Image

Advertisements
Standard
image

 

ஜெயகாந்தானுக்கு அஞ்சலி!

Standard
image

தமிழ் இலக்கிய வட்டத்தின் ஒரு பெரும் ஆரமாக விளங்கியவர் ஜெயகாந்தன் என்பதில் சந்தேகமேயில்லை! 

மீசை வைத்த பாரதியைப் போல் இவரும் மீசை முறுக்கும் எழுத்தாள்மையாளர். 

இவரது படைப்புகள் 

வாழ்க்கை அழைக்கிறது, கைவிலங்கு,யாருக்காக அழுதான், பிரும்ம உபதேசம் ,பிரளயம், கருணையினால் அல்ல, பாரிசுக்குப் போ , கோகிலா என்ன செய்துவிட்டாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெய ஜெய சங்கரா, கங்கை எங்கே போகிறாள், ஒரு குடும்பத்தில் நடக்கிறது, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, கரிக்கொடுக்கள், எங்கெங்கு காணிலும், மூங்கில் காட்டினிலே, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், ஊருக்கு நூறு பேர், ஒவ்வொரு கூரைக்கும் கீழே, பாட்டிமார்களும் பேத்திமார்களும், அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள், இந்த நேரத்தில் இவள், காத்திருக்க ஒருத்தி, காரு, ஆயுத பூசை, சுந்தர காண்டம், ஈஸ்வர் அல்லா தேரே  நாம் . ஓ அமெரிக்கா, இல்லாதவர்கள், இதய ராணிகளும் இஸ்பேட்டு ராஜாக்களும், காற்று வெளியினிலே, இன்னும் ஒரு பெண்ணின் கதை, ரிஷிமூலம், சினிமாவுக்குப் போன சித்தாள், உன்னைப்போல் ஒருவன், அற்புதம், 

பாரதி பாடம், இமயத்துக்கு அப்பால், கட்டுரைகள்  எழுதியவர். 

சில கதைகள் அருமையான திரைப்படங்களாகவும் வந்துள்ளன. 

மற்றும் எண்ணற்ற சிறுகதைகள்.அவற்றுள் முக்கியமானவை அக்கினிப் பிரவேசம். ஒரு பிடி சோறு. .எல்லா சிறுகதைகளிலும் தனது  தனி முத்திரையைப் பதித்தவர்.. 


பத்ம பூஷண், ஞானபீடம் ,சாகித்ய அகாடமி, மற்றும் பல உலக விருதுகள் பெற்றவர். 

ஜெயகாந்தனின் சுய சரிதைப் பாடலைக்  கேளுங்கள்! 

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ

வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ

பொன்னியின் செல்வன்

Standard

இந்தக் கோடையில்   பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை! 

இரண்டு அணிகள் பொன்னியின் செல்வன் நாடகத்தை மேடையேற்றப் போகிறார்கள்.

1999 இல் முதல் முறையாக மேடையேற்றினார்கள். அதன் புகைப்படம் கிடைக்கவில்லை!

அதைப் போல் TKS புகழேந்தி அவர்களும் ’ பொன்னியின் செல்வன் – நந்தினியின் பார்வையில்’ என்ற நாடகத்தை 2005 லிருந்து நாலைந்து முறை மேடையேற்றியிருக்கிறார்களாம். அதுபற்றி புகைப்படமோ மற்ற தகவலோ இல்லை! 

 இது சிகாகோ தமிழ்ச்சங்கம் 2014இல் மேடையேற்றியபோது எடுத்த படம்.!


image


இது 2014இல் சென்னையில் மேஜிக் லேண்டர்ன் மேடையேற்றிய வெற்றிப் படைப்பில் எடுத்த புகைப்படம் ! 

image


இது  இந்த மாதம் மேடையேற்றப்பட்ட  ஸ்ரீதேவி ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கும் ஆடுதுறை SSN சபாவின் தயாரிப்பு! 

பொன்னியின் செல்வன் கதையைப் படிக்காதவர் ஒருவர் நாடகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட ஒருவரை குவிகம் ஆசிரியர் அழைத்துச் சென்று  SSN  சபாவின்  நாடகத்தைப் பார்க்க வைத்தார். அவரின் விமர்சனத்தை அடுத்த  பக்கத்தில் பாருங்கள்! 

அந்த நாடகத்தில் வந்தியத் தேவனும் ஆதித்திய கரிகாலனும் உரையாடும் இடம் இது!

image
image

மறுபடியும்  மேஜிக் லேண்டர்ன் 2015 ஜூலையில் மேடையேற்றுகிறார்கள்! 

image

இன்னுமொரு இனிக்கும் செய்தி! 

பொன்னியின் செல்வன் கிராஃபிக்கில் வலம் வரப் போகிறது! சென்னையின் REWINDA MOVIETOONS ‘நந்தினி கலைக் கூடம்’ என்ற பலகையில் பொன்னியின் செல்வனை   2 டியில் கொண்டு வருகிறார்கள்! 

ஏழு வருட உழைப்பு! 15 டி‌வி‌டிகள்!  இந்த மாதம் ஏப்ரலில் வெளிவர இருக்கிறது! 

வாங்கத் தயாராகுங்கள்! 

அதன் டிரைலர் இதோ! 

பொன்னியின் செல்வன் – நாடக விமர்சனம் (எஸ்.கே.என் )

Standard
image


நாடகத்தைப்  பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் முன் :-

‘கிடுக்கிப்பிடி எழுத்தாளர்’ என்றும்
அறியப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்திராத ஒருசிலரில் நானும் ஒருவன்.
சுத்தமாக கதையும் தெரியாது. ஆகவே கல்கியின் படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும்,
நாடகத்தில் சொல்லப்படும் முறையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய சிரமம்
இல்லை. கதை புரியவேண்டும் நல்லமுறையில் சொல்லப்படவேண்டும் அவ்வளவுதான்.

பிரபலமாகிவிட்ட நாவல்களை நாடகம் அல்லது
சினிமாவிற்கு கொண்டுவரும்போது வேறொரு சிக்கலும் உள்ளது. சில  பாத்திரங்களை வாசகர்கள் மனதில் உருவகப்படுத்தி
இருப்பார்கள். நடிப்பவர்கள் அந்தக் கற்பனைக்குச் சமீபமாக இல்லாவிட்டால் அந்த
சினிமாவோ நாடகமோ அவர்களைக் கவராது.
அதிலும் கல்கிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் லட்சக்கணக்கில் அபிமானிகளும்,
ஆயிரக்கணக்கில் உபாசகர்களும் உண்டாயிற்றே..

‘மோகமுள்’ ஜமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர்,
‘தில்லானா மோகனம்பாள்’ வைத்தியாக நாகேஷ், பாரதியாக சயாஜி ஷிண்டே. என்று மிகப்
பொருத்தமான நடிகர்கள் அப்படத்தின் வெற்றிக்கு ஓரளவிற்குக் காரணமாகிறார்கள்

பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்
படுத்திய அளவில் ஆடுதுறை எஸ்.எஸ்.என் சபாவின் நாடகத்தைப்
பற்றி எனது கருத்துக்கள்.

ஐந்து பாகங்கள், ஏகப்பட்ட கதை மாந்தர்கள்,
அதிகமான நிலை களங்கள்,   மூன்று
க்ளைமாக்ஸ்கள், இரண்டு சஸ்பென்ஸ்கள், என்று பல சவால்களைக் கொண்ட இந்த பெரும்
படைப்பை மூன்றரை மணிநேர  நாடகமாக்கிய
முயற்சி பாராட்டத்தகுந்ததே..

 

ரசித்தவை:

 •  சிக்கலான இந்தக் கதை புரியும் வகையில் விறுவிறுப்பாகவே  சொல்லப்பட்டு இருக்கிறது
 •  சரித்திர நாடகமாகையால் வசனங்கள் இலக்கணத் தமிழில் நெருடல் இல்லாமல்
  எழுதப்பட்டுள்ளன. உச்சரிப்பு (இது தற்காலப் பெரிய பிரச்சினை) மிகவும் சிறப்பு.
  (‘ழகரம்’ நன்றாகவே அனைவரும் உச்சரிக்கிறார்கள். ‘லகரமும்’ ‘ளகரமும்’ சிலர்
  திண்டாடுகிறார்கள்)
 • காட்சி அமைப்புகளும் அருமை. ‘மூடு பல்லக்கு’ , கடலில் ‘படகு’, ‘யானை’,
  ‘கப்பல் விபத்து’ ஆகியவை சிறப்பாகவே மேடையில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
 • இரண்டு “FLASH BACK”
  மட்டுமே.   நன்றாகவும் வந்திருக்கிறது
 • எல்லா நடிகர்களுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.  அதிலும்  ‘ஆழ்வார்க்கடியான்’, ‘நந்தினி’ இரு சவாலான
  பாத்திரங்களை இயக்குனரும் அந்த நடிகர்களும் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். கடம்பூர் அரண்மனையில் ஆதித்ய கரிகாலன் நடிப்பும்
  வசனங்களும் மிகச் சிறப்பு.
 • எல்லாவற்றிற்கும்
  மேலாக பார்வையாளர்கள்  நிறைந்த அரங்கம்
  கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.

சில நெருடல்கள்.

 • நாடகத்தின் இறுதி அரைமணிநேரத்தில் நாடகம் இரண்டு  மூன்று முறை முடிவடைந்து மீண்டும்
  தொடங்குவதுபோல் இருக்கிறது.
 • கதையை நகர்த்திச் செல்ல வரும் வசனங்களில் ரவிதாசன் என்னும் பாத்திரம்
  மூலமாக வரும் இடங்கள் சற்று குழப்பம். “Dialogue Delivery” பிரச்சினையாக
  இருக்கலாம்.
 • ஒரு சில இடங்களில் “எடிட்டிங்” தேவைப்படலாம். ஆதித்ய
  கரிகாலனின் மறைவின் சோகம், யாருக்கு மகுடம் ஆகிய இடங்களில் அவரவர் கருத்துக்கள்
  என்பவை நாடக பாணியில் ஒருவர் ஒருவராக அனைவரும் பேசுகிறார்கள். மதுராந்தக சோழன்
  மனமாற்றம் சற்று நீளம்.  
 • “Loose Ends”  ஒரு
  சில உள்ளன. இவை நாடக வடிவத்திற்கு மாற்றியதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்த அளவில் நாடகம்
ரசிக்கும்படியாக  சிறப்பாகவே இருந்தது.    

மன்மத வருட தணிகை பஞ்சாங்கம்

Link

இந்த ஆண்டு ஏப்ரல் 14 செவ்வாயன்று தமிழ்ப் புத்தாண்டு மலர்கிறது!

இந்த ஆண்டுக்குப் பெயர் மன்மத வருடம்.

கேட்பதற்கே ஜாலியாக இருக்கிறதல்லவா?

மேலே உள்ள லிங்க்கை கிளிக்கினால் வருட பஞ்சாங்கம் உங்கள் முன் விரியும்! (நன்றி: தணிகை பஞ்சாங்கம்!)

image
image

வானமென்னும் வீதியில் ஓடும் கிரகங்களின் நிலையை இவ்வளவு துல்லியமாக எப்படி இவர்களால் கணிக்க முடிகிறது? 

இதைப் பற்றி யாராவது வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும். 

மன்மத வருட தணிகை பஞ்சாங்கம்