சிறுவர்கள் நடித்திருந்தால் மட்டுமே அது அவர்களைப் பற்றிய படமாகி விடாது. அது சிறார்களைப் பற்றிய உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் மொழியில், கோணத்தில், பார்வையில் அவர்களின் உலகினை சித்திரிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘மல்லி’ திரைப்படம் அழகாக மெய்ப்பிக்கிறது. –
ஏழைப் பெண்ணான மல்லி ( ஸ்வேதா) தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள். தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள். அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது. அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊனம் மாறிவிடும் என்று கூறுகின்றான். அவளும் அந்த நீலநிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள். இதுவே கதையின் கருவாகும்.
