குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

குவிகம் குறுக்கெழுத்து – ஜுன் 23 – சாய்நாத் கோவிந்தன்

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

 

ஜுன் மாத குறுக்கெழுத்துப் போட்டிகக்கான லிங்க் இதோ!

சரியான விடை எழுதியர்களில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும். 

https://beta.puthirmayam.com/crossword/44E1D3095C

 

மே  மாதக் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதியவர்கள் 

மெய்யழகி ,கதிர், கற்பகம், வைத்யநாதன், ராஜாமணி, துரை  தனபாலன், சாந்தி ,  விஜயலட்சுமி கண்ணன், ராமமூர்த்தி,  ஜெயா ஸ்ரீராம் , ஆர்க்கே , ஜானகி சாய்,  ரேவதி ராமச்சந்திரன்,  ராய செல்லப்பா, மாலதி, மனோகர், இந்திரா ராமநாதன்,  ஜானகி ஸ்ரீநிவாஸ் , எம் ராமசாமி,  ரேவதி பாலு , நாகேந்திர பாரதி , கமலா முரளி,  தயாளன் 

அவற்றுள் அதிர்ஷ்டசாலியான நேயர் : கற்பகம் 

கலந்து கொண்டவர் அனைவருக்கும் பரிசு பெற்றவருக்கும் வாழ்த்துக்கள் ! 

உலக இதிகாசங்கள் – இலியட் – எஸ் எஸ்

Achilles Defeating Hector - Rafael Tegeo - WikiArt.org

அக்கிலிஸ் கிரேக்கருக்கு ஆதரவாகப் புறப்பட்டுவிட்டான் என்றதும் டிராய் நகரின் அழிவு நிச்சயம் என்பதை  உணர்ந்த டிராய் நகர வீரர்கள் அதர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். ஆனால் தன் வீரத்தின் மீது அதீத  நம்பிக்கை கொண்ட ஹெக்டர் மட்டும்   அக்கிலிஸ் வந்தாலும் சரி அவனுக்கு ஆதரவாகக் கடவுளர்கள் வந்தாலும் சரி கிரேக்கர் படை முழுவதையும் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான்.

ஹெக்டரின் நண்பனும் படைத்தளபதிகள் முதன்மையானவனுமான பாலிடாமஸ் ஹெக்டருக்கு அறிவுரை  கூறத் தொடங்கினான்.

” அகேம்னனனுக்கும் அகீலிசுக்கும் பிரச்சினை இருந்தவரை நமது வெற்றியில் சந்தேகமேயில்லை. ஆனால் அக்கிலிஸ் கொடிய அரக்கன். வீரர்களோடு மட்டும் அவன் போரை  முடிக்கமாட்டான் , நமது இலியம் நகரை எரித்து பெண்டு  பிள்ளைகளைக் கூண்டோடு  கொலை செய்யவும் தயங்காத கிராதகன் அவன். அதனால் நாம் இப்போது பின்வாங்கி நமது  கோட்டைக்குள் புகுந்து    பாதுகாப்பான முறையில் போர் செய்யவேண்டும். அவர்கள் கப்பலுக்கு அருகில் நாம் இருந்து போரிட்டால்  அவர்களுக்கு  நம்மைத் தாக்குவதும் அழிப்பதும் சுலபமாக இருக்கும்”

ஹெக்டர் இதைத் திட்டவட்டமாக நிராகரித்தான்.

“வெற்றி வாகை நம் கைக்கு அருகில் இருக்கும்போது பின்வாங்கிச் செல்வது கோழைத்தனம். கிரேக்கர்களை அவர்கள் கப்பலிலேயே கொன்று புதைக்க வேண்டும் என்று வெறியோடு நான் இருக்கிறேன். ஆக்கிலிசுடன் நேருக்கு நேர் மோதி அவனை அழிக்கவும் தயாராக இருக்கிறேன்”  என்று கூறி  ஹெக்டர்  வீரர்களைப் போருக்கு  தயார் நிலையில் இருக்கும்படி  ஆணையிட்டான்.

அதே சமயம் கிரேக்கப்படையில் அக்கிலிசின் வீர முழக்கம் காட்டுத்தீயைப் போல் பரவியது. ஹெக்டரின் தாக்குதலால் நிலை குலைந்து மரண காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த கிரேக்க வீரர்களும் தளபதிகளும் அந்தக் குரல் கேட்டதும் தங்களைக் காக்கத்  தானைத் தலைவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் குரல் வந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர். இரு பெரும் அஜாக்ஸ் , ஓடிசியஸ் ஹெலனின் கணவன் மெலிசியஸ்  ஏன் அக்கிலியசை விரட்டி அடித்த அகெம்னனும்  வந்து சேர்ந்தனர்.

தன் கிரேக்கப் படையில் பல நண்பர்களைக் காணாத அக்கிலியஸ் துடித்தான். தன் கோபத்தினால் ஹெக்டர் தன் உற்ற நண்பன் பெட்ரோகுலசுடன்  எண்ணற்ற வீரர்களைக் கொன்றுவிட்டான் என்பதை அறிந்தது துயரத்தில் துடித்தான்.

” அருமை நண்பா ! அகெம்னன் ! நமக்குள் ஏற்பட்ட பிணக்கால் அதனால் ஏற்பட்ட என்கோபத்தால்  எண்ணற்ற நண்பர்கள் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். என்னை மன்னித்துவிடு ! டிராய் நாட்டை அடிமைப்படுத்தி அந்தக் கொடியவன் ஹெக்டரின் உடலைச் சின்னாபின்னமாக்காமல் இனி நான் உறங்க மாட்டேன்.   உண்ணவும்   மாட்டேன்” என்று வீர சபதம் எடுத்தான்.

அகெம்னனும்  முன் வந்து, “நண்பா! இதற்குக் காரணம் என் தவறுதான். உன் பரிசுப் பொருள்களையும் பிரியமான பெண்ணையும் நான் கவர்ந்தது மன்னிக்க முடியாத செயல். உன்னிடம் அந்தப் பொருட்களையும்  பெண்ணையும் இப்போதே கொண்டு வந்து கொடுக்க ஆணையிடுகிறேன். உன் தலைமையில் நமது கிரேக்கப் படை நாம் இழந்த புகழை மீண்டும் அடையவேண்டும். டிரோஜன்களை அழிக்கவேண்டும். ஹெலனையும் மீட்கவேண்டும். ” என்று வேண்டி நின்றான். கிரேக்கப் படை வீரர்கள் அனைவரது உடலிலும் புதிய ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. அனைவரும் ஒரே குரலில் ” வெற்றி நமதே ” என்று குரல் எழுப்பினர்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் தன் அகலக் கண்களால் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ்.  தனக்குப்  பிரியமான  அக்கிலிஸ் போர்க்களத்திற்குச் செல்ல முடிவு செய்துவிட்டான் என்பதை அறிந்ததும் இலியட் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார். .

இனி காற்றை அக்கிலிஸுக்குச் சாதகமாக வீச வேண்டும் என்றும்  ஜீயஸ்  தீர்மானித்தார்.

இருப்பினும் வெற்றிக் கனியைச்  சுலபமாகக் கிரேக்கர் அடைந்துவிடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருந்தார்.

அதனால் அந்த  இலியட் மகா யுத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்ட அனைத்துக் கடவுளர்களையும் அழைத்தார்

.” கடவுளர்களான உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. மனிதர்கள் நடத்தும் யுத்தத்தில் நாம் நேரடியாகப் பங்கு கொள்வது சரியல்ல. இருப்பினும் உங்களில் சிலருக்குக் கிரேக்கர் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு டிராஜன் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.  நானே இரு அணிகளுக்கும் மாறி மாறி உதவி புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே நீங்கள் இரு அணிகளாகப் பிரிந்து தத்தம் அணிக்கு வெற்றி வாய்ப்பு பெற என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்யுங்கள். உங்கள் கட்சி வீரர்களைத் தயார் செய்யுங்கள்.  நான் உத்தரவிட்டதும் கடவுளர்களான நீங்கள் அனைவரும் போர்க்களத்திலிருந்து விலக வேண்டும்.  இறுதிப்போர்  மனிதர்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் போராகவே இருக்கவேண்டும். யார் யார்  மடியவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்த விதி முடிவு செய்யட்டும்.” என்று உத்தரவிட்டார்.

அவர் உத்தரவைக் கேட்ட கடவுளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர்.  அதீனி , ஹீரா, பொசைடன் மற்றும் பலர் கிரேக்கரை ஆதரிக்கப் பறந்தனர். ஏரிஸ் , அப்போலோ , ஈனியாஸ் போன்றோர்  டிரோஜன்களுக்குத் துணையிருக்கச் சென்றனர்.

இருவரும் தங்கள் அணிகளுக்கு உற்சாகத்துடன் போர் வெறியையும் ஊட்டினர். விளைவு இதுவரை காணாத மிக மிக பயங்கரமான போருக்கு அந்தக் கடலும் கப்பல்களும் வீரர்களும் தயாராயினர்.

அக்கிலிஸ் ஹெக்டரைக் கொன்று அவன் ரத்தத்தைக் கடவுளுக்குப் பலி கொடுக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்திற்கு விரைந்தான். ஆனால் ஹெக்டரைக் காக்க விரும்பிய அப்போலோ ஈனியாஸ் என்ற மற்றொரு கடவுளை அக்கிலிசுடன் போரிடத் தூண்டி அனுப்பினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹீராவும் அதினியும் அக்கிலிசைக் காக்க திட்டம் தீட்டினர். உணவு உண்ண மறுத்த அக்கிலிசுக்கு அவனை அறியாமலேயே அமிர்தத்தையும் தேனையும் ஊட்டினர். அது அக்கிலிசுக்கு இன்னும் ஆயிரம் குதிரைகளின்  பலத்தை அளித்தது.  அதைத்  தவிர அக்கிலிசை மறைமுகமாக எந்தக் கடவுளும் தாக்காதவாறு துணை போகவேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

பசியுடன் இருக்கும் சிங்கம் குகையிலிருந்து புறப்பட்டு வேட்டைக்குச் செல்லப் புறப்பட்டதைப்போல அக்கிலிஸ் எதிரிப் படை மீது பாய்ந்தான். ஹெக்டரை அவன் கண்கள் வலை போட்டுத் தேடின. அனால் ஹெக்டருக்குப் பதில் ஈனியாஸ் கடவுள்  தன்னுடன் போரிட வருவதைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும்  கொலை வெறியுடன் ஈனியாசைக் கொல்லப்  பாய்ந்தான்.தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் அக்கிலிசின்முன் தோல்வியுற்றுக் கிடப்பதைக் கண்ட ஈனியாஸ் தவித்தான். கிரேக்கர்களுக்கு உதவ வந்த பொசைடன் தங்கள் கடவுளர்களின் ஒருவனான  ஈனியாஸ் மனிதன் கையால் மரணமடையக் கூடாது என்ற எண்ணத்தால் ஒரு பனிப் படலத்தை உருவாக்கி  ஈனியாசை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.   இது கடவுளர்களின் சூழ்ச்சி என்பதை உணர்ந்துகொண்ட அக்கிலிஸ் தனது வீரர்களை முன்னேறித் தாக்குமாறு உத்தரவிட்டு ஹெக்டரைத் தேடி போர்க்களத்தின் மத்திக்கு விரைந்தான்.

போகும் வழியின் அக்கிலிஸின் வீரம் கொழுந்து விட்டு எரிந்தது. கண் நில் பட்ட அத்தனை டிரோஜன் வீரர்களைக் கொன்று குவித்தான். பல போர்களில் வீரம் காட்டிய  எண்ணற்ற டிரோஜன் தளபதிகளின் நெஞ்சில் இரக்கமின்றித் தன் ஈட்டியைப் பாய்ச்சி வாளால் வெட்டி   மடியச் செய்தான்.

ஹெக்டரின் தம்பிகளில் ஒருவன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடும்போது அக்கிலிஸ் ஈட்டியால் அவன் வயிற்றில்  குத்தி குடலை உருவி மாலையாக அணிந்து கொண்டான்.  அதைக் கண்ணுக்கு முன் கண்ட ஹெக்டர் தம்பிக்காகக் கலங்கினாலும் அக்கிலிசை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்ற கோபத்தில் அவன்முன் பாய்ந்தான்.

ஹெக்டரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த  அக்கிலிசும் அவனைக் கண்டதும் சிம்ம கர்ஜனை புரிந்தான்.

Two mythological heroes, Achilles and Hector, fight with swords. Vector image isolated on white background. Stock Vector | Adobe Stock

இருவருக்கும் இடையே அதி பயங்கரமான போர் நிகழ்ந்தது.

குறி தவறாதத்  தன் ஈட்டியை அக்கிலிஸின் நெஞ்சுக்குக் குறிவைத்து முழு பலத்துடன் வீசினான். கிரேக்கப் படை ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. அதை எதிர்பார்த்த அதீனிக் கடவுள் அந்த ஈட்டியை செயலற்றுப் போகும்படி செய்தாள்.

கடவுளால் காப்பாற்றப்பட்ட அக்கிலிஸ் கடுங்கோபத்துடன் ஹெக்டரை அழிக்க வாளை உயர்த்திக்  கொண்டு பாய்ந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை.  டிரோஜன் பக்கம் இருக்கும் கடவுளர்கள் அந்த நிமிடமே ஹெக்டர் அழிந்தான் என்று முடிவு கட்டினர். போர்க்களத்தின் பின்னணியிலிருந்து அப்போது அந்த இடத்துக்கு வந்த அப்போலோவும்  ஹெக்டர் இருக்கும் அபாய  நிலையக் கண்டு ஒருகணம்   திகைத்தான். சட்டென்று ஒரு பனிப் படலத்தை உருவாக்கி ஹெக்டரைத் தூக்கிக் கொண்டு போர்க் களத்தின் மற்றொரு கோடிக்குச் சென்றான்.

இது அப்போலோவின் வேலை என்பதைப் புரிந்துகொண்ட அக்கிலிஸ் அந்தக் கோபத்தை அங்கிருந்த மற்ற டிரோஜன் வீரர்களுடன் காட்டி அவர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். காலில் விழுந்து கெஞ்சி உயிர்ப்பிச்சை கேட்ட தளபதியின்  கல்லீரலில் குத்தி அக்கணமே மரணமடையச் செய்தான்.

அக்கிலிஸ் சென்ற இடமெல்லாம் கருப்பு மண் குருதியில் நனைந்து சிவப்பாகியது. ரத்த ஆறு ஓடியது.  நதிக் கடவுளின் மடியில் தஞ்சம் அடைந்திருந்த ஆயிரக் கணக்கான  டிரோஜன் வீரர்களை அக்கிலிஸ் கொன்று குவித்தான். அதனால் கோபம் கொண்ட நதிக்கடவுள் பெரும் வெள்ளத்துடன் அக்கிலிசை அழிக்க வந்தது. அதைக் கண்ட ஹீரா நெருப்புக் கடவுளை ஏவி நதியைத் துரத்தினாள் .

கடவுளர்களும் மனிதர்களும் சேர்ந்து அந்த பூமியை ரண பூமியாக்கிக் கொண்டிருந்தனர்  

(தொடரும்)

 

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

 

இரண்டாம் ராஜேந்திரன்-2

Remembering Rajendra Chola I, greater of the greats - The Federal

முன்கதை: வருடம் 1054. கொப்பம் போர்க்களத்தில் சோழ-சாளுக்கிய போரில், சோழ மன்னன் ராஜாதிராஜனின் யானை மீதிருந்து இறந்து விழவே, இளவரசன் இரண்டாம் ராஜேந்திரன் சோழ முடிசூட்டி படை நடத்தி எதிரிகளை வென்றான். இனி தொடர்வோம்.

ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றிகளை அடைந்ததற்கு முக்கிய காரணம், அவன் மகன் மாவீரன் ராஜேந்திரன் படைத் தலைமை. அது போல் ராஜேந்திரனின் ஆட்சியில் அவன் அடைந்த மாபெரும் வெற்றிகளுக்குக் காரணம் அவனது மூன்று மகன்கள்: ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன். ராஜாதிராஜன் மரணத்துக்குப் பிறகு, இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாகி கங்கைகொண்ட சோழபுரம் திரும்பினான்.

இரண்டாம் ராஜேந்திரனின் இளமைக் காலத்தைப்பற்றி சில வரிகள். ராஜேந்திர சோழதேவருக்கும், மகாராணி முக்கோகிலன் அடிகளுக்கும் மகனாகப் பிறந்தான். ராஜேந்திர சோழதேவனின் 9 மகன்களில் ஐந்தாவதாகப் பிறந்தான். இளவரசனாக இருந்தபோதே பாண்டிய நாடு, ஸ்ரீவிஜயம் நாடுகளில் இருந்த கலகங்களை அடக்கினான். மேலும் இலங்கையில் பொலன்னருவா, மற்றும் ரோகணத்தில் போரிட்டு அவைகளை சோழநாட்டுடன் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தான். அங்கு பலம் பொருந்திய படைத்தலைவர்களை அமர்த்தினான். 1044 ல் தந்தை ராஜேந்திர சோழதேவர் மறைந்தபின், யுவராஜாவாகி , அண்ணன் ராஜாதிராஜன் மன்னனான உடன், அவனுடன் சேர்ந்து அரசாண்டான். கொப்பம் போர்ச்சமயம், ராஜாதிராஜனின் மகன்கள் சிறியவர்களாக இருந்த படியால், தானே மன்னனாகினான்.

இரண்டாம் ராஜேந்திரன் மன்னனான பின், 1055 ல் இலங்கை இளவரசன் விஜயபாகு இலங்கையில் சோழப்படையைத் துரத்தும் பொருட்டு முயற்சிகளில் இறங்கினான். இலங்கைப் படை சோழப்படைகளைத் தாக்குவதும், சோழப்படை இலங்கைப்படைகளைத் தாக்குவதும் தொடர்ந்தது. பொலன்னருவாவை நோக்கி விஜயபாகுவின் படைகள் முன்னேறின. இரண்டாம் ராஜேந்திரன், இலங்கையிலிருந்த சோழப்படைகளை பலப்படுத்த தனது மகன் உத்தமனை அனுப்பினான். பொலன்னருவா நெருங்கிய விஜயபாகுவின் படைகள் உத்தமனின் படைகளால் வீரட்டியடிக்கப்பட்டது. விஜயபாகு மீண்டும் ரோகண மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்தான். 1058 ல் விஜயபாகு, ரோகணத்தை சோழர் பிடியிலிருந்து விடுவித்து வாக்கிரிகலாவில் முடிசூட்டிக்கொண்டான். மீண்டும், பொலன்னருவா மீது படையெடுத்தான். உத்தம சோழன் இலங்கைப்படையை முறியடித்து அனைத்துக் கலகங்களையும் அடக்கினான். ராஜேந்திரன் அவனுக்கு ‘உத்தம சோழ லங்கேஸ்வரன்’ என்ற பட்டமளித்தான். அவனும் 1059- 1072 ல் அவனது மறைவு வரை திருக்கோணமலையிலிருந்து இலங்கையை ஆண்டிருந்தான்.

இப்பொழுது, சாளுக்கிய சமாச்சாரங்களுக்கு வருவோம். கொப்பத்துத் தோல்விக்குப் பின், அந்த அவமானத்துக்குப் பழி வாங்க சாளுக்கியன் சோமேஸ்வரன் துடித்துக்கொண்டிருந்தான். 1062ல், முடக்காறு நதிக்கரையில் (கிருஷ்ணா, துங்கபத்ரா இரண்டு நதிகளின் சந்திப்பில்) இந்தப் போர் நடந்தது. சோழப்படையில் ராஜமகேந்திர சோழனுடன், வீரராஜேந்திர சோழனும் சேர்ந்து போரிட்டனர். (ராஜமகேந்திரன் இரண்டாம் ராஜேந்திரனா அல்லது அவனது மற்ற தம்பியா என்பது பற்றி சரித்திரம் முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு ஏதோ ஒரு சோழன்!). போரில் சாளுக்கிய படைத்தலைவன் தண்டநாயக வளதேவன் கொல்லப்பட்டான். மீண்டும் மீண்டும் சோழரே வென்றனர்.

பிறகு, சாளுக்கிய சோமேஸ்வரன் வெங்கியைக் கைப்பற்ற தொடுத்த போரும் இதே போர்க்களத்தில்தான் நடந்தது. சாளுக்கியன் தோற்றாலும் துவண்டானில்லை. அது கூடலசங்கமம் என்ற இடத்தில் நடந்தது. அதிலும் சாளுக்கியப்படை பலமாகத் தோற்கடிக்கப்பட்டது. இத்தனை முறை தோற்றாலும், தளராமல் மீண்டும் மீண்டும் போர் தொடுத்த ஒரே மன்னன் சரித்திரத்திலேயே இவன் தானோ?

சுற்றிப்பகை இருப்பது சோழ நாட்டுக்கு வழக்கமாகி விட்டது. பாண்டியர்கள் இவன் ஆட்சியில் அடங்கிக்கிடந்தது ஒரு ஆச்சரியமே! இலங்கை மன்னன் மானபரணன் யோசித்தான். அண்டைநாட்டு மன்னர்கள் அணிவரும் சோழனுக்கு அடிபணிந்து போனதால், வேறு யாருடன் கூட்டணி அமைப்பது என்று யோசித்தான். கலிங்க நாட்டு மன்னன் வீர சாலமேகனுக்கு ஓலை அனுப்பி கூட்டணி அமைத்தான். ராஜேந்திரன் திட்டமிட்டான்: ‘இலங்கையை பலமிழக்கச் செய்யவேண்டுமென்றால், கலிங்கத்தை அடக்கவேண்டும்’. கலிங்கத்து மீதும், இலங்கை மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்து, இருவரையும் வெற்றி கொண்டான்.

பலப்பலப் போர்களில் தன்னுடனும், அண்ணன் ராஜாதிராஜனுடனும், தந்தை ராஜேந்திர சோழ தேவருடனும் சேர்ந்து போரிட்ட தம்பி வீரராஜேந்திரனை யுவராஜாவாக்கினான். வீரராஜேந்திரனுக்கு ‘கரிகால சோழன்’ என்ற பட்டமளித்துப் பெருமைப் படுத்தினான். மேலும் வெற்றி கொண்ட பல ராஜ்யங்களுக்கு, தன் தம்பிமார்களை ஆளுனராக்கினான்: அவர்கள் சோழபாண்டியன், சோழகங்கன், சோழ அயோத்யராஜன். அனைவரும் பெயருக்கேற்றார் போல அந்தந்த ராஜ்யத்தின் ஆளுநர்களாக இருந்தனர்.

இத்தனை ரணகளத்திலும் கலைப்பாதை ஒன்றும் ஆன்மீகப் பாதை ஒன்றும் இருந்தது. கலைஞர்களை ஆதரித்தான். நாட்டியம், நாடகம், போற்றினான். தஞ்சைப் பெரிய கோவிலில் ‘ராஜராஜேஸ்வர நாடகம்’ என்ற இசைநாடகத்தை நடத்தி, அதில் பங்கு பெற்ற நடனமணிகளுக்கு உவந்தம் அளித்து ஊக்கமளித்தான். இந்த நாடகம் ராஜராஜனின் வெற்றிகளைக் காட்டும் நாட்டிய நாடகமாகும். ஆலயப்பணியில், திருக்கோயிலூர் உலகளந்தப்பெருமாள் கோவிலைப் பெரிதுபடுத்தினான். உலக்கையூர் என்ற இடத்தில் அகஸ்தீஸ்வரர் கோவிலைக் கட்ட முயன்ற போது, தடங்கல் ஏற்பட்டது. அங்கிருந்த கிராமவாசிகள், கட்டமைப்புக்குத் மூட்டுக்கட்டையிட்டுத் தடை செய்தனர். (அந்நாளிலேயே இந்தப்பிரச்சினை இருந்தது). மன்னன் மக்களிடம் பேசி அனைவரது ஒப்புதல்களையும் பெற்று கோவிலைச் சிறப்பாகக் கட்டி முடித்தான். 1059 ல் வீற்றிருந்த பெருமாள் கோவிலைப் பெரிது படுத்தினான்.

அரசனென்றாலே என்றுமே போர் தான். அந்நாளில் எதிரிகள் நான்கு பக்கமும் இருக்கும் போது சோழ  மன்னர்கள் தங்கள் ஆற்றலால் தமிழத்தின் பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் பிரச்சினை இல்லாத வாழ்வு ஏது? அரசாங்கங்கள் தான் ஏது? சரித்திரம் விரைவில், விவரமாகப் பேசும்.

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – மே, 2023 – தேர்வு –மதுவந்தி.

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

——————————————————————————————————————————————————

மே, 2023 மாத சிறந்த சிறுகதை –“ ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்.” – மா காமுதுரை –ஆனந்த விகடன் 24-05-2023.

————————————————————————————————————————————————-

50 வருடங்களுக்கு மேலாக மாதம் தோறும் சிறந்த சிறுகதை தேர்வு செய்து , பின் வருட முடிவில் 12 கதைகளில் ஒன்றை வருடத்தின் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்து , பரிசு , நூல் வெளியீடு என சிறப்பாக இயங்கி வந்த இலக்கிய சிந்தனை அமைப்பு இதனைtத் தொடர இயலாமல் போனது வருத்தமான செய்தி. அந்த பாரம்பரியத்தை இப்போது முன்னெடுத்துச் செல்லும் சிறப்பான பணியை குவிகம்-திருமதி சிவசங்கரி இணைந்து  ஜூலை 22 இல் தொடங்கி, 10 மாதங்கள் ஒடி விட்டன.  மாதா மாதம் 50 இலிருந்து 70 வரை அந்தந்த மாதச் சிறுகதைகளைப் படித்து , ஒரு குறும் பட்டியல் தயாரித்து , பின் சிறந்த சிறு கதை தேர்வு செய்கிற பணியை எனக்கு முன்னால் செவ்வனே செய்த ,சுவாமி நாதன், சுந்தரராஜன், லதா ரகுநாதன், ராஜாமணி,சுரேஷ் ராஜகோபால், சாந்தி ரசவாதி, ஆன்சிலா பர்னான்டோ, அழகிய சிங்கர், கிரிஜா பாஸ்கர், ஈஸ்வர் எல்லோருக்கும் என் நன்றிகள்.

எனக்கு 51 சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. சில சிறுகதைகள் கைவசம் கிட்டாமலும், கவனத்தில் வாராமலும் போயிருக்கக் கூடும். 51 லிருந்து, 7 சிறுகதைகள் என ஒரு குறும் பட்டியல் வரை வந்து, பின் அதில் மே23 இன் சிறந்த சிறுகதையை தேர்வு செய்துள்ளேன்.

மாதம் பூரா வந்த 51 சிறுகதைகள் ஒரு சேர வாசிக்கக் கிடைத்தது ஒரு அருமையான வாய்ப்பு. குறும் பட்டியலின் 6 சிறுகதைகள் பற்றி சொல்லி விட்டு ,இறுதியில் மாதச் சிறந்த சிறுகதை பற்றிச் சொல்கிறேன்.

1.குறி – -இமையாள்-ஆனந்த விகடன் 03-05.23.

குறி கேட்டு காணாமல் போனவனைக் கண்டு பிடிக்க முடியமா? என கிண்டலாகக் கேட்க ஆரம்பிக்கிற கதை சொல்லி , எப்படி குறி சொல்கிற மூர்த்தியைத் தேடி, பின் காணாமல் போன ரங்கன் பற்றி குறி கேட்கப் போன கதையை சுவாரசியமாகச் சொல்கிறார். ரங்கன் இருக்குமிடம் சரியாகச் சொல்லப்பட்டு, ரங்கன் வீடு திரும்பி அசட்டுத் தனங்கள் மாறி, பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றியும் பெறுகிறான். எல்லாம் மூர்த்தியின் அருள் வாக்குதான் என எல்லோரும் பாராட்ட, கதையின் இறுதி பாராக்களில் ஒரு வித்யாசமான முடிவோடு கதை முடிகிறது.

2. இடைவெளி – சிந்துஜா திண்ணை 15.05.23.

கல்லூரிப் பரீட்சை முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கிற எதிராஜ், தன் வீட்டில் எதிர் கொள்ள நேர்கிற தேவானை என்கிற இளம்பெண்- அவன் வீட்டில் வேலை செய்கிற செல்லாத்தாவின் மகள் – இவர்களைப் பற்றி ஒரு இளநகையோடு சொல்லப்பட்ட அழகான கதை.

3. சாப்பாடு- டாக்டர். ஜெ. பாஸ்கரன் – தினமணி கதிர் 21-05-23.

வீட்டுவேலை செய்ய வரும் கஸ்தூரிக்கு, வீட்டுக்கார ஜானகிஅம்மா , சூடான சோறு, குழம்பு , பொறியல், எல்லாம் ஒரு தட்டில் வைத்து சாப்பிடச் சொல்வதில் ஆரம்பிக்கிறது கதை. ஜானகி அமமாவின் இரு மகள்கள் – ரேணு, ப்ரிதம்- இருவரும் அம்மாவுடன், ஏன் வேலைக்காரி கஸ்தூரி அவர்களோடு சாப்பாடு மேசையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது? என விவாதம் செய்கிறார்கள், ஓரு முறை மேசையில் அமர்ந்து சாப்பிட பின் மறு முறை மறுக்கிறாள் கஸ்தூரி. அதற்கு அவள் சொல்லும் காரணம் , சிந்தனை தூண்டும் விதமான கருத்து சொல்லப்பட்டு முடிகிற வித்யாசமான சிறுகதை.

4. துணை வரும் நிழல் – ஹேமி கிருஷ் – ஆனந்த விகடன்- 17-05-23.

தன் கூடவே தன் துணையாக வரும் நிழல் போல தன் மீது அன்பு கொண்டவர்கள் கூடவேயிருந்து உதவிகள் செய்வது, வாழ்வின் பிரச்னைகளைக் கடக்க கை கொடுக்கும். யாழினியின் அப்பா மருத்துவமனையிலிருக்க, அவளின் முன்னாள் காதலன் வந்து உதவிகள் செய்கிறான். அவள் பி.எப் கடன் வாங்கி, தன் அப்பாவின் வீட்டுக் கடனை அடைத்து வீட்டை மீட்டு, அப்பாவுக்கு ஆச்சரிய அதிர்ச்சி அளிக்கிறாள். அவள் அப்பாவின் வலியை மீறி , மின்னல் கீற்று போல ஒரு மகிழ்வை அவர் முகத்தில் பார்க்கிறாள். மிகச் சிறப்பாகச் சொல்லப் பட்ட கதை. மனதுக்குப் பிடித்த ஒரு பாடல் வரியைக் கேட்டபின் மனம் பூரா அந்த வரிகள் ஓடிக் கொண்டேயிருக்கும். அதே மாதிரியான உணர்வை எழுப்புகிற கதை.

5. வெத்தலப்பட்டி – தெரிசை சிவா- சொல்வனம் 28-05-23

57 தடவை அடிமைப் பெண் படத்தைப் பார்த்த எம் ஜி ஆர் பக்தர் துரைப் பாட்டா, கால் ஊனமுற்றவர், கால்ல இருக்க ஊனத்தைப் பார்த்து கிடைச்ச வேலை, மயிருக்குச் சமானம் எனச் சொல்லிவிட்டு பெட்டிக்கடை வைத்து வாழ்கிறவர். இளம்பிராயத்தில் திருமணம் செய்யாமல், சம்பாதித்த பணத்தை ஊதாரித் தனமாக செலவு செய்த துரைப்பாட்டா, இரவானால், தண்ணியடிக்காமல் இருந்ததில்லை, மாதம் நான்கைந்து முறை ”பெண்” கூடுதலும் உண்டு. அப்படியொரு பெண்ணை வெத்தலப்பட்டியில் சந்தித்த துரைப்பாட்டா, அவளை வருடங்கள் கழித்து, அவள் பெண்ணோடு தன் பெட்டிக்கடையில் நேர் கொள்கிற வித்யாசமான கதை. ஒரு வித்யாசமான பின்னணியில், கிண்டல் தொனியோடு நகைச்சுவை ஊடாடச் சொல்லப்பட்ட சிறந்த கதை.

6. பனிக்கரடியின் கனவு- எஸ் ராமகிருஷ்ணன்- உயிர்மை-மே 2023.

வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றி வரும் தயாபரன், பணி அழுத்தத்தில், ஒரு இரவு தூங்கி விழிக்கும் போது ஒரு பனிக்கரடியாக மாறிவிடுகிறார். பனிக்கரடியாக மாறிய தயாபாரனின் அனுபவங்களை மிகை யதார்த்த (surrealistic) பாணியில் சொல்லப்பட்ட வெகு வித்யாசமான சிறந்த கதை. இப்படியெல்லாம் எப்படி நடக்க இயலும் என கேள்வி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தாலும், பனிக்கரடி வட்டாட்சியராக வேலை செய்தால், மற்றவர்கள் எப்படி அதற்கு எதிர்வினையாற்றுவார்கள் என யதார்த்தமாகச் செல்கிற கதை அந்தப் பனிக் கரடி ஒரு நாள் காணாமல் போவதாக முடிகிறது.

7. ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்- மா காமுதுரை – ஆனந்த விகடன்- 24-05-23.

சிறுகதையின் தலைப்பே ஒரு கவிதை போல யோசிக்க வைக்கிற தலைப்பு. “வெள்ளம் வந்தமிழ்ந்த வயல்காடாய் மூச்சடங்கிக் கிடந்தது கல்யாண மண்டபம்.” என்கிற ஓவியம் போல வர்ணிக்கிற வரிகளோடு தொடங்குகிறது கதை. அதிகாலையில் மணப்பெண் காணாமல் போன சேதி வந்து கல்யாண மண்டபத்தின் இயக்கங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து போன நேரத்தில், கல்யாணச் சமையல் வேலை பார்க்க வந்த தனத்தின் பார்வையில் சொல்லப்பட்ட கதை. காணாமல் போன கல்யாணப் பெண்ணைத் தேடிப் போனவர்கள் திரும்பிவந்து கல்யாணச்சாப்பாடு கேட்காவிட்டாலும், சமைத்து வைத்தால் அனாதை ஆசிரமப் பிள்ளைகளாவது சாப்பிடட்டும் என தனம் சமைக்கிறாள். மாப்பிளை பிடிக்காமல் ஒடிப்போன கல்யாணப் பெண்ணின் தைரியத்தை உள்ளூர மெச்சுகிற தனம், தன் 18 வயதில் வேலையில்லாத பூபதியை கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்ததை நினைத்துப் பார்க்கிறாள். தன் உடன் பிறந்த அக்காளின் கணவரின் குடும்பத்தில் வாக்கப்பட்ட அவள் குடும்பத்தைக் காப்பாற்ற எல்லாவிதமான வேலைகளும் செய்ய வேண்டிதாயிருக்கிறது. அவள் விருப்பம் கேட்கப்படாமல் நடந்த கல்யாண வாழ்வின் கஷ்டங்கள் அவளை தனக்கு ஏன் தைரியம் வாராமல் போச்சு என எண்ண வைக்கிறது. பொண்ணு இருக்க இடம் தெரிஞ்சிடுச்சாம் என கூட வேலை பார்க்கும் கௌசி சொல்வதைக் கேட்டு தனத்தின் கைகள் நடுங்குகின்றன. “ கடவுளே, பொண்ணுப்பிள்ள ஆர் கண்ணுக்கும் சிக்கக்குடாது, பாவம்!!” என மனசுக்குள் பிரார்த்திக்கிறாள். சிறிது கூட குரலை உயர்த்தாமல், பெண்ணின் சம்மதம் கேளாமல் கல்யாணம் செய்வதின் பிரச்னைகளை கேள்வி கேட்க வைக்கிற, சிறப்பாகச் சொல்லபட்ட சிறுகதை.

  இந்தச் சிறுகதையை மே 2023 இன் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்கிறேன்.

 – மதுவந்தி.

                                                                                 

 

    

                

                   

இடம் பொருள் இலக்கியம் – 6. வவேசு

கலைக்கழகமா ? பல்கலைக்கழகமா ?

ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தெட்டா அல்லது ஒன்பதா… நினைவில்லை. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். குமுதம் இதழில் “பால்யூ” அவர்களின் ஒரு பெட்டிச் செய்தி என் கண்ணில் பட்டது. அதே வரிகள் நினைவுக்கு வரவில்லை. சாராம்சத்தைத் தருகிறேன்,

சென்னையில் கவிதை அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகின்றது. மாதாமாதம் உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரது இல்லத்தில் கூடிக் கவியரங்கம் நடத்துவார்கள். புதியவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். கவியரங்கம் முடிந்தபின் உணவு உபசரிப்பும் உண்டு. இந்த அமைப்பின் பெயர் “பாரதி கலைக் கழகம். அதன் முகவரி 36, மசூதித் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15 (குமுதத்தின் இயல்புக்கேற்ப ஒரு பெண் கவிஞரின் போட்டோவும் இருந்தது.).

பாரதி கலைக் கழகம் எனும் இலக்கிய அமைப்பு 1951 தொடங்கப்பட்டது.  பாரதி சுராஜ், அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன், எழுத்தாளர் நா.ராமச்சந்திரன், கவிஞர் இளங்கார்வண்ணன்,  ஐயாறப்பன் ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட கழகம் இது. நூறாண்டுகள் கடந்து இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அக்காலத்தில் எங்கள் வீடு தி.நகர் எனப்படும் புதுமாம்பலத்தில் இருந்தது. எங்கள் தெருவின் பெயரும் மாம்பலம் தெரு . இப்போதுள்ள துரைசாமி ”சப் வே” அருகில்; அப்போது அங்கே “ரெயில்வே கேட்” இருந்தது. “கேட்”டைத் தாண்டிச் சென்றால் சைதாப்பேட்டை அவ்வளவு தூரமில்லை. அப்பா, என்  இரண்டு சகோதரர்கள் , நான் ஆகிய அனைவருக்கும் உரிமையான ஒரு “சென் ராலே” 22 இஞ்ச் சைகிள் வீட்டில் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மற்றவர்களிடம் “ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு சைகிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அவ்வளவு சிறிய பயணம்தான் அது என நினைத்தேன். ஆனால் அன்று தொடங்கிய எனது கவிதைப் பயணம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பாரதி கலைக் கழகத்துடன் தொடர்ந்துகொண்டுவருகிறது.

அது ஒரு சிறிய ஒற்றைமாடித் தெருவீடு. எண் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நீல நிற போர்டில் ”பாரதி கலைக் கழகம்” என்று எழுதித் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்துவிட்டு சைகிளை ஸ்டாண்ட் போட்டேன். பச்சை வண்ணப் பூச்சோடு இரும்பு அழி போட்ட கதவு இலேசாகத் திறந்திருந்தது. கீழ் வீட்டில் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து என்னை யாரெனக் கேட்டு, விஷயம் அறிந்து மாடிப் பக்கம் கைகாட்டினார். பருமனாக இருந்தால் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த எட்டு படிக்கட்டுகள் ஏறித் திரும்பியவுடன் மாடி வீடு.

அதுதான் பாரதி கலைக் கழகத்தின் செயலாளர் பஞ்சநதீசன் என்கிற கவிஞர் ஐயாறப்பனின் இல்லம். யாரும் கவியரங்கை “ஹோஸ்ட்” பண்ணாத மாதங்களில் கவியரங்கம் நிகழுமிடமும் இதுதான். நுழைந்தவுடன் உள்ள “பெரிய” ஹாலில்தான் அரங்கம் நடக்கும். பதினைந்து பேர்கள் நெருக்கமாக அமரலாம். ஆனால் கவியரங்கம் நடக்கும் போது இருபத்தி ஐந்து பேர்கள் சௌகரியாமாக அமர்ந்து பாடுவார்கள். உணவு உண்பார்கள்; ஆண்டு விழாவுக்கு திட்டங்கள் தீட்டுவார்கள்; நூல் பதிப்பு பற்றிப் பேசுவார்கள்; சுவையான செய்தி ஒன்று. பேராசிரியர் நாகநந்தி இயக்கத்தில் பாரதி கலைக்கழகக் கவிஞர்கள் நடித்து அரங்கேறிய மகாகவியின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்துக்கான ஒத்திகைகளும் இங்குதான் நடந்தன. ( அந்த நாடகத்தில் நான் தான் பாரதி )

அப்படியா !  என நீங்கள் ஆச்சரியம் கொள்ளவேண்டாம். அந்த இடம் எத்தனை சிறியதோ அத்தன பெரிது ஐயாறப்பன் தம்பதியரின் உள்ளம். வள்ளுவன் வரைந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் பத்து குறட்பாக்களுக்கும் பழுதில்லா இலக்கணம் இவர்களே !

கவிதை எழுதுவதில் பேரார்வம் கொண்டு தினம் எழுதிக் கிழித்துக் கொண்டிருந்த எனக்கு இக்கழகம் சங்கப் பலகையாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் கவியரங்கம். ஒவ்வொரு மாதமும் யார் ஹோஸ்ட் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டு ஆரம்பத்திலேயே முடிவாகிவிடும். இந்தப் பன்னிரண்டு கவியரங்கங்கள் தவிர, உறுப்பினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் அதாவது திருமணம், பிறந்தநாள், வளைகாப்பு, உபநயனம், மணிவிழா போன்ற பல நிகழ்வுகளில் கவியரங்கம் அமைக்கப்படுவதுண்டு. பொதுவாக எல்லாக் கவியரங்குகளிலும் முப்பது கவிஞர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள்.

பாரதி கலைக் கழகத்தில் நான் உறுப்பினராகச் சேர்ந்து , கவியரங்கங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். 1977- அக்டோபர்.  ஓர் அழைப்பு. அந்த மாதக் கவியரங்கை அழைத்தவர், ரங்கராஜன் என்ற உறுப்பினர். நுங்கம்பாக்கம் லயோலா காலனியில் அமைந்திருந்த அவர் இல்லத்தில்தான் நிகழ்ச்சி நடை பெற்றது.

பேராசிரியர் ரங்கராஜன் லயோலா கல்லூரியில் கணிதத்துறையில் பணிபுரிகிறவர். ராஜரங்கன் என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதியவர். ஆனந்தவிகடனில் அவரது முத்திரைக் கதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. சென்னை மாக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் தமிழ் இலக்கியக் கூட்டங்களை மாதந்தோறும் நட்த்திவந்தவர். பாரதீய வித்யா பவன் தொடங்கிய கல்விப் பணியில் ஆலோசகராக இருந்தவர். அனைத்துக்கும் மேலாக மிக உணர்ச்சிகரமாகக் குரலெடுத்து பாரதி பாடல்களைப் பாடக் கூடியவர்.

அவர் இல்லத்து நிகழ்ச்சிக்கு வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் தலைமை. அவர் தலைமையில் அதுதான் எனது முதல் கவியரங்கம்.

தலைமையிலே கி.வா.ஜ. என்று சொன்னால்

தடையின்றித் தமிழ்முழங்கும் என்று சொல்வேன்

கலைமகளின் ஆசிரியர் என்று சொன்னால்

கவிவெள்ளம் பெருகுதற்குத் தடையும் உண்டோ ?

என்று தொடங்கிய என் வணக்கப்பாவை புன்னகையோடு ஏற்றுக் கொண்டார். அடுத்த மூன்றுமணி நேரம் கையில் எந்தப் பேப்பரும் பேனாவும் இன்றி தலைமைக் கவிதை பாடி ஒவ்வொரு கவிஞருக்கும் பின்னூட்டம் சொல்லி ஆசுகவியாக அசத்தினார் கி.வா.ஜ. அது ஒரு பேரனுபவம். ( வீட்டில் நிகழும் கவியரங்கம் என்பதால் தலைமைக் கவிஞரின் அருகேயே எல்லோரும் தரையில் அமர்ந்திருந்தோம். எனது டைரியில் அவர் முகத்தை அப்படியே நான் வரைந்தேன். பிறகு அவரிடம் காட்டினேன். “அடேடே ! என்னைப் போன்றே இருக்கிறதே ! என ஆச்சரியப்பட்டு, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்)

பல மூத்த கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியச் செல்வர்களையும் நான் சந்தித்துப் பேசி, பழகி, உரையாடி அறிவை வரவாக்கிக்கொண்ட பள்ளிக்கூடம் அல்லது பயிற்சிக்கூடம் அது. கவிமாமணிகள் தமிழழகன், ரா,பு, தங்கராஜன், நா.சீ.வரதராஜன், மஹி, தேவநாராயணன், தண்டமிழ்க்கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், இலந்தை இராமசுவாமி, இளந்தேவன், இளையவன், மதிவண்ணன், மதி.சீனிவாசன்,ஐயாறப்பன், ரா.பா.சாரதி போன்ற பலரோடு நட்பு பூண்ட இடம் அது. எழுத்தாளர்கள் விக்ரமன், நா.பா, சுப்ரபாலன், சித்தார்த்தன் போன்றோரையும், நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார், பொள்ளாசி மகாலிங்கம், சௌந்திரா கைலாசம், நாரண துரைக்கண்ணன், ஒளவை நடராஜன்,வல்லிக்கண்ணன், கவிஞர் வாலி திருப்பூர் கிருஷ்ணன், “கல்வி” கோபாலகிருஷ்ணன்,போன்ற இலக்கிய பிரமுகர்களையும் சந்தித்த இடம் அது.

வானவில் ரவி, இசைக்கவி ரமணன், ஹரிகிருஷ்ணன், பா. வீர்ராகவன் ஆகியோரோடு என் நட்பு இறுகி இணைந்த இடமும் அது.

பேராசிரியர் நாகநந்தி என்ற மாபெரும் தமிழறிஞரை சந்தித்து அவரிடம், பாரதியைப் பற்றியும் அவன் படைப்புகள் பற்றியும், அவன் பாடிய மூன்று மகாகவிகள் பற்றியும் அறிந்துகொள்ளத் தலைப்பட்ட இடமும் அது.

இதுவே ஒரு கவிதைப் பயிற்சிக் களமாக எனக்கு மாறிவிட்டது. இந்தக் கவிரங்குகளில் என் கவிதைகளைக் கேட்டு இரசித்த சிலர் பொது மேடைகளில், பெரிய விழாக்கள் நடக்கும் போது அமைக்கப்படும் சிறப்புக் கவியரங்குகளில் என்னை அழைக்கத் தொடங்கினர். வானொலிக் கவியரங்குகளும் பல வந்து சேர்ந்தன. தமிழகம் முழுவதும் நிகழும் இலக்கிய விழாக்களில் பங்குகொள்ள தொடர்ந்து அழைப்புகள் வந்தன.

கவிஞர்கள் திரு நா.சீ.வ, இலந்தை இராமசுவாமி, இளந்தேவன், மதிவண்ணன் இளையவன் நான் என  எங்கள் குழு பல இடங்களுக்குப் பயணம் செய்து கவியரங்கங்கள் நடத்தியது. பலநேரங்களில் என் தலைமை அல்லது இளந்தேவன் அல்லது இலந்தை என்று எங்களுக்குள்ளேயே தலைமை அனுபவங்களும் நிரம்பக் கிடைத்தன..

பாரதி கலைக்கழகத்தின் முதல் கவிதைப் பட்டிமன்ற அழைப்பாளர் கவிஞர் இளந்தேவன். நடுவர் வவேசு; தலைப்பு- சீரிய பொழுது இரவா ? பகலா? அணிக்கு மூன்று பேர்கள் என ஆறு கவிஞர்கள்.

பகல் போதில்தான் சூரிய சக்தியால் உணவு உண்டாகிறது; பகல்தான் உழைக்கும் நேரம்; பொருள் சம்பாதிக்கும் நேரம் என்று ஒரு பக்கம்; நிலவுதான் தண்மை தருகிறது; உழைத்தால் போதுமா : உண்டு ஓய்வெடுக்க உறங்க வேண்டாமா ? அது இரவில்தானே சாத்தியம் என்று இன்னொரு பக்கம். தாமரை பகலில்தானே மர்கிறது என்றால் இந்தப்பக்கம் முல்லை இரவில்தான் மலர்கிறது என்று சொல்லிவிட்டு, இரவில் மலரும் பூக்களுக்குத்தான் வாசனை அதிகம் என உபரித் தகவல் கொடுக்கிறது.. கிருஷ்ணன் இரவில்தானே பிறந்தான் என்றது ஒரு கட்சி; ராமன் பகலில்தானே பிறந்தான் என்று எதிர்க் கவிதை பாடியது இந்தக் கட்சி.. பலமாக சூடு பிடித்த சுவைக்கவியரங்கமாக அது நிகழ்ந்த்து.

நான் என்ன தீர்ப்பு கொடுத்தேன் எனக் கேட்கிறீர்களா ? எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன.மறந்துவிட்டேன். நீங்களே ஒரு தீர்ப்பைச் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் இதனால் கிடைத்த லாபம், நாங்கள் ஏழு பேரும் ஒரு குழுவாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கவிதைப் பட்டிமன்றம் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டோம். எண்பதுகளில் தொடங்கி தொண்ணூற்றைந்து வரை நாங்கள் கவியரங்குகளில் ரொம்ப :பிஸி” ஆக இருந்தோம்.

இன்னொரு முக்கியமான செய்தி. எனக்குக் கிடைத்த முதல் இலக்கிய விருது பாரதி கலைக் கழகம் வழங்கும்  1987-ம் ஆண்டுக்கான “கவிமாமணி” எனும் பட்டம்.

மேற்படி நிகழ்ச்சி, சைதை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான மண்டபத்தில் நடந்தேறியது. விழாநாள் காலையில் மங்கல வாத்யங்கள் முழங்க கவிஞர்கள் இலக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் புடை சூழ என்னை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பெருமதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கி.வா.ஜ, சௌந்திரா கைலாசம் அம்மையார், ,ஜீவா நாரணதுரைக்கண்ணன் ஆகிய நால்வரும் இணைந்து “கவிமாமணி” பட்டத்தை எனக்கு அளித்தார்கள்.

அன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட எனது முதல் கவிதை நூல் “தொட முயன்ற தொடுவானம்” பற்றி கி,வா.ஜ  பாராட்டிப் பேசியது என் வாழ்நாளை முழுமையாக்கிய பேச்சு.

அன்னை தந்தை அண்ணா மன்னி மனைவி மகன் (ஆறு வயது) என குடும்பம் முழுதும் கலந்துகொண்ட நிகழ்வு. என் ஆசான் மதுரை ஜி.எஸ். மணி அவர்களும் வந்திருந்து வாழ்த்திப் பேசினார்.

இலக்கிய உலகிலே என்னை வளர்த்து ஆளாக்கியதில் மிகப் பெரிய பங்கு பாரதி கலைக் கழகத்திற்கு உண்டு எனப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகளையும் புலப்படுத்திக் கொள்கிறேன்.

கவிதை எழுதுவது மட்டுமன்றி, பண்புமிகு இரசனைகளையும் கற்றுத்தந்த இடம்; மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகளை அருகிலே சென்று அவர்களோடு அளவளாவ வாய்ப்புத் தந்த இடம்; எனக்குக் கவிஞன் என்ற முகத்தையும் , முகவரியையும் , பட்டத்தையும் கொடுத்த இடம் இன்றளவும் நான் பாரதியை விடாது பற்றிக்கொண்டு பேசுவதற்கான ஊற்றுக்கண் அதுவே.

ஆம் ! என்னளவில் பாரதி கலைக் கழகம் ஒரு பல்கலைக்கழகம்!

( கவிமாமணி விருது பெறும் புகைப்படத்தை முகநூலிலிருந்து தேடி எடுத்துத் தந்த குவிகம் கிருபானந்தன் அவர்களுக்கு நன்றி )

 

சங்க இலக்கியம் ஓர் எளிய அறிமுகம் – பரிபாடல் – பாச்சுடர் வளவ. துரையன்

பரிபாடல் | மௌவல் தமிழ் இலக்கியம்

“நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியதாகும் என்மனார் புலவர்” [தொல்—999]

இந்தத் தொல்காப்பிய வரையறைப்படி பரிபாட்டு வகையில் பாடப்பட்ட ஒரே தொகை நூல் பரிபாடல் என்பதாகும். பரிந்துவரும் இசைப்பாடல்களால் ஆன பாவகை பரிபாட்டு எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பலவகையான பாடல் வகைகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாடல் ஆகும்.

“இயற்கைப் பாடல்களில் தெய்வத்தின் தன்மை கண்டு உருகிப் பாடும் முறை பரிபாடல். ஆனால் சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்னும் செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று” எனக் கூறுகின்றார் மு. வரதராசனார்.

“திருமாற்கு இருநான்கு செவ்வேட்டு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று—மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”

என்று பரிபாடலின் பகுப்புமுறை பற்றி ஒரு பழம்பாடல் கூறுகிறது.இதன்படி திருமாலுக்கு 8, செவ்வேள் எனப்படும் முருகனுக்கு 31, காளிக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4, என 70 பாடல்கள் பரிபாடலில் இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்பொழுது திருமாலுக்கு 6, முருகனுக்கு 8, வையைக்கு 8, என ஒத்தம் 22 பாடல்களே கிடைத்துள்ளன.

பரிபாடலில் அகம், புறம் என்று இருதிணைகளும் கலந்து பாடப்பட்டுள்ளன.
புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களில் உள்ள வீரம், செல்வம், கொடை, முதலான புறத்திணை சார்ந்த செய்திகள் பரிபாடலில் இல்லை. எனவே சமயப் பாடல்களையே புறத்திணை சார்ந்தவையாகக் கொள்ள வேண்டி உள்ளது.

பரிபாடலில் 0 என்பது பாழ் என்னும் பெயரிலும், ½ என்பது பாகு என்றும், 9 என்பது தொண்டு என்னும் பெயராலும் வழங்கப்படுகின்றன. சைவம், சாக்தம் [சக்தி] காணாபத்யம் [கணபதி, கௌமாரம் [முருகன்], வைணவம் [திருமால், சௌரம் [சூரியன் என்னும் அறுவகைச் சமயங்களுள்   சாக்தம், கௌமாரம், வைணவம் ஆகிய முச்சமயங்கள் பற்றி மட்டுமே பரிபாடல் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பரிபாடலின் முதல் பாடல் திருமாலைப் பலராமனோடு இணைத்து இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் காட்டிப் புகழ்கிறது. நானும் உன்மீது காம வேட்கை கொண்டுள்ள என் சுற்றமும் உன்னோடு ஒன்றி உன் காலடியில் நாளெல்லாம் கிடக்கவேண்டும் என ஏங்குகின்றேன். அதற்கு நீ அருள் புரிய வேண்டும் என்றே உன்னைப் போற்றுகின்றேன். வாய்மொழிப் புலவனே! அருள் புரிய வேண்டும் – என்று வேண்டிப் பாடல் முடிகிறது.

பாடல்:

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

பாடலின் பொருள்:

நாஞ்சில் ஒருகுழை ஒருவன் என்பது பலராமனைக் குறிப்பிடுகிறது.
அச்சம் தரும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தீயை உமிழும் திறமையோடு உன் தலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மாமைநிறம் கொண்ட மலர்மகள் உன் மார்பில் வாழ்கிறாள். நீயோ வெண்சங்கு போன்ற வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறாய். வானளாவிய பனைமரம், அழகு மிக்க யானை இரண்டையும் கொடியாகப் பிடித்துக்கொண்டுள்ளாய். வாய் வளைந்திருக்கும் நாஞ்சில் என்னும் கலப்பையை ஒரு காதில் மட்டும் குழையாக மாட்டிக்கொண்டுள்ளாய்.

பரிபாடலில் வையை

இஃது ஊடல் பற்றிய அகப்பொருள் பாடலாகும். இயற்றியவர்: ஆசிரியன் நல்லந்துவனார். இதற்கு இசையமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். பண் – பாலையாழ் ஆகும்

மழை பொழிந்தது. கடலில் நீரை முகந்து சென்ற மேகம் தன்னிடமுள்ள நீரை மழையாகப் பொழிந்தது. அதனால் வையை ஆற்றில் வெள்ளம் வந்தது. நீரானது நிலத்தை மறைத்துக் கொண்டு ஓடியது. மலையில் வாழ்வன எல்லாம் அஞ்சிக் கலங்கும்படியும், மயில் அகவிக் கூவும்படியும் ஓடியது. மலையின் மாசுகளைக் கழுவிக்கொண்டு மழை நீர் அருவியாக இறங்கியது.

குறைவின்றி நூல் கற்றுணர்ந்த புலவர்களின் புலமை நாவில் கவிதை பிறக்குமாறு புனல் பரந்து பாய்ந்தது. தொழில்வினை பலவகையிலும் பெருகுமாறு புனல் பாய்ந்தது. புகை, பூ, படையல், விளக்கொளி என்றெல்லாம் பலவற்றை ஏந்திக்கொண்டு வந்து மணமக்களைவிழாக்கொண்டாடி வரவேற்பது போல கூட்டுவிப்பது போல வையைப் புனலை மக்கள் வரவேற்றனர்.

வையை ஆற்றின் கரை உடைந்தது என்னும் பறைமுழக்கம் எங்கும் ஒலித்தது. வையைப் புனலை வரவேற்கச் செல்வதற்காகத் தோளில், ஆண்கள் தொடியும், பெண்கள் வளையலும் அணிந்துகொண்டனர். மார்பில் ஆண்கள் கொடியும், பெண்கள் வயிரக்கோவை மாலையையும் அணிந்துகொண்டனர். இருபாலாரும் முத்துமாலை அணிந்துகொண்டனர். மகளிர் நகங்களிலும், இதழ்களிலும் செம்பஞ்சுக் குழம்பை அப்பிக்கொண்டனர்.மார்பில் வண்டல்-சாந்து பூசிக்கொண்டனர். கண்புருவ இலைகளிலும், தலைமயிரிலும் ஈரச்சாந்து எண்ணெய் நிழலாடச் செய்தனர்.

பெண்ணின் முலை, ஆணின் மார்பு இரண்டும் முயங்குவதற்காக இந்த ஒப்பனை. இப்படி ஒப்பனை செய்துகொண்டவர்களின் ஒன்றுபட்ட உள்ளத்தில் இருக்கும் ஆணின் நிறையுடைமையும், பெண்ணின் நாணமும் உடைந்து பாய்வது போல, வையை வெள்ளம் தன் கரையை உடைத்துக்கண்டு பாய்ந்தது. வையைக்கரை உடைந்துவிடும் என்று பறையொலி கேட்பது போல் ஊரே பேசிக்கொண்டது.

உண்மையில் கரை உடையவில்லை. ஆண் யானைகள் போர்க்கோலத்துடன் சென்றன.பெண் யானைகள் நீராடும் கோலத்துடன் சென்றன. இளையரும், இனியரும் ஒப்பனை செய்து கொள்ளும் அணி, நீராடுவதற்குரிய அணி என்னும் இரண்டு அணிகலன்களையும் கொண்டு சென்றனர். வேகம் தணிந்து ஓடிய புனலில் புனலாட்டுப் போர் நிகழ்ந்தது. விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

மாலை அணிந்துகொண்டனர்.நீரைப் பீச்சி விளையாடும் கருவிகளை வைத்திருந்தனர். சிலர் புனல் செல்லும் போக்கிலேயே சென்று விளையாடினர்.

யானைமீது சென்றனர். குதிரைமீது சென்றனர். சிவிறி கொண்டு நீரைப் பீச்சினர். கொம்புகளிலிருந்து மணநீரை வீசினர். வெண்ணிறக் கிடைக்கட்டையைத் தேராக்கிக்கொண்டு அதன்மீது ஏறி மிதந்து சென்றனர். வரிசையாகச் செல்லாமல் தாறுமாறாகச் சென்றனர். சிலர் தடையின்றி ஏதாவது உண்டுகொண்டிருந்தனர். ஒரு வழியில் இடையூறு வரும்போது வழியை மாற்றிக்கொண்டு சென்றனர். தெருச்சேரி இளைஞர் சென்று நிலைகொள்ள முடியாமல் நீந்திக்கொண்டே இருந்தனர். வலிமையற்றவர் துறைக்கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். வலிமை உடையோர் புனலில் விளையாடினர். பருகுநீர் , பாயசவகை நெய், மலர் முதலானவை சிந்தி வையை மணம் வீசியது.

பாடல் அடிகள்

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல்.

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.

தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: ‘வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக’ எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று.

அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்:

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,
சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.

இப்பாடல் 60 அடி கொண்டநீண்ட பாடலாகும். தலைவனுக்கும் இற்பரத்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் எல்லாம் இதில் அடங்கி உள்ளன.

பரிபாடலில் திருமால்

”திருமாலே! நின்புகழைத் தாமே கண்டறிந்து புதிதாக யாராலும் பாட இயலாது. எனவே முன்னோர்கள் உன்னைப் போற்றிப் புகழ்ந்து பாடிய வகையிலேயே யாமும் தொடர்ந்து பாடுகிறோம்” என்று பரிபாடலின் அடியார்கள் வேண்டுகின்றனர். “பாடுவோர் பாடும் வகையே எம்பாடல் தாம் அப்பாடுவார் பாடும் வகை” என்னும் அடிகளால் மேற்கண்ட கருத்து விளக்கப்படுகின்றது.
பரிபாடலின் பதினைந்தாம் பாடல் முழுதும் திருமால் எழுந்தருளி உள்ள அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலையின் பெருமையே கூறப்பட்டுள்ளது. “புலவரையறியா” எனத்தொடங்கும் அப்பாடல் திருமாலிருஞ்சோலை ஆலயத்தில் உள்ள பழைய சிலாசாசனங்களில் காணப்படுகிறது. இப்பாடலைப் பாடியவர் இளம்பெருவழுதியார். மேலும்
”தையல வரோடும் தந்தா ரவரொடும்
கைம்மக வோடும் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழு தனிர் சென்மின்” என்று பரிபாடல்தான் இல்லத்துணைவி, தாய் தந்தையர், கைக்குழந்தை, சுற்றம் ஆகியவரோடு திருமாலை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தும் முதல் நூலாகும்.

பரிபாடலில் செவ்வேள் [முருகன்]

”சூரபன்மனை அழித்த போராளியே! உன் குன்றத்தில் ஆடுவோர் தாமே சலிக்கும் அளவு ஆடினர், பாடுவோர் தாமே சலிக்கும் அளவு பாடினர். வல்லாரை வல்லார் கண்டு அடங்கினர். அல்லாரை அல்லார் கண்டு அடங்கினர். இப்படி ஆக்கிய மன்றக் கொடிகள் சுனைக்கரைகளில் பறந்தன.

விரும்பும் வேல், வென்று உயர்த்திய கொடி, கற்புக் கடம் பூண்ட இரு மனைவியர் காட்டும் அன்புரிமை – ஆகியவற்றைக் கொண்ட வியக்கத் தக்க குமரனே!

உன்னை வாயார வாழ்த்துகின்றோம். நெஞ்சாரப் பரவுகின்றோம். தலை வணங்கித் தொழுகின்றோம். உன் காலணியாக இருக்க விரும்புகின்றோம். இவற்றை எங்களுக்குப் பயனாக நாள்தோறும் தந்து நீ பொலிவாயாக”. என்று முருகனின் அடியவர்கள் பரிபாடலில் போற்றுகின்றனர்
.

“கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,
செம்மைப் புதுப் புனல்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எஃகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர!

வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே”

இப்பாடலைப் பாடியவர் குன்றம்பூதனார் ஆவார். எளிய அறிமுகமாகையால் பரிபாடலில் ஒரு சில முத்துகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.

 

இந்த மாதக் கவிஞர் – வாலிபக் கவிஞர் வாலி – முனைவர் தென்காசி கணேசன்

மதியின் திரை நட்சத்திரங்கள்: கவிஞர் வாலி நினைவு தினம் ஜூலை 18 . 2013.

கவிஞர் வாலி நினைவஞ்சலி | A Tribute To Poet Vaali - YouTube

 

 

 

இம்மாதக் கவிஞர் – வாலி  (முனைவர் தென்காசி கணேசன்)

வாலிபக் கவிஞர் வாலி – 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையில்  கவிக் கொடி நாட்டியவர். கண்ணதாசனுக்கு, அடுத்தபடியாக ,ஏன்,  இணையான கவிஞர் என்றே கூறலாம்.

சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி , எஸ் எஸ் ஆர், முத்துராமன, ஜெய்ஷ்ங்கர், ரவிச்சந்திரன் ,ரஜினி, கமல், அஜித், விஜய் ,சூர்யா சிம்பு, தனுஷ் வரை அத்தனை தலைமுறைக்கும் பாட்டு எழுதியவர்.   இயல்பான பாடல் வரிகளில், காதல், தத்துவம், வாழ்வு முறை, நகைச்சுவை என அத்தனையும் தந்தவர்.

அன்புடன்: தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -58

வாசித்துத் தமிழ்கற்றோர்
வரிசையிலே யானில்லை;
யோசித்துக்‍ கவிபுனையும்
யோக்‍கிதை தானில்லை;
நேசித்தேன்; நெஞ்சாரப்
பூசித்தேன்; நின்னடியில்
யாசித்தேன் அடடாவோ!
யானும் ஓர் கவியானேன்!

-என்று வாலி தன் தமிழ்ப் புலமையை இப்படி விவரிக்‍கிறார்.

கவிஞர் வாலி நினைவு தினம்: எழுதி வைத்த ஓவியம்போல் இருக்‍கின்றாய் இதயத்தில் நீ!... | kavignar vaali - hindutamil.inசென்னையை முற்றுகை இட்டும் வாய்ப்பு கிடக்காமல் ஊருக்கு திரும்ப முடிவெடுத்தபோது, அவரின் அறைக்குள் நுழைந்த பி பீ ஶ்ரீநிவாஸ், அன்று ரெக்கார்டிங் ஆன பாடலைப் பற்றிக் கூற, வாலியின் முடிவு மாறியது – தமிழ்த் திரையில் ஒரு கவிஞர் வரலாறு உருவானது. அந்தப் பாடல் கவியரசர் எழுதிய – மயக்கமா கலக்கமா என்ற பாடல். அந்த வரிகள் வாலிக்கு ஒரு டானிக் ஆனது – அவரே பலமுறை இதைப்பற்றி கூறி இருக்கிறார்.

இவரின் பல பாடல்கள திரைப்படம் எனும் கட்டைத் த்தாண்டி இலக்கியம் என்னும் நிலையை தொட்ட பாடல்கள். வாலியா கண்ணதாசனா என்று சுவைஞர்களை திகைக்க வைத்த பாடல்கள்.

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

நான் அனுப்புவ்து கடிதம் அல்ல – உள்ளம்

அவளா  சொன்னாள் இருக்காது

நூறாண்டு காலம் வாழ்க – நோய் நொடி இல்லாமல் வளர்க

ஒண்ணா இருக்க கத்துக்கணும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே

குயிலாக நான் இருந்தென்ன – குரலாக நீ வர வேண்டும்

அவகளுக்கும் தமிழ்  என்று பெயர்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஒரு கடிதம்

மலரே குறிஞ்சி மலரே

மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ

அல்லா  அல்லா நீ இல்லாத இடமே இல்லை

தூளியிலே ஆட வந்த வானத்து வெண்ணிலவே

அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே

ராம நாமம் ஒரு வேதமே

வளையோசை  கலகல

பவளக் கொடியிலே முத்துக்கள்

பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்

காற்றில் வரும் கீதமே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

குமரிப் பெண்ணின் நெஞ்சத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

“உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

“முஸ்தபா முஸ்தபா”

“காட்டுக்குயிலு மனசுக்குள்ளே”

மஞ்சம் வந்த தென்றலுக்கு

கல்யாண மாலை கொண்டாடும் வேளை

இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை இந்த வாழ்வு

அத்தை மடி மெத்தையடி

பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா

வெள்ளிக்கிழமை விடியும் வேளை

உனது விழியில் எனது பார்வை

அவரின் உரையாடல்களில் கூட, யதார்த்தம் நிறைந்த நகைச்சுவை இருக்கும்.

எனக்கும் கண்ணதாசனுக்கும் சண்டை என்கிறார்கள் – உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் – எங்கள் இருவர்க்கும் , நண்பர் ‘கள்’ என்றார்

அதேபோல, கண்ணதாசனுக்கு ஆஸ்தான கவிஞர் விருது தந்தபோது, எம்ஜிஆரிடம் , வாலி, “அண்ணே நீங்க புதுசாக எதுவும் தரலை. ஏற்கனவே இருப்பதை கொஞ்சம் மாத்தி இருக்கீங்க. கண்ணதாசன் கவி அரசு.  இப்ப அரசு கவி ஆக்கிட்டீங்க.” என்றார் 

ஜெயலலிதாவைப் பற்றி –  ஒரு புடவைக்கு எதிராக, இத்தனை வேஷ்டிகள், கோஷ்டிகளாக சேர்ந்ததே ! அதிசயம் தான் !

திரையுலகில் வெற்றி பெற்ற உடன் சொன்னது –

போன வருடம் சாப்பிட முடியவில்லை – காரணம் கையில் காசு இல்லை

இந்த வருடமும் சாப்பிட முடியவில்லை – கரணம் நேரம் இல்லை – மாறி மாறி பாடல் பதிவுகள் இறைவன் முருகனின் விளையாட்டு , என்பார்.

தாய், தந்தை உயிரோடு இருக்கும் வரை, இவர் திரைத்துறையில் கால் பதிக்க முடியவில்லை. அந்த வருத்தத்தை, விருத்தமாக  –

அத்தனை வேண்டுதல்கள்

எனக்காக என் தாய் ஆண்டவனிடம் வைத்தாள்

எந்த கடவுளும் செவி சாய்க்காததால்

தானே தெய்வமாக மாறி

என்னை வாழவைத்தாள்

என்பார்.

பதிவுத்தடாகம்: கலைஞர் பற்றி கவிஞர் வாலி கவிதைஇப்படி, அவரின் கவிதைகள், கட்டுரைகள், திரைப்படப் பாடல்கள் என எல்லாமே மிகச சிறப்பானது. அவர் திருவரங்கம தந்த தமிழ்க் கரும்பு.  வாலியின் நறுக்குத்தெறித்ததாற் போன்ற சில சொற் சித்திரங்கள்…

ஒரு கவியரங்கில் கோவலன் வாழ்வை இரண்டு வரியில்..

“புகாரில் பிறந்தவன்

 புகாரில் இறந்தவன்”

காரைக்குடி கம்பன் விழாவில் அனுமனைப் பற்றி..

“குரங்கென அதன் வாலில் தீவைத்தானே

 கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத் தானே”  என்பார்.

“அம்மா என்று அழைக்காத”, “இந்திய நாடு என்வீடு”, “தரைமேல் பிறக்க வைத்தான்”, “மாதவிப் பொன்மயிலாள்”, “பவளக்கொடியில்”, “சந்த்ரோதயம் ஒரு பெண் ஆனதோ”, “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே” என்றும் பாடல் எழுதுவார்.

“முக்காப்பலா”, “சக்கரவள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி?”, “சின்னராசாவே சிற்றெரும்பு என்னை கடிச்சது , நேத்து ராத்திரி எம்மா ,  “லாலாக்கு டோல் டப்பிமா”, எவண்டி உன்னைப் பெத்தான்  என்றும் எழுதுவார்.

திரைப்படத்தில் இப்படி  சில மோசமான பாடல்களை இயற்றுகிறீர்களே” என்ற கேள்விக்கு…

“எந்தப்பா திரைப்படத்தில்

 விலை பெறுமோ

 அந்தப்பா எழுதுகிறேன் இது

 என்தப்பா” என்று சொன்னதுடன்,

 

“நான் திரையரங்கில்

 பொருளுக்குப் பாட்டுரைப்பேன்,

 கவியரங்கில் பாட்டுக்குப்

 பொருளுரைப்பேன்” என்றும்,

“கவியரங்கில் வண்ண மொழிப்

 பிள்ளக்குத் தாலாட்டும் தாய்,

 திரையரங்கில் விட்டெறியும்

 காசுக்கு வாலாட்டும் நாய்” என பதில் கூறுகிறார்.

 

ஒரு ஆன்மீகக் கவியரங்கில் ‘பிறப்பின் சுழற்சியை’…

“மண்ணிலிருந்து புழு புறப்பட்டது

 புழுவைப் பூச்சி தின்றது

 பூச்சியை புறா தின்றது

 புறாவை பூனை தின்றது

 பூனையை மனிதன் தின்ன

 மனிதனை மண் தின்றது

 மண்ணிலிருந்து மறுபடி

 புழு புறப்பட்டது

 புனரபி மரணம் – புனரபி ஜனனம்

  பஜகோவிந்தம் –  நிஜகோவிந்தம்!” எனப் பாடுகிறார்.

இவரின் பரிமாணம் மிக விஸ்தாரணமானது.  70 வயதை தாண்டிய நிலையில் அவர் எழுதிய பாடல்கள், இவரின் எண்ணத்தின் இளமையைக் காட்டும்.

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருக்கும் மாணவன் நான் என்றும்

“காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன்

 கண்கள் ரெண்டில் இன்று

காதல் வைரஸ் வந்து கம்ப்யூட்டர் போல்

 நானும் கன்பியுஸ்(confuse) ஆனேன் இன்று,  என்றும்

“பிரிட்ஜினில்(fridge) உள்ள பிரீசரைப்(freezer) போல

குளிர் தர ஒரு  துணையுண்டு வா”. , என்றும்

அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு

நீங்க எடை போட்டா தடா உனக்கு தடா

அடமெண்டா நாங்க நடை போட்டா தடை போட

நீங்க கவெர்மென்டா தடா உனக்கு தடா  என்றும் பாடுவார் .

 

தமிழ் மொழியின் யாப்பில், மடக்கணி என்ற வகையில் கூட, திரையில் பாடல் தந்துள்ளார்.

வநத சொல்லே மீண்டும் வந்து வேறுபட்ட பொருள் தருவது மட்க்கணி ஆகும்.

 

இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ

இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ

இந்தக் கோலமகள் ஒரு கொய்யாப்பூ

தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

இந்தப் பாடலில், 8 சொற்களை, 16 முறை பயன்படுத்தி அழகு செய்திருப்பார் வாலி.

அதேபோல, ஆரம்ப காலங்களில் இவரின் பாடல்கள், திமுக மற்றும் எம்ஜிஆரின் அரசியல் பயணத்திற்கும் உதவியது என்பார்கள்.  முகஸ்துதி கொஞ்சம் அதிகம் என்றே கூறுவார்கள்.

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் “

உதய சூரியனின் பாதையிலே

உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

வாங்கையா வாத்தியாரையா பாடலில், 1967ல் காங்கிரஸ் கட்சி தோற்று, எம்ஜிஆர் இருந்த திமுகவை உயர்த்திப் பாடுவார் –

பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு

பிழைத்தவர் எல்லாம் போனாங்க

மூலைக்கு மூலை தூக்கி எரிஞ்சோம்

 தலைகுனிவு ஆக ஆனாங்க

வாங்கையா வாத்தியார் ஐயா என்று எழுதுகிறார்.

எம்ஜிஆர் குண்டடி பட்டு உயிர் திரும்பியவுடன்

நான் செத்துப் பொழச்சவண்டா

யமனைப் பார்த்து சிரிச்சவண்டா

நான் அளவோடு ரசிப்பவன்

எதையும் அளவின்றிக் கொடுப்பவன் , என்றும் எழுதினார்.

 

சிவாஜி அவர்கள் பிறந்த நாள் விழாவில், அப்போதைய அரசியலை கலந்து, கவிதை படைத்தார்.

(அன்றைய காங்கிரசில் சிவாஜிக்கு தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி என்று பேச்சுஇருந்தது. ஆனால், பழனியாண்டி என்பவர் தலைவர் ஆனார். சிவாஜிக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது ).  இதை,

பாரெல்லாம் வலம் வந்து

பதவி வாங்கிய பழனியாண்டியா நீ !

அன்னையையே சுற்றி வந்து

அமுதக்கனி பெற்ற கணேசன் நீ !  என்று பாடினார்.  

 

எல்லாக் கவிஞர்களுக்கும் இல்லாத சிறப்பு, இறுதி மூச்சுவிடும் வரை படங்களுக்குப் பாடல் எழுதிய பெருமை அதாவது 82 வயது வரை பாடல்கள் எழுதியவர் -“சாதனையாளர்” என்ற சிறப்பு வாலி(ப) கவிஞருக்கு உண்டு.

இப்படிப் பல குறும்புகளால் குறும்பாக்கள் எழுதிய திருவரங்கம் தந்து திரை அரங்கம் வளர்த்த தமிழ்க்கரும்பு. பேசும் பேச்சிலும் அவரின் குறும்பு, தமிழாகவே வெளிப்படும். நடிகர்திலகம், ஒருமுறை அவரை Foreign -க்கு கூடவா என்று கேட்க, Passport -யே கிடையாது – இதுவரை வெளிநாடே சென்றதில்லை – போக விருப்பமும் இல்லை என்றாராம். அப்படியா என நடிகர் திலகத்துக்கு ஆச்சர்யத்துடன் கேட்க, Foreign நான்தான் போனதில்லை – என் உள், ஏகப்பட்ட Foreign போயிருக்கிறது என்றாராம்!

தனிக் கவிதை ஒன்று –

“இரண்டு மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன

இந்த மனிதர்கள் நம்மைக் கொண்டு எத்தனைச் சிலுவைகளை

செய்கிறார்கள் – அனால் நம்மால் இவர்களுள் ஒரு ஏசுவைக் கூட

காண முடியவில்லையே”

 

அரசியல் சார்ந்த மற்றொரு கவிதை –

“மனிதர்களை எங்களால்

மந்திரிகளாக்க முடிகிறது;

மந்திரிகளைத்தான் மீண்டும்

மனிதர்களாக்க முடிவதில்லை”

அதேபோல,

தலையைச் சீவியவனின் தாகத்தைத் தணிக்கிறது இளநீர் ஆனால்,

தோலை உரித்தவனைக் கண்ணீர் விட வைக்கிறது வெங்காயம் !

இது தான் சுயமரியாதையோ! என்பார்.

கண்ணதாசன் இறந்த பிறகு,

“எழுதப் படிக்கத் தெரியாத

எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.

ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்”

திரைப்படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர், கர்நாடக இசை தெரிந்தவர், ஓவியர் இப்படிப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் கவிஞர் வாலி.

கம்பராமாயணத்தை “அவதாரபுருஷன்” என்றும், மகாபாரதத்தை “பாண்டவர் பூமி” என்றும், பாகவதத்தை “கிருஷ்ணவிஜயம்” என்றும் அழகிய சிங்கர் சரிதம் என்று புதுக்கவிதைப் பாணியில் இவர் தந்த காவியங்கள் அருமை.

TMS அவர்கள், திருச்சியில் வாலி இருந்தபோதே,

கற்பனை என்றாலும். கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்,

ஓராறு முகமும் ஈராறு கரமும்,

என்ற பாடல்களை வாங்கி, அவரே இசை அமைத்துப் பிரபலப்படுத்தினார். .

அவரின் பாடல்கள், கவிதைகள் எல்லாவற்றிலும் இலக்கிய நயத்துடன் ஒரு எள்ளலும், துள்ளலும் ஒருங்கே இருக்கும்.

மாளாப்பசிதான் மனத்தின் வியாதி என்று

ஆடி அலுத்து அறிந்தான் யயாதி!

என்று கூறுவார்.

 

காதலைச் சிரிப்பாக, கொஞ்சம் காமத்துடன் சிறப்பாக கவிதையில் கூறுவது அழகு.

கன்னங்கள் வழி

தென்னங்கள் தரும்

அன்னங்கள் தான் பெண்கள்!

அங்கங்கள் வழி

பொங்குங்கள் தரும்

தங்கங்கள் தான் பெண்கள்

என்பார்!

இதுபோல் எழுதிப் பெண் உரிமைப் போராளிகளிடமிருந்து என்றும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார்.

புத்தம் புதிய புத்தகமே

உனைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

என்ற இலக்கிய வரிகள் கொண்ட பாடலுக்கும்,

அம்மா என்றால் அன்பு

அப்பா என்றால் அறிவு

என்பதை அம்மாவுக்கு அறிவு கிடையாதா என்றும் பெண்கள் அப்போது எதிரப்பைத் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் கதை வசனம் எழுதியபோது, பாலசந்தர், கமல், பாரதிராஜா, இளையராஜா, ஹிந்து ரங்கராஜன் அனைவரும் பாராட்டியதுடன், அதைப்படம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னார். வாலி பதில் எழுதினார் – அப்படி என்ன இந்தக் கதை? கண்ணதாசன் கூறியதுபோல, மனிதனுடைய பிறப்பும், இறப்பும் தவிர, மற்றபடி எந்த விஷயமுமே மறுபரிசீலனைக்கு உரியது. இது 100/100 உண்மை.எனவே, தேசம் விடுதலை பெற்றபின், பல்வேறு சமூக நீதியின் கருத்துக்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன.

நாற்பதாண்டுகளுக்கு பின் இன்னும் ஒரு பரிசீலனை தேவைதானே! விஞ்ஞானத்திற்கும், மருத்துவத்திற்கும் மறுபரிசீலனைக்கு மாற்றம் பெறும்போது, சமூக நீதி, சட்டங்கள் புதிய பொலிவு பெற வேண்டாமா என்றார். ஒரே ஒரு கிராமத்திலே கதாநாயகி சாதி சமயமற்ற புதிய பொலிவு உருவாக்க, சமூக நீதியில் மாற்றமும், மறுபரிசீலனையும் வேண்டும் என்றார், படமும் வெளிவந்தது.

இப்படிப் பன்முக ஆளுமையைக் கொண்ட அற்புதக் கவிஞர்தான் வாலி அவர்கள்.

 

அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி

 

 

 

திரைக்கதம்பம் ( மே 2023 ) – சிறகு ரவி

கோஸ்டி

மார்ச் 17-ல் வெளியாகும் காஜல் அகர்வாலின் 'கோஸ்டி' | kajal agarwal Ghosty  movie releasing in theatres on March 17th - hindutamil.in

உண்மையில் பேய் படமே இல்லை..காட்டப்படுவதும் காமெடி பீஸ்கள்! ஆனாலும் சின்னச்சின்ன காமெடி காட்சிகளும் வசனங்களும் பொழுது போக பெரும் உதவி! காஜல் அகர்வால் ஃபிட் காவல் அதிகாரி ஆர்த்தியாக அழகு. பழம் பெரும் நடிகர்கள் கே எஸ் ரவிகுமார், சந்தானபாரதி போன்றோர் துணைக்கு வர, தவிர்க்க முடியாத யோகி பாபுவும் கிங்ஸ்லீயும் இதில் உண்டு! பெரிய நடிகர்கள் கூட காமெடிக்கு ஒத்துழைப்பது ஆரோக்கியமாக உள்ளது. ஊர்வசி பிச்சு உதறுகிறார். பார்த்து சிரிக்க வேண்டிய படம்! திரைக்கு வந்த சுவடே இல்லை. ஆனால் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

காமெடிப் படங்களுக்கு காமெடியன்கள் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது தமிழ் திரையுலகில். ஹாரர் காமெடி படம் என்று எடுக்கப்பட்ட இப்படம் பயமுறுத்தவும் இல்லை. விலா கிள்ளவும் இல்லை. இயக்குனர் கல்யாண் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் இது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ரசனையற்ற, இழுவையான காட்சிகள் கொண்ட படம் கடந்து போக வேண்டியது – நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்.

ஏன் இந்தப் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டார்? – டெக்கான் ஹெரால்ட்.

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி' படத்தின் டீசர் | Start Cut Action | Tamil cinema News | movie  reviews

சொல்ல வந்த கருவுக்கு உண்மையாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் இந்தப் படம் ஒரு முறை பார்க்கலாம் எனும் அந்தஸ்த்தைப் பெறுகிறது. குற்றம் நடக்கும் முன்பே தகவல் தெரிவிக்கும் அனாமதேய ஆசாமி யார்? அவனே தான் கொலைகாரனா எனும் ரீதியில் பல ஆங்கில கொரிய படங்கள் வந்தாலும் தமிழுக்கு இது புதுசு. அஜ்மலும் சத்யராஜும் நம்மை இருக்கையில் உட்கார வைக்கிறார்கள். புலனாய்வு திரில்லர்கள் சரியான திரைக்கதை இருந்தால் மட்டுமே கட்டிப் போடும். சில காட்சிகள் ரசிகனை ஒட்ட விடாமல் செய்வது இந்தப் படத்தின் குறை. ஆனாலும்..பார்க்கலாம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கெத்து காட்டிய அஜ்மல், அப்புறம் சத்து குறைவான படங்களில் நடித்து மறக்கப்பட்டார். சில படங்களில் நடித்து நடித்து டேக் ஆஃப் ஆகாத  ஜெய்வந்த், சிவாஜியின் பேரன் துஷ்யந்த்.. இந்த மூன்று நாயகர்களும் சேர்ந்து நடித்த படம். முட்டுக் கொடுக்க சத்யராஜ். படம் விடியலை காட்டுமா இந்த மூவர் கூட்டத்திற்கு? – தினமலர்.

 

குலசாமி

Kulasamy

வழி தவறிய ஆடு போல பார்வையாளனை கூட்டிக் கொண்டு போகும் வித்தையை மறந்து இலக்கில்லாமல் எடுக்கப்பட்ட படம். சகோதரிக்கு நடந்த அநீதி மற்ற எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று போராடும் விமல், காக்கும் குலசாமியாக மாறும் அரதப் பழசு கதை, நளினமோ நகாசோ இல்லாமல் எடுக்கப்பட்டு சோதிக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

விஜய் சேதுபதி வசனம் என்று பெரிதும் பேசப்பட்ட படம்,  ஓடு தளத்தை விட்டு டேக் ஆஃப் ஆகவே இல்லை. – சினிமா எக்ஸ்பிரஸ்.

நல்ல கலைஞர் விமலுக்கு வரிசையாக சறுக்கு மரம்!

முஷ்டி

Mushti - Promo 01 | ShortFlix | Kalesh - YouTube

ஷார்ட் ஃப்ளிக்ஸ் தளத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய சமீபத்தில் வெளியான குறும்படம். எண்பது நிமிடம் ஓடும் இந்தப் படத்தை முக்கால் பெரும் படம் என்று கூடச் சொல்லலாம். பட்ஜெட் கம்மி. நிசத்தை சொன்னால் இவ்வளவு கம்மியா என்று ஆச்சர்யப்படுவீர்கள். இன்னும் பத்து நிமிடம் நறுக்கி இருந்தால்..அதுவும் முன் பாதியில்..இன்னமும் கூட செமையாக இருந்திருக்கும்! நவீன உலகில் டி.ராஜேந்தர் தான் இதன் இயக்குனர் கலேஷ். நடிப்பு, கதை வசனம், இயக்கம், கேமரா, எடிட்டிங் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார். ஆனாலும் லிங்கா எனும் கதை நாயகனாகவே அவரே நடிக்காமல் அறிந்த நடிகர் உதாரணத்திற்கு விஜய் சேதுபதி போன்றவரை நடிக்க விட்டிருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்.

பீமா எனும் டெரர் தாதாவிற்கு நாலு தம்பிகள். முதல் இரண்டு பின் இரண்டைப் போட்டுத் தள்ளி விட, விரக்தியில் வனவாசம் போகும் பீமா திரும்பி வந்து என்ன செய்கிறார் என்பது ஒன் லைன்.

இன்னும் கூட இழுத்துப் பிடித்திருந்தால் விருதுக்கு சிபாரிசு செய்ய வேண்டிய படமாக ஆகியிருக்கும். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

குட் நைட்

Upcoming Tamil Movies In May 2023: மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் -  Platform Tamil

கணவன் குறட்டை விட்டால் தாம்பத்தியம் என்ன ஆகும் என்பது தான் இந்தப் படத்தின் ஒன்லைன். வித்தியாசமான கதைக்கருவுக்கு இயக்குனர் வினய் கே சந்திரசேகரனைப் பாராட்டலாம். இந்தக் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக்க முடியுமோ அவ்வளவுக்கு ஆக்கி இருக்கிறார்கள். சகஜ வசனங்களே அரங்கில் கைக்த்தட்டலையும் சிரிப்பையும் அறுவடை செய்கின்றன. சின்ன கதை மாந்தர்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க திரைக்கதை வெகு அருமை. நடித்த கலைஞர்களும் மலர்ந்த முகத்தோடு இருப்பது ஃபீல் குட் குணாம்சம். நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டனின் யதார்த்த நடிப்பும் வசன உச்சரிப்பும் ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டுகிறது.நாயகி மீத்தா ரகுநாதன் நடிக்கிறாரா என்று ஐயம் வருமளவுக்கு பாத்திரத்தில் வெகு பொருத்தம். நல்ல நடிகர் என்று பல படங்களில் அறியப்பட்ட ரமேஷ் திலக் இதில் உச்சம் தொட்டிருக்கிறார். ஷான் ரோல்டனின் இசை படத்தை பல இடங்களில் சுவை கூட்டுகிறது. – யூட்யூப் வலைப்பேச்சு.

ஒரு கலகலப்பான பொழுதுபோக்குப் படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது குட் நைட். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வாழ்க்கையின் சுவை வானத்தில் நடசத்திரமாக மணிகண்டன். – தி ஹிந்து.

இயக்குனர் வினாயக்கிற்கு பாராட்டுக்கள்..நல்ல கதையை எழுதியதற்கு மட்டுமல்ல! அதை வாசம் குறையாமல் திரையில் கொண்டு வந்ததற்கும் –  ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

சரியான நடிகர் தேர்வு. நல்ல திரைக்கதை. எப்பவாவது ஒரு கதையின் இதயம் சரியான இடத்தில் இருக்கும். இதில் இருக்கிறது. – இந்தியா டுடே.

 ராவணக் கோட்டம்

Upcoming Tamil Movies In May 2023: மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் -  Platform Tamilராமநாதபுரம் மாவட்டம் நீரின்றி கருவேலக்காடாக மாறியதை அழுத்தமாக சொல்ல வந்திருக்கிறார் இதன் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். முந்தைய படமான மதயானைக் கூட்டத்தில் யதார்த்த மனிதர்களைக் காட்டி இழுத்தவர் இதில் என்ன சொல்ல வருகிறார்?

சமூக அரசியலைப் பேச வந்த இயக்குனர் வழியில் திசையை தொலைத்து விட்டு அல்லாடி இருக்கிறார். சொல்ல வந்த விசயத்தின் உள்ளுக்குள் புகாமல், புதையாமல் மேலோட்டமாக மனித மனங்களின் தன்மையை அலசி விடுகிறது படம். அதனால் எங்கும் ஒரு முத்திரையை பதிக்க தவறிவிடுகிறது. சில சார்பு நிலைகளை எடுத்ததால், உச்சம் தொட வேண்டிய கதை வழுக்கி விழுகிறது. சாந்தனு பாக்யராஜ் தன் உழைப்பைக் கொட்டி இருக்கிறது. ஆனால் பலவீனமான திரைக்கதையும், காட்சிகளும் அவரை தோற்கடிக்கின்றன. பரியேறும் பெருமாளில் பார்த்த ஆனந்தியை மீண்டும் பார்க்கிறோம்..ஆனாலும் சோடையில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஃபர்ஹானா

Upcoming Tamil Movies In May 2023: மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் -  Platform Tamil

கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களை ஊக்க தொகை கிடைக்கும் எனும் பஞ்சு மிட்டாயைக் காட்டி பாலியல் தொழிலுக்கு இழுக்கும் முடிச்சு. ஐஸ்வர்யா ராஜேஷைப் பொருத்தவரை எப்போதுமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன் உழைப்பை மிச்சமில்லாமல் கொடுப்பவர். இதிலும் அப்படியே! ஆனாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக திரைக்கதை எழுதி இருக்கலாம்; சில நுண் தகவல்களை காட்சிப்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. பொழுது போகவில்லை என்றால் பார்க்கலாம் எனும் வகைப் படம் இது! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

சில இடங்களில் வேகத்தடைகள் இருந்தாலும் எட்ட வேண்டிய உயரத்தை எட்டுகிறது படம். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தன் படங்களில் எலி பூனை விளையாட்டை வெகு நேர்த்தியாக காட்டுவார். இதிலும் அப்படியே. ஐஸ்வர்யாவின் தேர்ந்த நடிப்பில் மர்ம முடிச்சு மெல்ல அவிழும் கட்டங்கள் அசத்தல். ஜஸ்டின் பிரபாகரனின் இசை இன்னொரு மகுடக்கல்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இறுக்கிக் கட்டப்பட்ட முடிச்சு. ஆனாலும் அது சொல்ல வந்த சேதியில் நிறைய குழப்பம். அற்புத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காப்பாற்றுகிறார் – இந்தியா டுடே.

ஒரு உரையாடல். அதைத் தொடர்ந்த சிறை. அதனால் ஏற்படும் அமைதியும் நெகிழ்வும்! இதுதான் ஃபர்ஹானா. – சினிமா எக்ஸ்பிரஸ்.

அருமையானா திரில்லர் – இந்தியா ஹெரால்ட்.

கஸ்டடி

கஸ்டடி - விமர்சனம் {2.75/5} - Custody Cinema Movie Review : கஸ்டடி - Lack  Of Security | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery  |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.

வெங்கட்பிரபு இயக்கம். நாகசைத்யன்யா நடித்த தெலுங்கு படம் தமிழ் பேசுகிறது. மருத்துவ ஊர்தி ஓட்டுனராக இருக்கும் கதை நாயகனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. தன் ஊர்தியில் இருக்கும் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்பதே ஒரே லட்சியம். ஒரு கைதியை இட்டுச் செல்லும் இக்கட்டான பொறுப்பு அவருக்கு வர என்ன செய்தார் என்பது ஒன்லைன். லேசாக லோகேஷின் கைதி வாடை அடிக்கிறதா? இது அதன் உல்டா தான்! இயக்குனரே ஒரு பேட்டியில் சொன்னது: மலையாள நையாட்டு படத்தின் ஈர்க்கப்பட்டு வேறு கோணத்தில் சிந்திக்கப்பட்ட கதை இது! எஸ்.ஆர் பிரபுவின் ஒளிப்பதிவு செமையாக இருக்கிறது. நடித்த அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியா மணி போன்றோர் தன் அனுபவத்தை ஊன்றுகோலாக்கி முன்னேறுகிறார்கள். ஆனால் திரைக்கதை சரியாக எழுதப்படாததால் யாரும் ஈர்க்கவில்லை. இளையராஜா-யுவன் கூட்டணியில் பாடல்களும் இசையும் உயரம் எட்டாமல் இருப்பது வெங்கட்பிரபுவின் படமா என்று யோசிக்க வைக்கிறது. முதல் பாதியில் தோன்றும் பின் பாதி பரபரப்பை உணர முடியாமல் செய்து விடுகிறது. இது ஒரு சராசரி படம் – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

ஊகிக்க கூடிய திருப்பங்கள். ஆனால் படம் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. சில சண்டை காட்சிகள் தெறிக்க விடுகின்றன. மொத்த படமும் நாக சைத்தன்யா, அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி தோள்களில். அவர்களும் முடிந்தவரை தாங்கி தூக்குகிறார்கள். ஸ்டண்ட் காட்சிகளோடு லேசான நெகிழும் தருணங்கள் இருக்கும் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் உங்களுக்கு இது சரியான லாக்கப்!- டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மோதலும் ஹூயூமரும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட நெல்லை பழரசன் கஸ்டடி. வெங்கட் பிரபுவின் சிறந்த  படம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலரும் பார்க்க விரும்பக்கூடிய படம். சென்னை 28 போல அமரர் ஊர்தியை சுப விசேஷங்களுக்கு ஓட்டிச் செல்லும் ஒரு குடும்பம். தெலுங்குக்கு புதுசு. தமிழுக்கு அல்ல! – தி ஹிந்து.

ஹூயூமரா? இல்லை உச்ச நட்சத்திரத்திற்கான தீனியா என்று  அல்லாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. கடைசி காட்சியில் எதிர்பாராமல் ஒரு நட்பு நட்சத்திரத்தை உள்ளே நுழைப்பது வெங்கட் பிரபுவின் ஃபார்முலா. இதிலும் உண்டு. ஆனால் அது வரவேற்பு செண்டா? – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

கதையில் உபகதைகள் அதிகம். ஆனால் அவை சுவையா உபாதையா? கதையின் உண்மை கருவை பாதியில் தொலைத்து விட்டு வழி தவறிவிடுகிறது படம். அதிக கொழுப்பை நீக்கி விட்டு சிக்ஸ் பேக் ஆக்கி இருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

பிச்சைக்காரன் 2

Pichaikkaran 2 (2023) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

ஆபத்தை அறியாமல் மூளை மாற்று சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ளும் சாமானியன், தன்னுள் விதைக்கப்பட்ட பணக்காரனின் மூளையால் படும் அவஸ்தை தான் பிச்சைக்காரன் 2. நெகிழ வைக்கும் கையொலி பெற வைக்கும் தருணங்கள் முதல் பாகத்தைப் போலவே உண்டு என்றாலும், அவை குறைவான அளவில் இருப்பது குறை. எடுத்துக் கொண்ட கதை மூளை மாற்று என்பதால் நம்ப முடியாத சில காட்சிகள், ரசிகனை படத்தை விட்டு விலக வைக்கின்றன. விஜய் ஆன்டனி வழக்கம்போல நடிக்கவில்லை. ஆனாலும் எடிட்டிங்கில் நறுக்காக செயல்பட்டிருக்கிறார். படத்தின் உயர் ரசனை அழகியல் நம்மை இருக்கையில் உட்கார வைக்கிறது. காவ்யா தப்பார் தமிழ் திரைக்கு நல்ல வரவு. கொடுத்த பாத்திரம் நசுங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு சராசரி திரைப்படம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வழக்கமான பார்முலாவின்படி எடுக்கப்பட்ட சராசரி படம். இது பிச்சைக்காரன் 1ன் தொடர்ச்சி அல்ல. தனியொருவன் – இந்தியா ஹெரால்ட்.

எடிட்டிங்கில் பட்டையைக் கிளப்பும் விஜய் ஆண்டனி, சண்டைக்காட்சிகளில் தெறிக்க விடுகிறார். படத்தின் குறை ஒன்று தான்! நல்ல பரபரப்பான காட்சிகளுக்கு நடுவில் காதலையோ உணர்வு பூர்வமான தருணங்களையோ நுழைத்தது தான். ஓடிடி தளத்தில் வந்திருந்தால் குடும்பங்களே கொண்டாடி இருக்கும். திரை அரங்குக்கு பேச்சுலர் வருகை தான்! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்: காதலன் கொலை; போலீஸ் காதலி; இன்வெஸ்டிகேட்டிவ்  த்ரில்லர் ஈர்க்கிறதா? 'Maruthi Nagar Police Station movie review - Vikatan

ஆஹா ஓடிடியில் வெளியான படம். தன்னுடைய நண்பனுடைய மரணத்திற்கு காரணமாக இருந்த நபர்களை திட்டம் போட்டு, கொல்ல எண்ணும் கதை நாயகி. இதன் இயக்குனர் தயாள் பத்மநாபனின் கொன்றால் பாவம் எனும் முந்தைய படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் தான் இதிலும் நாயகி. சின்னச் சின்ன முடிச்சுகளைப் போட்டு மர்மத்தை விதைத்து அதை புத்திசாலித்தனமாக அவிழ்த்த விதத்தில் இயக்குனரும் எடிட்டரும் கை  கோர்க்கிறாகள். வரலட்சுமி, ஆரவ் கதாபாத்திரங்கள் மிக நுணுக்கமாக எழுதப்பட்ட விதத்தில் ஈர்க்கின்றன. நிச்சயமாக திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் – ஃபில்மி கிராஃப் அருண்.

எழுதியதை திரையில் காட்சியாகக் கொண்டு வரத் தவறி விட்டார் இயக்குனர் தயாள் பத்மநாபன். திருப்பங்கள் முடிச்சுகளும் எந்த ஒரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. – இந்தியா டுடே.

எடிட்டிங் எனும் பெயரில் கசாப்பு கத்தி போட்டதில், பொறுமையை சோதிக்கிறது படம். – தி ஹிந்து.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடுத்த என்ன செய்யப் போகிறார் வரலட்சுமி என்று தெரிந்து விடுகிறது. பாத்திர வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி நமக்கு கிடைத்திருக்கும். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

நடுவாந்தர திரில்லர் நமக்கு வேலை வைக்காமல் எல்லா மர்மத்தையும் அவசரமாக அவிழ்த்து விட்டு நம்மை அலுப்பாக்கி விடுகிறது. – ஃபிலிம் கம்பானியன்.

நிறைய மர்ம முடிச்சுகள் இருக்குத்தான்..ஆனால் எதுவும் நம்மைக் கவர தவறிவிடுகிறதே – சினிமா எக்ஸ்பிரஸ்.

 

யாதும் ஊரே யாவரும் கேளீர்

yaadhum oore yaavarum kelir

விஜய் சேதுபதி, மேகா  ஆகாஷ், மொகன் ராஜா நடித்த படம் பெட்டிப் பாம்பாகக் கிடந்தது. இப்போது படம் காட்ட வந்திருக்கிறது. சரியான செய்தியை சரியான தருணத்தில் சொல்ல வந்திருக்கும் படம், சொன்ன விதத்தில் குறைப் பிரசவமாக மாறி இருக்கிறது. நோக்கம் சரிதான். ஆனா தாக்கம் காணலியே! விஜய் சேதுபதியின் உழைப்பு சரியற்ற திட்டமிடலால் விழலுக்குப் போகிறது. கனிகா, மேகா ஆகாஷ், அமரர் விவேக் போன்றவர்கள் பாத்திரங்களை மின்ன வைத்திருக்கிறார்கள். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சரியான கேள்விகளை கேட்கிறது படம். தீர்வு சொன்ன விதத்தில் தான் குழப்பம். – சினிமா எக்ஸ்பிரஸ்.

கடமைக்கு நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒப்பனை சிகை அவருக்கு சரியாக ஒட்டவில்லை. ஒரு குறிக்கோளுடன் வரும் புனிதன் அதை விட்டு மேகா ஆகாஷைக் காதலிப்பது படத்தை தடம் புரள வைக்கிறது. – தினமலர்.

 

காதல்  ஒரு பலாப்பழ மர்மம்

Kathal Review: பலாப்பழத்தை வைத்து இப்படியொரு அரசியல் படமா? வீட்டிலேயே  ஜாலியா பார்த்து ரசிக்கலாம்! | Kathal Review in Tamil: A Fun filled  Political Satire in Netflix - Tamil Filmibeat

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் தமிழ் பேசும் இந்திப் படம். கிரேசி மோகன் சீரியல் போல் இருக்கிறது. நடித்த யாரும் பிரபலமில்லை..விஜய் ராஸைத் தவிர. சான்யா மல்ஹோத்ரா மஹிமா  இன்ஸ்பெக்டராக பலாவை தேடி பலப்பல துப்பறிதலை மேற்கொள்ள, காவலர் சௌரப் எனும் அனந்த் ஜோஷி உதவும் நடுவில் காதலும் புரிய என்னாச்சு பலாவுக்கு என்பது ஒன்லைன்! இடையில் கீழ் சாதி அதிகாரி, மேல் சாதி காவலர் எனும் சிக்கல் வேறு! வசனம் எழுதியவர் நகைச்சுவையை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. எதுவும் இல்லையென்றால் ரெண்டு சுளையை கடிக்கலாம்!

 

 

 

தீராக்காதல்

தீராக்காதல் திரைவிமர்சனம் : தீராக் காதல் என்றுமே புகைந்து கொண்டிருக்கும்  காவியக்காதல். ​| ரேட்டிங்: 3.5/5 - Kalaipoonga

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ஸ்விதா நடித்து ரோஹின் வெங்கடேசன் இயக்கிய படம் எப்படி இருக்கு? நம்ம ஃபிலிம் கிராஃப்ட் அருணைக் கேப்போம்! திருமணமாகி மனைவி குழந்தையுடன் வாழும் கதை நாயகன், மங்களூர் ரயில் நிலையத்தில் சந்திக்கும் கல்லூரிக் காதலி. பட்டுப் போன காதல் துளிர்த்ததா? இம்மாதிரிக் காதல் கதைகளில் காட்சிகளும் இசையும் கைக்கோர்க்க வேண்டும். இதில் கெட்டியாக கோர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் சித்துவின் இசையும் என்றால் மிகையில்லை. ஐஸ்வர்யாவுடனான கல்லூரிக் காதல் எங்கேயும் காட்சிகளின் மூலம் சொல்லப்படவில்லை என்பது தான் இதன் குறை. அதனால் நெருக்கத்தை இழக்கிறான் ரசிகன். அதனால் சில்லுனு ஒரு காதலாக அல்லாமல் லேசா சூடடிக்கிறது படம்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிகம் கீறவில்லை என்றாலும் இன்னும் இதயத்தை தொட்டிருக்கலாம். ஆரண்யா, அஞ்சனா, கவுதம் பாத்திரங்கள் சரியாக எழுதப்படவில்லையோ? அல்லது எழுதியதை திரைக்கு கொண்டு வருவதில் சிக்கலோ?

தி ஹிந்து தமிழ் இப்படி போடுகிறது! நல்ல பங்களிப்பு மூவரிடமிருந்து. ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்படவில்லை! ஒரு அலுப்பான காதல் கதை!

தினமலர் சொல்வது இதுதான்! ஏற்கனவே பார்த்த படங்களின் காட்சிகள் மனக்கண்ணில் ஓட, ஐஸ்வர்யாவுக்கு அதிக ஆதிக்கம் கொடுத்ததால் கதை சறுக்கி விட்டது. தீராக்க்காதல் -ஆறாக்காதல்!

கழுவேத்தி மூர்க்கன்

May 2023 Tamil Movies (2023 மே மாத தமிழ் திரைப்படங்கள்): வெளியீட்டு தேதி  மற்றும் முழு விவரங்கள் - FilmiBeat

 அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பு. இயக்கம் சை. கௌதம்ராஜ். சமீபத்தில் வந்த சாந்தனு நடித்த ராவணக்கோட்டம் கதையும் இதுதான். மேல், கீழ் சமூகங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி. இதில் வசனங்கள் தெறிப்பு. சாம்பிளுக்கு ஒண்ணு!”இதப்பாரு! இங்க மீசை வச்சிக்கணும்னா கூட நீ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேந்தவனா இருக்கணும் தம்பி!” டி இமானின் பாடல்கள் மென் வருடல். குறிப்பாக செந்தாமரை..செந்தாமரை பாடல்! அருள்நிதி இடையிடையே ஹாரர் திரில்லரை விட்டு இம்மாதிரி கிராமியப் படங்களில் நடித்து தன் பங்கை சரியாக நிறைவேற்றி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவருவதற்காக எடுத்த படம்.. அவர்களுக்கு பிடிக்கும் என்பது ஃபிலிமி கிராஃப்ட் அருணின் சிபாரிசு.

த்ரில்லரும் அருள்நிதியும்’ என ஒரு புத்தகமே போடும் அளவுக்கு த்ரில்லருடன் ஒட்டியிருந்தவரை பிரித்து அவருக்கு ‘மீண்டும்’ கிராமத்து முகம் கொடுத்திருக்கிறது இப்படம். முறுக்கு மீசை, மடித்துக்கட்டிய வேட்டி, இழுத்து பேசும் வட்டாரமொழி, கன்னத்தை ஆட வைக்கும் ஆக்ரோஷம் என அசல் ராமநாதபுரத்துக்கார இளைஞராக மிரட்டுகிறார். குறிப்பாக சந்தோஷ் பிரதாப்பின் அம்மாவிடம் அழும் காட்சி ஒன்றில் களங்க வைக்கிறார். இது தமிழ் ஹிந்துவின் தீர்ப்பு!

நல்ல திரைக்கதை; அழுத்தமான நடிப்பு; பார்வையாளரை இருக்க வைக்கும் இயக்கம்! இது டைம்ஸ் ஆஃப் இந்தியா!

காசேதான் கடவுளடா

May 2023 Tamil Movies (2023 மே மாத தமிழ் திரைப்படங்கள்): வெளியீட்டு தேதி  மற்றும் முழு விவரங்கள் - FilmiBeat

 1972 வந்த காமெடி கார்னிவலை முறையாக மறுபதிப்பு வெளியிட்டிருக்கிறார் ரீமேக் கிங் ஆர்.கண்ணன், கடைசியில் மான்யம் மறுக்கப்பட்ட ராஜாவாக ஆகி விட்டார்! முக்கியமாக பல காட்சிகளில் சிரிப்பே வரவில்லை. தயாரிப்பாளர் சொந்த செலவில் விலா கிள்ள யாரையாவது நியமித்திருக்கலாம். நடித்த மிர்ச்சி சிவா, கருணாகரன், யோகிபாபு, பிரியா ஆனந்த் போன்றோருக்கே படத்தின் மீது நம்பிக்கையில்லை என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. பலருக்கும் உதடும் குரலும் ஒட்டாத லிப் சிங்க்! காப்பாற்றுவது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு மட்டுமே! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

 

அயல்வாஷி ( மலையாளம் / தமிழ் )

AyalVaashi | അയൽവാശി (2023) - Mallu Release | Watch Malayalam Full Movies

மெல்லிய கதையும் நோக்கமில்லாத திரைக்கதையும் இதை ரசிக்க விடவில்லை! தலைப்பில் சுட்டப்படும் நகைச்சுவை, படத்தில் கோட்டை விடப்பட்டுள்ளது, சௌபின் ஷாஹிர் இருந்தும்! -தி ஹிந்து.

முதல் பாதி வெகு சுமார். இரண்டாம் பாதியில் தேவையான சுவாரஸ்யம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஒரு விசேஷத்தில் துபாய் ரிட்டர்ன் பென்னியின் வாகனத்தை எடுத்துப் போய் கீறல் விழ வைத்தது யார் எனும் சின்ன முடிச்சு. மெனக்கெட்டு சிரிப்பை வரவழைக்கு முயல்கிறார் இயக்குனர் இஷாத் பராரி.. நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை! இலக்கில்லாத காமெடி மூங்கில்களால் கட்டப்பட்ட சிதில கோட்டை – லென்ஸ்மென்.

 

விருப்பாக்ஷா ( தமிழ் / தெலுங்கு)

Virupaksha Teaser - Tamil | Sai Dharam Tej | Samyuktha | Sukumar B |  Karthik Dandu - YouTube

அமானுஷ்யம் கலந்த அக்மார்க் தெலுங்கு ஹாரர் படம். கதைகளால் ஈர்த்த சுகுமாரனின் கைவண்ணம். கதை நாயகி நந்தினியாக நடித்த சம்யுக்தா மேனன் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது இந்தப் படம்.

நவீன தொழில் நுட்பத்தில் சிறந்த கட்டிப்போடும் அமானுஷ்ய ஹாரர் படம் என்கிறது 123 தெலுகு.காம் இறுக்க முடிச்சுகள் கொண்ட திரில்லர் படம் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வாக்கு! வித்தை காட்டாமல் பீதியை விதைக்கிறது விருப்பாக்ஷா – தி ஹிந்து! முதலிலேயே ஒரு படிமத்தை உருவாக்கி அதன் மேல் அடுக்கடுக்காக பயத்தை கட்டியிருக்கிறது படம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

 

இராமலிங்க அடிகளின் மனுமுறை கண்ட வாசகம் மற்றும் “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்

VALLALAR: மனு முறைகண்ட வாசகம்இராமலிங்க அடிகள் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலை 1854 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலில் மனுநீதிச் சோழன் முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். அது நீதியையும், வள்ளலார் காலத்து நெறிமுறைகளையும் அழகாக எளிய செய்யுளில் அமைந்து நம்மை நெறிபடுதுகிறது.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
Routemybook - Buy Thirukkolur Penpillai Ragasiyam [திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம்] by Venusinivasan [வேணுசீனிவாசன்] Online at Lowest Price in India

“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்” அடியார் ஆசாரியருக்குக் கூறியது. திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க எம்பெருமான் இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி.

அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’

http://thirukkolur.blogspot.com/2016/10/

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ

அக்ரூரரைப் போலே

2. அகம் ஒழித்து விட்டேனோ

விதுரரைப் போலே

3. தேகத்தை விட்டேனோ

ரிஷி பத்தினியைப் போலே

4. தசமுகனைக் செற்றேனோ

பிராட்டியைப் போலே

5. பிணம் எழுப்பி விட்டேனோ

தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்து இட்டேனோ

கண்டாகர்ணனைப் போலே

7. தாய்க்கோலம் செய்தேனோ

அநுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ

துருவனைப் போலே

9. மூன்றெழுத்து சொன்னேனோ

கந்திரபந்துவைப் போலே

10. முதல் அடியைப் பெற்றேனோ

அகலிகையைப் போலே

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ

ஆண்டாளைப் போலே

12. எம் பெருமான் என்றேனோ

பட்டர்பிரானைப் போலே

13. ஆராய்ந்து விட்டேனோ

திருமழிசையார் போலே

14. அவன் சிறியன் என்றேனோ

ஆழ்வாரைப் போலே

15. ஏதேனும் என்றேனோ

குலசேகரர் போலே

16. யான் சத்யம் என்றேனோ

கிருஷ்ணனைப் போலே

17. அடையாளம் சொன்னேனோ

கபந்தனைப் போலே

18. அந்தரங்கம் சொன்னேனோ

திரிசடையைப் போலே

19. அவன் தெய்வம் என்றேனோ

மண்டோதரியைப் போலே

20. அஹம் வேத்மி என்றேனோ

விசுவாமித்திரரைப் போலே

21. தேவு மற்று அறிவேனோ

மதுரகவியார் போலே

22. தெய்வத்தைப் பெற்றேனோ

தேவகியாரைப் போலே

23. ஆழிமறை என்றேனோ

வாசுதேவரைப் போலே

24. ஆயனை வளர்த்தேனோ

யசோதையாரைப் போலே

25. அநுயாத்திரை செய்தேனோ

அணிலங்களைப் போலே

26. அவல்பொரியை ஈந்தேனோ

குசேலரைப் போலே

27. ஆயுதங்கள் ஈந்தேனோ

அகத்தியனைப் போலே

28. அந்தரங்கம் புக்கேனோ

சஞ்சயனைப் போலே

29. கர்மத்தால் பெற்றேனோ

சனகரைப் போலே

30. கடித்து அவனைப் பெற்றேனோ

திருமங்கையார் போலே

31. குடைமுதலானது ஆனேனோ

அனந்தாழ்வான் போலே

32. கொண்டு திரிந்தேனோ

திருவடியைப் போலே

33. இளைப்பு விடாய்த் தீர்த்தேனோ

நம்பாடுவான் போலே

34. இடைகழியே கண்டேனோ

முதலாழ்வார்களைப் போலே

35. இருமன்னர் பெற்றேனோ

வால்மீகரைப் போலே

36. இருமாலை ஈந்தேனோ

தொண்டரடிப் பொடியார் போலே

37. அவன் உரைக்கப் பெற்றேனோ

திருக்கச்சியார் போலே

38. அவன் மேனி ஆனேனோ

திருப்பாணரைப் போலே

39. அனுப்பி வையும் என்றேனோ

வசிட்டரைப் போலே

40. அடிவாங்கினேனோ

கொங்குப் பிராட்டியைப் போலே

41. மண் பூவை இட்டேனோ

குருவ நம்பியைப் போலே

42. மூலம் என்று அழைத்தேனோ

கஜராசனைப் போலே

43. பூசக் கொடுத்தேனோ

கூனியைப் போலே

44. பூவைக் கொடுத்தேனோ

மாலாகாரரைப் போலே

45. வைத்த இடத்து இருந்தேனோ

பரதனைப் போலே

46. வழி அடிமை செய்தேனோ

இலக்குமணனைப் போலே

47. அக்கரைக்கே விட்டேனோ

குகப்பெருமானைப் போலே

48. அரக்கனுடன் பொருதேனோ

பெரிய உடையாரைப் போலே

49. இக்கரைக்கே சென்றேனோ

விபீடணரைப் போலே

50. இனியது ஒன்று வைத்தேனோ

சபரியைப் போலே

51. இங்கும் உண்டு என்றேனோ

பிரகலாதனைப் போலே

52. இங்கில்லை என்றேனோ

ததிபாண்டனைப் போலே

53. காட்டுக்குப் போனேனோ

பெருமானைப் போலே

54. கண்டு வந்தேன் என்றேனோ

திருவடியைப் போலே

55. இருகையும் விட்டேனோ

திரௌபதியைப் போலே

56. இங்குப் பால் பொங்கும் என்றேனோ

வடுக நம்பியைப் போலே

57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப்

பிள்ளையைப் போலே

58. நில்என்று பெற்றேனோ

இளையாற்றுக்குடி நம்பியைப் போலே

59. நெடுந்தூரம் போனேனோ

நாதமுனியைப் போலே

60. அவன் போனான் என்றேனோ

மாருதியாண்டான் போலே

61. அவன் வேண்டா என்றேனோ

ஆழ்வானைப் போலே

62. அத்வைதம் வென்றேனோ

எம்பெருமானாரைப் போலே

63. அருள் ஆழம் கண்டேனோ

நல்லானைப் போலே

64. அனந்தபுரம் புக்கேனோ

ஆளவந்தாரைப் போலே

65. ஆரியனைப் பிரிந்தேனோ

தெய்வ வாரியாண்டானைப் போலே

66. அந்தாதி சொன்னேனோ

அமுதனாரைப் போலே

67. அநுகூலம் சொன்னேனோ

மாலியவானைப் போலே

68. கள்வன் இவன் என்றேனோ

லோககுருவைப் போலே

69. கடலோசை என்றேனோ

பெரிய நம்பியாரைப் போலே

70. சுற்றிக் கிடந்தேனோ

திருமாலை யாண்டான் போலே

71. சூளுறவு கொண்டேனோ

திருக்கோட்டியூரார் போலே

72. உயிராய பெற்றேனோ

ஊமையைப் போலே

73. உடம்பை வெறுத்தேனோ

திருநரையூராரைப் போலே

74. என்னைப் போல் என்றேனோ

உபரிசரனைப் போலே

75. யான் சிறியன் என்றேனோ

திருமலை நம்பியைப் போலே

76. நீரில் குதித்தேனோ

கணபுரத்தாளைப் போலே

77. நீருகம் கொண்டேனோ

காசி சிங்கனைப் போலே

78. வாக்கினால் வென்றேனோ

பட்டரைப் போலே

79. வாயில் கை விட்டேனோ

எம்பாரைப் போலே

80. தோள்காட்டி வந்தேனோ

பட்டரைப் போலே

81. துறைவேறு செய்தேனோ

பகவரைப் போலே

*உயிர்வாழும் உரிமை எமக்கில்லையா?* – ராம்சு

கறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க -(Maadu vaangumpothu kavanika vendiyavai) ~ இயற்கை விவசாயம்

உயிர்வாழும் பொது உரிமை எமக்கில்லையா? – மனிதர்
பசியாறப் பலவழிகள் பாரில் இருக்கையிலே!

தன்னுடல் தனை வளர்க்க
மன்னுயிர் கொல்லுதல்
என்னவிதம் நியாயம்?
எண்ணிப்பார் மனிதா!

அன்னையர் போல் தினமும்
அரும்பசிக்குப் பாலமுதம்
தந்தவரை நன்றியின்றி
கொன்றுதின்ன மனம்வருமோ?

மண்ணுழுது நீரிரைத்து
மணியுதிரப் போரடித்து
வண்டியிழுத்ததற்கு
வலிகூலி இதுதானோ?

பால்பெருக்க மருந்தூசி!
மடிகறக்க மின்கருவி!
குளிர்பதனம் செய்தவிந்து!
வேதனைதான் எம்வாழ்வோ?

உரோமம், கொம்பு, புனுகு,
சருமம், தந்தம் இன்னும்
பறிக்காமல் விட்ட மீதம்
ஏதேனும் உள்ளதுவோ?

பட்டிழை கூட்டும் புழுக்கள்
பருமுத்துச் சிப்பிகளாய்
கொன்றுபட்ட உயிரினங்கள்
கோடானு கோடியன்றோ?

சுயநல வேட்கையினால்
இனம்பல அழித்துவிட்டீர்!
பரிசோதனைக் கூடமதில்

பிராணிவதை செய்கின்றீர்!

இயற்கை உரமாய் எங்கள்
கழிவினின்று பயன்பெற்றும்
பால்சுரத்தல் நின்றுவிட்டால்
அடிமாடா யாக்குவதேன்?

மகரந்தம் மலர் சேர்த்து
மகசூல் தரும் தேனீக்கள்
சேகரம் செய்த தேனை
கவர்ந்துண்ணல் சரிதானோ?

காட்டு வாசிகளாய் முன்னர்
வேட்டையாடி ஊன் உண்ணக்
கற்றுத் தந்ததே முதலில்
வனவிலங்கு தானென்றால்

உழுது பயிர் விளைவித்து
உண்ணும்முறை அறிந்தபின்
ஊனுண்ணல் ஆறறிவின்
பரிணாம வளர்ச்சியோ?

மாட்டுப் பொங்கலிட்டு
வழிபட்டால் ஆயிற்றோ?
மனதில் சற்றே ஈரம்,
கனிவேதும் வேண்டாமோ?

கொன்றவரின் பாவம்
தின்றால் தீருமெனில்,
தின்பவ ரெல்லோரும்
கொன்றேதான் தின்றாரோ?

பிராணிகளை இறைவன்
வாகனமாய்க் கொண்டதுவும்
கருணையுடன் எமது குலம்
காப்பதற் கேயன்றோ?

உயிரினம் ஒவ்வொன்றும்
இறைவனின் படைப்பென்னும்
உண்மையை மதியா மனிதர்
மதம்பிடித் தாடுவதோ?

உடல்தேய உழைத்துதவும்
பிராணிக ளெலாம் தத்தம்
கடமைகளை நிறுத்திவிடின்
உம்நிலைமை என்னாகும்?

ஊனுண்டு உடல்வளர்த்தும்
நோய்கொண்டு போமென
கரோனா காண்பித்தும்
கருணைகொள்ள மாட்டீரோ?

ஜீவகா ருண்யம்போதித்த
புத்த சமண சைவர்முதல்
அருட்சோதி வள்ளல் வரை
வாழ்ந்திருந்த நாடிதுவே!

பிராணிகளின் சார்பில்
பசுநான் இறைஞ்சுகிறேன் எம்
உழைப்பை மதித்தேனும்

உயிர்ப்பிச்சை தந்திடுவீர்!

 

 

வங்கிக் கணக்கு- மனோகர் மைசூரு

 

 

கருப்பைய்யா அய்யாவா! ஐய்யோ வடிவேலு மரண காமெடி!! Phone காமெடி அன்பு - YouTubeஹலோ? சார், ராமசாமி அவங்களா?

ஆமா, பேரு ராமசாமி. ஆனா நான் சாமி எல்லாம் கிடையாது.  உங்களுக்கு என்ன வேணும்?

உங்க வயசு?

இப்போ அம்பது. ஒரு வருஷம் கழிச்சி 51 ஆயிடும்.

உங்க எடை?

சாப்பிடும் முன் 55 கிலோ. சாப்பிட்டப் பின் 55.5 கிலோ..

மஞ்ச காமாலை, HIV இருக்கா ?

அதெல்லாம் ஒன்னும் எங்கிட்ட இல்லிங்க. கொடுத்தாலும் வேணாங்க.

 அப்போ , நீங்க நார்மலா ஆரோக்கியமா இருக்கீங்க?

நீங்க இந்த மாதிரி  அசட்டுத்தனமா கேட்டிங்கன்னா இருக்கிற ஹெல்த்தும் போயிடும்!

சரிங்க, கோவிச்சுக்காதீங்க!. உங்க சொந்த ஊர்?

எனக்கு சொந்தமா ஊரெல்லாம் கிடையாது. சின்னதா பொட்டிக்கடை மாதிரி ஒரு வீடு இருக்கு.  அவ்வளவு தான்.

ரொம்ப ஜோக்கா பேசறீங்க!. ரொம்ப டென்ஷன் ஆவாதிங்க !. சரிங்க, உங்களை ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். நாளைக்கு காலையிலே 10 மணிக்கு ரோட்டரி ஸ்கூலுக்கு வந்துடுங்க. நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்களுக்கு சான்றிதழ் கூட  கொடுப்பாங்க.

யோவ், எதுக்கு இவ்வளவு விவரம் கேக்கரிங்க? கிரெடிட் கார்டா? LIC பாலிசியா ? அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்!

சார், மண் இல்லாம ஒரு விளைச்சலும் இருக்காது. நாம சாப்பிடவும் முடியாது. வாழவே முடியாது.

என்ன, என்கிட்டேயே ஜோக் அடிக்கிறீங்க? போலீசில் கம்பிளைன்ட்   கொடுப்பேன்.

சார், கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார். நான் உங்களை எங்க இரத்த வங்கியில் தான் ரெஜிஸ்டர் பண்றேன். உங்களுக்கு இரத்த தானம் செய்ய தகுதி இருக்கான்னு தெரிஞ்சிக்க தான் இவ்வளவு விவரம் கேட்டேன். இது நீங்க நினைக்கிற மாதிரி வங்கி எல்லாம் கிடையாது. சார், கேக்குதா. ஹலோ?

 

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

ஒட்டுக் கேட்டது

கணவன்‌ - மனைவி சண்டை போட வேண்டுமா... | Should husband and wife fight

இது நடந்தது அமெரிக்காவில் வசிக்கும் என் மகளைப் பார்க்க நியூ ஜெர்சி சென்று இருந்த பொழுது.

இன்று நான் அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு தமிழ்பேசும் தம்பதியர்.

பகலில் பக்கம் பார்த்து பேசு என பெரியவர்கள் யாரும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை போலும்.கண்களையும் வாயையும் மூடுவதற்கு ‘ஷட்டர்’கள் கொடுத்த இறைவன் காதுகளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.

எனவே ஒட்டுக்கேட்டது என் தவறு இல்லை, நான்கேட்கும்படி பேசியது அவர்கள் தவறு. கீழே அவர்களது உறையாடல்:

கணவன்: ஏண்டா, அவனுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா?

மனைவி: கிடைக்கலீங்க. செப்டம்பர் முதல் வாரம்தான் ஒரு ஸ்லாட் இருக்காம்.

கணவன்: ஆகஸ்டோட ஒரு வருஷம முடிஞ்சிடுமே. வேறு நல்ல இடம் இல்லையா.

மனைவி: வேற எங்க போனாலும் அவனுக்கு ஒத்துக்காதுங்க. ஏப்ரல் மாதம் போனோமே அங்க வேண்டும் என்றால் போகலாங்க. அங்க general checkup செய்வார்கள்.ஆனால் எண்பது மைல் போகனும் காசும் இருநூரு டாலர் வாங்கிடுவாங்க.

கணவன்: இந்த விஷயத்தில் காசு எல்லாம் பார்க்க முடியாது. அடுத்த வாரம் ஸ்லாட் கிடைக்குமான்னு பாரு. நான் லீவு போட்டு விடுகிறேன்.

மனைவி: ஏங்க போன வாரம், எங்க அம்மாவை கோயிலுக்கு கூட்டி போக லீவு போட முடியாதுன்னு சொன்னீங்க.

கணவன்: கோவிலுக்கு ஞாயிறு அன்றுகூடப் போகலாம். இவனை அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறப்பதானே கூட்டிக்கிட்டு  போக முடியும். அவன் வருகிறான். மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு இருக்காதே. Mood out ஆகி விடுவான்.

நானும் கஷ்டப்பட்டு திரும்பி அந்த பாக்கியசாலி பையனை பார்த்தேன்.

வந்து நின்றது ஒரு அடி உயரத்தில் ஒரு நாய்.

 

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

99 வகை சங்ககால மலர்கள் | 99 Flowers Name in Tamilஅரும்பு – அரும்பும் (தோன்றும்) நிலை
நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை – நனை முத்தாகும் நிலை
மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் – மலரும் பூ
பூ – பூத்த மலர்
வீ – உதிரும் பூ
பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)

அ வரிசை
1. அடும்பு 73
2. அதிரல் 39
3. அவரை – நெடுங்கொடி அவரை 75
4. அனிச்சம் 3
5. ஆத்தி – அமர் ஆத்தி 74
6. ஆம்பல் 2
7. ஆரம் 91
8. ஆவிரை – விரிமலர் ஆவிரை 27
9. இருள்நாறி – நள்ளிருள் நாறி 96
10. இலவம் 71
11. ஈங்கை 70
12. உந்தூழ் – உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 10
13. எருவை 18
14. எறுழம் – எரிபுரை எறுழம் 12
க வரிசை
15. கண்ணி – குறு நறுங் கண்ணி 31
16. கரந்தை மலர் 41
17. கருவிளை – மணிப்பூங் கருவிளை 20
18. காஞ்சி 65
19. காந்தள் – ஒண்செங் காந்தள் 1
20. காயா – பல்லிணர்க் காயா 26
21. காழ்வை 92
22. குடசம் – வான் பூங் குடசம் 17
23. குரலி – சிறு செங்குரலி 61
24. குரவம் – பல்லிணர்க் குரவம் 23
25. குருக்கத்தி – பைங் குருக்கத்தி 90
26. குருகிலை (குருகு இலை) 32
27. குருந்தம் (மலர்) – மாயிருங் குருந்தம் 97
28. குவளை (மலர்) – தண்கயக் குவளை 4
29. குளவி (மலர்) 42
30. குறிஞ்சி 5
31. கூவிரம் 14
32. கூவிளம் 11
33. கைதை 63
34. கொகுடி – நறுந்தண் கொகுடி 58
35. கொன்றை – தூங்கு இணர்க் கொன்றை 72
36. கோங்கம் – விரிபூங் கோங்கம் 34
37. கோடல் 62
ச வரிசை
38. சண்பகம் – பெருந்தண் சண்பகம் 40
39. சிந்து (மலர்) (சிந்துவாரம்) 81
40. சுள்ளி மலர் 13
41. சூரல் 29
42. செங்கோடு (மலர்) 7
43. செம்மல் 60
44. செருந்தி 38
45. செருவிளை 19
46. சேடல் 59
ஞ வரிசை
47. ஞாழல் 56
த வரிசை
48. தணக்கம் (மரம்) – பல்பூந் தணக்கம் 69
49. தளவம் 54
50. தாமரை – முள் தாள் தாமரை 55
51. தாழை மலர் 53
52. திலகம் (மலர்) 36
53. தில்லை (மலர்) – கடி கமழ் கடிமாத் தில்லை 44
54. தும்பை 82
55. துழாஅய் 83
56. தோன்றி (மலர்) – சுடர் பூந் தோன்றி 84
ந வரிசை
57. நந்தி (மலர்) 85
58. நரந்தம் 94
59. நறவம் 86
60. நாகம் (புன்னாக மலர்) 87
61. நாகம் (மலர்) 95
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 52
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 66
64 நள்ளிருணாறி 96
ப வரிசை
64. பகன்றை 76
65. பசும்பிடி 24
66. பயினி 21
67. பலாசம் 77
68. பாங்கர் (மலர்) 67
69. பாதிரி – தேங்கமழ் பாதிரி 37
70. பாரம் (மலர்) 88
71. பாலை (மலர்) 45
72. பிடவம் 48
73. பிண்டி – பல் பூம் பிண்டி 78
74. பித்திகம் 80
75. பீரம் 89
76. புன்னை – கடியிரும் புன்னை 93
77. பூளை – குரீஇப் பூளை 30
78. போங்கம் 35
ம வரிசை
79. மணிச்சிகை 9
80. மராஅம் 68
81. மருதம் 33
82. மா – தேமா 8
83. மாரோடம் – சிறு மாரோடம் 78
84. முல்லை – கல் இவர் முல்லை 77
85. முல்லை 46
86. மௌவல் 57
வ வரிசை
87. வகுளம் 25
88. வஞ்சி 79
89. வடவனம் 15
90. வழை மரம் – கொங்கு முதிர் நறுவழை 64
91. வள்ளி 51
92. வாகை 16
93. வாரம் 89
94. வாழை 50
95. வானி மலர் 22
96. வெட்சி 6
97. வேங்கை 98
98. வேரல் 28
99. வேரி மலர் 64
Search Wikisource விக்கிமூலத்தில் பின்வரும்

 

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்
அரும்பு – அரும்பும் (தோன்றும்) நிலை
நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை – நனை முத்தாகும் நிலை
மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் – மலரும் பூ
பூ – பூத்த மலர்
வீ – உதிரும் பூ
பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)

அ வரிசை
1. அடும்பு 73
2. அதிரல் 39
3. அவரை – நெடுங்கொடி அவரை 75
4. அனிச்சம் 3
5. ஆத்தி – அமர் ஆத்தி 74
6. ஆம்பல் 2
7. ஆரம் 91
8. ஆவிரை – விரிமலர் ஆவிரை 27
9. இருள்நாறி – நள்ளிருள் நாறி 96
10. இலவம் 71
11. ஈங்கை 70
12. உந்தூழ் – உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 10
13. எருவை 18
14. எறுழம் – எரிபுரை எறுழம் 12
க வரிசை
15. கண்ணி – குறு நறுங் கண்ணி 31
16. கரந்தை மலர் 41
17. கருவிளை – மணிப்பூங் கருவிளை 20
18. காஞ்சி 65
19. காந்தள் – ஒண்செங் காந்தள் 1
20. காயா – பல்லிணர்க் காயா 26
21. காழ்வை 92
22. குடசம் – வான் பூங் குடசம் 17
23. குரலி – சிறு செங்குரலி 61
24. குரவம் – பல்லிணர்க் குரவம் 23
25. குருக்கத்தி – பைங் குருக்கத்தி 90
26. குருகிலை (குருகு இலை) 32
27. குருந்தம் (மலர்) – மாயிருங் குருந்தம் 97
28. குவளை (மலர்) – தண்கயக் குவளை 4
29. குளவி (மலர்) 42
30. குறிஞ்சி 5
31. கூவிரம் 14
32. கூவிளம் 11
33. கைதை 63
34. கொகுடி – நறுந்தண் கொகுடி 58
35. கொன்றை – தூங்கு இணர்க் கொன்றை 72
36. கோங்கம் – விரிபூங் கோங்கம் 34
37. கோடல் 62
ச வரிசை
38. சண்பகம் – பெருந்தண் சண்பகம் 40
39. சிந்து (மலர்) (சிந்துவாரம்) 81
40. சுள்ளி மலர் 13
41. சூரல் 29
42. செங்கோடு (மலர்) 7
43. செம்மல் 60
44. செருந்தி 38
45. செருவிளை 19
46. சேடல் 59
ஞ வரிசை
47. ஞாழல் 56
த வரிசை
48. தணக்கம் (மரம்) – பல்பூந் தணக்கம் 69
49. தளவம் 54
50. தாமரை – முள் தாள் தாமரை 55
51. தாழை மலர் 53
52. திலகம் (மலர்) 36
53. தில்லை (மலர்) – கடி கமழ் கடிமாத் தில்லை 44
54. தும்பை 82
55. துழாஅய் 83
56. தோன்றி (மலர்) – சுடர் பூந் தோன்றி 84
ந வரிசை
57. நந்தி (மலர்) 85
58. நரந்தம் 94
59. நறவம் 86
60. நாகம் (புன்னாக மலர்) 87
61. நாகம் (மலர்) 95
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 52
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 66
64 நள்ளிருணாறி 96
ப வரிசை
64. பகன்றை 76
65. பசும்பிடி 24
66. பயினி 21
67. பலாசம் 77
68. பாங்கர் (மலர்) 67
69. பாதிரி – தேங்கமழ் பாதிரி 37
70. பாரம் (மலர்) 88
71. பாலை (மலர்) 45
72. பிடவம் 48
73. பிண்டி – பல் பூம் பிண்டி 78
74. பித்திகம் 80
75. பீரம் 89
76. புன்னை – கடியிரும் புன்னை 93
77. பூளை – குரீஇப் பூளை 30
78. போங்கம் 35
ம வரிசை
79. மணிச்சிகை 9
80. மராஅம் 68
81. மருதம் 33
82. மா – தேமா 8
83. மாரோடம் – சிறு மாரோடம் 78
84. முல்லை – கல் இவர் முல்லை 77
85. முல்லை 46
86. மௌவல் 57
வ வரிசை
87. வகுளம் 25
88. வஞ்சி 79
89. வடவனம் 15
90. வழை மரம் – கொங்கு முதிர் நறுவழை 64
91. வள்ளி 51
92. வாகை 16
93. வாரம் 89
94. வாழை 50
95. வானி மலர் 22
96. வெட்சி 6
97. வேங்கை 98
98. வேரல் 28
99. வேரி மலர் 64
Sமணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்[தொகு]

மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.

குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள்
(கொழும்பல்) அசோகம், வெதிரம்

 

பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.[தொகு]
1. கணவிரி
2. காந்தள்
3. சண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)
4. சுரபுன்னை (கரையன சுரபுன்னை)
5. தோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)
6. நீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)
7. புன்னாகம் (வரையன புன்னாகம்)
8. மாமரம் (தண்பத மனைமாமரம்)
9. வாள்வீரம்
10. வேங்கை (சினைவளர் வேங்கை)
பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்[தொகு]

பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

இவற்றில் குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள்
அரவிந்தம்,[2] அல்லி, கழுநீர், குல்லை, சுரபுன்னை, மல்லிகை
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்ட மலர்கள்
ஆம்பல், குருக்கத்தி, சண்பகம் – மணங்கமழ் சண்பகம், நறவம், நாகம்- நல்லிணர் நாகம், பாதிரி, மௌவல், வகுளம்,
மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்[தொகு]

இளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357

அதிரல் – ஐங்குறுநூறு 345
எரிக்கொடி – ஐங்குறுநூறு 353
காயா, ஐங்குறுநூறு 412
குரவம் – ஐங்குறுநூறு 357
கொன்றை, ஐங்குறுநூறு 412
கோங்கம் – ஐங்குறுநூறு 343
தளவம் ஐங்குறுநூறு 412
நுணவம் – ஐங்குறுநூறு 342
நெய்தல், ஐங்குறுநூறு 412
பலா – ஐங்குறுநூறு 351
பாதிரி – ஐங்குறுநூறு 346
பிடவு ஐங்குறுநூறு 412
புன்கு – ஐங்குறுநூறு 347
மரவம் – ஐங்குறுநூறு 357
மராஅம் – ஐங்குறுநூறு 348
மா – ஐங்குறுநூறு 349
முல்லை ஐங்குறுநூறு 412
வேம்பு – ஐங்குறுநூறு 350
பிறர்[தொகு]
கணவீரம்
பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.[3]
நாலடியார் நூல் தரும் செய்தி
நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]
நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்

பெண்சிங்கம் – விஜி ஏ ஆர்

Lion/Female by Judith Altimiras | Lion face drawing, Female lion, Lion drawing

 

காத்திருந்தேன், காத்திருந்தேன்
வழி மீது விழி வைத்து நான்
காத்திருந்தேன் ,காதலன் என் உயிர் அவன்
விழி மலர்ந்து வழியே வருவான் என்று.

வந்தது அந்த ஒரு நாள்,அன்று
வந்தது அவன் அல்லவே,
அவன் வரைந்த மடல் அன்றோ
ஆசை வேகத்தோடு படிக்கவே;

எல்லாமே புரிந்தது,கண்கள் இருண்டன
காதலன் அல்ல அவன் நய வஞ்சகன் என்று
காதலுக்கு  விலை பேச மனம் எப்படி வந்ததோ?
நாவும் கூசவில்லையோ?

மனம் என்னும் மேடையை சந்தையாக்க,
மணமேடை தன்னை தூக்குமேடையாக்க,
பெண் என்ன போக்கற்றவளா?குற்றவாளியா?
வீழாதே மோக வலையில், எழுந்து நில் மகளே!

தங்கமாக நூறு , வெள்ளியாக ஆறு,கையில பத்து,
நகர் வலம் வர நாலு சக்கரம் என்று
அப்பா கேட்கிறார்,அம்மா ஆமாம் போடுகிறாள் என்றானே
இவர்கள் சொல்லி தான் கண்ணே மணியே என்றானா?

பெண் என்றல் பேயும் இரங்குமாமே?
வேண்டாம், வேண்டாம் :வேண்டவே வேண்டாம்
இரக்கம் என்ன நன்கோடையா, பிச்சையா?
வேண்டும் வேண்டும் உள்ளன்பு சம உ ரிமை!!

அஞ்சாமல்,கெஞ்சாமல் காலத்தை மிஞ்சிடு,
நஞ்சு சுமக்கும் இனத்தோடு சேறாதே
மஞ்சு போல விலகிடும் துயரங்கள், கிளிமகளே
சஞ்சலமின்றி வெற்றி நடை போடு பெண் சிங்கமே!!

சிவ ஆத்திசூடி -வி. சுப்பிரமணியன்

9-Amazing Pictures of Lord Shiva – ANURADHA MAHESH

ஆத்தி சூடிய கூத்தப் பெருமான்

கீர்த்தி பாடக் கிட்டும் இன்பமே.

அன்பே சிவம்
ஆலயம் பேணு
இன்தமிழ் பாடு
ஈனர்சொல் கேளேல்
உண்மையை நாடு
ஊனுணல் தவிர்
எழும்போது ஏத்து
ஏழைமை ஒழி
ஐந்தெழுத்து ஓது
ஒண்பொடி பூசு
ஓயாது உதவு
ஔடதம் அரன்பேர்
அஃதே உய்வழி

 

ஆத்திமலரை அணிந்த நடராஜப் பெருமானது புகழைப் பாடினால் நமக்கு இன்பம் கிடைக்கும் / நம்மை இன்பம் வந்தடையும்;

  1. அன்பே சிவம்

அன்பும் சிவமும் ஒன்றே.

(திருமந்திரம் – “அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்”);

2.  ஆலயம் பேணு

கோயில்களைப் போற்று; கோயிலுக்குச் சென்று வழிபடு; (பேணுதல் – போற்றுதல்; பாதுகாத்தல்; மதித்தல்; வழிபடுதல்);

3. இன்தமிழ் பாடு

(தேவாரம், திருவாசகம், முதலிய) இனிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடு;

4. ஈனர்-சொல் கேளேல்

கீழோர்களது பேச்சைக் கேட்பது கூடாது. (ஈனர் – இழிந்தோர் – கீழோர்); (கேட்டல் – ஏற்றுக்கொள்ளுதல்; கேளேல் – கேளாதே);

5. உண்மையை நாடு

சத்தியத்தை விரும்பு; ( நாடுதல் – விரும்புதல்);

6. ஊன் உணல் தவிர்

புலால் உண்பதைத் தவிர்க்கவேண்டும்; (உணல் – உண்ணல் என்பதன் இடைக்குறை);

7. எழும்போது ஏத்து

காலையில் துயிலெழும்பொழுது இறைவனைத் துதி; (ஏத்துதல் – துதித்தல்);

8. ஏழைமை ஒழி

அறியாமையை / வறுமையைத் தீர்; (ஏழைமை – அறியாமை; வறுமை);

9. ஐந்தெழுத்து ஓது

“நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தை ஓது; (ஓதுதல் – சொல்லுதல்; ஜபம் செய்தல்);

10. ஒண்-பொடி பூசு

திருநீற்றைப் பூசு; (ஒண்-பொடி – ஒளியுடைய திருநீறு);

11. ஓயாது உதவு

எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்;

12. ஔடதம் அரன்-பேர்

சிவபெருமானது திருநாமம் மருந்து ஆகும்; அது நம் பிறவிப்பிணியையும் தீர்க்கும்; (ஔடதம் – ஔஷதம் – மருந்து);

13. அஃதே உய்-வழி

அதுவே (சிவபெருமான் திருநாமமே)  நாம் உய்யும் நெறி ஆகும்; (உய்தல் – ஈடேறுதல்);

 

அரன் ஆத்திசூடி – (மெய்யெழுத்துகள்)

முக்கணன்-புகழ் மொழி
இங்கிதம் அறி
இச்சகம் காக்க
அஞ்சுவது அஞ்சு
துட்டரை நீங்கு
வெண்ணீறு அணி
உத்தமரோடு இணங்கு
செந்தமிழ் ஓது
அப்பனுக்கு ஆட்செய்
இம்மையின் பயன் அறி
வெய்யசொல் சொல்லேல்
நேர்மை தவறேல்
வல்லவாறு உதவு
ஒவ்வாதது உண்ணேல்
வீழ்புனல் சேமி
உள்ளுக நல்லதே
பெற்றோரைப் பேணு
பொன்னடி போற்றி வாழ்

 

  1. முக்கணன்-புகழ் மொழி

மூன்று கண்களையுடைய பெருமானது புகழைச் சொல்;

2. இங்கிதம் அறி

சமயோசிதமாக நடந்துகொள்; இங்கே எது நன்மை தரும் என்று அறிந்து செயல்படு;

3. இச்சகம் காக்க

இந்த உலகைப் பாதுகாக்க; 

4. அஞ்சுவது அஞ்சு

பழி, பாவம், கேடு, முதலிய அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிவுடைமை;

5. துட்டரை நீங்கு

தீயோர்களிடமிருந்து விலகி இரு; (துட்டர் – துஷ்டர் – தீயவர்கள்);

6. வெண்ணீறு அணி

திருநீற்றைப் பூசு;

7. உத்தமரோடு இணங்கு

மேன்மக்களோடு (நற்குணம் உள்ளவர்களோடு) நட்புக்கொள்; (இணங்குதல் – நட்புக்கொள்ளுதல்);

8. செந்தமிழ் ஓது

தேவாரம், திருவாசகம் முதலிய சிறந்த நன்மை தருகின்ற தமிழ்ப்பாமாலைகளைக் கற்றுப் பாடு; 

9. அப்பனுக்கு ஆட்செய்

எல்லாருக்கும் தந்தையான ஈசனுக்குத் தொண்டுசெய்;

10. இம்மையின் பயன் அறி

இந்த மனிதப்பிறவி பெற்றதன் பயனை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்;

11. வெய்யசொல் சொல்லேல்

கடுஞ்சொற்களைச் சொல்லாதே; (வெய்ய – கொடிய);

12. நேர்மை தவறேல்

எப்பொழுதும் நேர்மையைக் கடைப்பிடி; (நேர்மை – உண்மை; நீதி; அறம்);

13.  வல்லவாறு உதவு

இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்; (வல்லவாறு – இயன்ற அளவில்);

14. ஒவ்வாதது உண்ணேல்

உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியதை உண்ணாதே;

15.  வீழ்புனல் சேமி

மழைநீரை வீணாக்காமல் குளங்களிலும் ஏரிகளிலும் சேமிக்கவேண்டும்; (Rainwater harvesting); (வீழ்தல் – விழுதல்); (புனல் – நீர்);

16. உள்ளுக நல்லதே

நல்லதையே நினை; (உள்ளுதல் – நினைதல்);

17. பெற்றோரைப் பேணு

(ஔவையார் – ஆத்திசூடி – “தந்தைதாய்ப் பேண்”)

18. பொன்னடி போற்றி வாழ்

ஈசனது பொன் போன்ற திருவடியை வணங்கி இன்புற்று வாழ்;

 

அந்நிய தேசத்திற்கு  அகதியாய் இடம் பெயர்வு – கவிஞர் இரஜகை நிலவன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள் - BBC  News தமிழ்

என் வீடு

எனக்கில்லை இங்கே…..

வீழ்ந்தது இருப்பிடமாக…

வீணானதோ வாழ்க்கை !//

உயிர்வாழும் நெருடலில்

உள்வாங்கும் மிடறுகள்//

தொலைந்த உடைமைகள்

தொல்லையாகிப் போனதோ//

இதயம் இன்னும்

இரத்தச் சிதரலில்//

இரவுகளின் இருளின்

இல்லாத நிழலில்…//

பதைபதைப்பு பரிதவிப்பாய்

பாதுகாப்பின்றி பரிமாற//

விண்ணின் தேவதை

விருப்பங்களை நிறைவேற்றிட//

விரைந்தே வருவாள்

விளைந்தே தருவாளெனும்//

தேடலில் கனவுகளை

தேவையின்றியே சுமந்தே//

தன்னிலை மேன்மையாய்

தந்திரங்களின் தவணையில் //

திசை தெரியாத

தேசத்தில் அகதியாய்..//

அலைகளின் ஆரவாரமாக

அந்நியனாய் வாழ்ந்திட.. //

 

கண்ணன் கதையமுது -20 – தில்லை வேந்தன்

 

. கண்ணன் கதையமுது-20

What was the spiritual reason behind Lord Krishna stealing Gopi's clothes?  - Quora
(காளியனின் தொல்லை அகன்றதும் பிருந்தாவனத்து மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து் வந்தனர். கண்ணன் வழக்கம் போல் ஆநிரை மேய்த்து வந்தான்)

கண்ணனின் தோற்றப் பொலிவு

கொண்டையில் மயிலின் தோகை;
   குண்டலம் இரண்டு காதில்;
கண்டவர் மயங்கும், மஞ்சள்
  கவின்மிகு பட்டின் ஆடை;
கொண்டெழில் மணியின் மாலை;
  குழலிசை இதழ்கள் கொஞ்சும்.
செண்டலர் மலர்மு கத்தான்,
  திருவடி முளரிப் பூக்கள்!

முளரி- தாமரை)
.
கண்ணன் புகழ் பாடாமோ
(கவிக் கூற்று)

கொன்றையந்தீங் குழலூதும் கோவலன்பேர் பாடாமோ!
நன்றாம்பல் குழலூதும் நம்மிறையைப் பாடாமோ!
கன்றுபசு மகிழ்முல்லைக் குழலிறையைப் பாடாமோ!
சென்றுரலால் மருதொசித்த சிறுவன்சீர் பாடாமோ!

(மருதொசித்த – மருத மரங்களை முறித்த)

அன்றுபசி இன்றிமண்ணை அளைந்துண்ட ஆரமுதை,
வென்றுபல வல்லரக்கர் விதிமுடித்த விண்முகிலை,
நின்றுமிசை நச்சரவம் நீள்நடம்செய் நெடுமணியை,
என்றென்றும் உளத்துறையும் இன்னருளைப் பாடாமோ!

வேய்ங்குழலின் பெரும்பேறு
(கவிக்கூற்று)

முத்தமிட்டு முகுந்தனவன் மொய்மலரின் இதழ்தடவ,
மெத்தவிசை மேவுகின்ற மென்மைமிகு் வேய்ங்குழலே!
இத்தரையில் நீசெய்த இணையற்ற பெரும்பேறு,
பத்திசெயும் அடியவரும் பண்ணினரோ யானறியேன்!

மழைக் கால வருணனை

முகில்கூட்டம் வானை மூடும்;
  முரல்வண்டு மலர்கள் நாடும்;
அகல்கானும் வளரும் ஓங்கி;
  அன்றில்கள் ஒடுங்கும் ஏங்கி;
மிகவொலிசெய் இடிமு ழங்கும்;
  வெண்ணிலவும் உடுவும் மங்கும்;
நகைமுல்லை விரியும், வாரி
  நல்வெள்ளி பொழியும் மாரி!

ஆடை கவர்ந்து அருளுதல்!

குளிர்கால நோன்பு

மார்கழி வரவும் ஆயர்
  மங்கையர் நோன்பி ருந்தார்.
ஊரினை விட்டுக் காலை
  உதயமே ஆற்று நீரில்,
யாருமே இல்லை என்றே
  இறங்கினார், ஆடை யாவும்
சேரவே கரையில் விட்டுத்
  தெளிபுனல் ஆட லானார்.

ஆடைகளைக் கவர்தல்

முங்கிக் குளித்த கோபியர்கள்
  முற்றும் தம்மை மறந்தாரே.
அங்கே வந்த மாயவனும்
  ஆடை கவர்ந்து கடம்பமரத்
தொங்கு கிளைமேல் போயமர்ந்தான்.
  தோகை மயிலார் தம்முடைகள்
எங்கே என்று பார்க்கையிலே,
  எடுத்த கள்வன் முறுவலித்தான்.

கோபியர் கெஞ்சுதல்

தேட வேண்டா கோபியரே
  சிறிது பாரீர் இங்கென்றான்.
ஆடைக் குவியல் அவனிடத்தில்,
  அவரோ ஆற்று நீரிடத்தில்.
வாடைக் குளிரின் காற்றடிக்க
  மஞ்ஞை அனையார் தத்தளித்தார்.
தாடா கண்ணா தந்துவிடு
  தகுமோ விளையாட்(டு) எனவுரைத்தார்.

  (மஞ்ஞை அனையார்- மயில் போன்ற கோபியர்)

அல்லைப் புரையும் அணியழகா
  அன்பு கூர்ந்து தருவாயே!
எல்லை மீறும் விளையாட்டால்
  எமக்கு வருமே பெருந்தொல்லை
நல்ல பிள்ளை நீயன்றோ?
  நாங்கள் தவித்தல் காண்பாயோ?
ஒல்லை எங்கள் ஆடைகளை
  ஓடி வந்து தந்துவிடு!

( புரையும்– போன்றிருக்கும்)

கண்ணன் விளக்கவுரை

உடைகள் இன்றி நீராடல்
  ஒவ்வா(து) எனநீர் அறியீரோ?
குடையும் புனலை விட்டெழுந்து
  கும்பிட்(டு) என்முன் வருவீரே!
விடையும் வினாவும் ஆனவன்முன்
  வெட்கப் பட்டுப் பயனில்லை.
கடையில் உம்மைக் கடைத்தேற்றக்
  கனிவால் செய்யும் கருத்தறிவீர்!

(குடையும்– மூழ்கி நீராடும்)
கடையில்-கடைசியில்)

 

கோபியர் உண்மை உணர்தல்

ஆறாய்ப் பெருகும் அறவுரையை,
  அங்கே கேட்ட கோபியர்கள்,
வேறாய் அவனைக் கருதுவதால்
  வெட்கம் அடைந்தோம் எனவுணர்ந்தார்.
மீறா(து) அவன்சொல் கைக்கூப்பி
  மேலே வந்தார் உடைபெற்றார்.
மாறா உண்மைத் தத்துவத்தால்,
  மாயை நீங்கிக் கதிபெற்றார்!

( தொடரும்)

 

 

 

 

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்… (3)   –   மீனாக்ஷி பாலகணேஷ்              

சொர்ணம் டீச்சர்

 

அக்காவிற்கு தம்பியாக இருப்பதை விட, தங்கைக்கு அண்ணனாக இருப்பதில் எது  சிறந்தது? - Quora

           34679+

           15843

           ———

           50522

         ———          

இது என்ன எனக் கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை! ஒரு கூட்டல் கணக்கு. மாமா எதோ இரு ரசீதுகளைக் கூட்டிப் பார்த்துச் சொல்லச் சொன்னார். கூட்டினேன். எப்படித்தெரியுமா?

           நான் சொல்வதனை கொஞ்சம் நிதானமாகத்தான் கேளுங்களேன்.

           9 உடன் மூன்றைக்கூட்ட, மூன்று விரல்களை மடித்து, 10,11, 12 என எண்ணி, 2-ஐ அடியில் எழுதி 1-ஐஅடுத்த எண்ணான 7 உடன் கூட்டி எட்டாக்கினேன். பின் 4ஐ அதனுடன் கூட்ட, 9,10,11,12 என எண்ணினேன். பின்….

           மாமா அவர் கையிலிருந்த கால்குலேட்டரில் அதனைக் கூட்டிப் பார்த்ததும் அதே விடைதான் வந்தது. ‘அட!’ என ஆச்சரியப்பட்டவரிடம், “இது என் ஆறு வயசில் சொர்ணம் டீச்சர் சொல்லிக்குடுத்தது மாமா, தெரியுமா?” என்று பீற்றிக் கொண்டேன்.

           “ஆமாம். சொர்ணம் தானே! ரொம்ப நல்லவள், பாவம்! வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டவள்,” என்று எங்கோ கடந்த காலத்துக்குப் பயணப்பட்டவராக நினைவுகளைப் பின்னோக்கித் தள்ளலானார்.

           நானும் கூடச்சேர்ந்துகொண்டேன்.

           *****

           அப்பா, அம்மா, நான், எல்லாரும் தாத்தா பாட்டியின் ஊரான எர்ணாகுளத்திற்கு ரயிலில் வந்து இறங்கினோம். ராமு மாமாதான் வந்து எங்களை எதிர்கொண்டார். இது வழக்கமான பள்ளி விடுமுறையல்ல. ஆறுவயதான எனக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கைப்பாப்பாவோ பிறக்கப் போவதாக அம்மா சொல்லியிருந்தாள்.

           நான்குமாதங்கள் பள்ளிக்கூடம் கிடையாது. அதாவது போக முடியாது. ஆறுவயதுக் குட்டிப்பெண்ணை எப்படித் தயார்செய்து, உணவளித்து, தலைவாரிப் பின்னிவிட்டுப் பள்ளிக்கு அனுப்ப அப்பாவால் முடியும்? அப்பாக்கள், ஆண்கள், வீட்டுவேலைகளில் பங்கேற்காத, பங்கேற்கப் பயிற்சிபெறாத, விரும்பாத காலங்கள் அவை. பள்ளியில் சுட்டிப்பெண்ணான எனக்கு ஒருபக்கம் ஒன்றாம் வகுப்புப் பாடங்கள் பற்றி, அவற்றைக் கற்க முடியாதது பற்றி பயம். இன்னொரு புறம், வரப்போகும் தம்பியோ தங்கையோ ஆன பாப்பா பற்றிய அழகான கற்பனைகள்.

           “அகிலாக்குட்டி, வரணும் வரணும். எப்படி இருக்கே கண்ணா?” என்று கொஞ்சியபடியே பெரிய மாமா வாசுவும், இன்னும் திருமணமாகாத சோபனா சித்தியும் என்னைப் போட்டி போட்டுக்கொண்டு தூக்கிக்கொள்ள கரங்களை நீட்டினர். நானும் பெருமிதம்பொங்க அப்பாவின் கையை விட்டுவிட்டு அவர்களிடம் ஓடினேன்.

           தாத்தா வீட்டினுள் நுழைந்ததுதான் தாமதம்; வழக்கமாக ஒரு பெரிய கருங்காலி மரத்தொட்டில் கூடத்தில் தொங்கும். ஓடிப்போய் அதில் அமர்ந்து ஆட எத்தனித்த எனக்கு, அதனுள் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. விதம் விதமான பழங்கள். ஆரஞ்சு, காரட், கத்தரிக்காய், வெண்டை, எலுமிச்சை என்று- கிட்டநெருங்கிப் பார்த்ததும்தான் தெரிந்தது, அவை அத்தனையும் மெழுகினால் செய்யப்பட்ட தத்ரூபமான வடிவங்கள் என்று. திரும்பிப்பார்த்தால் மாமா புன்னகையுடன், “உனக்குத்தானம்மா அவை, விளையாடுவதற்கு,” என்கிறார்.

           அதற்குள் சித்தி கையில் ஒரு பெரிய சாக்லேட் டப்பாவுடன் வந்தாள்.

           “திறந்து பார் அகிலாக்குட்டி!”

           “ஹையா! கலர் கலரா ரிப்பன், கிச்சிலிப்பொட்டு, தலைக்கு க்ளிப், எல்லாமே செட்டியார் கடையில வாங்கினயா சித்தி?”

           கையில் டப்பாவுடன் சென்று சித்தியை இறுக அணைத்துக் கொண்டேன். கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டாள். “ஆமாமடா, நீ வரப்போகிறாய் என்றதும் ஓடிப்போய் வாங்கிவந்து விட்டேன்,” என்றாள்.

           குளித்துச் சாப்பிட்டதும், (சொல்ல மறந்து விட்டேனே, எனக்குப் பிடித்த பூசணிக்காய் பொரித்த குழம்பு, அப்பளம் தவிர திரட்டுப்பாலையும் சமையல்கார மாமி விசாலத்திடம் சொல்லிப் பண்ண வைத்திருந்தாள் காவேரிப் பாட்டி) சித்திக்கும் பாட்டிக்கும் நடுவில் பாயில் படுத்துக்கொண்டு காலைத்தூக்கி சித்திமேல் போட்டபடி ஒரு குட்டித்தூக்கம்.

           ***

           மதியம் தூங்கி எழுந்து போர்ன்விடா குடித்ததும், சித்தி முகம்கழுவித் தலைவாரி விட்டாள். குதியாட்டம் போட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்தால் அங்கே புதிதாக ஒரு மாமி அமர்ந்து கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும், “இந்தக் குழந்தைதானா?” என்று ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.

           “அகிலா, இதுதான் சொர்ணம் டீச்சர். நீ ரொம்பநாள் ஸ்கூலுக்குப் போகமுடியாதில்லையா? அதனால் தினம் சாயங்காலம் வந்து உனக்குப் பாடங்கள் எல்லாம் சொல்லித்தரப் போகிறாள்,” என்றார் மாமா.

           அன்று ஆரம்பித்தது; எனக்குத் தமிழ், கணக்கு, இன்னும் சில கதைகள் எல்லாம் தினசரி மாலை இரண்டு மணி நேரமாவது சொல்லித்தருவார் சொர்ணம் டீச்சர். அலுப்புத்தட்டாமல் இருக்க ஏதாவது குட்டி பஞ்சதந்திரக் கதைகளும் நடுநடுவே சொல்லுவார். எனக்கு சொர்ணம் டீச்சரைப் பிடித்திருந்தது. அவருக்கும் என் அம்மாவின் வயதுதான் இருக்கும். புன்னகையோடு இனிய குரலில் பாடம் சொல்லித்தருவார். அப்பப்போது மூக்கிலிருந்து இறங்கும் கண்ணாடியை மேலேதள்ளி விட்டுக் கொள்வார். அது எனக்குச் சிரிப்பை உண்டுபண்ணும்.

                      ***

           ஒருமாலை, தாத்தாவுடன் கடற்கரைக்குப் போவதாக ஏற்பாடு. சொர்ணம் டீச்சர் பாடம் சொல்லிக்கொடுத்து முடித்ததும் நாம் கிளம்பலாம் என்று சொல்லியிருந்தார் மாமா. அழகாகக் கூட்டல் கழித்தல் சொல்லிக் கொடுத்ததிலும், நானும் சமர்த்தாகக் கற்றுக்கொண்டு வந்ததிலும் நேரம் போனதே தெரியவில்லை. தாத்தா தனது அங்கவஸ்திரத்தையும் கைத்தடியையும் எடுக்க நாங்கள் இருந்த கூடத்துக்கு வந்தபோது, என்னை விட்டுவிட்டு அவர்மட்டும் போகப்போகிறார் என நான் எண்ணிவிட்டேன். அந்த வருத்தத்தில் கண்களில் ‘கரகர’வென வழிந்த நீருடன் கணக்கைப் போடமுடியாமல் தடுமாறினேன்.

           சொர்ணம் டீச்சர் பதறிவிட்டாள். என்னை அணைத்துக்கொண்டு, கண்களைத் துடைத்துவிட்டுத் தாத்தாவுடன் அனுப்பிவைத்தாள்.

தொட்டில் - தமிழ் விக்கிப்பீடியா

           தம்பிப் பாப்பாவிடம் எனக்கு உயிர். முடிந்தபோதெல்லாம் அவனருகிலேயே பழியாய்க் கிடந்தேன். செல்லம் கொடுத்துவைத்து சில சமயங்களில் வீண் பிடிவாதம் பிடிக்கும் என்னை வழிக்குக் கொண்டுவர, காவேரிப்பாட்டி தம்பிப்பாப்பாவை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

           “சமர்த்தாக எண்ணெய் தேய்த்துக் குளிக்க வரவில்லையோ அகிலா, தம்பிப்பாப்பாவை லட்சுமி மாமியிடம் தூக்கிக் கொடுத்து விடுவோம் பார்!” என்பாள். நான் பயந்து விடுவேன். அடிக்கடி பாப்பா தொட்டிலில் இருக்கிறானா என்று வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வேன்.

           தம்பிப்பாப்பா பிறந்த பதினொன்றாம் நாள்; தொட்டில் போட்டுப் பெயரிடும் நிகழ்ச்சி…

           அக்கம்பக்கத்துப் பெண்கள், மாமிகள், பாட்டிகள், குழந்தைகள் எல்லாம் தாத்தா வீட்டுக் கூடத்தில் குழுமியிருந்தார்கள். ஏதோ ஒரு சம்பிரதாயம் – திருமணமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காத பெண் ஒருத்தியை அழைத்து, அவள்கையால் குழந்தையைத் தொட்டிலில் இடச்செய்வார்கள். நானோ குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாரையுமே தம்பிப்பாப்பாவைத் தொட விடவில்லை.

           “சரி, நீயே சொல்லு! யார் இதைப் பண்ணட்டும் என்று,” என்றாள் பாட்டி.

           “சொர்ணம் டீச்சர்தான் பண்ணனும்.” கூட்டத்தில் சலசலப்பு. பாட்டி தயங்கினாள். சொர்ணம் டீச்சரே ஒரு புன்னகையுடன், “அகிலாக்குட்டி, உங்காத்துல யாராவது பண்ணட்டும். உன்னோட பெரியம்மா செய்யட்டும்,” என்று நிலைமையைச் சரி செய்தார். பின்பு பெரியம்மா தம்பிப்பாப்பாவைத் தொட்டிலில் கொண்டு விட்டார்.

           “யாராவது குழந்தைக்கு பாட்டுப் பாடுங்கோ!” பாட்டியின் உரிமைகலந்த உத்தரவு செவிடன்காதில் ஊதிய சங்காயிற்று. “ருருலுலுவாயீ” அல்லது “ஜோஜோக்குட்டி ஜோஜோ,” வைத்தவிர வேறு ஒன்றும் ஒருத்தருக்கும் தெரியாது போலும்! கடைசியில் பாட்டியே, “சொர்ணம், நீதான் நன்றாகப் பாடுவையேடீ, எங்காத்துப் பேரனுக்கு ஒரு பாட்டுப் பாடேன்,” என்றதும், காத்திருந்ததுபோல சொர்ணம் டீச்சர் பாட ஆரம்பித்தாள்.

           “அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு

           அரும்பு முடிச்சதாரு?”

           அத்தனை மாமிகளும், பாட்டிகளும் தேன்குடித்த நரிகளாய் அமர்ந்து பாட்டை ரசித்தனர். ஆறுவயதில் பாட்டின் பொருளை உணர்ந்து ரசிக்க இயலாவிடினும், அந்த இசையும் குரலும் என் உள்ளத்தில் பதிந்துவிட்டன.

           ***

           காலம் யாருக்காகக் காத்திருக்கிறது? அவரவர்களுக்கு அவரவர் கவலைகள், கடமைகள், வாழ்க்கை, இன்னபிற. கால ஓட்டத்தில் சொர்ணம் டீச்சரை மறந்தே போனோம்.

           நான் படிப்புடன், வேலையுடன், குடும்பத்துடன் ஒன்றினாலும், சங்கீதமும் என் வாழ்க்கையில் ஒரு இணைபிரியாத அம்சமாயிற்று. தேடித்தேடி அரிய பாடல்களைக் கொண்ட ஒலிநாடாக்களை (அந்தக்காலத்தில்) வாங்குவது என் வழக்கம். அப்படித்தான் ஒருநாள் பம்பாய் சகோதரிகள் பாடிய தாலாட்டுப்பாடல்கள் எனும் ஒரு ஒலிநாடாவை வாங்கிவந்திருந்தேன். அதிலிருந்து ஒலித்தது ஒரு அரிய பாடல்!

           “அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு

           அரும்பு முடிச்சதாரு?”

           மூளையில் பளீரென ஒரு மின்னல்!

           “அம்மா! சொர்ணம் டீச்சர் நந்துவைத் தொட்டிலில் போட்டபோது இந்தப் பாட்டைப் பாடினார் இல்லையா?”

           “உனக்கு இன்னும் அதெல்லாம் நினைவிருக்கா அகிலா?”

           பழைய கதையைக் கொஞ்சம் கிளறினேன். “எங்கே அம்மா இருக்கார் சொர்ணம் டீச்சர்? அவா குடும்பம் எங்கே? குழந்தைகள் எங்கே? அடுத்தமுறை ஊருக்குப் போகிறப்போ பார்க்கணும் அம்மா,” என்றேன்.

           “பாவம் அந்த சொர்ணம், அகிலா! அவளுக்கு ஆதரவாக இருந்தது அவ அம்மா மட்டும்தான். சொர்ணத்துக்கு ரொம்பச் சின்ன வயசிலேயே, பத்தோ பன்னண்டோ, கல்யாணம் பண்ணிட்டா. அவ பெரியவளாறத்துக்கு முந்தியே அவ அகமுடையான் வைசூரிகண்டு போயிட்டான். அப்புறம் அவள் டீச்சர் டிரயினிங் எடுத்துண்டு டீச்சரா வேலை பார்த்தா. அபார சங்கீத ஞானம். கேட்டதை அப்படியே திருப்பிப் பாடுவாள். தாத்தாவுக்கு அவா குடும்பத்தை நன்றாகத் தெரியும். அதுதான், ஒரு உதவியாக இருக்கட்டுமே என்று உனக்கு நாலு மாதம் பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்திருந்தார்.”

           “அப்புறம் எங்கே அம்மா போனார் சொர்ணம் டீச்சர்?”

           “தெரியலையே,” என அம்மா வருத்தத்துடன் சொன்னார்.

           நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். இப்போது எல்லாம் புரிந்தது. ஏன் பாட்டிக்கு சொர்ணம் டீச்சரைக் கொண்டு குழந்தையைத் தொட்டிலில் விட விருப்பமில்லை என்பது; அவர் விதவை; எனவே இவையனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டவை (அக்காலத்தில்). பாவம் டீச்சர்!

           பாட்டைப் பாடினபோது டீச்சரின் உள்ளம் எப்படியெல்லாம் கொந்தளித்திருக்கும். அவரால் என்றுமே பெறமுடியாத, தாய்மை இன்பத்தைப் பிட்டுப்பிட்டு வைக்கும் அந்தப்பாடல்……

           ‘காணாமலே தேடி கமலமுகத்தை நாடி

           கோபியர் எல்லாம்வாடி கோபருடனே கூடி

           வாடா என் கண்மணியே தாடா எனக்கோர் முத்தம்

           வாடா என் குஞ்சலமே ஆரத்தி எடுக்கிறேன் (அற்புதமே)’

           இப்போது இந்தப்பாட்டு எனக்கு மனப்பாடம். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அந்த நாட்களின் சொர்ணம் டீச்சரின் நினைவுவந்து என்னை அலைக்கழிக்கும். அவருக்காக கண்ணில் இரண்டுசொட்டு நீராவது துளிர்க்கும்.

           அந்த இரண்டு சொட்டு நீரில் அவருடைய அன்புக்கும், என்னை உருவாக்கிய ஆரம்பநிலைக் கல்விக்கும், நன்றியுடன் அஞ்சலி செலுத்தினேன் என்றால், அதில் அவரைப்பற்றி நானறிந்துகொண்ட செய்திகளுக்காகவும் இன்னும் இரண்டு சொட்டுக் கண்ணீர் கலந்திருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

           எனது ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்ட சொர்ணம் டீச்சரின் நினைவுக்கு அஞ்சலி இந்தக் கதை! உங்களுக்குத் தெரியுமா? இன்றைக்கும் எனது கூட்டல் கழித்தல் கணக்குகள் சொர்ணம் டீச்சர் சொல்லிக் கொடுத்த வழியில்தான் செய்யப்படுகின்றன என்று? கால்குலேட்டர்கள் எல்லாம் எனக்கு வேண்டாமே!

           இது வாழ்க்கையின் இன்னொரு பாடம்………..!                              __________________&___________________

சக பயணி – ரேவதி ராமச்சந்திரன்               

 

   இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட ‘நீலா (ஃப்ளூ) ஸ்கார்ப்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

Railway ACT: Women And Children Cannot Be thrown From Reservation Coach At  Night

நான் அகமதாபாத் செல்வதற்கு பூரி-அகமதாபாத் இரயிலுக்காக வடனேரா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தேன். இது காலை ஏழு மணிக்கு அகமதாபாத் சென்று விடும். அங்கே நாள் பூரா வேலையை முடித்து விட்டு சாயங்காலம் இராஜதானி பிடித்து டில்லி செல்வது சரியாக இருக்கும்.

நான் ஒரு டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக அமராவதி வந்துள்ளேன். என்னிடம் கேமராக்காரர்களுக்கு வரமாகிய டீஎஸ்ஆர் 450 காமெரா இருக்கிறது. இது லகுவானதும் படம் எடுப்பதற்கு ஏதுவானதும் ஆகும். என்னுடைய அசிஸ்டண்ட் விஜய்யும் என்னுடன் இருந்தான்.

வடனேரா ஸ்டேஷனில் வண்டி இரண்டு நிமிடங்கள்தான் நிற்குமாதலால் மானிட்டரையும், ட்ரைபாடையும் விஜய்யிடம் ஒப்படைத்து விட்டு பத்து நிமிடங்கள் முன்பாகவே என் பெட்டிக்கு எதிரில் நின்று கொண்டேன். விஜய் உட்கார விரும்பினான்,  ஆனால் நான் சம்மதிக்கவில்லை. ஒரு கையில் கேமரா, முதுகில் பை, இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், ஒரு செய்தித்தாள். கைகளும் காலி இல்லை, மூளையும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்கும். ஆனால் விஜய் பிரயாணத்தை முழுவதுமாக இரசிக்க விரும்பினான். ‘இரயில் வர நேரம் இருக்கிறது. டீ குடிக்கலாமா?’ என்று என் பதிலை எதிர்பார்க்காமல் என் அருகில் சாமான்களை வைத்து விட்டு சென்று விட்டான்.

நான் எங்கேயும் உட்கார விரும்பவில்லை. உட்காரும் இடம் தூரத்தில் இருந்தது, என் பெட்டியும் சரியாக இங்கே தான் வரும். மேலும் இங்கிருந்தே என்னால் டிவி பார்க்க முடிந்தது. சாமான்களையெல்லாம் தூக்கிக் கொண்டு அலைய யாரால் முடியும்?

விஜய் டீயும், வெங்காய பக்கோடாவும் வாங்கி வந்தான். நான் வரும்போதே பக்கோடா மேல் ஈக்களைப் பார்த்து விட்டதால் தண்ணீர் பாட்டில்களையும், பிஸ்கட்டையும் பையில் வைத்து விட்டு டீயை மட்டும் வாங்கிக் கொண்டேன். ரயிலின் வருகை அறிவிக்கப்பட்டது. இந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இங்கே ஏறுவதாக இருந்தது. இந்த வெயிலில் யார் பிரயாணம் பண்ண விரும்புவார்கள்!

இரயில் வந்தது. நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டிய இரயிலில் நடுவில் ஒரு சின்ன ஸ்டேஷனில் ஏறினால் நிறைய கஷ்ட-நஷ்டங்கள் இருக்கும். முதலாவது நமக்கு வேண்டிய இடம் கிடைக்காது. இரண்டாவது நீண்ட தூரத்திலிருந்து தங்கள் இருக்கையில் உட்கார்ந்து வருபவர்கள், எல்லா இடத்திலேயும் சாமான்களைப் பரப்பி வைத்திருப்பதால் அதன் நடுவில் நமது சாமான்களை நுழைப்பது மிகவும் துர்லபம், மூன்றாவது கழிப்பிடம். மூன்றாவதைப் பற்றி நினைத்தாலே தலை சுற்றுகிறது. இப்போது என் எதிரில் இந்த மூன்று சங்கடங்களும் இருந்தன.

வெள்ளை போர்வைக்கு உள்ளேயிருந்து பற்களேயில்லாத ஒரு முதியவர் ‘என்னால் மேலே ஏற முடியாது நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா?’ பற்கள் இல்லாததால் அவர் பேசியதை விட சைகையினால் புரிந்து கொண்டேன். மற்றொரு புறம் ஒரு பெண்மணி புத்தகம் படித்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தாள். புத்தகத்திலிருந்து கண்களை மீட்கவும் இல்லை, அவள் காலடியில் இருந்த அவளது செருப்பு, பைகள், செய்தித்தாள்களின் துண்டுகள், சாப்பிட்ட தட்டுகள் இவற்றை அகற்றி என் சாமான்களை வைக்க இடமும் தரவில்லை.

நான் இன்னமும் இரயிலில் ஏறின மாதிரியே கைகளில் கேமரா, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் வைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். ‘இடத்தை நான் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் இவங்களைக் கொஞ்சம் நகர்ந்து இடம் தரச் சொல்கிறீர்களா?’ ‘இவர்கள் என கூட வரவில்லை’ என்று அந்தப் பெண்மணி சொன்னாலும் சிறிது கூட நகர முயற்சிக்கவில்லை.

இப்போது எனக்கு கோபம் தலைக்கு மேல் எறிற்று. என் காலாலேயே அவருடைய செருப்பு, சாப்பிட்ட தட்டுகள் இவற்றை வேகமாகத் தள்ளினேன். அவர்கள் படிப்பதிலேயேக் குறியாக இருந்தார்கள். இப்போது சலித்துக் கொண்டே பெட்டிகளை இழுக்கலானேன். ஆனால் அவைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. ‘தங்களது சாமான்களை ஒரு புறமாகத் தள்ளி வையுங்கள். இல்லாவிடில் அவற்றை வெளியில் தூக்கி எரிந்து விடுவேன்’. ‘அது எப்படி தூக்கி எறிவீர்கள். எதிரில் இடம் இருக்கிறதே! தெரியவில்லையா?’ ‘இல்லை. எனக்கு உங்கள் பிடிவாதம்தான் தெரிகிறது. சாயந்திரம் ஐந்தரை மணிக்கு யாராவது தூங்குவார்களா! எல்லாவற்றையும் ஒழுங்குபடித்தி சகபயணிக்கு உட்கார இடம் தரத் தெரியாதா! அங்கிள், நீங்கள் கீழ் பெர்த் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மூன்று மணி நேரங்கள் எனக்கு உட்கார இடம் கொடுங்கள்’ என்று தீரரமானமாகப் பேசினேன்.

எனக்கு அந்தப் பெண்மணி மேல் மிகவும் கோபம் வந்தது. கையிலிருந்த பிஸ்கட், செய்தித்தாள் இவைகளை இருக்கையில் தூக்கிப் போட்டேன். அந்தப் பெண்மணியையும் அப்படியே தூக்கிப் போட வேண்டும் போல இருந்தது. ‘இவர்கள் என்ன நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு இடம் வாங்கி விட்டு முழு இரயிலையும் வாங்கி விட்ட மாதிரி நடந்து கொள்கிறார்கள். தான்அது செருப்பையும் சாமான்களையும் அடுக்கி வைக்க ஒரு வேலையாள் வேண்டுமோ! படிப்பது ‘பிரேமாஷ்ரம்’ நடப்பது ஒழுங்கீனம்!’ என்று முணுமுணுத்தேன். ‘தேப்ளா சாப்பிடுகிறீர்களா? நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?’ என்று அங்கிள் கேட்டபோது வேண்டாவெறுப்பாக ஒரு துண்டு எடுத்துக் கொண்டு ‘ஒடிசா’ என்று சொன்னேன். அவ்வளவுதான் நான் எதிர்பார்த்த மாதிரியே அவர் என்னுடன் பேச ஆரம்பித்தார். தனது தந்தையைப் பற்றி, அவருடைய பள்ளியைப் பற்றி, அந்தக் காலத்தைப் பற்றி என்று பேச்சு நீண்டு கொண்டே போனது. இப்போது படுத்துக் கொண்டே அந்தப் பெண்மணியும் இந்தப் பேச்சில் கலந்து கொண்டாள்.

சுமார் பத்து மணிக்கு இரயில் புசாவல் என்ற இடத்தில் நின்றது. நான் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று இறங்க நினைத்த போது அந்தப் பெண்மணி ‘நீங்கள் இறங்குகிறீர்களா? எனக்கு தண்ணீர் வாங்கித் தர முடியுமா?’ என்று ஒரியாவில் கேட்டாள். ‘எனக்கு ஒரியா தெரியும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்!’ ‘நீங்கள் தான் சொன்னீர்களே!’ ‘ஓ அப்போ புத்தகம் படிப்பது மாதிரி எங்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?’ என்று பரிகாசம் பண்னினேன்.

நான் தண்ணீர் வாங்கிக் கொண்டு பெட்டியில் ஏறி வருவதற்குள் விளக்கு அனைத்து விட்டு எனது இரு சக பயணிகளூம் தூங்கி விட்டனர். இரயிலில் ஓர் இரவில் தோன்றும் பழக்கம் அதோடயே முடிந்து விடுகிறது. ஒரு முறை ஷாலினி என்பவளுடன் ஸ்நேகிதம் ஏற்பட்டது அது சில நாட்களிலேயே முடிந்து விட்டது. அதற்குப் பிறகு நான் யாருடனும் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்வதில்லை.

காலையில் தூக்கம் களையும் போது அகமதாபாத் ஸ்டேஷன் வந்திருந்தது. அங்கிள் தனது சாமான்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி அப்போதும் எழுந்திருக்காமலேயே மற்றொரு புறம் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தார். இரயிலில் கூலிகளுடன் இருப்பத்தைந்து வயது ஒரு பையனும் ஏறி வந்தான். படப்படப்புடன் அந்தப் பெண்மணியைப் பார்த்து ‘அக்கா ஏன் இஃப்போனை ஆஃப் பண்ணி வைத்துள்ளாய்? நாங்கள் மிகவும் கவலைப் பட்டோம்.’ ‘நான் ஏன் ஆஃப் பண்ணப் போகிறேன்? சார்ஜ் இல்லை. நான் சார்ஜ் போட  பிளக் பாயிண்ட் கிட்ட போனால்தானே!’ என்று முதன் முறையாக புன்னகைத்தாள். ‘யாரோட உதவியை நாடி இருக்கலாமே?’ அவன் குரலில் கவலை தெரிந்தது. ‘அப்படி யாரும் எனக்குக் கிட்டவில்லை’ என்று பரிகசித்தாள். அந்த யுவன் எல்லா சாமான்களையும் கீழே இருந்து எடுத்தான்.

அத்துடன் கடைசியாக ஒரு சக்கர நாற்காலியையும், தாங்குக் கட்டையையும் எடுத்தான். மெதுவாக அந்தப் பெண்மணியைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான். அப்போதுதான் நான் பார்த்தேன் அவளது ஒரு கால் மரக்காலாக இருந்தது.

என் தலையில் ஒரு கூடம் தண்ணீர் கொட்டினமாதிரி இருந்தது.

அவர்களை ஏறிட்டு பார்க்கவும் வெட்கப்பட்டுக் கொண்டு தலை குனிந்து உட்கார்ந்து விட்டேன்.           

                

                                       

       

       

 

 

லிமரிக் – நன்றி விக்கி

 

 

 

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி.பி.சதுர்புஜன்

புத்தகம் : The Wisdom Bridge

எழுதியவர் : Daaji Kamlesh D.Patel

          இது ஒரு பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியீடு. 2022-ல் வெளியிடப்பட்டது.

    தாஜி என்னும் கமலேஷ் டி. படேல், குளோபல் ஹார்ட்ஃபுல்னஸ் மூவ்மென்டின் நான்காவது மற்றும் தற்போதைய ஆன்மீக வழிகாட்டி. கடந்த 40 வருடங்களாக தாஜி உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஹார்ட்ஃபுல்னஸ் மெடிடேஷன் சொல்லிக் கொடுத்து வருகிறார். “தி ஹார்ட்ஃபுல்னஸ் வே”  (ஜோஷுவா போலாக்குடன்) மற்றும் “டிசைனிங் டெஸ்டினி” ஆகிய இரு நூல்களை ஏற்கனவே எழுதி இருக்கிறார் தாஜி. இந்தியாவிலுள்ள கன்ஹா சாந்தி வனத்தில் தன்னுடைய குடும்பத்தினருடனும், பேரக் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார் தாஜி.

   இந்நூல் எதைப்பற்றியது ?

   இன்று குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. தாத்தா பாட்டி ஓர் ஊரிலும் உற்றார் உறவினர் ஒரு நாட்டிலும், வளர்ந்து வரும் பேரன் பேத்திகள் வேறு ஒரு நாட்டிலும் என்று பலவிதமாக குடும்பங்கள் பிரிந்து வாழ்வது இன்றைய நிதர்சனம். அனைவரும் சேர்ந்து வாழ்ந்த ஒரு காலத்தில் தாத்தா பாட்டிகள், பேரன் பேத்திகளை நேரே கவனித்து வம்சாவளியாய் தாங்கள் கற்றுணர்ந்ததை எல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொய்வில்லாமல் வழங்கி வந்தார்கள். ஆனால், இன்று தலைமுறைகள் பிரிந்து கிடப்பதால், அது அந்த பழைய முறையில் செய்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால், அதே நேரத்தில் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் செல்ஃபோன், வீடியோ கால், வாட்ஸப் என்ற தொலைத் தொடர்பு வழிகளின் பெருக்கத்தால், ஓரளவு இந்த பிளவை சரிக்கட்ட முடிகிறது.

    தாஜியின் இந்நூல் இன்றுள்ள பெற்றோர்களுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் தங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இன்றைய வளர்ப்பு முறையில் உள்ள சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, எந்தெந்த பருவத்தில் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறது.

    இதற்கு வேண்டிய ஒன்பது  கொள்கைகளை வரிசைப்படுத்துகிறார் தாஜி. குழந்தை பிறப்பதற்கு முன்பே பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறார். பிறகு வளரும் குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் எந்த விதத்தில் நாம் அவர்களுடைய பூரணமான, ஆரோக்கியமான, ஆனந்தமான வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறார் தாஜி.

   இது பெற்றோராய் இருப்பவர்கள், தாத்தா, பாட்டியாய் இருப்பவர்கள் அனைவரும் படித்து பயன்பட வேண்டிய கையேடு. இந்நூலை நீங்கள் படித்துவிட்டு, மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம். நான் பரிபூரணமாக பரிந்துரை செய்கிறேன்.

                             **************************************************************

அதிசய உலகம்-9 -அறிவுஜீவி

அம்மா என்றால் அன்பு…

Octopus Reproduction: Birth, Life, Death and Birth Again. | HowStuffWorks

 

“அல்லி! இன்றைக்கு என்ன டாபிக்” என்றாள் அங்கயர்க்கண்ணி மாமி.

“மாமி. உலகில் ஐந்தாவது புத்திசாலி மிருகம் பற்றி தான் சொல்லப்போகிறேன்” என்றாள் அல்லிராணி 

“மாமி, “கொஞ்சம் இரு மனிதன், சிம்பன்சி, டால்பின், யானை, அப்புறம் ஆக்டோபஸ் தான்”.

அல்லி ஆச்சரியத்தில் மூழ்கினாள்.

மாமி சொன்னாள்: “அதுக்குத் தமிழில் பேய்க்கணவாய் என்று பெயர்”.

அல்லி, “சூப்பர் மாமி” என்றவள், ”ஆக்டோபஸ் பார்ப்பதற்கு ஏலியன் மாதிரி, எட்டு உறுப்புகள், மூன்று இதயம், எட்டு மூளை கொண்ட விசித்திர ஜந்து. எப்படிப்பட்ட புதிர்வழி, அதாவது maze அமைத்தாலும் அதிலிருந்து வெளியே வரக் கூடிய அறிவு படைத்தது. எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உருமாற்றம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. பாதுகாப்புக்காக எதிரிகள் மீது விஷத்தையும் கக்கும். பெண் ஆக்டோபஸ் ஒருமுறையே கருத்தரித்துக் குஞ்சு பொரிக்கும். நான்கு வருடங்களே உயிர் வாழும்” என்றாள்.

மாமி,  ”மேட்டருக்கு வாடி!” என்றாள்.

அல்லி சிரித்தாள்.

”மாமி இன்று ஒரு ஆக்டோபசின் மர்மக்கதை சொல்லப்போகிறேன். ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு கலிபோர்னியாவில் ஒரு ROV (Remote operated vehicle) மூலமாக 4600 அடி ஆழத்தில் சமுத்திரத்தின் அடித்தளத்தில் கண்ட காட்சி இது. அங்குக் கல்லால் ஆன கட்டை  ஒன்றில் ஒரு ஆக்டோபஸ் படுத்துக்கிடந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு அது என்ன செய்கிறது என்று விளங்கவில்லை. அண்மையில் தான் அந்த ஆக்டோபஸ் அங்கு வந்திருக்கவேண்டும். மறுபடி ஒரு மாதத்துக்குப் பின் அந்த ஆய்வாளர்கள் அங்கு சென்ற போது அதே காட்சி. அதே இடத்தில் அதே ஆக்டோபஸ் படுத்துக்கிடந்தது. இம்முறை அது ஒரு பெண் ஆக்டோபஸ் என்பதைக் கண்டு கொண்டனர். அது எந்த பாதுகாப்பு முறையும் செய்து கொள்ளாமல் அப்படியே கிடந்தது. மறுமாதமும் இதே நிலை. ’ஒரு வேளை அந்த ஆக்டோபஸ் உடல் நலம் குறைந்ததோ? அல்லது காயம் பட்டதோ?’ ஏதோ ஒன்றை மறைத்துக் கொண்டிருக்கிறது போல் தோன்றியது.

சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் மறுபடியும் மறுபடியும் 18 முறை வந்து பார்த்தனர். அந்த ஆய்வுகளில், அதற்குக் காயம் பட்டிருப்பதையும், அது எந்த உணவும் உண்ணாமல் இருந்ததையும் பார்த்தனர். முடிவில் கண்டது இது தான். 150 முட்டைகளை தனது எட்டு உறுப்புகளால் மூடி எதிரிகளிடமிருந்து வருடங்கள் பல, உண்ணாமல் ஓயாமல் காத்திருக்கிறது.

கடைசி முறை ஆய்வாளர்கள் போன போது, அந்த ஆக்டோபஸ்சைக் காணவில்லை. பொதுவாகவே, முட்டைகள் பொரித்ததும் தாய் உயிரை விட்டு விடுமாம். அந்த இடத்தில் 150 முட்டைக்கூடுகள் விரிந்து கிடந்தது. மக்களைப் பெற்ற அந்த மகராசி குஞ்சுகளைப் பெற்று அதைக் கண்ட பின் தன்னுயிரையும் விட்டாள். எந்த உயிரினங்களிடமும் தியாகம் செய்து அன்பு செய்வதில் தாய்க்கு மிஞ்சுவது ஒன்றும் இல்லை.”

கதை கேட்ட அங்கயர்க்கண்ணி மாமியும் கண்கலங்கினாள். ‘அம்மா என்றால் அன்பு’ என்று அவள் வாய் முணுமுணுத்தது.  

 இது ஒரு அதிசய உலகம்!

 

https://www.exploredplanet.com/info/hidden-from-scientists-prying-eyes-an-octopus-finally-reveals-what-it-was-guarding/?utm_source=nv&utm_campaign=2ua-mi-us-r-0-0-230512-ep-nv-0&utm_medium=21058&utm_content=550229-nv&utm_term=463757&utm_cpc=0&ios=1&safari=1&A1c=1&T2c=1&T4c=1&T5c=1&A5c=1&D_4_6cALL=1&D_4_6_10cALL=1&T7c=1&M7c=1&M10c=1&A10c=1&D_10_20cALL=1&M12c=1&M15c=1&chrome=1

 

 “பதட்டத்தை வென்றவள்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Yoga Benefits In Tamil,கவலையாக இருக்கும்போது செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்  என்ன? - 5 yoga poses to try out when you are worry and anxiety in tamil -  Samayam Tamil

மைதிலி முப்பத்து நான்கு வயதானவள், தனியார் வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள். அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது தேவையான பொருட்களைப் பல்பொருள் அங்காடியில் வாங்கி, பணம் கட்டும் வரிசையில் காத்திருந்த போது ஏதோ செய்தது. வேர்வை ஊற்றியது, இருதயம் வேகமாக அடித்துக்கொண்டது.  மயக்கம் வந்து விடுமோ எனப் பயந்ததால் வாங்கிய பொருளை அங்கேயே விட்டு வெளியே ஓடினாள். உடனே சுதாரித்துக் கொண்டாள். ஆனால் வெட்கம் கலந்த குழப்பம் மனதைத் துளைத்தது.

இவ்வாறு ஆனது மைதிலியை மிகவும் உலுக்கியது.  தான் வெளியே வந்த விதமும் வியத்தது. மீண்டும் இவ்வாறே ஆகிவிடுமோ எனப் பயம்.  அங்காடிக்கு மறுமுறை செல்லும்போதும் நடந்திடுமோ என்ற சிந்தனை ஓட, பதட்டம் வருவதுபோல் தோன்றியது. மைதிலி இனிமேல் பல்பொருள் அங்காடிக்குப் பதிலாக அருகில் உள்ள சிறு கடைகளில் வாங்க முடிவெடுத்தாள்.

நாட்கள் ஓடின. மைதிலி வழக்கம் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தாள். நடுவழியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. வாகனத்தை யார் மீதாவது மோதிவிடுவோமோ என அஞ்சி வாகனத்தைச் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டாள். உடனே மனதில் நிம்மதி நிலவியது.‌ இனிமேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என முடிவு செய்தாள்.

இதேபோல் கூட்டமான இடங்களில் பதட்டம் ஏற்படுகிறது எனக் கண்டுகொண்டாள். மைதிலி ஓர் முடிவிற்கு வந்தாள். பலபேர் இருக்கும் இடங்களான கடைத்தெரு, லிப்ட், சினிமா அரங்கம் இவற்றிற்குப் போகாமலிருக்க முடிவு செய்தாள்.

முதலில் குடும்பத்தினர் இதைச் சகித்துக் கொண்டார்கள். ஒவ்வொன்றாகக் கூட, சலித்துக் கொண்டார்கள்.‌ இதைக் கவனித்த மைதிலி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தாள். பலவற்றைத் தவிர்ப்பது வேலையிலும் கடினமானது. தொலைக்காட்சியில் மனநலம் பற்றிய உரையாடல் கேட்க, மனநல ஆலோசகரைச் சந்திக்க முடிவெடுத்தாள்.‌

என்னை ஆலோசிக்க வந்தபோது, மைதிலியை தன் நலனில் கண்ட  மாற்றங்களை விவரிக்கச் சொன்னேன். ஸெஷன்கள் பற்றி வர்ணித்து, பதட்டத்தைப் புரிந்து விடைகள் காண முயல்வதற்குக் குறைந்த பட்சம் பத்து ஸெஷன்களுக்கு வரவேண்டியதாக இருக்கும் எனக் கூறினேன்.

காரணிகளை அறியவே மைதிலி அனுபவித்த பதட்டத்தை விலாவாரியாக வர்ணிக்க வைத்தேன். இன்னல்களின் விவரிப்பு, எப்போது, ஏன் நேர்கிறது என்று அறிவதற்கான ஸெஷன்கள் தொடங்கின.

ஒவ்வொரு முறையும் ஆனதை விவரித்ததிலிருந்து தெளிவானது, பதட்டம் ஏற்பட்டது உடலில் ஏதோ விபரீதத்தினால்தான் என மைதிலி நினைத்து விட்டாள். அசல் காரணம் மனதில் ஏற்படும் பெரும் பயத்தினால். சில சமயம் பல்வேறு சின்னச்சின்ன கவலைகள் கூடிக்கொள்ளும்போது, “இவற்றை எப்படிச் சமாளிப்பது?” என்ற திண்டாட்டம் தலைக்குமேல் வரும் வெள்ளம் போலத் தோன்றி, திகில், பதட்டத்தில் கொண்டு விட்டுவிடும். இதை எங்கள் துறையில் பேரழிவுச் சிந்தனை (catastrophic thinking) என்போம்.

அதாவது முதன்முதலாகப் பதட்டம் நேரும் போது மைதிலி பரபரப்பான  இடத்திலிருந்தாள். அந்நேரத்தில் பல சிந்தனைகள் ஓடோடிக் கொண்டிருந்தன. உதாரணமாக, நீளமான வரிசையில் காத்திருப்பதினால்  வீட்டிற்குப் போய்ச் சேர்வது தாமதமாகும். இரவுச் சமையல் காத்திருக்கும். பிள்ளைகளுக்குத் தாமதமாக உணவு தருவதால் கணவனின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். நேரம் ஆக ஆக, இவை யாவையும் சிந்தனையில் ஓட, இருதயம் துடித்து, வியர்வை ஊற்ற, தலை சுற்றுவது ஆரம்பமானது.

பதட்ட உணர்வுகளால் உடலில் மயக்கம் வந்ததில் வெட்கமும் சேர்ந்துகொண்டது, உடல்நிலை ஒவ்வொன்றும் அதிகரித்தது. வெளியே ஓடினாள். எல்லோர் முன்னாலும் விழப் போவதில்லை என்ற கவலை நீக்கம் உடலைச் சுதாரித்து விட்டது. மீண்டும் அங்காடிக்குள் போனால் மறுபடி பதட்டம் வந்து விடுமோ என்று போவதைத் தவிர்த்தாள் மைதிலி. பேரழிவுச் சிந்தனையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இவ்வாறு தவிர்த்தல் (avoidance) எனும் யுக்தியைக்  கைப்பிடித்தாள்.

வெளிப்பட்ட இந்த இரண்டை எடுத்துக் கொண்டோம். முதலாவதாகப் பேரழிவுச் சிந்தனையை. அந்தச் சம்பவத்தை மேலும் உன்னிப்பாகப் பார்க்க, தனக்கு வீடுதிரும்ப நேரம் ஆகிறது, பிள்ளைகள் பசியுடன் காத்திருப்பார்கள், கணவன் கோபம் கொள்வான் என்றெல்லாம் கவலை அழுத்தியது. அதிலிருந்து பீதி நிலைக்கு நகர்ந்தபோது பல சந்தேகச் சிந்தனைகளான “மயக்கமா?”, “கட்டுப்பாட்டை இழந்தால்?”, “ஏதோ நடக்கப் போகிறது” என்ற கவலை எல்லாமும் சூழ்ந்து கொண்டது.

இந்தச் சிந்தனைகளைத் துல்லியமாக எடுத்துப் பார்த்தோம். உதாரணத்திற்கு, மைதிலிக்கு மயக்கம் போட்டு விடுவோமோ எனத் தோன்றியது. அவளது இருதயம் வேகமாக அடித்ததால் இந்த மாதிரி நினைத்தாள். இதை மேலும் பரிசோதனை செய்து பார்த்தோம். பெரும்பாலும், இருதயத் துடிப்பு குறைந்தால்தான் மயக்கம் வரும். மைதிலி புரிந்து கொண்டாள், மயக்கம் வரும் என்று எண்ணியது தவறு, இருதயம் வேகமாக அடித்தது பயத்தினால், பீதி அடைந்ததால்தான். . இந்த நிலையிலிருந்து மீண்டு வர சில வழிமுறைகளை வகுத்தோம்.

மைதிலி தினசரி வாழ்வில் அவசரம், பரபரப்பு ஏற்படும்போது அவற்றைத் தவிர்த்து விடாமல், அந்த நேரங்களில் உடல் மன அளவில் நடைபெறுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.‌ தயக்கம், முடியாது என்கிற சந்தேகம் தோன்றினால், அது முதலில் உடலில்தான் காட்டுகிறது என்பதை நாளடைவில் உணர்ந்தாள். மனத்தின் பிரதிபலிப்பே உடலில் வெளிப்படுகிறது எனப் புரிய வந்தது.

இந்தப் புரிதல் வந்ததும், கவலை, பீதி நேர்ந்தாலும் அவற்றைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வர ஆரம்பித்தது.‌ அஞ்சாமல் இருப்பதால், மனதிற்கு இதமாக இருப்பதைக் கூறினாள். சிந்தனை ஆற்றலின் தாக்கம் உணர்வின் மேலானதைப் புரிந்ததும், உணர்வுகள் நாம் தானாகச் சிதைப்பதுதான் எனக் கண்டுகொண்டாள். 

தவிர்த்தல் யுக்தி தேவையா? இதை ஏன் செய்கின்றோம்? எனப் புரிய ஸெஷன்கள் தொடங்கியது.‌

மைதிலியை எவையெல்லாம் தவிர்த்தல் செய்கிறாள், அவற்றில் எது, எத்தனை சதவீதம் பதட்டம் தந்தது என்று குறித்துக் கொள்ளப் பரிந்துரைத்தேன். இந்த சேகரிப்பு சில வாரங்கள் எடுத்துக் கொண்டது.

அடுத்த கட்டமாக அவற்றை வரிசைப்படுத்தினோம். செய்வதில் அலுப்போ பயமோ உணராமல் இருக்க, குறைவான சதவீதம் பெற்றவையை முதலில் எடுத்துக் கொண்டோம்.

தேர்வு செய்யப்பட்டவற்றை ஸெஷன்களில் தவிர்த்தால் என்ன, செய்தால் என்ன என்று அலசி ஆராய்ந்தோம். இதுவரைக்கும் சந்தித்தது, தவிர்த்தலிருந்து அதனுடைய செயல்பாடுகள் எப்படி, விளைவுகள் என்னென்ன, எப்படி மாற்றிச் செயல்பட முடியும் எனப் பார்த்து வந்தோம். இவற்றை ரோல் ப்ளே செய்தோம், அதாவது மாறுபட்ட செயல்பாட்டு முறைகளை  ஸெஷனில் பயின்று பார்ப்பது. இவையெல்லாம் மைதிலியைத் தயாராக்கி தைரியம் கூட்டியது. மனதில் வரைபடம் போலச் சித்தரித்துச் செய்யத் தொடங்கினாள்.

செய்யச் செய்ய தன்னால் முடிகிறது என்றது நிரூபணமாக, அதிக சதவீதம் பெற்றதைச் செய்யவும் முழு மனதுடன் முயன்றாள். உதாரணத்திற்கு, மீண்டும் மைதிலி பல்பொருள் அங்காடியில் சென்றாள், அவ்வளவு கூட்டம் இல்லாத நேரத்தில். பொருட்கள் வாங்கி, பணம் கொடுத்து, ஓரளவுக்கு நிதானத்தைக் காக்க முடிந்தது.

இதை மேலும் சுதாரித்துக் கொள்ள, தனக்கு நேர்ந்த உணர்வு, உடல் மாற்றம் பிரித்து, ஒன்றின்மீது ஒன்று செய்யும் தாக்கத்தைக் குறித்துக் கொண்டாள். . இதனால் தெளிவு பெற்று, மைதிலி அதிகக் கூட்டத்தில் போய்ப்பார்க்க ஆரம்பித்தாள். இந்தத் தூண்டுதல் நன்றாக ஆவதைக் காட்டுகிறது. படிப்படியாக அதிகமான கூட்டம் இருக்கும் நேரத்தையும் தேர்வு செய்து அதற்கும் முன் போல் சதவீதம் தந்து, பயின்று செயல்படுத்தினாள்..

அவ்வப்போது சஞ்சலம், பயம் ஊசலாடியது. இவை நேரும் போதெல்லாம் அவற்றை எவ்வாறு கையாளுவது எனத் தெரிந்தது தெம்பு கொடுத்தது. அது மட்டுமின்றி இவ்வாறு நேர்வதால் ஆபத்து ஏதும் ஏற்படாதது மேலும் தைரியம் கூட்டியது. வந்தபோது எவையெல்லாம் செய்ய வேண்டும் என்றாளோ, அதன்படி நடந்து கொண்டாள்.

இந்த முதல் கட்டத்தில் வென்றவுடன் மேற்கொண்டு செய்ய முடியும் என்ற நிர்ணயித்து, மற்ற கடினமான சூழ்நிலைகளையும் சந்திக்கத் தானே முயன்று கொண்டிருக்கிறாள். இலக்கை அடைவேன் என்ற மனத்திடத்துடன்  மைதிலியின் பயணம் தொடர்கிறது.

*********************************

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

 

 

 

 

 

 

நானும் இசையும்!

வாட்ஸ் ஆப் குழுமங்களில் சில சமயங்களில் நல்ல விஷயங்களும் நடக்கின்றன. அழகிய சிங்கர் ‘இசை புதிது’ என்ற ஒரு குழுவைத் தொடங்க, அதில் 70 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள் – பாடல்கள் இயற்றுவது, பாடல்கள் பாடுவது, இசை குறித்த சந்தேகங்களை விவாதிப்பது, சங்கீத சம்பந்தமான குவிஸ் என காலை ஐந்து முதல் இரவு 11 வரை ஒரே இசை மழை!

சின்ன வயதிலேயே இசை என்னுடன் வந்தது. அம்மாவின் அம்மா, பாட்டி வீட்டில் எல்லோரும் பாடுவார்கள். அந்தக் காலத்தில், வீட்டுப் பெண் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பது என்பது ஒரு மரபு! பெண் பார்க்க வந்தால், ஓரிரு கீர்த்தனங்களைப் பாடச் சொல்வது வழக்கம். அதற்காகவேனும் கொஞ்சம் பாட்டு சொல்லிக்கொள்வார்கள் – பெரிய கச்சேரி செய்யும் எண்ணங்கள் எல்லாம் இருக்காது. அதையும் மீறி ஓரிருவருக்கு சங்கீதம் மீது விருப்பம் இருந்தாலும், குடும்பம் குழந்தைகள் என, மேலே சங்கீதம் பழக வழியிருக்காது. இப்போது காலம் மாறிவிட்டது – நிறைய குழந்தைகள் பாட்டு கற்றுக்கொள்கிறார்கள் – கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம், கிராமீயப் பாடல்கள், திருமறைகள், பிரபந்தங்கள், பாரதியார் பாடல்கள் என எல்லாவற்றுக்கும் இப்போது வகுப்புகள் நடக்கின்றன. புதுக்கவிதைகளைக் கூட இசைவடிவில் கேட்கமுடிகிறது. வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான்.

ஆல் இந்தியா ரேடியோ வில் நிலைய வித்வான்களின் வாத்திய இசை, வாய்ப்பாட்டு இவை தவிர, ஒரு மணி நேரக் கச்சேரிகள் என கேட்டு மகிழ்ந்த காலம் என் இளமைக் காலம். இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை அரங்கிசையில் அப்போது பிரபலமாயிருந்த ஜி என் பி, மதுரை மணி, செம்மங்குடி சீனிவாச அய்யர், தண்டபாணி தேசிகர், மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ், எம் எல் வி, ராதா ஜெயலட்சுமி போன்றோரின் வாய்ப் பாட்டு, துரைசாமி ஐயங்கார், எஸ் பாலச்சந்தர், சிட்டிபாபு வீணை, செளடய்யா, டி என் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வயலின் என ஒலிபரப்புவார்கள். மாலை ஆறு மணியிலிருந்தே வேலைகளை முடித்து, ரேடியோவின் முன் வந்து அமர்ந்து கொள்வார்கள் – பெரிய சபாக்கள், கச்சேரி சீஸன்கள் இல்லாத காலம். அனைத்து இசைக் கச்சேரிகளும் ரேடியோவில்தான்!

சென்னை போன்ற பெரிய நகரங்களில் சபாக் கச்சேரிகள் நடக்கும். டிவி வந்தபிறகு, கச்சேரிகள் குறைந்துவிட்டதாகவே தெரிகின்றன. இப்போது விரல் நுனியில், யூ டியூப் எல்லா கச்சேரி, சினிமா, தனிப் பாடல்களையும் ‘செல்’வழி நம் பாக்கெட்டுக்குள் கொண்டு வந்து விட்டது!

சினிமாப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கர்நாடக இசையில் விருப்பம் வந்தது யேசுதாஸ் அவர்களின் ‘சிந்துபைரவி’ படப் பாடல்களைக் கேட்ட பிறகுதான். அதன் பிறகு மகாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா, கே.வி.என்., மதுரை சேஷகோபாலன், சஞ்சை சுப்ரமணியன், மல்லாடி பிரதர்ஸ், டி.எம்.கிருஷ்ணா, சுதா ரகுனாதன், பாம்பே ஜெயஶ்ரீ என எல்லோருடைய பாட்டுகளையும் கேசட் / சிடி வடிவில் வாங்கி, இருபத்தி நான்கு மணி நேரமும் இசையுடன்தான் நாட்கள் நகர்ந்தன! அவ்வப்போது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் சபாக்களிலும் கச்சேரி கேட்பதுண்டு. அதன் அனுபவமே தனிதான்.

இசையை ரசிப்பது என்பதே ஒரு கலைதான்! என் மரியாதைக்குரிய குரு திரு பி ஆர் வெங்கடசுப்ரமணியன் மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் – கீ போர்ட் ஆர்டிஸ்ட், பாடலாசிரியர், பரதநாட்டியங்களுக்கு பாடல் மற்றும் இசையமைப்பது என பன்முகங்கள் கொண்டவர். ராகங்கள் பற்றியும், தாளங்கள் பற்றியும், ஒரு பாடலை எப்படி ரசிப்பது என்பது பற்றியும் அவரிடம் இருந்து நான் நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆர்மோனியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் – முறையாகப் பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேன்! ஆனாலும் எங்கள் வீட்டு ஐயப்பன் பூஜையில் பாடும் பாடல்களைப் பாடி அவற்றை முறைபடுத்திக்கொண்டேன்! எப்போது சங்கீதத்தில் எந்த சந்தேகம் வந்தாலும், உடனே அவரிடம் கேட்டுக்கொள்வேன். எழுத்து, இலக்கியம் என சிறிது பாதை மாறிவிட்டாலும், இசைக்கென செலவிடும் நேரம் குறைந்து விட்டாலும், இசையின்பால் உள்ள ஈர்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு திரு வெங்கடசுப்ரமணியம் ஒரு முக்கியமான காரணம்.

ஃப்ராங்க் தாமஸ், என் ஆசிரியர் ஶ்ரீனிவாஸ் அவர்களின் பி.ஏ.வாக இருந்தவர். தாமஸுக்கு இசையின் மீது இருந்த காதல் சொல்லிமாளாது! டி.எம்.எஸ். குரலில் மெல்லிசைக் குழுக்களில் பாடுவது அவரது பொழுதுபோக்கு. எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பழைய பாடல்களைப் பாடிப் பொழுதைப் போக்குவோம்! அவரது மெல்லிசைக் குழுவில் ஓரிரு முறை நான் பாடியிருக்கிறேன்! அவர் கர்நாடக இசை கற்றுக்கொள்ள மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகில் வசித்து வந்த திரு பத்மனாபன் (செம்பை அவர்களின் சிஷ்யர்) அவர்கள் வீட்டுக்குச் செல்வார். ஆசை யாரை விட்டது? தோளில் ஜோல்னாப் பையில் இசைப் பயிற்சி புத்தகத்துடன் மதியங்களில் அவர் வீட்டிற்குச் சென்று பாட்டு கற்றுக்கொண்டது ஒரு காலம்! நேரமின்மை, சோம்பல் என என் இசைப் பயிற்சி பாதியிலேயே – கீதம் வரையில் -நின்றுபோனது. கற்றுக்கொண்ட சில துக்கடாக்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. என் இசைப் பயிற்சி, என் இசை ஆர்வம் இவற்றை உடனிருந்து வளர்த்து விட்ட தாமஸ், ஒரு நாள் விடியற்காலை மறைந்துவிட, அவர் நினைவுகளும் அவருடன் பாடிய பாடல்களும் மட்டும் என் நினைவில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கேசட்டுகளைம், சிடி க்களையும் கொடுத்துவிட்டேன். சிலவற்றை மட்டும் ‘பென் டிரைவி’ல் சேமித்து வைத்துள்ளேன். அவ்வப்போது கேட்கும்போது இருபத்தைந்து வருடத்துக்கு முந்தைய நினைவுகள் இசையாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன!

இப்போது மீண்டும் ‘இசை புதிது’ குழுவில், பாட்டுக்களையும், தொண்டையையும் தூசி தட்டி எடுத்துப் பார்க்கிறேன். இசை வல்லுனர்கள், ஸ்மியூல் மற்றும் கரோக்கியில் பாடுபவர்கள், திருமறை, திருப்புகழ் முறையாகப் பாடுபவர்கள், பாடல் புனைபவர்கள், சினிமாப் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என ஒரு திறமைகள் நிறைந்த குழு அது. தினமும் ஒரு ராகம், அதில் உள்ள கர்னாடக இசைப் பாடல்கள், சினிமாப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என அனைவரும் கலக்குகிறார்கள். இதில் சிலர் இந்திப் பாடல்களும் பாடுகிறார்கள். இங்கும் கிடைக்கும் நேரத்தில் எல்லோருடைய பாடல்களையும் கேட்கிறேன் – அவ்வப்போது பாடி, ‘இவனே பாடும்போது நமக்கென்ன?’ என்று மற்றவர்களை நினைக்க வைத்து, அவர்கள் தொடர்ந்து பாடுவதற்கு உதவி செய்கிறேன்!

இலக்கியத்தில் செய்வது போல, இசையிலும் பலருக்கும் வாய்ப்பளித்து ஊக்குவிக்கும் அழகியசிங்கர் பாராட்டுக்குரியவர்.

இசையை பற்றி பேச நிறைய இருக்கின்றது – என் இசைப் பயிற்சியைப் போல, பாதியிலேயே இங்கு நிறுத்திக் கொள்கிறேன் – மீண்டும் நேரம் கிடைக்கும்போது இந்த இ(ம்)சைக் கட்டுரையைத் தொடர்வேன்!