1, அ முதல் ஔ வரை உள்ள எழுத்துகளில் உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்துகளைச் சேர்த்து ஒரு வாக்கியம் படைக்கவேண்டும். – ( 30 மதிப்பெண் )

(உ ம் )கபாலி சீனு பூ எங்கே? பைங்கொலோ மௌவல்.  -16  எழுத்துகள்

உதாரணத்திற்காகக் கொடுத்த சொற்களில் மௌவல் ஔவை தவிர மற்ற சொற்களை உபயோகிக்கக் கூடாது

 

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் எத்தனை சொற்பிழைகள் உள்ளன? நம்பர் மட்டும் சொல்லவேண்டும். ஒற்றுப்பிழை – ஓருமை பன்மை மயக்கம் etc. (Language tool) – ( 10 மதிப்பெண் )

இந்த சோழர் குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீறத்தில் எப்படியோ, அப்படியே அரத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வப்பக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குள மன்னர்களுடன் நட்புறிமை கொள்ளும் பேரு தனக்குக் கிடைத்திருப்பதுப்பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தது. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினல் விர நாராயண ஏரித் தண்ணீர் அலைமீதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடையை  உள்ளமும் பெறுமிதத்தினால் பொங்கித் ததம்பிற்று.

3, எட்டு எழுத்து வார்த்தைகளைக் கண்டுபிடியுங்கள்  (10 மதிப்பெண் )

  1. தி ற் னை ன் ப த் க ற
  2. ப ற் ம் ண சு ய ப் று
  3. தி டு ம னு ட் ச் அ சீ  
  4. ச கை மு னெ ரி ன் க் ச்
  5. த டி தொ ர் ணீ த் ண் ட்
  6. ப ப் பு ட ட் ப் ப டி
  7. தி ள் ம நீ ற க ங் ன்
  8. ப பே ம் ழ ரீ ச் ம் ச
  9. வி பு ப் வி ர் பு சை யீ
  10. ப ப் ம் ன் னா சி அ ழ

4, விட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எல்லோரும் இலக்கியத்துடன் சம்பந்தம் கொண்டவர்கள்  ( 10 மதிப்பெண் )

உதாரணமாக –  சு _ தா  – சுந்தா  பொன்னியின் புதல்வர் என்று கல்கியைப் பற்றி எழுதியவர்

  1. _ லகு_ _ ன் (7)
  2. __ _ யம் (4)
  3. ஆ_ _ கு – – சா – (8)
  4. _மலே (3)
  5. – – மோ _ன் (5)
  6. அம் – (3)
  7. தே – ன் (3)
  8. நா – – ல் – ட – (7)
  9. – ன்- லன் (5)
  10. – வ – ண – (5)

 

5, மனம் அல்லது சின்ன என்ற சொல் பல்லவியில் இருக்கும் 5 திரைப்படப் பாடல்கள்  ( 10 மதிப்பெண் )

 

6. பாரதியார் பாடல் இடம் பெற்ற 10 தமிழ்ப்படங்கள் எவை? (10 மதிப்பெண்)

 

7. இந்தத் திரைப்படங்களின் தலைப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் எழுத்தாளர் யார்? ஒரு படத்தில் இரண்டு எழுத்துக்கள் இருக்கக்கூடும். (10 மதிப்பெண் )

பகலில் ஒரு இரவு ,சந்திரோதயம் ,பராசக்தி ,பலே பாண்டியா ,சொர்க்கம்

உத்தரவின்றி உள்ளே வா ,சாது மிரண்டால் ,ஆதி பராசக்தி

 

8.

கரடி, ரயில்,டில்லி; 

சிவாஜி வாயிலே ஜிலேபி

போல புதியதாக ஒன்று தயார் செய்யவேண்டும் . ( 10 மதிப்பெண் )