மலர் : 1 இதழ் : 3 பிப்ரவரி 2014
- சென்னையில் சங்கீத சீஸன் முடிந்து நாட்டியம் மற்றும் நாடகங்களுக்கு சபாக்கள் இடம் கொடுக்கும் காலம் இது!
- பொங்கலோடு முடியும் மிதமான குளிர் காலம் பிப்ரவரியிலும் தொடர்வதால் சென்னைக்கு இன்னும் குளிர் விட்டுப் போகவில்லை!
- தை – மாசி மாதம் வருவதால் ஏகப்பட்ட கல்யாணங்கள் – பூணல்கள்!
- மகா சிவராத்திரி இந்த மாதம் வருகிறது! கண் முழித்து பரமபதம் ஆடி சினிமா பார்த்தது எல்லாம் அந்தக் காலம்!
- வாலண்டைன் டே வருவதால் ரோஜாப் பூக்களுக்கு தட்டுப்பாடு!

- அரசியல் ரம்மி ஆரம்பித்துவிட்டது. எந்த சீட்டைச் சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என்ற தேர்தல் ஜுரம் சூடு பிடிக்கிறது!
- பொடி வைத்து -கத்திப் பேசும் பார்லிமெண்டில் கத்தி மின்னுகிறது -. மிளகுப் பொடி தூள் கிளப்புகிறது!எல்லாம் தெலுங்கானா பிரச்சினை! இது சரிதானா?
- எல்லாருக்கும் பிரதமராகணும்னு ஆசை! ராகுல். மோடி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி,முலயாம் சிங்,பட்டியல் நீளுகிறது!
- சென்னையில் கூவத்தை மணமாக்க 3000 கோடிக்கு மேல் கொட்டப் போகிறார்கள்!
- கெஜ்ரிவாலை குதிக்க வைத்து காங்கிரஸும் பி ஜே பி யும் வேடிக்கை பார்க்கின்றன!
