
என்ன பெயரால் கூப்பிட இறைவா – உன்னை
என்ன பெயரால் கூப்பிட
உயிர்களைப் படைக்கின்ற பிரம்மா என்பதா
காக்கின்ற கடவுள் திருமால் என்பதா
அழிக்கின்ற தெய்வமாம் பரமசிவனே என்பதா
கோபியோடு குழலூதும் கண்ணனே என்பதா!
ஆதியும் நீயே அந்தமும் நீயே
மலரும் நீயே மணமும் நீயே
ஆடுபவனும் நீயே ஆட்டுவிப்பவனும் நீயே
பிறப்பும் நீயே இறப்பும் நீயே !
கலைமகளும் நீயே திருமகளும் நீயே
பெற்றோரும் நீயே உற்றாரும் நீயே
கண்ணனின் தசா வதாரமும் நீயே
உலகில் இருக்கின்ற எல்லோரும் நீயே!
சக்தியும் நீயே சிவமும் நீயே
எல்லோரும் வணங்கும் பரப்பிரம்மம் நீயே
மானிடர் பலப்பல பெயரால் அழைக்கிறார்
அவரவர் விரும்பும் உருவாய் நிற்கிறாய்!
படைக்கின்ற உன்கையில் நாங்களெலாம் பொம்மைகள்
அளவிலா மகிழ்வோடு நடத்துகிறாய் பொம்மலாட்டம்
ஆடுகிறோம் உன்மனங்குளிர பாடுகிறோம் உன்நாமத்தை
தேடுகிறோம் சொர்க்கவாசல் நாடுகிறோம் உன்திருவடியை!
