்டு வீணாகின்றன. இசையும் தொழில்நுட்பக்குழுவும் படத்தை உயர்த்த எதுவும் முயற்சிக்கவில்லை. நல்ல எண்ணத்தோடு எடுக்கப்பட்ட படம் அதை பாதியில் தவற விட்டிருக்கிறது. – ஒன்லி கோலிவுட்

ஊரில் யார் இறந்து விட்டாலும் சின்னச்சாமியின் குடும்பம் தான் இறுதிச் சடங்குகளைச் செய்யும். அதனாலேயே அவர்களை தாழ்ந்தவர்களாக பார்க்கும் மற்ற சாதி மக்கள். இதை உடைக்க, கிராமத் தலைவராக நினைக்கிறார் சின்னச்சாமி எனும் சேரன். அதை தடுக்க நினைக்கும் மற்றவர்கள். ஒரு கட்டத்தில் ஈமக்கிரியைகளை செய்வதில்லை எனும் முடிவு கிராம மக்களைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் என்னாச்சு என்பது க்ளைமேக்ஸ். இசக்கி கார்வண்ணனின் படம் இதுவரை சொல்லாத களத்தை எடுத்து பொட்டில் அறைகிறது. சேரன் நிறைவாக செய்திருக்கிறார்,. அப்படி ஏதும் செய்யவில்லை சாம் சி.எஸ்ஸின் இசை. – சௌத் ஃபர்ஸ்ட்

சொல்ல வந்த கருவிற்காக இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்திருந்தால் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு போயிருக்கும் இந்தப் படம். சேரனின் நடிப்பு சில கட்டங்களில் தட்டையாக போயிருக்க வேண்டிய அபாயத்தைத் தடுக்கிறது. எவ்வளவோ முயன்றாலும் சாம் சி எஸ்ஸின் இசை படத்திற்கு பெரும் உதவி ஏதும் செய்யவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சரியான கேள்விகளை முன் வைக்கிறது படம். ஆனால் அதற்கான பொருத்தமான பதில்கள் படத்தில் இல்லை. எந்த வேலை செய்வது என்பது உழைப்பாளியின் உரிமை, அதற்குரிய மரியாதையும் அவசியம் என்பது போன்ற சொல்லாடல்கள் இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒன்று. நடித்த அத்துணை கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் முடிவு? வானவில்லின் அருகில் இருக்கும் தங்கப்பானையை காட்டும் கனவோடு முடிகிறது சலிப்பு. – சினிமா எக்ஸ்பிரஸ்.

குலத் தொழிலை விட நினைப்பவர்க்கு ஏற்படும் பிரச்சினை குறித்த கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சேரன், தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்க படுவதையும் உணர்வு பூர்வமாக நடிப்பால் கடத்த முயற்சி செய்து இருக்கிறார். நாயகி பிரியா ஜோவிற்கு பெரியதாக வேலை இல்லை. வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்  லால். அருள்தாஸின் நடிப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. எஸ்.பி.யாக வரும் சுரேஷ் காமாட்சி நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் வருகிறார். வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் சிறந்த கதையை எடுத்து  திரைக்கதையில் தெளிவில்லாமல் இயக்கி இருக்கிறார். பெரிய நடிகர்களை வைத்து சரியாக கையாளத் தவறி இருக்கிறார். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை இருப்பது படத்திற்கு பலவீனம். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. – மாலை மலர்

துடிக்கும் கரங்கள்

துடிக்கும் கரங்கள் / Thudikkum Karangal (2023) | Screen4screen

படத்தில் சங்கிலி முருகன் தனது மகனைத் தேடி அலைவது போலக் கோர்வையான திரைக்கதையைத் தேடி அலைய வைக்கிறார் இயக்குநர் வேலுதாஸ். எக்கச்சக்க லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்க்கின்றன. பார்வையாளர்கள் மனதில் திரில்லர் பாணியில் ஒரு சீரியஸ் படமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தை வர வைக்கின்றன முதல் பத்து நிமிடங்கள். ஆனால், அதன் பின்னர் ஹீரோ, ஹீரோயின் என்ட்ரி, காதலுக்காக ஸ்டாக்கிங், சிரிக்க வைக்காத காமெடி என முன்னர் வரைந்த மனக்கோட்டினை அப்படியே ரப்பர் வைத்து அழிக்கிறார்கள். விகடன் இணைய இதழ்.

யூடியூப்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி, வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷனில் கவனிக்க வைத்து இருக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் சவுந்தரராஜா. சதீஷின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. நாயகி மிஷாவும் வழக்கமான கதாநாயகி போல் வந்து சென்றிருக்கிறார். டிராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் பில்லி முரளி. ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரம்மி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் துடிக்கும் கரங்கள் – துடிப்பு குறைவு. – மாலை மலர்.

மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி ( தமிழ்/ தெலுங்கு)

கோடையில் வெளியாகும் அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி ' | Virakesari.lk

அனுஷ்கா ஷெட்டிக்கு அருமையான மறுபிரவேசம். நவின் பொலி ஷெட்டிக்கு இன்னொரு ஹிட். ரசனையான காதல் பயணம் இந்தப் படம். கலியாணம் எனும் கட்டுகள் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் கதை நாயகியும் அதனால் ஏற்படும் சிக்கல்களுமே கதை. நவீன் பொலி ஷெட்டி தன் நகைச்சுவை வசனங்களாலும் டைமிங்கினாலும் படத்தை தோள்களில் சுமக்கிறார். – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

எதிர்பார்த்த முடிவுகளுடன் ஒரு படம். சரியான அளவு நகைச்சுவை இருந்தாலும் அது மட்டும் போதுமா எனும் எண்ணத்துடன் முடிகிறது படம்.-டைம்ஸ் ஆஃப் இந்தியா.

நவீன் பொலி ஷெட்டி இந்த நவீன காதல் கதையில் கட்டியணைக்கத் தோன்றும் விதமாக நடித்திருக்கிறார். இயக்குனர் மகேஷ் பாபு ஹிட்டடித்திருக்கிறார்.- இண்டியா டுடே.

ரெட் சாண்டல் வுட்

Red Sandal Wood Review| ரெட் சாண்டல் வுட் விமர்சனம்வெற்றியின் படங்கள் கல்லா கட்டாது. ஆனால் நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை அவரிடம் உண்டு. இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒன்று தான். ஆனால் சரியாக எழுதப்படாமல் பாதியில் கை விட்டு விடுகிறது. சில இடங்களில் சுவாரஸ்யமாக இருக்கும் படம் பல இடங்களில் தொய்வாகிப் போகிறது. சாம் சி எஸ்ஸின் இசை மற்றும் மற்ற தொழில் நுட்பக் குழு தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

செம்மர கடத்தலை மைய்யமாக கொண்டு உருவான படம்தான் ரெட் சாண்டல் வுட்.  இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கி உள்ளார்.  ஹீரோ வெற்றி நடிப்பில் முந்தைய படங்களை விட தேறி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். சோகம், ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு யதார்த்த கிராமத்து மனிதரை கண் முன் நிறுத்துகிறது. நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்கு பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் இருப்பதை இப்படம் சொல்கிறது. ரெட் சாண்டல் வுட் தமிழர்களின் ரத்த சரித்திரம்! – கல்கி இணைய இதழ்.

இன்னும் கூட வித்தியாசமாக வந்திருக்க வேண்டிய படம் எழுதிய வகையில் கவனம் போதாமையால் சறுக்கி இருக்கிறது. இருக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசரமும் திரைக்கதை பயணிக்கும் மித வேகமும் படத்திற்கு எதிர்மறைகளாகி விட்டன. – சினிமா எக்ஸ்பிரஸ்.

மார்க் ஆன்டனி

MarK Antony - Movie Review | மார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்

மார்க் ஆன்டனி சிறந்த படமில்லை. ஆனால் புதுப்புனல் உற்சாகத்துடன் பயணிக்கிறது. அதோடு சொல்ல வந்த நோக்கத்தை தெளிவாகச் சொல்கிறது. லாஜிக் எல்லாம் பார்க்காமல் போனால் இதை கடைசி சொட்டு வரை ரசிக்கலாம். கூடவே பிரதான பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பு; இருபது வருட கால இடைவெளியில் இங்கும் அங்கும் தாவும் திரைக்கதை புதுசு. விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ரித்து வர்மா கட்டிப் போடுகிறார். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

கோமாளி காலம் தாவும் படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு காமெடி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகவும் செய்திருக்கிறார். அவரைத் தவிர விஷாலையும் சேர்த்து சற்று புளித்த வாடை அடிக்கும் பாத்திரங்களும் காட்சிகளும் அலுப்படைய வைக்கின்றன. பின்னாளைய உலகத்திற்கு போகும் அலைபேசி ரசிகனிடம் கிடைத்திருந்தால் விஷாலையோ ஆதிக் ரவிச்சந்திரனையோ பார்த்து இந்த கதையை கேட்டிருப்பார். படம் பார்ப்பது தவிர்க்கப்பட்டிருக்கும். – தி ஹிந்து.

ஒற்றை ஆளாக இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறார் எஸ் ஜே சூர்யா. எங்கேயும் இது ஒரு நவீனப் படம் என்று காட்ட முயற்சிக்கவில்லை என்பது இதன் உண்மை தன்மை. இதில் எடிட்டரின் பங்கு அளப்பரியது. அதோடு ஒளிப்பதிவாளரின் காட்சி கோணங்களும் ஒளி அமைப்பும் அசத்தல் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

மார்க் ஆண்டனியின் உருவமும் அவர்தான். இதயமும் அவர்தான். எஸ் ஜே சூர்யா அதகளம் செய்திருக்கிறார். – தி ஹிந்து.

ஆர் யூ ஓகே பேபி

Are you ok baby movie review

ஒர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணும் பெற்றோர் சந்திக்கும் சட்ட உணர்வு பூர்வமான சிக்கல்களை தெளிவாக காட்டுகிறது படம். குழந்தையின் தாயாக முல்லை அரசி, வளர்ப்பு அன்னையாக அபிராமி, தந்தையாக சமுத்திரக்கனி, முல்லை அரசியின் கணவராக அசோக்குமார் என பலரும் நடிப்பை கொட்டிக் கொடுத்திருக்கின்றனர். இளையராஜாவின் இசை பல்வேறு உணர்வுகளை இன்னும் மீட்டி இருக்கிறது. காலத்திற்கு ஏற்ற படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

கடத்தப்பட்ட சிசுவை முறையாக சட்டப்பூர்வமாக தத்தெடுத்ததாக நினைக்கும் பெற்றோர் ஒரு புறம்; சிசுவின் உண்மையான தாய் உண்மையை ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் போட்டுடைக்கும் டிவிஸ்ட். கடைசியில் என்னாச்சு என்பது தான் இந்தப் படம். தான் நடத்திய ஒரு லைவ் ஷோவை கொஞ்சம் பெயர் மாற்றி, தான் இயக்கும் படத்திலயே எந்த வித சம ரசமும் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணாவிற்கு பாராட்டுக்களை சொல்லி விடலாம். இது போன்ற குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ஷோக்கள் அனைத்தும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மைய்யப்படுத்தியே நடக்கின்றன என்பதை நடு நிலையோடு சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி. படத்திலும் ஒரு நிஜ லைவ்  ஷோ நடுத்துபவராக நடித்துள்ளார். “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா “என சொல்லாததுதான் குறை. குழந்தையில்லா தம்பதிகளின் வலியையும், தத்து எடுப்பதில் உள்ள நடை முறை சிக்கல்களும் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர். தாய்மையின் அன்பையும், சில சட்ட சிக்கல்களையும், இந்த சிக்கல் களையப்பட வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது ‘ஆர் யூ ஒகே பேபி.’ – கல்கி இணைய இதழ்.

வளர்ப்பு தாய்க்கும் உயிரியல் தாய்க்கும் இடையே உள்ள பாசப்போராட்டம் குறித்த கதை கேள்விப்படும்போதே சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. அந்த சுவையை தர முடிகிறது படத்தால்- மாலை மலர்.
அப்பத்தா

அப்பத்தா விமர்சனம்: ஊர்வசியின் நடிப்புக்கு ஆயிரம் ஹார்ட் ரியாக்ஷன்ஸ் கொடுக்கலாம்; ஆனால் படத்துக்கு? | OTT Review - Appatha: Director Priyadharshan and Urvashi join ...திரையரங்குகளுக்கு வராமல் ஜியோ சினிமாவில் நேரடியாக காணக் கிடைக்கிறது இந்தப் படம். பல வருடங்களின் அனுபவத்தில் தன் 96வது படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். ஒரு நாயின் பல் வேறு உணர்வுகளை திரையில் காட்டுவது கடினம். நாய்களின் மீது பாசம் காட்டுபவர்கள் சற்று உணர்ச்சி வசப்படுவார்கள். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அரை வேக்காடு சமையலாக முடிந்திருக்கிறது அப்பத்தா. இன்னும் கூட ஊர்வசியின் திறமையை ஆழமாக சித்தரித்திருக்கலாம். -தி ஹிந்து.

தனது 700வது திரைப்படத்திற்குக் கச்சிதமான கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கிறார், ஊர்வசி. ஊர்வசியின் எமோஷனல் பக்கம் நமக்குப் பரிட்சியமான ஒன்றுதான். ஆனால், ‘அப்பத்தா’வாக வாழ்ந்து மாறுபட்ட எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அனுபவத்தால் அந்த வயதான கதாபாத்திரத்திற்குத் தேவையான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் கலங்கவும் வைக்கிறார். கிராமப்புற சுற்றுச்சூழலை அசலாகப் படம் பிடித்து திரையெங்கும் பச்சை வண்ணத்தை நிறைக்கிறது மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. எமோஷனல் காட்சிகளில் ராஜேஷ் முருகேசனின் இசை மேலும் உருக்குகிறது. – சினிமா விகடன்.

 

டீமன்

டீமன் படம் எப்படி இருக்கு? - YouTube

எவ்வளவோ மாறுபட முயன்றாலும், இதுவரை பார்த்த ஹாரர் படங்களை விட்டு விலக இயக்குனர் ரமேஷ் பழனிவேல் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் சராசரி படமாக டீமன் வந்திருக்கிறது. அபர்நதியுடனான நாயகன் சச்சினின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதோடு படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கலாமோ என்றொரு எண்ணமும் வருகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

காதைக் கிழிக்கும் இசை. சராசரிக்கும் கீழான திரைக்கதை; மிதவேகக் காட்சிகள் என்று டீமன் ரசிகனை தொங்கலில் விட்டு விடுகிறது. எழுத்தில் எழுதியதை காட்சிப்படுத்த தவறிவிட்டார் இயக்குனர். – சினிமா எக்ஸ்பிரஸ்.

சித்தா

சித்தார்த்தின் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோசென்ற வருடம் வெளியான அற்புதமான படமான கார்கியின் தோழியாக மலர்ந்திருக்கிறது சித்தா. கார்கியில் போராளி பெண் என்றால் இதில் ஆண். இது ஒரு வேற்றுமை. ஆனால் இயக்குனர் எஸ் யூ அருண்குமார் எழுதிய விதத்திலும் காட்சிப்படுத்திய தோரணையிலும் அதீத நம்பிக்கையை விதைத்திருக்கிறார். சபாஷ். தந்தையற்ற சுட்டிப் பெண் சேட்டை, சித்தப்பா ஈஸ்வரனுடன் நெருக்கமாகும் ஆரம்பக் காட்சிகள் அல்வா துண்டு. இடைவேளை வரும்போது, அழுத்தத்தின் உச்சத்தில் மீதி படத்தை பார்க்காமல் ஓடி விடலாமா எனும் பதைப்பு மனதுள் வருவது நிஜம். நடித்த கலைஞர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து பாத்திரங்களை கண் முன் உலவ விட்டிருக்கிறார்கள். சித்தார்த் இதுவரை நடித்த படங்களில் இதுதான் மிகச் சிறந்த ஒன்று. சகஸ்ரா ஸ்ரீயின் குட்டிப் பெண் வேடம் அற்புதம். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் ஓடி வந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வது இன்னும் சில தளங்கள் படத்தை உயர்த்துகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

பத்து வருடங்களுக்கு முன் வந்த கொரியன் படமான தி ஹோப் இவர்களை வெகுவும் பாதித்திருக்கிறது. எவ்வளவு பாதிப்பு என்றால் சில காட்சிகளை அப்படியே இதில் வைக்கும் அளவிற்கு.  ஆனாலும் சித்தார்த்தின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை. நடித்த இரண்டு குழந்தைகளும் மனதை அள்ளுகின்றன. நிமிஷா சஜயனின் பாத்திரம் தேவையற்ற ஒன்று. சில வசனங்கள் யதார்த்தத்தை மீறி இருக்கின்றன என்பதும் உண்மை. ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

இறைவன்

வசூலில் கடும் சரிவை சந்தித்த விவரம் ஜெயம் ரவியின் இறைவன் படம்!..இதோ விவரம்ஒரு நல்ல சைக்கோ திரில்லர். அழுத்தமான பாத்திரங்கள். ஆனால் பாதி வழியில் இலக்கை கோட்டை விடுகிறது படம். இடைவேளைக்குப் பிறகு வில்லன் ஹீரோ எலி பூனை விளையாட்டாக மாறி விடுவது தான் இதன் குறை. ஜெயம் ரவியின் நடிப்பு இந்தப் படத்திற்கு பெரிய பலம். அது படத்தைக் காப்பாற்றுகிறது. கூடவே நயன்தாரா, நரைனின் பாத்திரங்கள் கூடுதல் கனத்தைக் கொடுக்கின்றன. யுவனின் இசை பெரிய ப்ளஸ். பல காட்சிகளை அடுத்த தளத்திற்கு உயர்த்தும் வேலையை இசை செய்கிறது. ஆனால் பயணம் முடியாத அதிருப்தி ஏற்படுகிறது முடிவில். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

எல்லா இழப்புகளும் ஹீரோவுக்கு ஏற்படுவது படத்திற்கு கை கொடுக்கவில்லை. படத்தை தன் அபார நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த கதாபாத்திரமாக மாறி நம்மை அவருக்காக பாவப்பட வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கப் பட்டிருக்கிறது இறைவன். ஆனால் சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் போக சுமார் ரகமாக்கிவிட்டது. – சமயம் தமிழ்

வழக்கமான சைக்கோ திரில்லர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது படம். படத்தின் கடைசி பகுதி அரை வேக்காடு. – தி ஹிந்து.

ஒரு திரில்லருக்கான அனைத்து விடயங்களும் படத்தில் உண்டு.அதை திரையில் இன்னொரு தளத்திற்கு உயர்த்த தவறி விட்டார் இயக்குனர் அகமத். – இன்டியா டுடே.


சந்திரமுகி 2

Chandramukhi 2 OTT Date : ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2.. எங்கு பார்க்கலாம் தெரியுமா? | chandramukhi 2 ott release date and time in tamil | HerZindagi Tamil

கொஞ்சம் பொழுது போனா ஓகே என்பவர்களை ஈர்க்கும். வித்தியாசமான படம் வேண்டுவோரை அலுப்படையச் செய்யும். ஆனாலும் மோசமான படமில்லை என்று நினைப்பதற்கு இயக்குனர் பி வாசுவின் பங்களிப்பு மிக அதிகம். சந்திரமுகி, வேட்டையனின் பின் கதையை வாசு சொன்ன விதம் நம்மை எழுந்து உட்கார வைக்கிறது. முதல் பாகத்தில் பார்த்த அல்லது எங்கோ கேட்ட கதையை சுவாரஸ்யமாக படமாக்கிய விதம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. நம்மை சிரிக்க வைக்க வடிவேலு செய்யும் முயற்சிகள் அயர்வுக்கு கொண்டு போகின்றன. ரஜினியை தொட முடியாது என்றாலும், ராகவா லாரன்ஸ் நம்மை கவனிக்க வைக்கிறார். அதேபோல் கங்கனா ரணாவத்தும். கீரவாணியின் இசை வித்யாசாகரின் அடி தொட்டு ஒலிக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சந்திரமுகி 2 ஹாரரும் இல்லை. காமெடியும் இல்லை. தீர்மானத்தோடு சராசரி படம் கொடுக்க செய்த முயற்சி. படத்தின் பின் பாதியில் வரும் ‘போதும் போதும்’ எனும் பாடலை ரசிகனும் பாட வேண்டிய கட்டாயம். – இந்தியா டுடே

ஹிட்டடித்த முதல் பாகத்தின் மேல் கறையைப் பூசும், மூளையை மரத்து போக வைக்கும் படம். ரஜினி வடிவேலு காமெடியை ராகவா லாரன்ஸுடன் மீட்டெடுக்க செய்யும் முயற்சி பரிதாபமாகத் தோற்கிறது. – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

கங்கனா ரனாவத் சொன்னதை செய்திருக்கிறார். ஒலிக்கும் பாடல்களுக்கு ஆடுகிறார். லட்சுமி மேனனும் ராதிகாவும் அதிக பங்களிப்பு இல்லாமல் கடந்து போகிறார்கள். யாரும் கேட்காத இரண்டாம் பாகம் ஆங்காங்கு சுவாரஸ்யம். – தி ஹிந்து.

#

 

அஷ்டவக்கிரன் [எட்டுக் கோணல் பண்டிதன் ] – தி.இரா.மீனா

அஷ்டவக்கிரன் - தமிழ் விக்கிப்பீடியாஇராமாயணம், மகாபாரதம், மற்றும் சில உபநிடதங்களில் வணக்கத்திற்கு உரியவராகப் போற்றப்படும் அஷ்டவக்கிரன் தான் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான ஆன்மீகச் சிந்தனையை வளர்த்தவர். அஷ்டம் என்றால் எட்டு என்றும், வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருள். பிறக்கும்போதே இரு பாதங்கள்,இரு கால் மூட்டுகள், இரு கைமூட்டுகள் மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டதால் இது அவருக்கு காரணப் பெயராகிறது. அவருடைய தந்தையின் சாபத்தால் இக்குறை அவருக்கு ஏற்படுகிறது.

அவர் தாயின் கருப்பையிலிருந்த போது, முனிவரான அவருடைய தந்தை கஹோதா அவருக்கு பல்வேறுவகையான பாடங்கள் விவரித்துச் சொல்லுவார். அதனால் பிறப்பதற்கு முன்னால் கருவிலிருக்கும் போதே ’தன்னிலை ’என்பது குறித்து பல்வேறு விளக்கங்களை அறிந்தவராகிறார். ஒரு நாள் அவ்வகையான பாட விளக்கத்தின் போது தந்தை ஏதோ ஒன்றைத் தவறாகச் சொல்லிவிடுகிறார். அதைச் சுட்டிக் காட்டுவது போலக் குழந்தை’ ஹும் ’ என்கிறது துரதிர்ஷ்டவசமாக தந்தை கோபமடைந்து எட்டு விதமான ஊனத்தோடு குழந்தை பிறக்கட்டும் என்று சாபமிடுகிறார். அதனால் உடல் ரீதியான குறைகளோடு குழந்தை பிறக்கிறது.

அவன் இளைஞனான பிறகு ஒரு முறை தன் தந்தையோடு ஜனக மன்னரால் நடத்தப்படும் மிக உயர்ந்த விவாதத்திற்கு போகி்றான். ஜனகர் அரசனாக இருந்த போதிலும் மெய்யறிவு தேடுபவர்.ஞானம் பெறத் துடிப்பவர்.அதனால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து ஆன்மீகவாதிகளையும் தன் அவையில் ஒன்று சேர்க்கிற அளவுக்கு அரசனின் தேடல் அமைகிறது. தினமும் தன் அன்றாடப் பணிகளை விரைவாக முடித்து, அவையிலுள்ள அறிஞர்களின் விவாதங்களில், பேச்சுக்களில் கலந்து கொள்வார். வெவ்வேறு வகையான துறைகளில் மேம்பட்டிருக்கிற அறிஞர்களின் விவாதங்கள் நாட்கள்,வாரங்கள் ,மாதங்கள் என்று கால எல்லையின்றி நடக்கும்.அவற்றில் தொடர்ந்து பங்குகொள்வார். எனினும் அவர் தேடிய ஞானத்தைத் தருபவர்களில்லை.

ஒரு முறை அம்மாதிரியான ஒரு விவாதத்திற்கு அஷ்டவக்கிரனின் தந்தை கஹோதா அழைக்கப்பட தந்தையோடு அவனும் செல்கிறான்.விவாதம் தொடங்கி அறிஞர்கள் இடையே பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது அப்போது எழுந்து நின்று “இவையனைத்தும் வீண் பேச்சு. இவர்கள் யாருக்குமே ’தன்னிலை ’என்பது குறித்து எதுவும் தெரியாதெனினும் எல்லோரும் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். எனினும்,என் தந்தை உள்பட யாருக்கும்’ தன்னிலை ’பற்றி எதுவும் தெரியாது” என்கிறான்.

ஜனகர் அவனைப் பார்த்து “நீ சொன்னதை உன்னால் நிரூபிக்க முடியுமா? இல்லையெனில் இந்த உடலைக் கூட நீ இழந்து விடக்கூடும்” என்கிறார்.

“என்னால் நிரூபிக்க முடியும்.”அவன் பதில் சொல்கிறான்

“அதற்காக உனக்கு என்ன வேண்டும் ?”ஜனகர் கேட்கிறார்.

“அதற்கு நான் சொல்வதை முழுவதுமாக நீங்கள் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.அதற்கு உடன்பட்டால்தான் நான் விளக்க முடியும்.நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீங்கள் செய்தால் ’உங்களை’ நீங்கள் அறிய நான் உதவமுடியும் .”
அவனுடைய நேர்மையைப் பாராட்டிய ஜனகர் “சரி,நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் “ என்கிறார்.

“நான் காட்டில் வசிக்கிறேன்.அங்கு வாருங்கள் “என்று விடை பெறுகிறான்.

அஷ்டாவக்ரர் தீர்க்கும் அறிவென்னும் புதிர் | Arivennum Pudhir - hindutamil.inசில நாட்களுக்குப் பிறகு ஜனகர் காட்டிற்குப் போக படை,பட்டாளம் தொடர்கிறது.உள்ளே செல்லச் செல்ல காடு அடர்த்தியாகிக் கொண்டே போகிறது.நீண்ட தேடலின் போது ஜனகர் தனித்துப் போகிறார்.காட்டை விட்டு வெளியேற முயலும் போது திடீரென ஒரு மரத்தினடியில் அஷ்டவக்கிரன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.உடனே குதிரையை விட்டிறங்கும் போது ,ஒரு கால் சேணை வளையத்திலும் மற்றொரு கால் மேலே தூக்கியுமிருக்க ”நில்லுங்கள்.அப்படியே நில்லுங்கள்”என்று அஷ்டவக்கிரன் சொல்ல ஜனகர் அப்படியே வசதியற்ற ஒரு நிலையில் ஒரு கால் மேலே இருக்க, குதிரையில் தொங்கியபடி இருக்கிறார்.

அந்தத் தடுமாற்றமான நிலையில் நின்றிருக்கும் நிலை– அது கணப் பொழுது எனவும்,நீண்டகாலமெனவும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அஷ்டவக்கிரன் சொன்ன அந்த நிலையிலேயே நின்று ’தன்னிலை’ உணர்ந்திருக்கிறார். ஜனகரின் ஐயங்களும் அதை அஷ்டவக்கிரன் தீர்த்து வைக்க ஜனகர் ஞானம் பெறுகிறார் குதிரையிலிருந்து இறங்கி அஷ்ட வக்கிரனின் திருவடி தொட்டு “அரண்மனையும், அரசாட்சியும் எனக்கு முக்கியமில்லை.நான் உன்னுடன் இருக்கிறேன் “என்கிறார்.ஆனால் அவனோ “ஞானம் பெற்ற அரசன் மக்களுக்கு வேண்டுமெனச் “சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி வைக்கிறான். ஜனகர் அஷ்டவக்கிரனின் ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகிறார்

ஆசிரமத்திலுள்ளவர்கள் இதை விரும்பவில்லை.அரசனான இவரிடம் நம் குரு என்ன ஆன்மீகம் கண்டார்?வாழ்வையே அர்ப்பணித்து வந்த துறவி களான நம்மைப் புறக்கணிப்பது நியாயமானதா? எனத் தமக்குள் பேசிக் கொண்டனர்.இதை உணர்ந்த அஷ்டவக்கிரன் தவறான அவர்களின் பார்வையைச் சரிசெய்ய முடிவுசெய்கிறான். ஒருநாள் அவன் ஆசிரமத் துறவிகளோடு விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜனகரும் வந்து கலந்து கொள்கிறார்.சிறிது நேரத்தில் அங்கு ஓடி வந்த வீரனொருவன் ஜனகரை வணங்கி “அரசனே, அரண்மனை பற்றியெரிகிறது. அனைவரும் நிலை குலைந்துள்ளனர் ”என்கிறான். கோபத்துடன் எழுந்த அரசன் “இந்தக் கூட்டத்திற்குள் வந்த குறுக்கிட உனக்கு எவ்வளவு துணிவு வேண்டும்? வெளியே போ’ என்று விரட்டுகிறார். அவன் அங்கிருந்து ஓட விவாதம் மீண்டும் தொடர்கிறது.

சிறிது நாட்கள் கழித்து, அஷ்டவக்கிரன் மற்றுமொரு திட்டமிடுகிறான். துறவிகள் கூடியிருக்க அவன் சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.திடீரென அங்கு ஓடிவரும் ஆசிரம உதவியாளன் “குரங்குகள் துறவிகளின் ஆடைகள் உலர்த்தியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து ஆடைகளை நாசம் செய்கின்றன’ என்று பதட்டத்தோடு சொல்கிறான்.

துறவிகள் வேகமாக எழுந்து தங்கள் ஆடைகளைப் பாதுகாக்க ஓடுகின்றனர்.அங்கு சென்ற போது குரங்குகள் இல்லாததையும், அவர்களது உடைகள் அப்படியே உலர்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றனர்.என்ன நடந்ததென்றுணர்ந்து கொண்டு தலைகுனிந்து திரும்புகின்றனர்.விவாதம் தொடர்கிறது.அதனிடையே ’தன் அரண்மனை பற்றியெரிந்து கொண்டிருந்த போதும் அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி அரசன் சொற்பொழிவின் போது குறுக்கிட்ட வீரன் மீது கோபம் கொண்டான்.அவன் சிந்தனை அது. துறவிகளான உங்களுக்கு உடைமை என்று எதுவுமில்லாத போதும், செய்தி கேட்டதும் ஓடீனீர்கள், நான் பேசுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் எவருமே சீண்டாத அந்த உடைகளைப் பாதுகாக்க ஓடினீர்கள்.உங்கள் துறவு எங்கே ?அவன் அரசன் ,ஆனாலும் துறவி. “என்று அவர்களின் தவறான பார்வையை மாற்றுகிறான். ஒரு மனிதனுக்குள்ளான வளர்ச்சியென்பது அவன் வெளியுலகில் என்ன செய்கிறான் என்பதல்ல, தனக்குள் அவன் எப்படிச் செயல்படுகிறான் என்பதில்தானுள்ளது என்பதை அறிவித்த உயர்விது.

Ashtavakra Gita அஷ்டா வக்ர கீதை: விளக்கவுரை (Tamil Edition) eBook : Abhayam, Prof. K.Mani: Amazon.in: Kindle Storeதன்னிலை, மெய்ம்மை, தன்னையுணர்தல், விடுதலை ஆகியவை குறித்து அஷ்டவக்கிரனுக்கும் ஜனகருக்குமிடையே நடந்த உரையாடலை விளக்குவதுதான் அஷ்டவக்கிர கீதை. இதற்கு அஷ்ட சம்ஹிதை என்ற பெயருமுண்டு. இது பகவத்கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பினும் தத்துவத்தைப் பற்றி அது முன்னிறுத்தும் பார்வை வேறுபடுகிறது. ஞானவிடியலும் ஏற்படுகிறது.அதுவே அஷ்டவக்கிர கீதை. இது இருபது அத்தியாயங்கள் கொண்டது.

அஷ்டவக்கிரரின் கீதையிலிருந்து சில கருத்துக்கள்:

• எப்போது மனம் ஏதோ ஒன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதும், உவப்பதும் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.

• .எப்போது சித்தம் எதையும் விரும்பாது வருந்தாது தள்ளாது மகிழாது சீறாதிருக்குமோ ,அப்போதே முக்தி

• நினைப்பாலன்றி வேறெவ்வாறும் துக்கம் இங்கு ஏற்படாதெனத் தெரிந்து கவலையற்று அனைத்திலும் ஆசை தீர்ந்தவனே இன்பமும் அமைதியும் அடைந்தவன்.

• கண்ணாடிக்குள் உள்ளும்,புறமும் எப்படியோ அவ்வாறே இவ்வுடலின் உள்ளும் புறமும்.

• அலைகளும், நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது “ போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறி்ல்லை.

 

இம்மாதக் கவிஞர் மாயவநாதன் – முனைவர் தென்காசி கணேசன் – 94447 94010)

கவிஞர் மாயவநாதன் திரைப்பட பாடல்கள் | MAYAVANATHAN Hits | Evergreen Tamil Old Songs - YouTube

இந்த மாதக் கவிஞர் பூலாங்குளம் மாயவனாதன்

  • தண்ணிலவு தேனிறைக்க (படித்தால் மட்டும் போதுமா)
  • நித்தம் நித்தம் (பந்த பாசம்)
  • என்ன கொடுப்பாய் (தொழிலாளி)
  • அந்தி வெயில் (பூம்புகார்)
  • கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
  • சித்திரப்பூவிழி வாசலிலே (இதயத்தில் நீ)
  • காவிரிப் பெண்ணே வாழ்க
  • பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே (என்ன தான் முடிவு)
  • அழகு ரதம் பிறக்கும் (கற்பூரம)
  • அய்யனாரு நிரஞ்ச வாழ்வு கொடுக்கணும் (காவல் தெய்வம்)
  • தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே (மகிழம்பூ)
  • மல்லிகை பூப்பொட்டு கண்ணனுக்கு (தாலாட்டு)
  • கந்தனின் தேரோட்டம் ((தேரோட்டம்)
  • மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க (திருவருள்)

திரையுலகில் சில காலமே வலம் வந்தாலும், இது போன்ற,  அழியாப் புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர்.

ஒன்று பட்ட நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள பூலாங்குளம் என்ற கிராமத்தில் இருந்து வந்த இந்தக் கவித் தென்றல்,   இள வயதிலேயே மறைந்து போனது மிகத்துயரமான ஒன்று.

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பாடலாசிரியர்.

விளம்பர வெளிச்சம் இல்லாமல் இருட்டுக்குள்ளே மறைந்து அல்லது மறைக்கப்பட்டு, அடையாளம் இல்லாமல் அடங்கிப் போன ஏராளமான திறனாளர், நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.
சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு.

மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.

அவரின் பாடல்களின் கவிநயம்,  கவியரசு பாடல்களுக்கு இணையாக இருக்கும்.

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது

நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது

நீதியே நீ இன்னும் இருக்கிறாயா 

இல்லை நீயும் அந்தக்கொலைக் காலத்தில் உயிர் விட்டாயா

அந்தி வெயில் பட்டு உடல் பொண்ணாகட்டும்

கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ?

சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ?

பொங்கி வரும் மலைகளின் முதல் இரவோ? வண்ணப்

பூவோடு மாவிலைத் தோரணமோ?”

 

 

முத்துநகைப்- – – பெட்டகமோ
முன்கதவு- – – – – ரத்தினமோ

முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த
பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள் கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை.

“இதயத்தில் நீ” திரைப்படத்தில் கவிஞர் மாயவநாதன்  – “சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ” என்ற பாடல்.

காதலியிடம் தோழி அவள் காதலிக்கும் நாயகனைப் பற்றி அவர் எப்படிப்படவர்? என்று கேட்கிறார். காதலிக்கு வெட்கம் மேலிடுகிறது. வெட்கத்தால் பதில் வர மறுக்கிறது. அதைப் புரிந்து கொண்ட தோழி அவர் இப்படியிருப்பாரா? அப்படியிருப்பாரா? என்றெல்லாம் கேட்டு அவளிடமிருந்து எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறாள்.

“சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ? – இந்தக்

கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ?

யார் நின்றவரோ?  யார் வந்தவரோ?  இதற்கு காதலி பதில்  –

தென்றல் அழைத்துவரத் தங்கத்தேரினில் வந்தாரே

புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே  – இடம் தந்த என் மன்னவரே

இப்போது தோழி காதலியைப் பார்த்து இப்படி கேட்கிறார்.

கட்டழகினில் பாதி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ? – இந்த

பட்டு உடலினைத் தொட்டணைக்கும் கலைக் கற்றுத் தெரிந்தவரோ? – உனை

மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ? – நீ

கற்றுக் கொடுத்ததை ஒத்திகைப் பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ?

கலை முற்றும் அறிந்தவரோ? (இதற்கு காதலி இல்லை என்பது போல் தலையசைப்பார்)

காதல் மட்டும் தெரிந்தவரோ? (இதற்கு காதலி ஆம் என்பது போல் தலையசைப்பார்)

ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து இலக்கிய நயத்தோடு புனைந்திருப்பார் கவிஞர் மாயவநாதன்.

தமிழக அரசு விருது கொடுக்கத் தவறிய பாடல் இது என்றே கூறலாம்.

“என்னதான் முடிவு” திரைப்படத்தில்,

“பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே – செய்த

பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே

பாவத்திற்கும் கூலிதன்னை நிறுத்தி வைக்காதே – எனைப்போல்

பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே” என்று மிக அழுத்தமாக எழுதி இருப்பார்.

படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும்,

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்,

என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல்.

விண்ணளந்த மனம் இருக்க.

மண்ணளந்த நடை எடுக்க

பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்

ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்

அழகியல் ,உணர்ச்சி, வடிவம் , கருத்து  என எல்லாமே இந்த வரிகளில் உள்ளன

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ,  என்ற பாடலில்,

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது

குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது

காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது

மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்று கூறுவார்.

காதலை ஒரு பூவாக உருவகம் செய்தது. அருமையான வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பாடல் என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..

கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா…உவமை அழகு.  அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில் கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பூம்புகார் திரைப்படத்தில் மாதவியிடம் இருந்து நீண்ட காலம் கழித்து நல்ல புத்தியோடு திரும்பி, கண்ணகியிடம் கோவலன் வருகின்றபோது, பின்னணியில் கே.பி சுந்தராம்பாள் குரலில் கணீரென்று ஒலிக்கும் ஒரு பாடல்,

தப்பித்து வந்தானம்மா

தன்னந்தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்

தப்பித்து வந்தானம்மா

ஆகா என்ன அருமையான வரிகள். காலம் தவறு செய்யும் எல்லோருக்கும், ஒரு பாடம் கற்பிக்கும் அது மாபெரும் அடியாக இருக்கும்… அந்த அடியைத் தாங்க முடியாது… அப்போது தப்பித்து ஓடத் தான் தோன்றும்.

ஒரு கலகலப்பான விஷயம்.

மறக்க முடியுமா எனும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகச் சென்றார் மாயவநாதன். சற்று தாமதம் ஆகிவிட்டது. வழக்கமாக அமைத்த இசைக்கு தத்தகாரம் போட்டுக் காட்டுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் அன்று பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, பாடலாசிரியர் தாமதமாக வந்ததால், வேடிக்கையாக, தத்தகாரம் சொல்லாமல் கவிஞரின் பெயரையே அவர் உருவாக்கிய இசைக்கு வரிகளாக,  மாயவநாதன் ….மாயவநாதன்…. மாயவநாதன்….. என்று பாட,  உடனே கவிகளுக்கே உரிய கவி கோபம் இவருக்கு வந்துவிட ,”பாட்டு எழுத முடியாது”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.

பின்னர் அப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய திரு  கருணாநிதி ,  அப்பாடலை, காகித ஓடம் கடலலை மேலே போவதைப்போல மூவரும் போவோம் என்று எழுதினார். இப்படி கோபித்துச் சென்றது கவிஞர்களின் இயல்பு. வித்யா கர்வம் என்றுஅதைச் சொல்வார்கள்.

கவிஞர் நா.காமராசன் தன்னுடைய நூல் ஒன்றில் மாயவநாதனை,  படிக்காத இந்த பாமர விவசாயி தனக்குள்ளே, கவித்துவம் நிறைந்தவனாக இருந்தான்.
கவிஞர் கண்ணதாசன் ஒருவரே கவிஞர் என்று அறியப்பட்ட காலம் அது. அவரது பாடல்களுக்கு ஈடும் இணையும் இல்லை. எவரும் அவரைப் போல எழுதி இனிமேல் சாதிக்க முடியாது என்று இருந்த காலம் அது. கவியரசர் பாடலை தவிர வேறு எவருடைய பாடலும் அங்கீகரிக்கப்படாத காலம் மாயவநாதன் வாழ்ந்த காலம்.   அந்தக் காலகட்டத்தில் அழியாத பாடல்களை தந்தவர், கவிஞர் மாயவநாதன்.

காவிரிப் பெண்ணே வாழ்க

உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

பூம்புகார் படத்தில் இவர் எழுதியது, கானல் வரிப் பாடல் என்று  பாடப் புத்தகத்தில் பள்ளிக் காலங்களில் புரியாதது இந்தப் பாடலில் எளிமையாக்கிக் கொடுத்தது. சமீபத்தில் சிலப்பதிகாரம் கண்ட கானல் வரிகளை அந்த மருதத் திணை, நெய்தல் திணை என்று பாகுபடுத்திப் பார்க்க இப்போது புரிகிறது.  இதனை, தவறாகப் புரிதல் நிலை என்பார்கள். .

எப்படியும் இந்தப் பாடல் காவியத்திற்கே திருப்பு முனையாயிற்று. கோவலன் , காவிரியைச் சோழன் காதலியாகப் பார்த்து சிவன் கங்கையையும் கொண்டும் கன்னிக்குமரியையும் இணைத்ததால் கசப்பேதும் உனக்கில்லை …அது உன் பெண்மைஎனும் பெருமையின் சிறப்பு என மாதவி தான் கணிகை குலத்தவள் என்றே இடிக்கிறான் என்றுணர்ந்து பதிலடி எடுத்து வைப்பதை…..இங்கு கவிஞர் மாயவநாதன் கூறுகிறார்.

மாயவநாதனின் கவியாளுமை மிகச் சிறப்பு.

“நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? – நெஞ்சில்

நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?

குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?”

என்ற பாடல்,

அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.

பாலும் பழமும் – திரைப்படத்தில் ஒரு பாடல். (படத்தில் இடம் பெறவில்லை)

“பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு

பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு

எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?”

வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். “இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?” அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.

என்னதான் முடிவு – திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

“பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே – செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே”

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.

திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.

1936 ஆம் ஆண்டு பிறந்து, .1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே வாழ்ந்து,  தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன். “டெல்லி டூ மெட்ராஸ்’ – திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

மீண்டும் அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி.

சிபாரிசு – -எஸ்.எல். நாணு

What is the difference between Bollywood and Carnatic music? - Quora”அண்ணா.. உங்க பொண்ணுக்கு அகாடமில மத்தியானம் 2.30 மணி ஸ்லாட் பிடிச்சுட்டேன்”

சந்தோஷமாகச் சொன்ன வரதனை கொஞ்சம் ஏமாற்றத்தோடு பார்த்தார் ராமாம்ருதம்..

“என்ன வரதன்.. 2.30 மணி ஸ்லாட்டா? கிருஷ்ணமூர்த்தி பையனுக்கு 4.30 மணி ஸ்லாட் கிடைச்சிருக்கே”

“அண்ணா.. அந்தப் பையன் கொஞ்சம் சீனியர்.. ஏற்கனவே 2.30 மணி ஸ்லாட்டுல ரெண்டு வருஷம் முன்னால பாடியிருக்கான்.. கவலைப் படாதேங்கோ.. இந்தத் தடவை பைரவியை பிசிரு தட்டாம எடுத்து விடச் சொல்லுங்கோ.. அதை வெச்சே அடுத்த தடவை உங்க பொண்ணுக்கு எல்லாத்தையும் பை பாஸ் பண்ணி நேர 6.30 மணி ஸ்லாட்டே பிடிச்சுடறேன்”

ராமாம்ருதத்துக்கு திருப்தி ஏற்படாவிட்டாலும் அவர் மகளுக்கு அகாடமியில் பாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷம் தான்.. எல்லாம் வரதனின் தயவு..

வரதன்.. வயது நாற்பத்தைந்து.. ஐந்தரை அடி உயரம்.. எலுமிச்சை நிறம்.. மேலே தூக்கி வாரிய முடி.. நெற்றியில் சின்ன புள்ளியாகக் குங்குமப் பொட்டு.. மீசையில்லாமல் மழ மழவென்று சவரம் செய்யப் பட்ட முகம்.. எப்பவும் உதட்டில் பளிச்சிடும் புன்னகை.. சீருடை போல் தினமும் வெள்ளை ஜிப்பா.. வேஷ்டி.. கையில் ஒரு டயரி.. அபார சங்கீத ஞானம் என்று சொல்ல முடியாது.. அவன் அப்பாவும் தாத்தாவும் சங்கீத வித்வான்கள்.. உழைப்பால் திறமையால் முன்னுக்கு வந்தவர்கள்.. ஆனால் வரதனுக்கு சின்ன வயதிலிருந்தே சங்கீதத்தில் ஆர்வமும் கிடையாது.. சாரீரமும் கிடையாது.. ஞானமும் கிடையாது.. அப்பா மற்றவர்களுக்குச் பாடம் எடுக்கும் போது சில ராகங்களை அஹஸ்மாத்தாகத் தெரிந்து வைத்திருந்தான்.. ஆனால் சங்கீதத்தை வைத்துத் தான் இன்று அவன் பிழைப்பு நடந்துக் கொண்டிருக்கிறது..

எந்த சபாவில் கச்சேரிக்கு வாய்ப்பு வேண்டும் என்றாலும் வரதனிடம் சொன்னால் போதும்.. எப்படியாவது சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விடுவான்.. அதற்கு அவன் சர்வீஸ் சார்ஜாக குறிப்பிட்ட தொகையை வசூலித்து விடுவான்.. சங்கீத சீசன் என்றில்லாமல் சபாக்களின் மாதாந்திர கச்சேரிகளில் பங்கேற்கவும் வரதனின் தயவு பலருக்குத் தேவைப் பட்டது.. வரதனும் எல்லா சபா காரியதரசிகளுடனும் சகஜமாகப் பழகுவதோடு சபாவுக்காக அடிக்கடி ஏதாவது காரியம் சாதித்துக் கொடுத்து அவர்களுடன்  நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.. அதனால் எல்லா சபாக்களிலும் அவன் பேச்சுக்கு செல்வாக்கு உண்டு..

இதோடு காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றம் வேண்டுமே..

சில டி.வி. சேனல்களிலும் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டு அங்கு நடக்கும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சிலருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.. இதற்கு ஏக டிமாண்ட்.. அதனால் சர்வீஸ் சார்ஜும் கொஞ்சம் அதிகம்..

ஆக வருடம் முழுவது வரதனுக்கு பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.. மைலாபூர் நாட்டு முத்து முதலித் தெருவில் சிக்கனமான ஒரு சிங்கிள் பெட்-ரூம் பிளாட் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாகத் தான் இருக்கிறான்..

வரதனுக்கு ஒரு மகனும் மகளும்.. மகள் கோதை பிளஸ்-டூ படிக்கிறாள். கூடவே அவள் அம்மா வத்சலாவின் விருப்பப் படி பாட்டும் கற்றுக் கொள்கிறாள். தாத்தா கொள்ளுத் தாத்தாவைப் போல் அவளுக்கும் பாட்டில் நிறைய ஆர்வம் இருப்பதைக் கண்டு வரதனுக்கே ஆச்சர்யம்.. மகன் ரகு பத்தாவதில்..

வரதன் ராமாம்ருதத்துடன் பேசிக் கொண்டிருந்த போதே ”யாரோ.. இவர் யாரோ.. என்ன பேரோ” என்று சுதா ரகுநாதன் அவனுடைய மொபைலில் ரிங்டோனாகப் பாடி அழைத்தார்.

“ஹலோ..”

“வரதன்.. ஸ்ரீநிவாசன் பேசறேன்”

“மாம்பலம் மூர்த்தி தெரு பாகவதர் ஸ்ரீநிவாசன்.. சென்னை கல்சரல்ல இருபத்தி நாலாம் தேதி சாயந்தரம் ஏழு மணி ஸ்லாட் கன்பர்ம்ட்..”

”அப்படியா? ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப காம்படீஷன் இருந்துதே.. எப்படி சாதிச்சீர்?”

”அண்ணா.. எல்லாம் பெரியவா அனுக்ரஹம்..”

”இல்லை வரதன்.. எல்லாம் உம்ம வாக்கு சாதுர்யம் தான்.. உம்ம பேச்சைக் கேட்டா யாராலயும் எதையும் மறுக்க முடியாதே”

”அதெல்லாம் இருக்கட்டும்.. உடனே பக்கவாத்தியம் யாருன்னு மட்டும் டெக்ஸ்ட் பண்ணிடுங்கோ.. சபாகாராளுக்குச் சொல்லணும்”

“கண்டிப்பா.. மறுபடியும் சொல்றேன்.. உம்ம சிபாரிசு இல்லைன்னா நிச்சயமா இந்த சான்ஸ் கிடைச்சிருக்காது.. கமிஷனை கூகுள் பே பண்ணிடறேன்”

“அண்ணா.. கமிஷன்னு சொல்லாதேங்கோ.. தப்பு அர்த்தமாப் படறது.. சர்வீஸ் சார்ஜஸ்னு சொல்லுங்கோ”

“சரி.. சர்வீஸ் சார்ஜஸ்”

இதற்குள் டிவி சேனலிலிருந்து கால் வந்தது..

“சொல்லுங்கோ அருண்.. நாலாம் தேதி ரெகார்டிங்க்னு தான் ஏற்கனவே சொன்னேளே.. ஓ.. மியூசிக் சீசன் அப்படிங்கறதுனால சங்கீதம் பத்தி டிஸ்கஷனா? இருபது பேரா?.. சரி ஏற்பாடு பண்ணிரலாம்.. அந்த இருபது பேரும் கொஞ்சம் சங்கீத ஞானம் இருக்கறவாளா இருக்கணும்.. கூடவே கொஞ்சம் சினிமாப் பாட்டும் தெரிஞ்சிருக்கணும்.. அவ்வளவு தானே? ரெண்டு நாள் டைம் கொடுங்கோ.. ஏற்பாடு பண்ணிட்டுக் கூப்பிடறேன்”

இது வரதனுக்கு விழாக்கால போனஸ் மாதிரி.. இருபது பேரிடமிருந்தும் சர்வீஸ் சார்ஜ் வாங்கி விடுவான்.. அவர்களும் டிவியில் முகம் தெரியும்  என்பதால் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்..

நாளாக நாளாக வரதனின் இந்த சேவை ரொம்பவே பிரபலமாகி விட்டது..  பிஸியாகி விட்டான்.. பண வரத்துக்கும் குறைவில்லை.. நாட்டு முத்து முதலித் தெருவிலிருந்த சிக்கனமான வீட்டை வாடகைக்கு விட்டு ரங்கா ரோடில் கொஞ்சம் விஸ்தாரமான பிளாட் வாங்கிக் குடியேறினான்.. புது மாருதி ஸ்விப்ட் கார் பார்க்கிங்கை அலங்கரித்தது.

வத்சலா குழந்தைகளிடம் அடிக்கடி கிண்டல் அடிப்பாள்..

“உங்க தாத்தாக்கள் பாடி சம்பாதிச்சா.. உங்கப்பா பேசியே சம்பாதிக்கறார்”

வரதனின் இந்த சேவையைப் பாராட்டி ஒரு பிரபல சபா “சங்கீத சிபாரிசுத் திலகா” அப்படின்னு விருது கொடுக்க ஏற்பாடு பண்ணி பல பிரபலங்களை  சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள்..

“சங்கீத உலகத்துக்கு இப்படி ஒரு சேவை அவசியம் தேவை.. வரதன் இன்னும் பல கலைஞர்களை ஊக்குவிச்சு அவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணம்னு கேட்டுக்கறேன்”

ஒரு பிரபல வித்வான் இப்படிப் பேசியவுடன் அரங்கமே கரகோஷித்தது..

அன்று வரதனுக்கு சால்வை, தங்க மெடல், பாராட்டு மடல்.. கூடவே ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை..

வரதன் தன் ஏற்புறையில்..

“எல்லாம் எங்க அப்பா தாத்தாவோட ஆசிர்வாதம் தான்.. எங்கப்பா என்னை சங்கீதம் கத்துக்கோன்னு முட்டிப்பார்.. ஆனா எனக்கு அதுல அப்ப விருப்பம் இருக்கலை.. கத்துண்டிருக்கலாமோன்னு இப்பத் தோணறது.. ஆனா அவர் கூடவே இருந்து இருந்து ஏதோ ஒரு வகைல சங்கீதம் என் ரத்தத்துல கலந்துருத்து.. அதனால தான் நான் பாடலைன்னாலும் பாட ஆசைப் படறவாளுக்கு சிபாரிசு பண்ணலாம்னு விளையாட்டா ஆரம்பிச்சேன்.. அது இன்னிக்கு பகவான் அருளால இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கு”

விழா லைவாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது..

விழா முடிந்தவுடன் சிலர் வரதனை சூழ்ந்துக் கொண்டு..

“சார்.. நாங்க இஞ்சியரிங் கிராஜுவேட்ஸ்.. உங்க பேச்சைக் கேட்டதுலேர்ந்து இஞ்சினியரிங்லாம் வேஸ்ட்.. டென்ஷன் இல்லாம.. மூலதனம் இல்லாம சம்பாதிக்க இது எவ்வளவு நல்ல வழின்னு புரிஞ்சுது.. இதுல என்ன பண்ணணும்.. எப்படிப் பண்ணணும்னு எங்களுக்கு கிளாஸ் எடுக்கறீங்களா? ஃபீஸ் கொடுத்துடறோம்.. அப்புறம் நாங்களும் பல பேருக்கு சிபாரிசு பண்ணறோம்”

இதைக் கேட்டு வரதனுக்கு சிரிப்புத் தான் வந்தது..

ஹும்.. சிபாரிசுக்கு இவ்வளவு மகிமையா?

அவர்களிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்விட்டு வீடு திரும்பினான்..

அதுவரை எட்டிக் கூடப் பார்க்காத பக்கத்து வீட்டுக் காரர்களெல்லாம் டி.வி. பார்த்த பாதிப்பில் வரதனுக்கு வாழ்த்து சொன்னார்கள்..

ஏற்கனவே தயார் பண்ணி வைத்திருந்த பாதாம் கேக்கை வத்சலா எல்லோருக்கும் விநியோகம் பண்ணினாள்..

மறுநாள் பத்திரிகைகளில் வரதன் விருது வாங்கும் செய்தியும் படமும் வெளியாகின..

அன்று வரதன் வெளியே போய் விட்டு வீடு திரும்பும் சமயம் கோதை பாட்டு சாதகம் செய்துக் கொண்டிருந்தாள்.

அவள் பாடுவதைக் கேட்ட வரதன்..

“நல்லாத் தான் பாடறா”

மனதில் நினைத்து சந்தோஷப் பட்டான்.. ஆனால் எதுவும் சொல்லவில்லை..

காப்பி கொடுத்த வத்சலா அவனருகில் உட்கார்ந்து..

“கோதையோட பாட்டு வாத்தியார் உங்க கிட்டப் பேசணம்னு சொன்னார்”

வரதன் காப்பியை ருசித்துக் கொண்டே..

“என்னவாம்?”

“கோதைக்கு அபாரமான சங்கீத ஞானம்.. ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சுக்கறா.. குடும்ப ரத்தத்துல சங்கீதம் இருக்கே.. ஞானம் இல்லாமப் போகுமா அப்படின்னார்”

“ம்ம்..”

“இப்பவே ஆலாபனையெல்லாம் அமர்க்களமா பண்ணறா.. அதனால கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிரலாம்னு சொன்னார்”

“ம்ம்..”

வத்சலாவுக்கு எரிச்சல் வந்தது..

“நான் என்ன கதையா சொல்லிண்டிருக்கேன்? ம்ம்.ம்ம்.னு ராகம் இழுத்துண்டு”

காப்பி டம்ளரை கீழே வைத்த வரதன்..

“இப்ப என்ன பண்ணணுங்கறே?”

“ஊருல இருக்கறவாளுக்கெல்லாம் சிபாரிசு பண்ணறார் உங்க ஆத்துக்காரர்.. சொந்த பொண்ணுக்குப் பண்ண மாட்டாரா? உடனே ஏதாவது பிரபல சபாவுல கோதையோட கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்கோன்னு பாட்டு வாத்தியார் சொன்னார்”

இதைக் கேட்டு வரதன் மௌனமாக இருந்தான்..

“என்னன்னா.. எதுவும் சொல்லாம மௌனமா இருக்கேள்? உடனே கோதையோட கச்சேரிக்கு சிபாரிசு பண்ணுங்கோ”

வரதன் அவளை தீர்கமாகப் பார்த்தான்.

“முடியாது”

இதைக் கேட்டு வத்சலாவுக்கு அதிர்ச்சி..

“முடியாதா? ஏன்?”

“என்னால கோதைக்கு சிபாரிசு பண்ண முடியாது”

“அதான் ஏன்னு கேட்கறேன்?”

“எல்லாம் எங்கப்பா சொன்ன பாடம் தான்”

வத்சலா புரியாமல் பார்த்தாள்.

“என்ன சொல்றேள்?”

“எங்கப்பா அவர் கிட்ட பாட்டு கத்துண்டவா கிட்டலாம் சொல்லுவார்.. சிபாரிசுல வாய்ப்பு தேடிக்காதே.. அது நிலைக்காது.. உன் திறமையை நிரூபிச்சு வாய்ப்பு தேடிக்கோ.. அது தான் என்னிக்கும் நிலைச்சு நிக்கும்னு.. எவ்வளவு பெரிய உண்மை.. நான் பிழைப்புக்காக சிபாரிசு பண்ணறேன்.. நிச்சயமா சுயநலம் தான்.. ஆனா அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அப்படித் தான் வரணும்..”

“… …”

“கவலைப் படாதே.. நம்ம தெரு பிள்ளையார் கோவில்ல பொங்கலுக்கு லோக்கல் டேலண்ஸ்களோட கச்சேரி ஏற்பாடு பண்ணப் போறாளாம்.. அதுல நம்ம கோதையோட கச்சேரியை வெச்சுக்கலாமான்னு கோவில் கமிட்டி சேர்மேன் எங்கிட்டக் கேட்டுட்டார்.. நானும் சரின்னு சொல்லிட்டேன்.. அந்தக் கச்சேரிக்கு எனக்கு ரொம்ப நெருக்கமான ரெண்டு சபா காரியதரசிகளைக் கூட்டிண்டு வரேன்.. அவா கோதை பாடறதை கேட்கட்டும்.. கோதை தன் திறமையை நிரூபிச்சா நான் சிபாரிசு பண்ணாமலே அவளுக்கு அவ திறமைனால பல வாய்ப்புகள் கிடைக்கலாம்.. கிடைக்கும்.. எனக்கு என் பொண்ணு பேருல நம்பிக்கை இருக்கு..”

என்று மகளைத் திரும்பிப் பார்த்தான்..

கோதை தோடி ஆலாபனையை ஆனந்தமாக அலசிக் கொண்டிருந்தாள்.

 

சங்கப் பலகை ஸ்ரீ அனந்தநாராயணன் சிறுகதைப் போட்டி 2023ல் மூன்றாம் பரிசு பெற்றது

 

 

 

 

 

 

 

குட்டீஸ் லூட்டீஸ் & கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்

ரிமோட் ஸொலூஷன்

மாமியாரை கொடுமை படுத்தும் மருமகள் | Mamiyar vs Marumagal | Tamil Stories |  Tamil Kathaigal | Tamil - YouTube

நானும், மனைவியும், மிதிலாவும் டி.வி. ஸீரியல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘ஏண்டி.. நீயெல்லாம் ஒரு நாத்தனாரா..? வீட்டுக்கு வந்த மருமகளை படாத பாடுபடுத்தி அவளைப் பல ப்ரச்னைகளில் மாட்டவச்சே… அதிலிருந்தெல்லாம் கஷ்டப்பட்டுத் தப்பிச்சு வந்தவள்கிட்டே, அழுது புலம்பி, எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி மன்னிப்புக் கேட்டே.. அந்த வாயில்லாப் பூச்சியும் ‘தன்னாலே இந்தக் கூட்டுக் குடும்பம் பிரிஞ்சுடக் கூடாது.. மாமனார், மாமியார் மனசு வருத்தப் படக் கூடாதுன்னு’ உன்னை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டா.. மன்னித்தவள் இன்னும் அவள் ரூமிற்குக் கூடப் போயிருக்கமாட்டா..
அதற்குள்ளே அவளை அடுத்து என்ன ப்ரச்னையில் மாட்டி விடலாம்னு’ யோசிக்க ஆரம்பிச்சிட்டியே.. நீயெல்லாம் ஒரு மனுஷியா..?’ என்று கொதித்தாள் என் மனைவி.

அவள் ரத்தக் கொதிப்பு 160 டிகிரியைத் தொட்டிருக்கும். அவளை ஒரு புன்சிரிப்போடு திரும்பிப் பார்த்தேன்.

‘பின்னே என்னங்க… இதென்ன முதல் முறையா..? நாலாவது முறையா அந்தப் பொண்ணு மன்னிச்சு விடறாங்க… இதெல்லாம் திருந்தாத ஜன்மங்க.. அந்த மருமகளுக்காவது புத்தி வேணும்.. மாமனார், மாமியார் கிட்டே தைரியமா ‘அத்தே,.. எனக்கும், நாத்தனாருக்கும் ஒத்து வரலே.. நாத்தனாரே எல்லா சொத்துக்களையும் வெச்சுக்கட்டும்.. நீங்களும் இந்தப் பெரிய வீட்லே அவங்களுடன் இருங்க… நாங்க ஒரு சின்ன வீடாப் பார்த்துப் போயிடறோம்..’னு
சொல்லி தனி வீட்டிற்குப் போயிடணும்.. எப்பங்க அவ அவ லைஃபை வாழப் போறா..?’ என்றாள் அதே கொதிப்போடு.

அருகில் இருந்த மிதிலா, ‘ வெரி ஸிம்பிள் மம்மி.. இந்த ஸீரியலைப் பார்த்துக்கொண்டிருக்கிற எல்லோரும், ரிமோட்டை எடுத்து தாட்சண்யம் பார்க்காம சடக்கென்று வேறே சானலுக்கு போயிடணும்.. வியூவர்ஸ்ஷிப் குறைஞ்சு டி.ஆர்.பி. ரேட்டிங் குறைஞ்சு, அந்த டைரக்டரே ஸீரியலுக்கு ஒரு ‘என்ட்’ கார்டு போட்டிடுவார். அந்த நாயகிக்கு புத்தி வரதோ இல்லையோ..? அந்த டைரக்டருக்கு டெஃபனிட்டா புத்தி வரும்…’ என்றாளே பார்க்கலாம்..

அதுதானே..!

— சிவமால்

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

 

‘டு’வால் வந்த வேதனை..!

‘ஏன்பா.. ஏன் உன் மனைவி உன்னை இப்படி துவைச்சு எடுக்கறா..?’

‘அது பெரிய கொடுமைப்பா.. நாங்க பெண் பார்க்கப் போனபோது என் அப்பா நான் எங்க கம்பனியிலே அஸிஸ்டன்ட் டு வைஸ்ப்ரஸிடன்டா இருக்கேன்னு சொல்றதுக்கு பதிலா தவறிப் போய் ‘அஸிஸ்டன்ட் வைஸ் ப்ரஸிடன்டா’ இருக்கேன்னு சொல்லிட்டார். அவங்களும் இந்தப் பெரிய கம்பனியிலே வைஸ் ப்ரஸிடன்டா இருக்கான்னா நல்ல இன்கம் இருக்கும்னு
பெண்ணைக் கட்டிக் கொடுத்துட்டாங்க.. இப்பத்தான் அவங்களுக்குப் புரிந்தது உண்மை நிலை. அதுதான் தினமும் இந்த மண்டகப்படி… அந்த ‘டு’ வால் வந்த வேதனை..!’

‘!!!!?!!!’

— சிவமால்

 

 

 

உலக இதிகாசங்கள் – ஒடிஸி – எஸ் எஸ்

ஒடிஸி – ஒரு முன்னோட்டம் 

நம் இந்தியாவில் மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தை வியாசர் எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மகாபாரத்தில் வரும் கண்ணனை மையமாகக் கொண்டு பாகவதம் என்ற நூலைப் படைத்தவரும் அவரே !

அதுபோலத்தான் ஹோமரும். அவர் எழுதிய இலியட் என்ற இதிகாசம் கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் நடைபெற்ற பத்தாண்டுப் போரின் இறுதிக்கட்டத்தை விவரிக்கிறது. இலியட்டின் முக்கிய நாயகன் அகிலியஸ் . அவனுடன் இணைந்து போரிட்ட பல முக்கிய தளபதிகளில் ஒருவன் ஓடிசியஸ்.  அகிலியசின் மரணத்திற்குப் பிறகு டிராய் நகரை தனது ராஜதந்திரத்தால் -டிராஜன் குதிரையால் மண்ணோடு மண்ணாக்கி அழித்தவனும் அவன்தான்.

இலியட் போருக்குப் ஓடிசியஸ்  தன் சொந்த நாடான இதாகாவிற்குத் திரும்புவதற்கு பத்து ஆண்டுகளாகின்றன.  அதற்கு முக்கியக் காரணம்  கிரேக்கர்களை ஆதரித்த கடவுளர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியதுதான். அந்தப் பத்து ஆண்டுகளில் அவன் மேற்கொண்ட கடல் பயணத்தைப்  பற்றியும் அவன் சந்தித்த ஆபத்துக்கள் பற்றியும் அவற்றை வெற்றி கொள்ள அவன் செய்த  வீர தீர பராக்கிரமங்களைப் பற்றியும்  விவரிப்பதே ஹோமரின் ஒடிஸி என்ற இதிகாசம்.

கிரேக்க இதிகாசமான இலியட்  கதையை  மையமாக வைத்து ஷேக்ஸ்பியர் எழுதிய டிராய்லஸ் மற்றும் கிரெசிடா ‘ என்ற காதல் காவியத்தைப் பற்றி சிலவரிகள்:

Troilus and Cressida - Wikipediaஜுலியஸ் சீசர், ஆண்டனி யும்  கிளியோபாட்ராவும்  போன்ற ரோமானிய சாம்ராஜ்ய பாத்திரங்களை நாடக மாந்தர்களாக உலவ விட்ட ஷேக்ஸ்பியர் ஹோமரின் இலியட் கதையை எப்படி விட்டு வைக்க முடியும்? அந்த முயற்சியில் வந்ததுதான்    டிராய்லஸ் மற்றும் கிரெசிடா. டிராய்லஸ் டிராய் நாட்டு சக்கரவர்த்தி  பிரியமின் இன்னொரு மகன். இந்த மகன் உயிரோடிருக்கும் வரை டிராய் நாட்டைக் கைப்பற்ற முடியாது என்ற கடவுளரின் வரத்தை அறிந்துகொண்ட மாவீரன் அக்கிலியஸ்  டிராய்லசை  அவன் வணங்கும் தெய்வத்தின் திருக் கோவில் வளாகத்திலேயே  கொல்கிறான். அதுவே அக்கிலியசின் மரணத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டது.  இந்த நாடகத்தில் அக்கிலிஸின் கோபத்தையும் கிரேக்க படையில் இருந்த பிளவைப் பற்றியும் விவரமாக எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர்.  

இனி ஓடிஸி பிறந்த  கதையைப் பார்ப்போம்.

டிராய்  நகரத்தை வீழ்த்திய பிறகு அங்கிருந்த அரச மகளிர் அனைவரையும்  அடிமைகளாக்கி  தங்கள் கிரேக்க நகரத்திற்கு  கப்பலில் இழுத்துச் செல்லும் அவல நிலையைக் கண்ணில் காட்டி சோகத்துடன் முடித்திருப்பார் ஹோமர் தன் இலியட் என்ற காவியத்தை!

கப்பலில் ஏற்றப்பட்ட அந்த டிராய் நாட்டின் ராணிகளும், இளவரசிகளும்  கண்ணீரும் கம்பலையுமாக தங்கள் பிரியமான டிராய்  நகருக்கு விடை கொடுத்தனர்:

எங்கள் அருமை டிராய் நகரமே! நீயா அழிந்து விட்டாய்?  எவ்வளவு பெரிய நகரம் நீ?  தற்போது சிவப்பு நெருப்பு கோளங்கள் தான் அங்கிருக்கின்றன.  எல்லா இடங்களிலும் தூசிப்படலம்   எழும்பி இருக்கிறது. புகை போல படர்ந்து இருக்கிறது. மாட மாளிகைகள் கூட கோபுரங்கள்  எதுவும் கண்ணிற்கு புலப்படவில்லை. நாமும் ஒருவர் ஒருவராக மறைகிறோம். டிராய் நகரம் மீண்டு  வர இயலாத இடத்திற்கு போய்விட்டது. 

கிரேக்க கப்பல்கள் எங்களை அடிமைகளாக்கி  இழுத்துச் செல்ல காத்துக் கொண்டிருக்கின்றன

போய்வா எங்கள் பிரியமான டிராய்  நகரமே! போய் வா! 

எங்கள் குழந்தைகள் தவழ்ந்த  இனிய பொன்  நாடே!  எங்களுக்கு விடை கொடு! டிராய்  நகரமே எங்களுக்கு விடை கொடு !

இந்த சோகத்திற்குப்  பின் துவங்குகிறது ஒடிசி! 

அதேசமயம் கிரேக்கப்  படையினரிடம்  வெற்றிக் களிப்புகொந்தளித்துக் கொண்டிருந்தது .

வெற்றியின் மமதை பத்து  ஆண்டுகளாக போரிட்டு வெற்றி பெற்ற  ஒவ்வொரு கிரேக்க வீரனிடமும் இருந்தது. டிராஜன்களை கண்ட இடங்களில் எல்லாம் கொன்று குவித்தனர். மாடமாளிகைளை எரித்து சாம்பலாக்கினர்.  இஷ்டப்பட்ட பெண்களை துரத்தி அனுபவித்தனர்.  வெற்றியின் வெறிக்  கூச்சல் கிரேக்க கப்பல்கள் அனைத்திலும் நிரம்பி வழிந்தது.  வெற்றிக்  களிப்பில் அவர்கள் தங்களுக்கு உதவிய தெய்வங்களையும் கடவுள்களையும் சுத்தமாக மறந்து விட்டார்கள்

கடவுள் அதினியையும்  சமுத்திரராஜன் பொசைடனையும் அவர்கள் மறந்தது மட்டுமில்லாமல் அவமரியாதையாகவும்  பேசத் தொடங்கினர். தங்கள் வீரத்தாலும் விவேகத்தாலும் தான் வெற்றி கொண்டோம் என்ற எக்களிப்பு அனைவரிடமும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் கடவுளர்களுக்கு கொடுக்கும் பலியையும் தர அவர்கள் மறந்து விட்டார்கள்.  இல்லை , இனி அதற்கு அவசியமில்லை  என்று எண்ணி விட்டார்கள்! 

விளைவு,  கடவுளர்களின் கோபம் இப்பொழுது கிரேக்கப் படை  மீது படர  ஆரம்பித்தது. கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து கடவுள்களும் தற்போது அவர்களுக்கு விரோதிகள் ஆனார்கள். அவர்களின் கோபம் தலைக்கு மேல் ஏறி கிரேக்கர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்ல இயலாத அளவிற்கு அவர்களைத்  தண்டிக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். 

இதற்கு முகாந்திரமாக ஒரு கதை உண்டு.

மறைந்த டிராஜன் சக்கரவர்த்தி பிரியமின் மகள் இளவரசி கசந்திரா.  அவளுக்கு நாளைய நடப்பை அறிந்து குறி சொல்லும்  திறமையை அப்பல்லோ கடவுள் அவள் மீது கொண்ட காதலால் அளித்திருந்தார்.  ஆனால் அவள் அப்பல்லோவை காதலிக்க மறுத்ததால் அவளை பைத்தியக்காரி ஆக்கி அவள் சொல்லும் நாளைய நடப்பை யாரும் நம்ப முடியாத அளவிற்கு செய்துவிட்டார் அப்பல்லோ கடவுள்.  டிராய் நாட்டு மன்னனிடமும் மக்களிடமும் மரக் குதிரைக்குள் எதிரி  வீரர்கள் ஒளிந்து இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறினாள்  கசாந்திரா.  பைத்தியக்காரி என்று  அவள்  பேச்சை யாரும் கேட்கவில்லை .

விளைவு டிராய்  நகரமே அழிந்தது .

கிரேக்கர் டிராய் நாட்டைச் சூறையாடும்  போது  இளவரசி கசாந்திரா அதினா கடவுளின் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தாள் . கிரேக்க  தளபதி சிறிய அஜாக்ஸ் அவளைக்  கோவிலிலிருந்து தரதர என்று அலங்கோலமாக இழுத்துக் கொண்டு வந்தான்.  கிரேக்க நாட்டு எந்த வீரனும் இப்படி ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதை தடுக்கவில்லை. அஜாக்ஸ் அவளைத்  தன் சேனாதிபதி அகெம்னன் அனுபவிக்கப்   பரிசாக கொடுத்தான். 

தன்னை அவமானப்படுத்திய கிரேக்கப்படையை அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்ட கசாந்திரா  தான் மிகவும் மரியாதையுடன் பூஜிக்கும் தன் ஆருயிர் கடவுள் பொசைடனை மானசீகமாக அழைத்தாள் .  கடலுக்கு அதிபதி சமுத்திர ராஜன் பொசைடனிடம்,  தன்னை அவமதித்து தன் நாட்டைக் கொளுத்திய  கிரேக்கர்களை பழிவாங்கும்படி வேண்டுகோள் விடுத்தாள். 

“ஏ சமுத்திர ராஜனே!  உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்! தங்களின் நாட்டுக்குத்  திரும்பக்  கப்பலில் செல்லும் கிரேக்கர்களுக்கு மிகவும் கசப்பான பயணத்தை கொடுத்துவிடு!   உன் கடல் பிராந்தியத்தைப் பிரளயமாக்கு! சூறாவளிக்  காற்றை அவர்கள் மீது ஏவு! கோரப்புயலை அவர்கள் கப்பல்கள் சந்திக்கட்டும்.  கடலின் ஆழத்தில் அந்த வெறிபிடித்த கிரேக்க  வீரர்கள் மூச்சுத்  திணறி மடியவேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள்.

தனது பிரிய சகியின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்தார் பொசைடன். அதன்படி  தன்னிடம் உள்ள அதிபயங்கரமான ஆயுதங்களை வீசினார் பொசைடன். புயல், சூறாவளி,சுழற்காற்று போன்ற அனைத்தையும் தங்கள் தாயகத்திற்கு திரும்பச் செல்லும் கிரேக்க கப்பல்கள் மீது ஏவினார். 

அதன் விளைவு அதி பயங்கரமாக இருந்தது!

எந்தக் கைகளால் கசாந்தராவை இழுத்து வந்து அவமானப்படுத்தினானோ அந்த அஜாக்ஸ்  சென்ற கப்பலை புயலின் தாண்டவத்தில் அலைக்கழித்து தூள் தூளாக உடையும்படி செய்தார். உடைந்த கப்பலிலிருந்து குதித்த அஜாக்ஸ் கரை அருகே இருந்த ஒரு பாறையைப் பிடித்துக் கொண்டு,  தன்னை எந்தப்  புயலும் அழிக்க முடியாது என்று கொக்கரித்தான்.  அது பொசைடனின்  ஆத்திரத்தை அதிகப்படுத்தியது . அவர் அனுப்பிய பேரலைகள் அந்தப் பாறையை உடைத்து அஜாக்சை கடலின் அடிவாரத்திற்கு இழுத்துச் சென்று  கொடூரமாக கொன்றன .

கிரேக்கப் படையின் முக்கிய  தளபதி அகம்னன் கூட வந்த அனைத்து கப்பல்களையும் புயலில் திசை தடுமாறி ஒன்றோடு ஒன்று மோதி  அழியும்படி செய்தார் பொசைடன்.

ஹெலனை  மீட்ட  மகிழ்ச்சியில்  சென்று கொண்டிருந்த மெனிலியஸ்  கப்பலைக் கிரேக்க நாட்டிற்குப்  பதிலாக எகிப்து கடற்கரையில் தரை இறங்கும்படிச் செய்தார்  பொசைடன். 

கிரேக்கப் படையில் அக்கிலிசுக்கு அடுத்த படியாக இருந்து வெற்றிக் கனியைப் பறித்துத் தந்த மாவீரன் ஓடிசியசும் பொசைடன் கடவுளின் தீட்சண்யப் பார்வையிலிருந்து தப்பவில்லை.  அவன் மற்ற கிரேக்க வீரர்களைவிட அதிக துன்பத்திற்கு ஆளாயினான். பத்து ஆண்டுகளை  டிராய்ப்  போரில் செலவழித்துவிட்டு திரும்ப ஊருக்குப் போய் மனைவியையும் மகனையும் காணலாம் என்றிருந்தவனை கடவுளர்களின் சாபம் அவனை இன்னும் பத்து ஆண்டுகள் அவன் குடும்பத்திலிருந்து பிரித்து வைத்தது.

ஆனால் அந்தப் பத்து ஆண்டுகளில் அவன் சந்தித்த ஆபத்துக்கள் அதிலிருந்து அவன் மீள அவன் செய்த சாகசங்கள், கடவுளர்களின் உதவிகள் அனைத்தும் அவனை ஒரு மாபெரும் வீர புருஷனாக மாற்றிவிட்டது.

அந்த சாகசங்களை ஹோமர் 24 அத்தியாயங்களாக எழுதியுள்ளார். 

முதல் 9 அத்தியாயங்களில் ஓடிசியஸ் ஊரான இதாகாவில் அவன் மனைவியும் மகனும் அவனை 20 ஆண்டுகள் பிரிந்து வருந்தும் நிலையைக் விவரிப்பார். அவர் மகன் தன் தந்தையைதேடி திரும்ப சொந்த நாட்டிற்கு வந்துவிட்ட மற்ற கிரேக்க  தளபதிகளான நெஸ்டர், மெனிலியஸ் போன்றவறைச் சந்தித்து தன் தந்தையைப் பற்றிய தகவல் அறிய முயலும் நிகழ்வுகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

அதன்பின் அடுத்த 8 அத்தியாயங்களில் ஓடிசியசின் திக்  விஜயங்கள் பற்றிய விவரம் இருக்கும்.

அடுத்த 7 அத்தியாயங்களில் ஓடிசியஸ் தன் சொந்த ஊர் வந்த பின்னும்  அவனுக்கு அங்கே இருந்த எதிர்ப்பை எப்படி சமாளித்து வெற்றி கொள்கிறான் என்பதை விளக்கியிருப்பார். 

நம் நாயகன் ஓடிசியஸை  ரோம இலக்கியத்தில் யுலிஸஸ் என்றும் அழைத்தனர். 

கோமரின் பார்வையில் நம் ஓடிஸி பயணம் தொடரும்.. 

 

 

 

அதிசய உலகம்-14-அறிவுஜீவி

நல்ல வாழ்வு

Want to lose weight, but don't want to exercise? Here's your fitness plan |  Health - Hindustan Times

“மாமி! இன்றைக்குத் தான் பார்க்கிறேன். ஆமாம், உங்கள் மேசையில் இருக்கும் இந்த போட்டோவில் இருக்கும் இந்த இளம் பெண் யார்? என்ன அழகு, என்ன உடல் வாகு?” என்று சிலாகித்தாள் அல்லிராணி. மாமி சற்று வெட்கப்பட்டு விட்டுச் சொன்னாள்

”அது நான் தான்..”. வாயைப்பிளந்த அல்லியிடம், மாமி சொன்னாள். “அது ஒரு கனாக்காலம்..தினமும் உடற்பயற்சி. நாட்டியப் பயிற்சி. ஸ்விம்மிங். என்று இருந்த நாட்கள் அது” என்றவள். இன்னிக்குப் பாரு பீப்பாயாட்டம் ஆயிட்டேன். ஆர்த்தரிடிஸ் வந்து, நடப்பதே சிரமமாக இருக்க, உடற்பயற்சி செய்ய முடியாமல்.. இப்படி ஆச்சு. எப்படி இருந்தவள் இப்படி ஆயிட்டேன்” என்று அங்கலாய்த்த அங்கயற்கண்ணி மாமி மீண்டும் சொன்னாள்:

”எங்களைப் போன்ற ஆட்களுக்காக, அறிவியலில் புது கண்டு பிடிப்பு ஏதாவது உள்ளதா?” என்று கொஞ்சம் கேலியுடனும், கொஞ்சம் ஆதங்கத்துடனும் கேட்டாள். அல்லி, “என்ன ஆச்சரியம்! இன்றைக்குத்தான் படித்தேன், கேளுங்கள்” என்றாள். மாமி, உடனே ”சொல்.. சொல் ..” என்றாள்.

அல்லி தொடர்ந்தாள். ”மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ, உடற்பயற்சி இன்றியமையாதது. இன்றைக்கு நான் படித்த செய்தியில் ‘உடற்பயிற்சி செய்யாமல், உடற்பயிற்சியின் பலனைப் பெற, ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு வெற்றியுமடைந்துள்ளதாம். இந்த மருந்து, நோயாளியின் வளர்சிதை மாற்றம்(metabolism), சதை குறைப்பு (fat loss), தசைப் பெருக்கம் (gaining muscle mass) அனைத்துக்கும் உதவுகிறது. மாமி, புளோரிடா பல்கலைக்கழக்கத்தில் இது எலிகளிடம் வெற்றிகரமாகி விட்டதாம்.

அதன் சாராம்சம் இதுதான்: தாமஸ் பரிஸ் (Thomas Burris) தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், SLU-PP-332 என்ற மூலக்கூறு (molecule) உள்ள மருந்தை 28 நாட்கள் செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். இது மனிதர்களுக்கும் ஒரு நாள் வெற்றிகரமாக நடக்க வாய்ப்புகள் உள்ளதாம்” என்று முடித்தாள்.

மாமி, ”இதற்குப் பின் விளைவுகள் (ஸைட் எஃபக்ட்) என்னவோ? ‘ஐ’ படத்தில் வர்ர மாதிரி விகாரம் ஆயிடுச்சுன்னா” என்றாள் மாமி. அல்லி சொன்னாள்” அந்த ஆராய்ச்சிகளெல்லாம் செய்யாமல் மருந்து வெளிவராது. மொத்தத்தில், நீங்கள் அந்தபோட்டோவில் இருப்பது போல வருவீர்கள்” என்றாள் அல்லி. அவள் முகத்திலிருந்த சிறிய புன்னகையைப் பார்த்த மாமி “ ம்ம்ம். என்னெ வைச்சு காமெடி நல்லாத்தான் செய்யரே” என்றாள்.

இது ஒரு அதிசய உலகம்!

https://www.euronews.com/next/2023/10/01/scientists-have-designed-a-new-drug-that-mimics-all-the-benefits-of-rigorous-exercise

 

நான் ரசித்த நாடகம் – எம் சுவாமிநாதன்

நாற்பது வருடம் முன்னால் பார்த்த ஒரு T V drama / serial / episode. என்ன பெயர் கொடுப்பது என்று தெரியவில்லை. கதாசாகர், ஏக் கஹானி என்று பல நல்ல நிகழ்ச்சிகள் வந்தன. ஒரு எபிசோட்  அல்லது இரண்டு எபிசோட் வரும். இது இரண்டு எபிசோட் கதை.

பாட்டியும், பேத்தியும் தனியாக வசிக்கிறார்கள்.  அந்த பெண் நித்யா . அவளின்  அப்பா இறந்துவிட்டார். அம்மா, அப்பாவின் நண்பரையே கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டாள். பாட்டி யோடு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாழ்கிறாள். அவளின் படம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தூர எறிந்து விட்டாள் பாட்டி. அம்மா முகமே தெரியாமல் வளர்கிறாள்  நித்யா . அழகான பெண் அவள். கல்யாண முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. அம்மா வேறுகல்யாணம் செய்து கொண்டு விட்டாள்,  பாட்டியோடு தனியாக இருக்கிறாள் என்பதனால் வருபவர்கள் எல்லாம் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று போய் விடுகிறார்கள்.

கோபப்பட்டு பாட்டியிடம் கேட்கிறாள்.

“என்  அம்மா எங்கே இருக்கிறாள்? யாரோடு இருக்கிறாள்? சொந்த மகள் இங்க இப்படி இருக்கும் போது எப்படி நிம்மதியாக  இருக்கிறாள்? எத்தனை முறை கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாயே ? இப்போது சொல். நான் அவளைக் கட்டாயம்   பார்க்க வேண்டும். கேட்க வேண்டும்”

பாட்டி , “பக்கத்து ஊரில்தான் இருக்கிறாள்” என்று சொல்லி விலாசமும் தருகிறாள்.

மிக மிக கோபத்தோடு வெளியே போகிறாள். கண்டபடி கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு போய் அம்மாவின் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள் நித்யா.

கதவு திறக்கப்படுகிறது. அழகான சாந்தமான சற்று வயதான ஒரு பெண் கதவைத்திறக்கிறாள். ஆச்சர்யத்தோடும், அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறாள். மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள்.

 

…. இந்த இடத்தில் அந்த இரண்டு வார தொடருக்கு, தொடரும் என்று போட்டு விட்டார்கள்.

அப்பா மகள் - சிறுகதைகள்மிகக் கோபத்தோடு, நிறைய கேட்க வேண்டும், என்று வந்தவளுக்கு வாய் அடைத்துக் போனது. பின்னால் அன்பான முகத்தோடு, ஆசையோடு பார்த்த ஒரு நடு வயது மனிதனப்  பார்த்ததும்.  ஏனோ அவள் தேக்கி வைத்திருந்த கோபம் பொங்கி வரவில்லை. 
“வாம்மா, வா உன் வீட்டுக்கு வா” என்று கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவுடன் கையை உதறி விடத்தான் முடியவில்லை.  ஆனால் உட்காந்த உடன் வார்த்தைகள் வந்து விழுந்தன. 
“நீ என் அம்மாவா?  எப்படியம்மா ஒரு பெண்ணை தவிக்க விட்டுட்டு நிம்மதியா வாழ முடிகிறது?   என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா?  எப்படியம்மா?  அன்பான நல்ல பாட்டியாலதான்  நான் இப்போ இந்த நிலையில இருக்கேன்.  எப்படியம்மா? எப்படி? ” என்று கோபமாக கேட்டு விட்டு அழுகிறாள். 
பக்கத்தில் உட்கார்ந்து,  தலையை தடவிக் கொடுத்து.  “நித்யா..   நீ ஒரு அம்மாவை பார்க்க வந்து ஒரு பெண்ணைப்  பார்கிறாய்.  உன் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு.  பொறுமையா கேளு” என்று சொல்லி பதில் சொல்லத் தொடங்குகிறாள். 
அந்த ஆளைக்காட்டி, “இவர் உன் அப்பாவின் மிக நெருங்கிய நண்பர்.  அடிக்கடி வீட்டுக்கு வருவார் வரும்போதெல்லாம் நித்யா, நித்யா ன்னு உன்னைக் கொஞ்சிக் கொண்டே இருப்பார்.  என் பெயர் கூட நித்யா அம்மான்னு தான்னு சொல்வார்.  அப்பா எப்போதாவது வேலை காரணமா லேட்டானா  உன்னை ஸ்கூலில் இருந்து ஆசையா அழைத்து வருவார்.  ஒரே வார்த்தையில் சொன்னால் உன் மேல் உயிரையே வைத்திருந்தார். நீ ரொம்ப சின்னவள் Pre KG  3 / 4 வயது இருக்கும்
உன் அப்பாவுக்கு ஒரு பெரிய நோய் வந்து, பிழைக்க மாட்டார்.  இன்னும் சில நாட்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள்.  அப்போது இவரிடம் அப்பா பேசி இருக்கிறார்.”
“என் பெண்ணையும், என் மனைவியையும் நினைத்து என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை.  என் அம்மா ரொம்ப நல்லவர். ஆனால் அவளுக்குப்பின் இவள் என் மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாள் என்றே தெரியவில்லை.  நீதான் உதவி செய்ய வேண்டும்.  உன்னைத் தவிர வேறு யாரிடம் உதவி கேட்க முடியும்.  உனக்கும் ஒரு வாழ்க்கை குடும்பம் என்று வந்தாலும் நீ என் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும். “
வெகு நேரம் பேசிய பின் நித்யாவுக்கு நீ இருந்தால் எப்படி பாத்துக்குவியோ அப்படி பாத்துக்கறேன் கவலைப்படாதே’ என்று இவர் சொன்னார்.  
‘அதேபோல என் மனைவியையும் ஏத்துக்குவையா?  அவளும் சின்னவள்.  எப்படி இந்த உலகத்தை சமாளிப்பாள்  என்பது தெரியவில்லை .  எங்களுக்கு அம்மாவைத்  தவிர உறவு என்று யாரும் பெரிசா இல்லை ‘ என்று கையை பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார். 
‘உன் மேல இருந்த ஆசையால இவர் உனக்கு அப்பாவா இருக்க சம்மதித்தார்.  நாங்கள் இன்றைய உன் வரவுக்காக வருடக் கணக்கா காத்துக் கொண்டு இருக்கிறோம்.  என்றாவது நீ வருவாய் என்று தவமாக தவமிருந்தோம். “
“ஏன் பாட்டிகிட்ட சொல்லிட்டு என்னை கூட்டிக்க வேண்டியது தானே?” எனக்கு என்ன ஆச்சுன்னுகூட கவலைப் படாமல் எப்படி இருந்தீர்கள்?’  என்று நித்யா கேட்க அவர் பேச ஆரம்பிக்கிறார். 
“நித்யா, ஒவ்வொரு தீபாவளிக்கும் என்ன டிரெஸ் போட்டுண்டே, உன் ஒவ்வொரு எக்ஸாம்லேயும் எவ்வளவு மார்க், எது வீக், எது ஸ்ராங் அப்படீன்னு எல்லாம் தெரியும்.  உன் பாட்டி அப்பாவோட பென்ஷன் அக்கவுன்ட்ல க்ரெடிட் ஆகுதுன்னு நினைத்து எடுக்கறாளே அது இந்த அப்பாவுது.  எங்களுக்கு நீ மட்டும்தான்.  இங்க உள்ள வந்துபார் இது உன் அறை.  நீ அன்னிக்கு வந்தாலும் வரவேற்க 20 வருஷமா காத்திருக்கு.  அந்தந்த வயசுக்கு ஏற்ற பொருட்கள் இருக்கு.  இப்போ உனக்காக போன வாரம் வாங்கிய டிரஸ் இது.  உங்க பாட்டி எங்களை மன்னிக்கவே இல்லை.  நாங்களும் அந்த நல்ல மனுஷிகிட்டே இருந்து உன்னை பிரிக்க விரும்ப வில்லை.  அவருக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை. எங்களைக்  காட்டிக் கொள்ளக் கூடாது என்பது உன் பாட்டியின் கண்டிஷன்.  நீயாக வந்தால்தான் பேசணும் அப்படீன்னு சொல்லிட்டா” 
உன் வருகைக்காக இந்த வீடு, உன் அறை, நாங்க ரெண்டு பேர் எல்லோரும் வருஷம் கணக்கா காத்திண்டு இருக்கோம்.  வாம்மா வா” என்று அன்போடு சொன்னவுடன் “அப்ப்பா… அம்ம்மா” என்று சொல்லிக்கொண்டு  இருவரையும் கட்டிக் கொண்டு அழுவாள் நித்யா .  
திட்ட வேண்டும், கோபிக்க  வேண்டும் என்று வந்தவள் கண் கலங்கி உருகி கட்டிக் கொள்வதோடு…
எபிசோட் முடியும். 
நானும் கண் கலங்கினேன்.. அன்றும் .. இன்றும்..

தி.ஜா.  அஞ்சலி கட்டுரை அமரர் ரஸவாதி மற்றும் ரஸவாதி பற்றி ரேவதி பாலு

 

 

 

 

 

 

 

(ரஸவாதி)

 

 

‘சார்’ சில நினைவுகள்- தி ஜானகிராமன்  பற்றி ரசவாதி அவர்கள் எழுதிய கட்டுரை: 

ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!' - கதை சொல்லிகளின் கதை | Life history of Tamil writer Thi. Janakiraman - Vikatan

           “ப்ரைஸ் வாங்கியிருக்கிற இந்த நாவல மேனுஸ்கிரிப்ட்லேயே படிச்சவன் நாந்தான்.  கலைமகள் ஜட்ஜுகளெல்லாம் அப்புறந்தான் படிச்சிருக்கா.  இதுல நான் ரொம்பப் பெருமைப்படறேன்.  கர்வப்படறேன்”

           ஜானகிராமன் சாரைத் தவிர வேறு எவர்க்கும் இப்படிப் பேசத் தெரியாது.  நிச்சயமாக வரவே வராது.  1957 இல் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட கௌரவம் இது.

           ஆதாரசுருதிக்கு வெள்ளி விழா நாவல் போட்டியில்  ஆயிரம் ரூபாய் பரிசு செய்தி கேட்டு வாழ்த்திய நண்பர்களுக்கு என் வீட்டில் விருந்து.  தொடர்ந்து நடந்த சிறு பாராட்டுக் கூட்டத்தில் லா.சா.ராமாமிர்தம் மாலை அணிவித்து என்னை ஆசிர்வதித்தார்.  சார் பாராட்டிப் பேசினார்.  இதை விட வேறு என்ன க்ரீடம் வேண்டும், இருபத்தி ஒன்பது வயது இளம் எழுத்தாளனுக்கு?

           1948இல் ஆனந்தவிகடனில் வந்த ‘ராஜ திருஷ்டி’யைப் படித்து விட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன்.  பதில் போடும் பழக்கம் அப்போது அவருக்கு இல்லை.  பின்னர் 1958இல் ரேடியோவில் சேர அவர் சென்னைக்கு வந்தபோது தான் சந்தித்தேன்.

           “லெட்டர் போட்டேளே வந்தது!” என்றார் புன்சிரிப்புடன்.  அதுவே போதும்.  அன்றிலிருந்து அவர் டில்லிக்குப் போகும் வரையில் நானும் ஜடாதரனும் (பால்யூ) அட்டை மாதிரி அவரிடம் ஒட்டிக் கொண்டோம்.  தினம் வந்து போகிற எங்களை குழந்தைகளான சாகேதும், உமாவும் கண்களில்  வியப்புடன் பார்ப்பார்கள்.  அந்த சிநேகம் எங்கள் இருவருக்கும் ஒரு பெரிய பாக்யம்.  அந்தப் பழக்கத்தின் நினைவுகளெல்லாம் சிறந்த கவிதைகள் மாதிரி.

           ‘மோக முள்’ளும், ‘மலர் மஞ்சமும்’ தொடர்கதையாக சுதேசமித்திரனில் வந்த போது வாராவாரம் அவர் வீட்டில் ஆஜாராகி விடுவோம்.  கையெழுத்துப் பிரதி அல்லது ப்ரூஃப் ஏதாவது இருக்கும்.  ஆர்வத்துடன் படிப்போம்.  அந்த வாரம் எழுதினதைப் பற்றி ஏன், எப்படி, எதனால் என்றெல்லாம் கேள்விகளைத் தொடுப்போம்.  சில சமயங்களில் பொறுமையாக பதில் சொல்வார்.  அநேக தடவைகள் வெறும் புன்சிரிப்புத்தான்.  அதில் ஆயிரம் அர்த்தங்கள். 

           எழுத்து என்றால் சாதாரண எழுத்தா அது?    மற்ற எழுத்தாளர்கள் கிட்டே ஒரு பிரமையையும், பிரமிப்பையும், பயம் கலந்த மரியாதையையும் சார் ஒருத்தர் தான் உண்டு   பண்ணினார்.    நிச்சயமா அவரைப் போல் இன்னொருத்தர் ‘ந  பூதோ ந பவிஷ்யதி’.

           ‘ஸ்ரீ காந்திமதீம்’ என்கிற தீக்ஷிதர் கிருதி எனக்குப் பாடம்.  எப்படி?  சாருக்கு பத்தமடை சுந்தரமய்யர் கற்றுக் கொடுத்த போது நானும் கூடவே உட்கார்ந்து கற்றுக் கொண்டது தான்.  இலக்கியம் மட்டுமல்ல.  கர்நாடக சங்கீதமும் எங்கள் சம்பாஷணைக்கு ஒரு காரணமாக இருந்தது.  ராகங்கள், ஸ்வரப்ரஸ்தாரங்கள் கீர்த்தனைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம்.  சாமா ராகம் அவர் பாடிக் கேட்டிருக்கிறேன்.  “ரெண்டு மத்திமத்தையும் மாத்தி மாத்தி கரெக்டா அந்தந்த ப்ளேஸ்லே போட்டு மூர்ச்சனைகள் விழறதினாலேதான் சாரங்கா அழகா இருக்கு”  என்பார். தேர்ந்த சங்கீத ஞானம், அறிவுக் கூர்மை, நிறையப் படித்து அறிந்து புரிந்து தெளிவு கண்ட ஒரு சிந்தனை, வலிமை பொருந்திய எழுத்து இதெல்லாம் அவருக்கு வரப்பிரசாதம்.

           மனுஷ்யஸ்வபாவங்களில் உள்ள நேர்கள், கோணல்கள், செடி, கொடி, மரங்கள், பறவைகள் மிருகங்கள், நதிகள், தடாகங்கள் எதுவுமே அவர் பார்வையில் பட்டதும் அவர் மனதில் ஆழமாக ஒரு புகைப்படம் போல பதிந்து விடும்.  அதை நூலிழை பிசகாமல் அப்படியே அநாயாசமாக எழுத்தில் கொண்டு வர சார் ஒருவரால் தான் முடிந்தது.  “வேற்றுத் தெருவில் அடி எடுத்து வைக்கும் நாயைப் போல ஜூனியர் மெதுவாக உள்ளே வந்தார்” (பரதேசி வந்தான்), “விளக்கு எரியலேன்னு யாராவது போய்ச் சொன்னாத் தேவலை என்பார்”.  யாராவது என்பதற்கு அவரைத் தவிர வேறு யாராவது என்று அர்த்தம் (கோபுர விளக்கு) இதெல்லாம் ஞாபகத்திலிருந்து வருகிற ஓரிரு உதராணங்கள். கிண்டல், குத்தல், லேசான கேலி இவை விரவிக்கிடக்கும் அவர் கதைகளிலே. (‘கேட்காத காதுக்கு கடுக்கன் என்ன மாட்டல் என்ன’, ‘அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் பண்ணணுமா’,  ‘இப்படிப்பட்ட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் தேங்காய்க்கும் பூவன் பழத்துக்கும் மத்தியில் நிற்கும் குத்து விளக்குப் போல அவள் இருந்தாள்’)

           சார் விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் தனிரகம்.  வாய்விட்டுப் பாராட்டுவது அபூர்வம்.  நிறைய எழுத்தாளர்களுக்கு தன் கதையைப் பற்றி சாரின் அபிப்ராயம் என்ன என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை.  நேரில் வந்து கேட்டால்,”நன்னா வந்திருக்கே!” என்பார் புன்சிரிப்புடன்.  ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய எங்களுக்குத் தான் தெரியும்,”நன்னாவே எழுதியிருக்கான் சார்!” என்று அந்த ‘வே’யில் ஒரு அழுத்தம் கொடுத்து சில சமயங்களில் சொல்வது மட்டுந்தான் நிஜமான பாராட்டு என்று.  அவர் ஒரு வசிஷ்டர்.  பிரம்மரிஷி பட்டம் வாங்குவது அவரிடம்  ரொம்ப ரொம்ப கஷ்டம்.

           டில்லிக்கு சார் போனதில் எங்கள் தொடர்பு வெகுவாகக் குறைந்தே போய் விட்டது.  சில மாதங்களுக்கு முன்பு அவரையும் சிட்டியையும் பஸ்ஸில் சந்தித்தேன். “பொண் கல்யாணம் நன்னா நடந்ததா? (பெரிய பெண் ரேவதி) என் வாழ்த்து செய்தி கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.  பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை.  ஆனால் அவரை நிரந்தரமாகப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. 

           பொக்கிஷம் போல பல அனுபவங்களை அவாது மரணம் மீண்டும் மனசில் கிளப்பி விட்டது.  ‘தவம்’ கதையில் கோவிந்த வன்னியர் சோடா பாட்டில்கள் பக்கத்தில் அமர்ந்து பத்து வருஷங்களை அசை போட்டார்.  அப்படித்தான் நானும் இப்போது இருக்கிறேன்.  புலம்பும் என் மனசு அடங்குவதற்கு வேறு என்ன செய்ய?

(1983 ஜனவரி மாத கணையாழியில் வெளியானது)

ரஸமாக எழுதிய ரஸவாதி

‘ரஸவாதி’ என்கிற திரு ஆர். ஸ்ரீநிவாசன் 06.10.1928 இல் திருச்சியை அடுத்த துறையூரில் பிறந்தவர்.   சிறு வயதில் துறையூரிலேயே தாய் வழிப் பாட்டனார் வக்கீல் கோபாலய்யர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்த காலம் இவர் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் மிகையாகாது.  சிறுவயதிலேயே சிறந்த இலக்கிய ரசனையுள்ள அன்பான மிகப் பொறுமையான தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தது பிற்காலத்தில் பெரிய எழுத்தாளராகவும் அன்பான தந்தையாகவும் மிகச் சிறந்த பண்பாளராகவும் உருவாக அடித்தளமாக அமைந்தது.   இயற்கையாகவே தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய சங்கீத ஞானத்தை பிற்காலத்தில் புல்லாங்குழல் மேதை  திரு மாலியிடம்  குருகுல முறையில் புல்லாங்குழல் கற்று அபிவிருத்தி செய்து கொண்டார்.  இவர் திரு மாலியிடம் சங்கீதம் பயின்றபோது இவருடைய சக மாணவர் புல்லாங்குழல் வித்வான் திரு.என்.ரமணி அவர்கள்.

எழுத்தாளராக ஆவதற்கு முன்னோடி அனுபவமாக அந்த காலத்தில் கையெழுத்துப் பத்திரிகையொன்றும் நடத்தியிருக்கிறார்.  அதில் இவருக்குத்  துணை நின்றவர்கள்  திரு ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) மற்றும் பிற்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் விற்பன்னராக விளங்கிய திரு டி.ஆர்.சுப்ரமணியம் ஆகியோர்.

1942 இல் ‘வெள்ளையனே வெளியேறு’ கோஷத்துடன் சென்ற ஊர்வலத்தில் இவர் சக மாணவரான  தொ.மு.சி.ரகுநாதனுடன் போலீசாரிடம் பலத்த தடியடி வாங்கிய அனுபவமும் உண்டு.  மிகுந்த தேசபக்தியுள்ள ரஸவாதி  தன் வாழ்நாள் முழுவதும் கதர் வேட்டியும் ஜிப்பாவும் மட்டுமே அணிந்து கொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்.

கல்லூரி நாட்களிலேயே எழுதத் தொடங்கிய இவருக்கு  1949 இல்  ராஜத்துடன்  திருமணம் நடைபெற்றபோது தன்னுடைய 21 ஆவது வயதிலேயே புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தார்.

ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் ‘ரஸவாதி’ என்ற புனைபெயர் வைத்துக் கொண்டார்.  அந்த காலகட்டத்திலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான ‘அமுதசுரபி’ நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) ‘கலைமகள்’ நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி)  பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அப்பொழுது இவருக்கு வயது வெறும் 29 தான்! அமுதசுரபி ஆசிரியர் திரு.வேம்பு என்கிற விக்கிரமன் மீதும் அந்த நாளைய கலைமகள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.  இவரின் எண்ணற்ற சிறுகதைகள் திரு கி.வா.ஜ அவர்கள் கலைமகள் ஆசிரியராக இருந்தபோது கலைமகளில் அவரால் விரும்பி பிரசுரிக்கப்பட்டது.

பின்னர்,  பரிசு பெற்ற அந்த நாவல்களில் ‘அழகின் யாத்திரை’ மேடை நாடகமாக ரஸவாதியாலேயே மேடை ஏற்றப்பட்டு, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவும் செய்தார். ‘ஆதார ஸ்ருதி’ புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் அவர்களின் பேத்தி திருமதி.ரமாதேவியால் (பிலாஸபி என்கிற புனை பெயரில் எழுதுபவர்) மொழி பெயர்க்கப்பட்டு ‘ஜீவனா’ என்கிற கன்னட வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சக எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், கு.ப.ரா., நா.பிச்சமுத்து, எம்.வி.வெங்கட்ராம், மீ.ப.சோமசுந்தரம், பி.எஸ்.ராமையா வல்லிக்கண்ணன் ஆகியவர்களுடன் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது.  இவரும் திரு.தி.ஜானகிராமனும் ஒருவர் எழுத்தை மற்றவர் கையெழுத்துப் பிரதியாகவே வாசித்து விமர்சித்த அனுபவங்களும் உண்டு.  திரு.சுகி.சுப்ரமணியம், நாங்குநேரி சீ.வரதராஜன் (பீஷ்மன்), லா.ச.ரா ஆகியோர் மற்ற நெருக்கமான எழுத்தாள நண்பர்கள். 

இவர் தபால் தணிக்கை அலுவலகத்தில் வேலை செய்தபோது இவரின் சக உத்யோகஸ்தர்களான திரு கே.ஆர்.கல்யாணராமன் (மகரம்), திரு.ஜடாதரன் (பிற்காலத்தில் பால்யூ என்ற புகழ்பெற்ற குமுதம் நிருபராக உருவானவர்) ஆகியோர்களும் எழுத்தாளர்களே!  திரு.பால்யூவையும் இவரையும் ‘எழுத்துலக இரட்டையர்கள்’ என்று குறிப்பிடும் அளவுக்கு இருவரும் மிக அத்யந்த சினேகிதர்களாக விளங்கினார்கள்.  1957இல்  கல்கத்தாவில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.

நாடக்கலை மீது ஆர்வமீதூற  மதராஸ் நாடக சங்கத்தில் சேர்ந்து படித்து நாடக்கலையில் ‘டிப்ளமோ’ பெற்றார்.   திரு எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் ‘சேவா ஸ்டேஜ்’ குழுவின் முக்கிய நாடகங்களான ‘பிரஸிடன்ட் பஞ்சாட்சரம்’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்றவற்றில் நடித்த அனுபவங்களும் இவருக்கு உண்டு.  

பிறகு இவரே எழுதி மேடையேற்றிய நாடகங்களில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிற்காக எழுதிய ‘தி பெட்’, நாடகத்தை சிறந்த நாடகமாக நினைவு கூறுகிறார் புகழ் பெற்ற நாடக நடிகரும்  இவரது சகோதரி திருமதி மங்களத்தின் கணவருமான  ‘பின்னி திரு கே.ராமச்சந்திரன்’ அவர்கள்.  புகழ் பெற்ற  நடிகரும் மூத்த நாடகக் கலைஞருமான திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய ‘வழி நடுவில்’ நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.   ‘வழி நடுவில்’ நாடகம் கன்னட நடிகர் திரு வாதிராஜ் அவர்களால் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.  1960களில் சென்னை வானொலி நிலையத்தில் இவருடைய எண்ணற்ற நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.  இவருடைய ஒரு சிறுகதை ‘உயிர்’ என்ற பெயரில் சினிமாவானது.  தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக ‘எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

மத்திய அரசு தபால் தணிக்கை அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றதும், பக்கவாதத்தால் தாக்கப்பெற்று வலது கை செயலிழந்து போன போது சிறிதும் மனந்தளராமல் விடா முயற்சியோடும் பகவான் ஸ்ரீ ராமரின் மேல்  அபார நம்பிக்கையோடும் லட்சக்கணக்கில்  ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி தன் கையைச் சரிப் படுத்திக் கொண்டார்.  அதோடு மட்டுமில்லாமல், அதற்குப் பிறகும் ஒரு  நாவலை அதே மணி மணியான கையெழுத்தில் எழுதியதை  கேள்விப்பட்டு  மனம் நெகிழ்ந்து போன கலைமாமணி திரு விக்கிரமன் அவர்கள் அமுதசுரபி பத்திரிகையில் இதை ஒரு செய்தியாகவே வெளியிட்டார். ‘சேது பந்தனம்’ என்ற அந்த நாவல் அவர் மறைவுக்குப் பின் கலைமாமணி திரு விக்கிரமன் அவர்களின் மகாகவி பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பெற்று மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவருடைய எழுத்திலேயே மெலிதான நகைச்சுவை இழையோடுவதை நாம் பார்க்க  முடியும்.

புகைப்படக்கலையிலும் ஜோதிடக்கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்றுக் கொண்டவர்.  மிக அழகாக வரைவார்.   சிறிது காலம் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ விற்காக பகுதி நேர நிருபராக வேலை பார்த்த அனுபவமும் இவருக்கு உண்டு.

இவருக்கு மூன்று பெண்கள், நான்கு பையன்கள்.  தன் வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியில் எண்ணற்ற சோதனைகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்த போதும்,  விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், மன உறுதியுமும் பூண்டு எல்லோருக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக (ரோல் மாடல்) வாழ்ந்து காட்டியவர்..

பணத்தை என்றுமே ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.  “அது வரும். போகும். அவ்வளவுதான்!” என்று  எளிதாக எடுத்துக் கொள்வார்.   மிக எளிமையாக வாழ்ந்தவர்.  அவர் தேவைகளே மிகக்குறைவு.   பன்னீர் புகையிலையை உள்ளங்கையில் அழுந்தத் தேய்த்து ரசனையோடு   வெற்றிலை போட்டுக் கொள்வார்.  அலுவலகமாக இருக்கட்டும் அல்லது வீடாக இருக்கட்டும் எப்போதுமே அவர் இருக்கும் இடத்தில் சிரிப்பும் குதூகலமும் இருக்கும்.  வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாக ரசித்து  சந்தோஷமாக வாழ்ந்து, தன் கூட இருந்தவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்ட ரஸவாதி 1994இல் தன் 66 ஆவது வயதிலேயே மறைந்து போனார்.