அதீனி தேவதையின் உதவியால் அடையலாம் தெரிய இயலாத படு கிழவனாக. பிச்சைக்காரனைப் போல். தோன்றிய. ஒடிஸியஸ் தனது பழைய நம்பிக்கைக்குரிய. ஊழியன். யூமியோசைச் சந்திக்கக் . கிளம்பினான். அவன் பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன் முன்னால் மன்னனை அடையாளம் தெரியவில்லை . ஓடிசியஸ் இறந்திருப்பார் என்றே அவர் கருதினான். அவர் வந்து தனக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று வருந்திக்கொண்டே வந்திருக்கும் விருந்தாளிக்குத் தேவையான உணவு தங்கும் இடம். எல்லாம் கொடுத்தான்.

அதே சமயம் அதீனி தேவி ஒடிஸியஸ் மகன் இருக்கும் இடம் சென்றாள். அவன் மெனிலியஸ் – ஹெலன் அரண்மனையில் அவர்கள் உபசாரத்தில் நிம்மதியாக இருந்து வந்தான். அவனிடம் ஒடிஸியஸ் தன் நாடு வந்த விவரத்தை ரகசியமாகக் கூறி அவனை உடனே புறப்படும்படிக் கூறினாள். அவனும் அவர்களிடமிருந்து விடைபெற்றுப் புறப்பட்டான். அவனை நேராக யூமியோஸ் இருக்கும் இடம் அனுப்பி வைத்தாள்.

மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினான் ஒடிஸியஸ். மகனுக்கோ தந்தையை அடையாளம் தெரியவில்லை. அதீனி தேவி ஒடிஸியஸுக்கு சுய உருவத்தைத் தர , தந்தையும் மகனும் ஆரத் தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். எதிரிகளை அழிப்பதற்காக இப்படி மாறு வேடத்தில் இருப்பதாகத் தன் தந்தை கூறியதைக் கேட்டதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தான் டெலமாக்கஸ்.

அதன்பின் எதிரிகளை முறியடிக்கத் தான் போட்டிருக்கும் திட்டத்கைத் மகனிடம் விளக்கினான் ஓடிஸியஸ். தான் வந்திருக்கிற விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்றும் எதிரிகளுடன் போரிட ஆயுதங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டான்.

டெலமாக்கஸ் வந்திருக்கும் செய்தியை அறிந்த எதிரிகள் அனைவரும் திகைத்து விட்டனர் . டெலமாக்கஸ் திரும்ப வருவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கொல்லத் திட்டமிட்டனர்.

அதை அறிந்த அவன் அன்னை பெனிலோப் மிகவும் துடித்தாள்.

ஆனால் இளம் சிங்கம் போன்ற டெலமாக்கஸ் தான் அரண்மனைக்குச் சென்றான். தன் பயண விவரத்தையும் ஹெலன் மெனிலியஸ் ஆகியோரைச் சந்தித்தது பற்றியும் தன் தந்தை இத்தாக்காவிற்கு வெகு விரைவில் வந்து தம் துயரைப் போக்குவார் என்று தீர்க்கதரிசி கூறியதையும் கூறித் தன் தாயின் மனதைத் தேற்றினான்.

பெனிலோப்பைத் திருமணம் செய்யக் காத்துக் கொண்டிருக்கும் பிரபுக்கள் அனைவரும் அந்த அரண்மணையில் வெகு சொகுசாக விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அதே சமயம் மாறு வேடத்தில் பிச்சைக்காரனைப் போல் இருந்த ஓடிசியசும் யூமிகோஸும் அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தனர்.ஓடிசியசை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவனை ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணி அவன் மீது சாப்பாட்டை எறிந்தனர்.

The Beggar and the Faithful Dog - The Odysseyஅவனுடைய பழைய வேட்டை நாய் மட்டும் அவன் அருகில் வந்து மகிழ்ச்சியுடன் அவன் காலை நக்கி உயிரை விட்டது.

ஓடிசியசும் பிச்சைக்காரன் வடிவத்தில் அங்கு இருக்கும் எதிரிகளின் பலத்தையும் அவர்களின் ஆயுதங்களையும் அறிந்துகொண்டான்.

அந்தச் சமயத்தில் ஒரு புதிய பிச்சைக்காரன் அந்த அரண்மனைக்கு வந்தான். அவன் பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கும் ஓடிசியசை அடித்து விரட்ட முற்பட்டான். இருவருக்கும் வாக்குவாதம் வலுத்து சண்டையில் துவங்கியது. கூடியிருந்த மற்றவர் எல்லாரும் இந்தச் சண்டையை ஆரவாரமாக வரவேற்றனர்.

தங்கள் சண்டையில் வேறு யாரும் குறுக்கிடவில்லை என்றால் நாங்கள் மோதத் தயார் என்று கூறினான் ஓடிசியஸ். இந்த வீர விளையாட்டு அரண்மனையில் இருந்த பிரபுக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வெற்றி பெறுபவன் தங்களுடன் விருந்து உண்ணலாம் என்றும் அறிவித்தனர். பலசாலியான ஓடிசியஸ் தன் எதிரியை இரண்டே அடியில் மண்ணைக் கவ்வ விட்டான். அனைவரும் ஆரவாரம் செய்து பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த ஓடிசியசிற்கு நிறைய உணவைக் கொடுத்தனர்.

அந்த சமயத்தில் அங்கே அதினியின் உத்தரவுப்படி அழகுத் தேவதை போல பெனிலோப் வந்தாள். அவளைக் கண்டதும் அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த பிரபுக்கள் மத்தியில் காம உணர்வு பொங்கியது. அவளைத் திருமணம் செய்து கொள்ள அங்கிருக்கும் ஒவ்வொருவனும் துடித்தனர். இனியும் காலம் கடத்துவதில் அர்த்தம் இல்லை. ஓடிசியஸ் திரும்ப வரும் வாய்ப்பே இலை. தங்களில் ஒருவனை பெனிலோப் திருமணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

அதைக் கேட்ட பெனிலோப் , “ என் கணவர் டிராய் யுத்தத்திற்குச் செல்லும்முன் கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் போருக்குச் சென்று வெற்றியுடன் வருவேன். அப்படி வராவிட்டால் நீ நம் மகனைச் சிறந்த வீரனாக வளர்த்து அவன் தனியே நிற்க முடியும் என்று தோன்றியதும் உனக்கு ஏற்ற நல்ல பிரபுவை மணந்து கொள்! என்று கூறினார். இப்போது என் மகன் சிறந்த வீரனாக இருப்பதை உணர்கிறேன். அதனால் இப்போது எனக்குப் பிடிக்காவிட்டாலும் நான் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் பிரபுக்களான நீங்கள் என் அரண்மனையில் வந்து இந்தப் பிச்சைக்காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். இதுவா ஒரு அரசியைத் திருமணம் செய்துகொள்ளும் முறை? என் முன்னாள் கணவர் ஓடிசியஸ் போல் வீரத்திலும் அறிவிலும் கீர்த்தியிலும் கௌரவத்திலும் சிறந்த ஒருவரையே நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். .அதன்படி நடந்துகொள்ளுங்கள் “ என்று மகாராணி போலக் கூறினாள் .

அனைத்துப் பிரபுக்களுக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. அவள் யாரைத் தேர்ந்தேடுப்பாள் என்ற தயக்கமும் இருந்தது. அவள் சுயம்வரத்தில் தான் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணமும் எல்லோர் மனதிலும் இருந்தது. அதனால் அவள் உத்தரவுப்படி அனைவரும் அந்த அரண்மனையை விட்டுத் தங்கள் இல்லம் செல்ல முடிவு செய்தனர். நல்ல பரிசுப் பொருட்களுடன் பெனிலோப் மனத்தைக் கவர ஒவ்வொருவரும் தனித்தனியே திட்டமிட்டனர்.

File:Odysseus und Penelope - Johann Heinrich Wilhelm Tischbein.jpg -  Wikimedia Commonsஅதேசமயம் ,டெலமாக்கஸ் , தன் அன்னையிடம் , “அம்மா ! இந்தக் கிழவர் நம் இத்தாக்கா அரசரைச் சந்தித்ததாகக் கூறினார் .அவரிடம் நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். என்று கூறினான்.

தன் மனைவி என்று தெரிந்தும் சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஓடிசியசிற்கு. தன் கணவன் அருகில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளாத பெனிலோப் அந்தப் பிச்சைக்காரக் கிழவனிடம் ஓடிசியஸ் பற்றிக் கேட்கத் தொடங்கினாள்.