காலம் தந்த பாடமிது

கடற்கரையோரம் காத்தது
மடத்தனமோ என்று நினைத்தேன்
சடுதியில் நீ வந்தாய்
முடிவொன்றைத் தந்தாய்
இதுதானா என்றதற்கு
உன்மௌனம் மொழியானது
மணல்தட்டி எழுந்தாய்
தலைதிருப்பி நடந்தாய்
ஆர்ப்பரிக்கும் அலைகடலும்
சிற்பமாய் நின்றது
மேகங்கள் தடுமாறி
கும்மிருட்டு சூழந்தது
எதிர்காலக் கனவுகள்
எதிரெதிராய்ப் போயின
காலங்கள் நின்றன
ஆயினும் ….
காலங்கள் கடந்தன
வையகம் நின்றதோ
பையத்தான் போனதோ
வாழ்வின் விளக்குகள்
தாழ்ந்தே போயினவோ
கண்களின் நீர்த்துளிகள்
மண்ணிலே விழுந்தன
காற்றுவந்து சொன்னது
மாற்று மருந்தானது
கண்ணீரில் கரையாதே
கண்ணீரில் கரையாதே
காலம் தந்த பாடமிது.
புது உணவு அலாதி
பலப் பல உணவுவகை
புதிதான வழிமுறை
தோழியர் பலரிடம் கேட்டு
சஞ்சிகை பலபடித்து
தொலைக் காட்சியில் வந்ததை
அழகாய்க் குறிப்பெடுத்து
பக்குவமாய்த் தட்டில் வைத்து
நீட்டிடுவாள் நம்முன்னே
உப்புமாவைத்தான்
ஆம்
அதே உப்புமாவைத் தான் !
உணர்வாய் நீயே!!

