


ஜூன் 24, வெள்ளிக்கிழமை. இன்போசிசில் பணிபுரியும் ஸ்வாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒரு கொலையாளியால் தாக்கப்பட்டு கொடூர மரணம் அடைந்தார். அவர் அடிபட்டுக் கிடக்கும் காட்சியைப் புகைப்படத்திலும் வீடியோவிலும் பார்த்துத் துடிக்காத மனித இதயமேகிடையாது. .
காவல் துறை முதலில் மெத்தனமாகச் செயல்பட்டது. உயர்நீதிமன்றம் முடுக்கிவிட்ட பிறகு அபார திறமையுடன் செயலாற்றி ராம்குமார் என்ற இளைஞனைக் குற்றவாளி எனக் காவல்துறை பிடித்திருக்கிறார்கள். பிடிபடும் போது அவன் கழுத்தில் வெட்டிக்கொண்டது பதட்டத்தை மேலும் அதிகப் படுத்தியது..
நேரடியாகப் பார்த்த சாட்சியம் குறைவாக இருப்பதால், பிடிபட்டவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கவேண்டிய பொறுப்பு காவல் அதிகாரிகளுக்குச் சற்று அதிகமாகவே இருக்கிறது.
ஜாதிகள் வேறு இதில் குறுக்கிடுவது அனைவருக்கும் வேதனையைத் தருகிறது.
ஊடகங்களும் முகநூல்களும் இணைய தளங்களும் வாட்ச் அப்புகளும் இந்த வழக்கில் மட்டுமல்ல இதைப்போன்ற மற்ற பரபரப்பான – முக்கியமான விவகாரங்களில் தங்கள் மூக்கை அதிகமாக நுழைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பி மக்களைத் தவறான பாதையில் திசை திருப்புகிறார்கள்.
![]()
தீர்ப்புக்கள் நீதிமன்றத்தில் தான் எழுதப்படவேண்டும். ஊடகங்கள் அதில் புகுந்தால் நீதிக்கும் நேர்மைக்கும் ஆபத்து.
இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.
இதைத் தடுக்கப் புதிய சட்டம் வரவேண்டும்.
வரும்.

