இந்த கதை 50 வருடங்களுக்கு முன்னால் படித்தது. கதையின் பெயர், எழுதியவர் பெயர் எதுவும் நினைவில் இல்லை. கதை பசுமையாக மனதில் இருக்கிறது.
கதாநாயகனே சொல்வதுபோல வரும்.
வெளிநாட்டு எழுத்தாளர் எழுதிய கதை. புரிதலுக்காக நம் ஊர் பெயர்களை உபயோகப்படுத்தி இருக்கிறேன்
விக்டர் ஒரு சாதாரண திருடன். பிக் பாக்கெட் செய்பவன். ஒருமுறை ஒரு பெரிய தொகையை திருடி விட்டு, பலர் (போலீசும்) துரத்தும் போது, தப்பிக்க ஒரு ரயிலில் ஏறி விடுகிறான். அது ஒரு நீண்ட தூரம் போகும் ரயில். சென்னை to கௌகாடி (Guwahati) என்று வைத்துக் கொள்ளலாம். அவ்வளவாக கும்பல் இல்லை. கையில் ஓர் அளவு (ஓர் அளவு என்ன, நிறையவே திருடிய) பணம் இருக்கிறது.
விக்டர், படிப்பறிவு இல்லாதவன் இல்லை. அனாதை என்றாலும் நன்கு படித்தவன். வேலை கிடைக்காததால் திருடனாகிவிட்டான். மிக மிகக் கெட்டிக்காரன். இரண்டு ஷ்டேசன் தாண்டியதும் ஒருத்தன் ஏறினான், மிகக் குறைந்த லக்கேஜ் வைத்திருந்தான். இவனாகவே பேசினான். அவன் ஒரு வங்கி ஊழியன் என்றும், ட்ரான்ஸ்வரில் கௌகாத்தி போகிறான் என்றும் சொன்னான். தன் வயதுதான் இருக்கும் இவனுக்கு வங்கியில் வேலை கிடைத்தது விட்டது. அதிர்ஷ்டம். தனக்கும் வேலை கிடைத்தது இருந்தால் இப்படி திருட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. என்ன செய்வத. ஊம் என்று முனகிக் கொண்டான். ஏதோ ஒரு ஸ்டேஷனில், ஏதோ இன்ஜின் மாற்றுவார்கள் என்றும், நிறைய நேரம் வண்டி நிற்கும் என்றும் சொன்னார்கள். இறங்கிப் போய் கௌகாத்திக்கு டிக்கட் வாங்கிக் கொண்டான். பின்னர் தூங்கி விட்டான். இரவு திடீர் என்று விழித்துக் கொண்டான். பாத்ரூம் போக நடந்தபோது, அந்த மனிதன் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியிலே பார்த்துக் கொண்டு இருந்தான். தலையை ஆட்டி வெளியிலே ஏதோ காட்டினான். பாத்ரூம் போய்விட்டு திரும்ப வரும் போதும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஒரு வேளை சிகரெட் பிடித்து விட்டு கொஞ்சம் நேரம் அதிகமாக காற்று வாங்குகிறான் என்னமோ. மிக வேகமாகப் போய்க் கொண்டிருந்த வண்டி திடீர் என்று பயங்கரமாக ஆடியது. சரியாக பிடித்துக் கொள்ளாததனால் தடுமாறி வெளியிலே விழுந்து விட்டான். பகீர் என்று ஆனது. சங்கிலியை இழுக்கலாம் என்று திரும்பி எங்கே என்று தேடினான். பின்னர் தோன்றியது. எப்படியும் உயிர் பிழைத்திருக்க முடியாது. என்னைத் தவிர, வேறு யாருக்கும் தெரியாது. யோசித்து மனதுக்குள் ஒரு திட்டம் தீட்டினான். பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்
அந்த வண்டி வெகுதூரம் போகும் வண்டி. கிட்டத்தட்ட 36 மணி நேரப் பயணம். நிறைய பேர் ஏறி இறங்கி இப்போது, முதலில் இருந்த யாருமே இப்போ இல்லை. மெதுவாக அவனுடைய பையை எடுத்துப் பார்த்தான். சில உடைகள், துண்டு, பேஸ்ட் பிரஷ்…. என்று இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அவனுடைய பெட்டியின் சாவியும் இருந்தது. கொஞ்சம் பணமும் இருந்தது. பையை வைத்துவிட்டு பெட்டியைத் திறந்தான். அந்த ஆளுடைய டிரான்ஸ்வர் ஆர்டர், மற்றும் வங்கி சம்பந்தமான சில பேப்பர் கள் இருந்தன. அவன் பெயர் ஜேம்ஸ் என்று தெரிந்தது. அவன் படம் ஒரு பேப்பரில் ஒட்டி அதன்மேல் பாங்கின் ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டு இருந்தது. அந்த ஸ்டாம்ப்பினர ஒரு கோடுதான் படத்தின் மேல் இருந்தது. மற்ற எல்லாம் காகிதத்தில்தான் இருந்தது. அவனுக்கு கௌகாடி பக்கத்தில் 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கிக் கிளைக்கு அப்பாயின்ட்மெண்ட் உத்திரவு இருந்தது. மனதுக்குள் நல்ல ப்ளான் போட்டுக் கொண்டான்.
வண்டியை விட்டு இறங்கி அந்த நகரில் ஒரு இடத்தில் ரூம் எடுத்துத் தங்கினான். ஒரு போட்டோ ஸ்டூடியோ போய் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான். ஜேம்ஸ் போட்டோவை மிக மிக நிதானமாய் எடுத்துவிட்டு தன் படத்தை ஒட்டி ஸ்டாம்ப் குத்தப்பட்ட இடத்தை அழகாக சரி செய்தான்.
மறுநாள் அந்த வங்கி கிடைக்கும் போய், மேனேஜரிடம், மிக மரியாதையாக தான் ஜேம்ஸ் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு ஆர்டர் மற்றும் சம்பந்தப்பட்ட பேப்பர்களையும் கொடுத்தான். அவர் மிக நல்லவராக இருந்தார். எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினார். என்ன வேலை என்று சொல்லிவிட்டு, “கொஞ்சம் இங்கே பேசும் மொழி சில நாட்களுக்கு புரிய கஷ்டமாக இருக்கும் இவர் உதவியாக இருப்பார் என்று தாம்ஸன், என்பவரையும் ஒரு கடைநிலை ஊழியரையும் அறிமுகப் படுத்தினார். பல வேலைகளுக்கு நடுவில் லாக்கர் டிபார்ட்மென்ட்டும் அவனுக்குக் கிடைத்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அடித்துக் கொண்டு, கிழக்கு மூலையில் இருந்து மேற்கு மூலையில், துவாரகா, அபுரோட் என்று எங்கேயாவது போய் செட்டில் ஆகிவிட வேண்டும், என்று தீர்மானித்துக் கொண்டு வேலையில் மூழ்கினார். வங்கி வேலை ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை.
தாம்ஸன் மற்றும் அந்த கடைநிலை ஊழியர் சொன்னதை செய்தான்.
சில நாட்களிலேயே பிடிபட்டு விட்டது. நல்ல ஊழியர் என்று எல்லோரும் பாராட்டத் துவங்கினர். மேனேஜருக்கு ரொம்ப பிடித்து விட்டது. நேரம் பார்ப்பதில்லை, எந்த வேலையாய் இருந்தாலும் மறு பேச்சு இல்லாமல் செய்து முடித்தான்.
கண்டு பிடிக்க மாட்டார்கள் என்றால் அப்படியே தொடரலாமே என்று ஆசைப்பட்டான். அது முடியாது என்று எண்ணிய போது மன வருத்தம் உண்டானது. பணம் திருடியதற்காக போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இவ்வளவு தூரம் தேடி வரமாட்டார்கள் என்று தெரியும். ஆனால் ஆள்மாறாட்டம் செய்தது, மற்றும் உண்மையான ஜேம்ஸ் என்ன ஆனான் என்ற கேள்விக்கு இவனிடம் பதில் கேட்பார்கள்.
ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக ஜேம்ஸ் உயிர் தப்பினார் இருந்தால், அல்லது அவன் உடலைக் கண்டு பிடித்து யார் என்று தெரிந்து இந்த இடம் வரை வரக்கூடும். அவசரமாக வேலையை முடிக்கணும்.
சீக்கிரம் ரொம்ப நல்லவன்னு வேற பேர் வந்துடுத்து. ஒரு வயதானவர் மறந்து வைத்துவிட்டுப் போன ஒரு பேகை எடுத்துக் கொடுத்தது க்கு அவர் மிகவும் பாராட்டி, மேனேஜரிடம் வேறு சொல்லி விட்டுப் போனார். ஓடு மீன் ஓட, காத்திருக்கிறான். அவன் எதிர்பார்த்த படி ஒரு கிராமத்தான் தன் பணம், நகையை லாக்கரில் வைக்க உதவச் சொன்னான். அவனுடைய சாவியை வாங்கி தயாராக வெகு நாட்களாக வைத்திருந்த சோப்பில் அதை, யாருக்கும் தெரியாமல், அழுத்தி அதன் பிரதியை எடுத்தான். இரண்டு நாள் முன்னால் கூட அப்படி வேறு ஒருவரின் சாவியின் நகல் கூட எடுத்து வைத்திருந்தான். அந்த ஞாயிற்றுக்கிழமை சிடிக்குச் சென்று ஒரு டூப்ளிகேட் சாவிக் கடையில் சாவி செய்து கொண்டான்.
கூட்டம் இல்லாத நாளில், ஊழியர்களிளும் பலர் சென்ற பின்னர், மும்முரமாக வேலை பார்ப்பது போல ஏதோ செய்து கொண்டிருந்தான்.
“You are under arrest for having killed your wife” என்று விலங்கை எடுத்தார். மறைவில் இருந்த 2, 3 பேர் வெளியே வந்தார்கள்
திருட்டை மறைக்க ஆள்மாறாட்டம் செய்து கொலைக் குற்றத்தில் மாட்டிக் கொள்வான். டக்கென்று முடியும் புரிய சில நிமிடங்கள் ஆகும்
