‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கர்நாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார்

இரண்டு வயதில் புதிய ராகத்தைக் கண்டுபிடித்து அதற்கு தன் அம்மா சூடாமணியின் பெயரை வைத்த இளம் புயல் இவர்.

கர்நாடக இசையில் இருக்கும் 35 தாளத்திற்கும் இசை அமைத்தவர் இவர். இது ஒரு தனி சாதனையாகும்.

பயிற்சிக்கும் மேடையில் பாடுவதற்குமான 72 மேளகர்த்தா ராகமாலிகா கீதத்தை கர்நாடக இசை உலகில் மலரச் செய்தவர்.

அவரோகணத்திலேயே  இசை அமைத்துப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் என்று ஐந்து மொழிகளில் இசை அமைத்த வித்தகர் இவர்.

சங்கீதா சூடாமணி , இசைப் பேரொளி என்ற பட்டங்களைப் பெற்றவர்.

அவரது சமீபத்திய சாதனை :

திருக்குறளின் 1330 பாடல்களுக்கும் கர்நாடக இசையில் இசையமைத்து அதற்குப் பெருமை சேர்த்தது தான். அதுவும் மூன்று நாட்களில் ( ஜனவரி 12-14) மொத்தம் 16 மணி நேரத்தில் இதை முடித்தது  அவரது பெருமையின் சிகரம்.  சில பாடல்களில் ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையுடன்  நாட்டுப்புற இசையையும் இணைத்திருக்கிறார். 169 ராகங்களில் 1330 குறளையும்  இணைத்திருக்கிறார். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தானகோபாலன் , அருணா சாய்ராம், சௌம்யா, உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன் போன்ற  75 பிரபலங்கள் மூலம் அவரது திருக்குறள் இசையை இசைக்க வைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா பிரபலங்கள் முன்னிலையில் ஜூலை 3ஆம் நாள் நாரதா கான  சபாவில் நடைபெற்றது.

அதற்காக ரவிகிரண் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

அந்த விழாவைத் தவறவிட்டவர்கள் இந்த வீடியோவில் அதைப் பார்க்கலாம்.