குறுக்கெழுத்துப் போட்டி: 353

ஜூலை மாத குறுக்கெழுத்து போட்டிக்கான  லிங்க் : 

https://beta.puthirmayam.com/crossword/17F4C73475 

சரியாக விடை எழுதிய அதிர்ஷ்டசாலிகளில்  ஒருவருக்குக் குலுக்கல்  முறையில் பரிசு Rs 100 வழங்கப்படும். 

சென்ற மாதம் சரியாக விடை எழுதிய நண்பர்கள் :

1. மெய்யழகி

 2. ஸ்னேகா 

3. வைத்தியநாதன் 

4. உஷா ராமசுந்தர் 

5. ரேவதி ராமச்சந்திரன்

6. மகேஷ் மகாதேவன் 

7. மதிவாணன் 

8. ராய செல்லப்பா 

9. கமலா முரளி 

10. அம்புஜவல்லி 

11. மனோகர் 

 

இதில் ஒரு  வித்தியாசமான க்ளூ 

“பல்  இருப்பவர் சாப்பிடுவார் என்று வேடிக்கையாகச் சொல்லப்படும்” . இது ஒரு சொலவடை. இதற்கு சரியான விடை – பக்கோடா .

10-15 பேர் இதற்கு முறுக்கு , கரும்பு என்று தவறாக  எழுதியுள்ளனர்.

அதனால்  சரியான விடை எழுதுபவர்களின் எண்ணிக்கை 20+ இலிருந்து 10+ ஆகியுள்ளது.  

அவர்களுள் பரிசு பெற்றவர்: மெய்யழகி 

கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள் ! 

 

சொல்வகை விளையாட்டு : 

நால்வகைச் சொற்கள் யாது? - Powerkid Academy | Learn Tamil Online

இத்துடன் ஒரு புதிய சொல்வகை விளையாட்டை சாய் கோவிந்தன் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்.

அதையும்  முயற்சி செய்து பாருங்கள் !

நான்கு வகைச் சொற்கள் நான்கு உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள். 

உதாரணமாக :

பேருந்து, மிதிவண்டி , கப்பல், விமானம் 

இவை நான்கும்  வாகனங்கள் என்ற ஒரு வகையில் வரும் 

இது போல நான்கு வகைகளுக்கான சொற்களையும்  கண்டுபிடியுங்கள்  ( 4 x 4  =16) !!

நான்கு வகைகளையும் கண்டுபிடித்தால்  குறுக்கெழுத்து விடை அனுப்பும்போது சொல்வகை 4/4 என்று போடுங்கள். மூன்று , இரண்டு, ஒன்று , பூஜ்யம் கண்டுபிடித்தால் சொல்வகை 3/4 , சொல்வகை 2/4, சொல்வகை1/4 , சொல்வகை 0/4 எனப் பதிவிடவும். 

https://solvagai.puthirmayam.com/94DAA95FC4