விநாயகாய நமஹ !

image

ஓம் சுமுகாய நம:                    ஓம் ஏகதந்தாய  நம:

ஓம் கபிலாய  நம:                   ஓம் கஜகர்ணகாய நம:

ஓம் லம்போதராய  நம:         ஓம் விகடாய  நம:

ஓம் விக்னராஜாய நம:          ஓம் விநாயகாய நம:

ஓம் தூமகேதுவே  நம:           ஓம் கணாத்யக்ஷாய நம:

ஓம் பாலசந்த்ராய  நம:           ஓம் கஜானநாய  நம:

ஓம் வக்ரதுண்டாய நம:         ஓம் சூர்ப்பகர்ணாய நம:

ஓம் ஹேரம்பாய நம:             ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

                    ஓம் மஹாகணாதி பதயே  நம:


விநாயகர் பாடல்கள்

image

 

 • ஐந்து கரத்தனை  யானை  முகத்தனை
 • இந்தின் இளம் பிறை போலும்  எயிற்றனை
 • நந்தி  மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
 • புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
 • வாக்குண்டாம் நல்ல  மனமுண்டாம் மாமலராள்
 • நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
 • துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
 • தப்பாமல் சார்வார் தமக்கு.
 • பாலும்  தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
 • நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
 • துங்கக்  கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
 • சங்கத் தமிழ் மூன்றும் தா.
 • அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்பிறந்த
 • தொல்லை போம் போகாத்துயரம் போம்
 • நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு
 • கணபதியைக் கைதொழுதக் கால்.
 • விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
 • விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
 • விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
 • கண்ணிற் பணிமின் கனிந்து.
 • மங்கள த்து நாயகனே மண்ணாளும்  முதலிறைவா
 • பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
 • சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்
 • எங்கள் குலவிடிவிளக்கே எழில்மணியே கணபதியே
 • திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
 • பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
 • ஆதலால் வானவரும் ஆனைமுகத்தானைக்
 • காதலால் கூப்புவார் தம்கை. 

உள்ளே….

உள்ளே….

ஆசிரியர் பக்கம் 

குவிகத்தைப் பற்றி             

வரப்போகும் படங்கள் 

வாதவூரன் – நாடக விமர்சனம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல் வரிகள்

கவிதை – செம்மொழி 

மெட்ராஸ் ஐ  ஜோக்ஸ்

வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்!

தஞ்சாவூர் பெயிண்டிங்

கவிதை – முருகா முருகா  

அவர் நடித்த படங்களில் பிடித்தது  – சிவாஜி கணேசன்

கவிதை 

ராமாயண கிரிக்கெட்  (தொடர்)

கவிதை – குருவி குருவி 

சிசு கதைகள் 

மன்னர் ஜோக்ஸ்

கவிதை – சின்னஞ்சிறு பெண்ணே

பாரதியாரின் வரிகள்

நகைச்சுவை நடிகர்கள்

இந்த மாத ஸ்டார் சிறுகதை சுருக்கம் 

கவிதை 

மீனங்காடி  (தொடர் )

பழைய பேப்பர்

நாலு வரிக் கதைகள்

நாராயணீயாம்ருதம் 

ஆசிரியர் பக்கம்

                                     குவிகம் !

                                                                                     நவம்பர்1, 2013 

                   பூ : ஒன்று ————— இதழ் : ஒன்று 

 

                                     image

இந்த இதழைப்  படிக்கும் அனைவருக்கும் நன்றி!

குவிகத்தின்   நிறை – குறை பற்றிய

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்!

உங்கள்  கதைகள் கவிதைகள்   கட்டுரைகள் புகைப்ப டங்கள்  விமரிசனங்கள்   வரவேற்கப் படுகின்றன!

அடுத்த இதழில் – வழக்கமான பகுதிகளுடன்

வாசகர் கருத்து

கேள்வி பதில்

திரை விமரிசனம்

T  V  சீரியல் – அலசல்

சிறுவர்  இலக்கியம்

பொறிக் கணக்குகள்  

குழந்தைகளுக்கு  தமிழ்ப் பாடம்

மற்றும் 

உங்கள் விருப்பங்கள் இடம்பெறும்!

சுந்தரராஜன்

(ஆசிரியர்)

Editor and Publisher’s office address:

S.Sundararajan

B-1, Anand Flats,

50 L B Road, Thiruvanmiyur

Chennai 600041

போன்: 9442525191   

email : ssrajan_bob@yahoo.com

குவிகத்தைப் பற்றி …

குவிகத்தைப் பற்றி …

குமுதம்- விகடன்- கல்கி- குங்குமம் இவை நான்கும் தமிழ் நாட்டின் தலை சிறந்த இதழ்கள் !

   இவை தவிர மற்ற பத்திரிகைகள் தமிழில் ஏராளமாக உண்டு.

image

  இலக்கிய பத்திரிகைகள்  கலைமகள்,கணையாழி,தீபம்,அமுதசுரபி, காலச்சுவடு,மஞ்சரி.

பெண்களுக்கான பத்திரிகைகள்  –  சினேகிதி,மங்கை,மங்கையர்மலர்,அவள்,தோழி,தேவி

 குழந்தைகளுக்கான  பத்திரிகைகள் – சுட்டி,கோகுலம்,அம்புலிமாமா

ஜோசிய இதழ்கள் –சுபயோகம்,குமுதம்ஜோதிடம்,பாலஜோதிடம்

அரசியல் இதழ்கள் – துக்ளக்,நக்கீரன்,ஜூனியர்விகடன்,ரிப்போர்ட்டர்

சினிமா இதழ்கள் – சினிமாஎக்ஸ்பிரஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து

பக்தி இதழ்கள் – குமுதம்பக்தி,சக்திவிகடன்,ஆலயம்

பாக்கெட் நாவல்கள் – ராணிமுத்து,மாலைமதி,

மற்றபத்திரிகைகள் – பாக்யாஇந்தியாடுடேகல்கண்டுகண்மணி, கல்யாணமாலை, முத்தாரம்,டைம்பாஸ்,கலைக்கதிர்,  தமிழ்கம்ப்யூட்டர் ,மோட்டார்விகடன்,நாணயம்,பசுமை  விகடன்

 மற்றும் விட்டுப்போன எண்ணற்ற பத்திரிகைகள் -வலைப் புத்தகங்கள் !

இவ்வளவு இருக்கும் போது குவிகம்  ஏன் என்று கேட்கிறீர்களா?

எவ்வளவு புடவை இருந்தாலும் பெண்டாட்டிக்கு ஏன்  அடிக்கடி புதுப் புடவை எடுக்கிறீர்கள்? அது மாதிரி தான்! 

பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் தனி விதம்!

 அப்புறம், கு-வி-க-ம் தலைப்பின் ஒவ்வொரு எழுத்தும் குமுதம், விகடன், கல்கி, குங்குமம் போன்ற பத்திரிகை பெயரிலிருந்து திருடியதா என்று கேட்கலாம் .

நிச்சயமாக இல்லை.

குவிகம் என்பது புதியதாக தமிழில்  செதுக்கப்பட்ட தலைப்பு.

எண்ணங்கள்  குவியும்  தளம்  குவிகம் !

கருத்துக்கள்  குவியும் களம்  குவிகம்!

குதூகலம் குவியும்  இடம் குவிகம் !

மொத்தத்தில் – நாம் குவியும் இடம் குவிகம் !!