
(இது கண்ணதாசன் எழுதியதுமில்லை ! அவரைப்பற்றிய கவிதையும் இல்லை . பின்னே அவர் படம் எதுக்கு? யாருக்குத் தெரியும்? )
கல்லைக் காலில் கட்டிக் கொண்டு
கிணற்றில் குதித்த எருமை போல்
மஞ்சக் கயிற்றைக் கட்டிக் கொண்டு
வாழ்க்கைக் கிணற்றில் விழுந்தேனே!
நெய்யை உடம்பில் தோய்த்துக் கொண்டு
நெருப்பில் குதித்த விட்டில் போல்
பொய்யை உடம்பில் போர்த்திக் கொண்டு
வாழ்க்கை நெருப்பில் விழுந்தேனே!
மலையில் வெடித்த பாறை உருண்டு
மடுவின் அடியில் விழுந்தாற் போல்
தலையில் அட்சதை போட்டுக் கொண்டு
வாழ்க்கைச் சரிவில் உருண்டேனே!
குளத்தில் பூவைப் பறிக்கச் சென்று
புதையும் குழியில் அழுந்தாற் போல்
உளத்தில் உள்ள அழுக்கில் வழுக்கி
வாழ்க்கைச் சேற்றில் விழுந்தேனே !
பரந்த கடலில் படகில் சென்று
துடுப்பை நடுவில் தொலைத்தாற் போல்
பிறவிக் கடலில் நீந்தி நானும்
வாழ்க்கைத் துருப்பைத் தொலைத்தேனே!
நஞ்சைக் கலந்த நீரை மொண்டு
அள்ளிக் குடித்த மாடு போல்
நெஞ்சைப் பிசைந்த துன்ப வலியில்
வாழ்க்கைத் துயரை முடித்தேனே!

