இதில் வரும் பாடல்கள் அனைத்தும் குழந்தைப் பாடல்களில் சில. நம் குழந்தைகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பாடல்கள் . அதைச் சொல்லித் தருவது நமது கடமை! செய்வோமா?

பாரதியாரில் பாப்பாப் பாட்டு குழந்தைகள் மட்டுமல்ல அனைவருமே ரசிக்கும் இனிய பாடல்!
ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடல் குறித்து பாரதியாரின் மகள் இப் பாடலை ‘என் தந்தை எனக்காக நான் செய்ய வேண்டியதற்கெல்லாம் அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.
இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டதாக நெல்லைக் கண்ணன் கூறுகிறார்.
ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.
பாரதிதாசனின் இசைப் பாடல்களில் சிறுவர் பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அப்பாடல்களின் வழியாகச் சிறுவர்களுக்கு நல்ல பொறுப்பு உணர்வை அவர் ஊட்டியுள்ளார். சிறார் பொறுப்பு என்னும் தலைப்பில் உள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.
- இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்
குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்வின் புதுமை காண வேண்டும்!
2) தூய்மை சேரடா தம்பி – என்
சொல்லை நீ பெரிதும் நம்பித்
வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும்! மேலும் மேலும்
உடையினில் தூய்மை – உண்ணும்
உணவினில் தூய்மை – வாழ்வின்
நடையினில் தூய்மை – உன்றன்
நல்லுடல் தூய்மை – சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீ என்றும் –
தூய்மையை விளக்கும் இந்தப் பாடலில் சிறுவர்களுக்கு மட்டும் எடுத்து உரைப்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார்.
அடுத்த பாடலைச் சிறுமியைப் பார்த்துப் பாரதிதாசன் பாடியுள்ளார் பாருங்கள்.
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
அழ வள்ளியப்பா







அதிவீர ராம பாண்டியனின்
வெற்றி வேற்கை
உலகநாதரின்
உலக நீதி
நெற்பானையும் எலியும்
அப்பம் திருடிய எலி
பஞ்ச தந்திரப் பாடல் – வீரமார்த்தாண்ட தேவர்
சினிமா
பூப்பூவா பறந்து போகும் பாட்டுப் பூச்சி அக்கா = வாலி
கதைகதையாம் கதை கதை யாம் காரணமாம் -பொன்னான வாழ்வு
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1kJpe#book1/127
