
இன்று பஞ்சாயத்துக் கூட்டம் என்று 4 நாட்களுக்கு முன்பே தண்டோரா போட்டிருந்ததால் பஞ்சாயத்து ஆபீசு பக்கம் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
ஏம்பா இது போன கூட்டம் போல நடக்குமா?
இல்லை. எப்படிப்பா?
நீ வேற! எல்லா கூட்டமும் எப்படி நடந்ததோ! அப்படித்தான் இதுவும் நடக்கும்.!
அப்ப இதுக்கு விடிவு காலம் கிடையாதா?
ஏன் கிடையாது? நாள் கிடக்கில்லே!
அடுத்த பஞ்சாயத்து எலக்சனுக்கு?
பஞ்சாயத்து தேர்தல் முடிந்து ஆறு மாசம் ஆகிவிட்டது.
பதவி ஏற்பு எல்லாம் விதிப்படி இருந்தது.
ஆனால் நடைமுறையில் வேற மாதிரி இருந்தது.
இந்த கிராமம் தனி பஞ்சாயத்து.
வேற துணை கிராமங்கள் எல்லாம் கிடையாது
காலங்காலமா ஒரே இனத்து மக்கள் தான் பஞ்சாயத்து தலைவராகப் போட்டியின்றி இருப்பார்.
அவர்களுக்குள் போட்டி வந்தால் தெற்கு தெரு மக்களுக்குச் சங்கடம்.
தெற்கு தெரு மக்கள் ஓட்டு அபிமானத்தின் மூலம் கூடவோ குறையவோ கிடைத்தால் முடிவு
மாறலாம்.
பிறகு காலம் முழுவதும் யார் யாருக்கு போட்டார்கள் என்று சந்தேகப்பட்டு, சங்கடம் உண்டாகும்.
இது இன்று நேற்று அல்ல.
மேலும் சில நேரங்களில் பிழைப்பில் மண்ணு விழும்.
எலக்ஷனில் நின்றவர்கள் காலப்போக்கில் ஒற்றுமையாய் போய்விடுவார்கள் .
ஆனால் தனக்கு ஓட்டு போடவில்லை என்று சந்தேகம் வந்தவர்களை ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தவே நினைப்பார்கள்.
அவர்கள் நினைப்பு சரியா தவறா என்பது பற்றி எல்லாம்அவர்களுக்குக் கவலை இல்லை.
அதைப்பற்றி யோசிக்க மாட்டார்கள்
எனவே பஞ்சாயத்து தலைவர் பதவி அன்னப்போஸ்டாய் இருக்க வேண்டும் என்று தெற்கு தெரு மக்கள் ஆண்டவனைக் கும்பிடுவார்கள்.
பெரிய பண்ணையார் எப்போதும் எலக்ஷனில் நிற்பதில்லை.
ஆனால் அவர் அனுசரணை உள்ளவர் மட்டும் எப்போதும் வெல்வார்.
பண்ணையார் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.
விவசாய வேலைக்கு அவருக்கு எல்லோரும் வேண்டும். வேலையாட்கள் களை எடுப்பது,
பாத்தி கட்ட எல்லாம் அவரிடம் கேட்டு மற்றவர்களுக்குப் போவார்கள்.
எலக்சன் முடிந்து வேலை கேட்டால் சிலர் நீ அவனுக்குத்தான ஓட்டு போட்ட
அவங்கிட்ட போய் வேலை செய் என்பார்கள்.
இல்லை என்றாலும் நம்ப மாட்டார்கள். இரு பக்கமும் இடிதான்!
எனவே போட்டி இன்றி தலைவர் தேர்வு செய்யப்பட்டால் தான் தெற்குத் தெரு மக்களுக்கு சந்தோசம்.
காடுகளை வைத்து விவசாயம் செய்யும் வடக்கு தெரு முதலாளிகளுக்கு கூலி வேலை செய்யும் மக்களே தெற்கு தெருவில் உள்ளவர்கள் தான்.
இந்த கிராமத்தில் தோட்டக்காடுகளும் அதிகம்.
ஊருக்கு மேற்கே கம்மாய் உண்டு.
கம்மா நிறைந்தால் நெல் போடுவார்கள்.
மழை இல்லை என்றால் அல்லது கம்மா நிறைய இல்லை என்றால் மக்காச்சோளமோ கம்போ.
வருஷம் பூரா வேலை கிடைக்கும் என்பதால் கிராமம் செழிப்பாகவே இருக்கும்.
தோட்டக்காட்டில் மிளகாய் போடுவார்கள்.
கோடையில் வெண்டை தக்காளி கத்தரி கம்பு வெள்ளைச்சோளம் போன்ற மகசூல் செய்வார்கள்.
பஞ்சாயத்து இந்த எலக்சனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.
எப்போதும் போல் இருக்க வேண்டும் என்று மேல் இடத்தில் மோதினார்கள்.
சட்டப்படி இந்த ஆண்டு இப்படித்தான் என்று முடிவாய் இருந்தது.
அந்த நாள் முதல் தெற்கு தெரு மக்களுக்குத் தூக்கமில்லை.
யாரைத் தேர்ந்து எடுப்பது என்று என்ற கவலை இல்லை.
அடுத்த ஐந்து வருஷத்தை எப்படித் தள்ளப் போகிறோம் என்ற நினைப்பு வயித்தைக் கலக்கியது.
மெம்பர்கள் யாரும் வடக்கு தெருவில் இருந்து சம்மதிக்கவில்லை.
முதலில் கலெக்டர் வந்து பேசி தேவையான ஆட்களின் நிற்கவைத்து ஒரு வாரியாகப்
பிரச்சனை தீர்ந்தது
ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் யார் என்பதில் பெரிய சிக்கல்.
நம்ம இழுப்புக்கு வரக்கூடிய பிளஸ் 2 படிச்ச மாடத்தியைத் தலைவராக்குவது என்று
தெற்கு தெரு மக்கள் முடிவு எடுத்தார்கள்.
முடிவு தெரிந்தவுடன் ஒரே சண்டை.
தங்களால் முடிவெடுக்கப்படாத ஒருவரை ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறிப் பிறகு முடிவு ஒத்துக் கொள்ளப்பட்டது.
யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கும் என்று தெற்கு தெருவோடு வந்து ஊர் மந்தையில் வாக்கு கொடுத்தார்கள்.
கிராமத்தில் இருந்த விவசாயிகள் நிலப்பரப்புகளுக்கு ஏற்ப களம்பார்க்க தெற்குத்தெரு கூலி வேலை செய்பவர்கள் தங்களுக்குள் விவசாயிகளைப் பிரித்து கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்கள் அவர்கள் நிலத்தில் வேலை செய்வது காலத்தில் களத்தை பராமரிப்பது மகசூலை வீடு கொண்டு போய் சேர்க்கும் வரை இரவு பகல்வேலை செய்வார்கள்.
முடிவில் கூலியாக அவர்கள் மனம் போல் அள்ளிக் கொடுப்பார்கள் விவசாயிகள்.
விவசாயிகள் வீட்டில் நல்லது என்றால் முதலில் நின்று மூன்று வேளையும் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு உரிமைக்காரன் என்ற பெயரோடு உழைப்பார்கள்
கல்யாணம் காட்சிக்கு வேட்டி சேலை எல்லாம் உண்டு
தேர்தலில் போட்டியின்றி முடிந்ததால் வந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி.
பஞ்சாயத்து கூடி முதல் கூட்டம் நடந்தது.
பஞ்சாயத்து தலைவியும் கிளார்க்கும் மதியம் வரை உட்கார்ந்து இருந்தார்கள்.
பின்பு ஒரு முடிவு எடுத்து கூட்டம் நாளில் கூட்டம் கூடியது. தீர்மானங்கள் ஏதும் இல்லாததால் கூட்டம் முடிந்தது என்று தீர்மான புத்தகத்தில் எழுதி தலைவர் மற்றும் நபர்கள் அனைவரிடமும் வீட்டில் சென்று கையெழுத்து வாங்கினார்கள்.
தொடர்ந்து இதே மாதிரி தீர்மான நகல் மேல் இடத்திற்கு அனுப்பப்பட்டது.
தீர்மானங்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தாசில்தாரையும் பீடியோவையும் அடுத்த கூட்டத்துக்கு நேரடியாக போய் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு போட்டு இருந்தார்.
கலெக்டருக்கு என்ன ஆர்வம் என்றால் அவரும் ஒரு பெண்.
இந்த பெண் பஞ்சாயத்து தலைவர்கள் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று அறிய சிறிது ஆர்வமாக கவனித்தார்.
செயல்பாடு சரியாக இல்லை என்று கருதியதால் அதை மறுபடியும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்
மக்கள் தோன்றியபடி பேசிக் கொண்டிருக்க கார் வந்தது.
உடன் ஒரு போலீஸ் வேன்.
ஏதாவது எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால் தற்காப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு தாசில்தார் வந்திருந்தார்
பொதுவாக கிராமத்து மக்கள் நல்லவர்கள் தான்.
ஆனால் அவரது எண்ணங்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால் உடனே உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள்.
முடிவு தவறு என்று தெரிந்தால் உடனே இறங்கி வந்து விடுவார்கள்
தாசில்தார் வந்ததை அறிந்து மெம்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள்.
அவருடன் வந்த அவர்களுக்கும் காப்பி கொடுக்கப்பட்டது வழக்கப்படி பெரிய பண்ணையார் வீட்டில் இருந்து காபி வந்தது.
தீர்மானங்கள் இருந்தால் பேசி முடிவெடுங்கள்
முடிவு எடுத்து எழுதி அனுப்புங்கள்
அரசாங்கத்தில் இருந்து செய்ய வேண்டியவைகளை செய்ய மேல் இடத்துக்கு சிபார்சை செய்கிறேன் என்றார்.
யூனியன் பீடிவோவும் தனது பங்குக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்தார்.
அதிகாரிகள் உட்கார சொன்னார்கள்
பரவாயில்ல சார் என்று பஞ்சாயத்து தலைவியும் மற்றவர்களும்கூற ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அப்போது கூப்பாடு போட்டுக்கொண்டு பெரிய பண்ணையார் வீட்டு வேலைக்காரன் ஓடி வந்தான்
மூச்சு விட முடியவில்லை என்று இழைத்து பேச முடியாமல் விழுந்து விட்டான்.
தண்ணீர் தெளித்து வைத்து என்ன என்று கேட்கும் பொழுது கம்மாக்கரையில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தபோது பெரிய பண்ணையார் பேரனை நல்ல பாம்பு கடித்து விட்டதாகவும் வயக்காட்டு வரப்பில் வேலை செய்து கொண்டு இருந்த மாடத்தியின் தாத்தா உடனே கடிவாயில் இருந்த விஷத்தை உரிஞ்சித் துப்பிவிட்டு வேட்டியை கிழித்து கடித்த இடத்தில் கட்டுப்போட்டு அந்த பக்கம் உரம் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கிவிட்டு திரும்பிய ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கூட ரெண்டு பேரோடு பக்கத்து டவுண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதால் தான் தகவல் தெரிவிக்க தலை தெறிக்க ஓடோடி வந்ததாகவும் கூறினான்.
உடனே பெரிய பண்ணையாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் நல்ல வேளை டாக்டரும் இருந்ததால் உடனே வைத்தியம் பார்த்து பையனை பிழைக்க வைத்து விட்டார்
கிழவரும் மற்றவர்களும் டாக்டர் காலில் விழுந்து அழுது பேச்சு வராமல் நின்றார்கள்.
டாக்டரை கையெடுத்து கும்பிட்டு கும்பிட்டார்கள்.
விஷயம் தெரிந்த பண்ணையார் நேராக ஆஸ்பத்திரிக்கு வந்து நடந்தது அறிந்தார்.
கிழவன் பண்ணையாரின் காலில் விழுந்து, பண்ணையாருக்கு தெரியாமல் சொல்லாமல் தூக்கிட்டு வந்ததது தப்பா மகராசா?
வேற எதுவும் தோணலை உயிரை காப்பாற்ற தான் சாமி. புண்ணியத்துல அன்னேரம் அந்த ஆட்டோ பையன் வந்தாரு.
நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுவன்மகராசா என்று புலம்பினார்.
பண்ணையார் கண்ணில் நீர் வழியக் கிழவரைத் தொட்டுத்தூக்கினார்.
தன் பெரிய துண்டை கிழவருக்கு கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னார்
பேரனுக்கு உயிர் கொடுத்த அனைவரையும் பார்த்து கூப்பினார்.
விஷத்தை உரிஞ்சி துப்பியதால் ஏற்பட்ட மயக்கத்தால் கீழே சாய்ந்தார் பெரியவர்.
உடனே அவரை கட்டிலில் தூக்கி போட்டு படுக்க வைத்து டாக்டர் ஊசி போட்டு ட்ரிப்ஸ் ஏத்தினார்
விஷம் முறிவு மருந்து அதிலேயே ஏற்றி உடனே குணமாக பெரியவருக்கு வேண்டிய மருத்துவம் பார்த்தார்.
ஆஸ்பத்திரியில் ஒரு நாள் இருந்து தெளிவான உடன்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
பேரனும் பூரண குணம் அடைந்ததால் பேரனும் டிஸ்சார்ஜ்.
பண்ணையார் என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது நேரம் கண் கலங்கி நின்றார் .
அவர்கள் அவனை தூக்கி வந்தவர்கள் கடவுள் தானே என்று திரும்பத் திரும்பக் கும்பிட்டார்.
அன்று மாலை கிராமத்தில் பஞ்சாயத்து ஆபீஸ் சிறப்பு கூட்டம்
பஞ்சாயத்து தலைவி தலைமையில் அனைவரது வரவால் கூட்டம் நடந்தது.
சாலை போடுதல் கம்மா கரையை சுற்றி சுத்தம் செய்து கரையை உயர்த்துதல் என்ற பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஊர் முழுவதும் வெடிச்சத்தம் வெளிச்சமும் மக்கள் சந்தோஷத்தை உயர்த்தி காட்டியது
பேரன் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த சில நாள் கழித்து கிடா வெட்ட ஏற்பாடு செய்தார் பெரிய பண்ணையார்.
அந்த விருந்தில் அவர் பேசும்போது மாடன் எங்க தாத்தா காலத்து ஆளு என்று ஞாபகப்படுத்தினார்.
மாடனோட பேத்தி மாடத்தி பக்கத்து டவுனில் மேலே படிக்க நான் உதவி செய்கிறேன்! எதுவரை படிக்கணும்னு நினைக்கோ நான் செலவு செய்கிறேன்!!
படிப்பு தான் அவளுக்கு ஊர்ல பேரு வாங்கி தந்தது
பஞ்சாயத்து தலைவி பதவி ஆக்கியது!!!
அவர் விருந்தில் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்!!!
வடக்கு தெருவும் தெற்கு தெருவும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டார்கள்!
எல்லோரும் சொன்னார்கள் பொண்ணா பிரசிடெண்ட் என்று?
ஏளமாக நினைக்க வேண்டாம் அதை மாத்தி பொண்ணு எல்லா பதவிக்கும் வரணும்னு நினைப்போம்.
டாக்டரும் ஆஸ்பத்திரி ஆட்களும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்!!!
