நண்பர் காந்தி அவருக்கு அஞ்சலி !!

Image may contain: 1 person, text that says 'Prof. A. Gandhi Dean Saveetha Engineering College In Loving Memory In this sorrowful time, we would like to exteno to you our heartfelt condolences. May your soul Rest in Peace.'

                                                                                                                 ( நன்றி சசிகுமார் முகநூல்) 

 

 

Image may contain: 1 person, standing and indoorஎங்கள் இனிய நண்பர் காந்தி !

எங்களை  ஆழாத்  துயரில்  ஆழ்த்தி

தன் இனிய நினைவுகளை மட்டும்  அளித்துவிட்டு

இறைவனடி சேர்ந்துவிட்டார்.! 

 

கிட்டத்தட்ட ஐம்பது வருட நட்பு! 

 

சிரித்த முகம் ! செயலில் தெளிவு!  கடமையில்  கண் !  அன்பின் வடிவம் ! 

பண்பில்  குன்று! பார்வையில்  இனிமை !  பாசத்தில் மழை !

பேச்சில் திறமை ! கொள்கையில் பிடிப்பு! நேர்மையின் சிகரம்!

கல்லூரிக்கு பேராசிரியர் ! மாணவர்க்கு  தோழர் !

குடும்ப விளக்கு! உறவுக்கு தூண் !

கட்சியில் தலைவர்! காட்சிக்கு எளியர்  ! இன்னும் எத்தனையோ !

 

இவை ஒவ்வொன்றும்  வெறும்  வார்த்தைகள் அல்ல!  சத்தியம் !

இவரது  வாழ்வின் ஒவ்வொரு அத்தியாமும் அவற்றை நிரூபிக்கும்!

 

 

                                                        எங்கள் நட்பு மலரின் அழகிய இதழ் ஒன்று உதிர்ந்துவிட்டது ! 

                                             எங்கள் பஞ்ச முக விளக்கில் ஒரு திரி மட்டும் தனித்து விண்ணில் எரிகின்றது !

                                                          எங்களுக்கு இவரும் ஒரு மகாத்மா தான் !  வாழ்க நீ எம்மான் ! 

 

                      காந்தி!, உங்கள் பிரிவால் வாடும்,: சுந்தரராஜன்,  சந்திரமோகன், சிந்தாமணி, சந்திரசேகரன்

 

 

காளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்

 

Jallandhara | Devon ke Dev... Mahadev Wiki | Fandom

டுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்

தேஜஸ் கூடிய  பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்

பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார் 

 

“பெண்ணே ! நீ உன் சக்திக்கு மீறாமல் சரியாகத் தவம் செய்கின்றாயா ?

உன் ஆஸ்ரமத்து  செடி கொடிகள்  உன்னைப் போல் அழகாக இருக்கின்றன

தர்ப்பையைத்  திருடும்  மானிடமும்  அன்பாய்  இருப்பாய் என எண்ணுகிறேன்

உன் கனிவான தோற்றமே சொல்கிறது நீ தவறின்றி  தவம் செய்தாய் என்று

தூய்மைத்  தவத்தால் கங்கையினும்  பெருமையைத் தந்தைக்குத் தந்தாய்   

தர்மம் அர்த்தம் காமம் இம்மூன்றில் நீ போற்றிய தர்மமே மிகச் சிறந்தது

உன் கனிவான பண்பைப்   போற்றுகிறேன் என்னை நண்பராக ஏற்றுக்கொள் 

நட்பு  முறையில்  ஒன்று கேட்க விழைகிறேன் விருப்பமிருந்தால் பதில் கூறு

நற்குடி , செல்வம், இளமை எல்லாம்  இருக்க ஏன் இப்படித் தவம் புரிகின்றாய்

கடுந்துயர்  நீங்க கடுந்தவம் புரிவர், துயர் வர உனக்கு  வாய்ப்பேயில்லை 

இமவான் இருக்க யார் உனைப் பழிக்க இயலும்? தவத்தின் காரணம் யாதோ?

இரவுப்பெண் போன்ற நீ ஆபரணம் இன்றி  மரவுரி தரித்து இருப்பது முறையா

நீயே ரத்தினம் போன்றவள் கணவனுக்காக தவமியற்றவும் தேவையில்லை

கணவனுக்கான தவமென முகமே சொல்கிறது, உனை மறுப்பவன் எவன்   

உன் அழகு முகத்தைச்  சடைகள் மறைத்தும்  வராத கடினசித்தன்  யாரோ 

உடல் மெலிய முகம் வாட தவம் புரியும் உனைக் காண வராதவன் எவன்?     

நீ விரும்பிய அந்தக்  கர்வி இன்னும் வராதது  நஷ்டம் அவனதன்றி உனதல்ல  

விரும்பும் கணவனை அடைய தவப்பலன் தருகிறேன் யாரவன் என்று சொல்

 

அறியாதது போல வந்தவர் கேட்டிட பார்வதி வெட்கித் தோழியை நோக்கினள்

தோழியும் பார்வதி உடலை வருத்தித் தவம் புரிவதன் காரணம் விளக்கினள்

 

அழகில் மயங்காத  சிவபிரானைத்  தவத்தால் அடைய விழைகின்றாள் 

மதனின் பாணம்  அவனையே எரித்தாலும் பார்வதி மனதில் ஆழத் தைத்தது   

அளவிலாக் காதல் சிவனிடம் பெருகிட  அவளுடல் அனலாய்க் கொதித்தது   

சிவனை நினத்து உருகும்  அவளைக் கண்ட தோழியர் கலங்கித் தவித்தனர்

கனவிலும் நனவிலும் சிவனையே எண்ணி  உறக்கம்தன்னை   துறந்தனள்

மனதில்  இருக்கும் எம்பிரான் காதலை ஏன் ஏற்கவில்லை எனத் தவிப்பாள்

பற்பல உபாயம் யோசித்து தவமே நல்வழி எனஎண்ணி இவ்வனம் வந்தனள்

அவளிட்ட செடிகள் மரமென துளிர்த்திடஅவள்காதல் எப்போது துளிர்க்கும்?

தவத்தில் வாடித் தவிக்கும் இவளுக்கு சிவபிரான் அருள் எப்போது கிட்டும்?  

 

உவகை கொண்ட பிரானும் ‘தோழி உரைத்தது உண்மையோ’ என வினவினர்

மலர்க்கரம் குவித்து வணங்கிய பார்வதி செவ்விதழ் திறந்து பேசலானாள் 

‘தோழியுரைத்தது உண்மையே! சிவனை அடையவே இத்தவம் ‘ என்றனள்

 

வந்திருந்த வணங்கா சடாமுடியர் பார்வதியிடம் மேலும் பேசலானார்

“பெண்ணே! உன் அழகை அலட்சியம் செய்த சிவனை விரும்புதல் முறையோ

பாம்பைச் சுற்றிய அவன் கரம் நின் மங்களக் கரத்தைப் பற்றுவது சரியா?

யானத்தோலுக்கும் வெண்பட்டிற்கும் பொருத்தம் எங்கேனும் உண்டோ?

உன்மலர்ப்பாதம் சுடுகாட்டின் கடுந்தரையில்  பதிவதை யார் பொறுப்பர்?

அவன் மேனிச் சாம்பல் உன் சந்தன மார்பில் படிவது தகாத செயலான்றோ?

மணவிழாவில் எருதின்மேல் நீவிர் ஊர்கோலம் சென்றால் ஊர் சிரிக்காதோ?

சிவனை அடைந்த சந்திரன் கலை இழந்தான்  நீயும் களை இழக்க சம்மதமா?   

அழகு, நற்குடி,செல்வம் இவைஏதுமில்லா சிவன் உனக்கு ஏற்றவன் அல்லன்

யாக பூஜையை மயானத்தில் செய்வது போன்ற  தகாத ஆசையை விட்டுவிடு!

 

அதிதி சொல் கேட்ட பார்வதி உதடுதுடிக்க கண்சிவக்க பதிலுரைத்தாள்

 

“ சிவபிரானின் அருமை பெருமை தெரியாத மூடரே அவரை நிந்திப்பர்    

 உலகைக் காக்கும் ஈசன் அவருக்கு எப் பொருளாலும் பயனில்லை

 பாம்பணி ஆயினும் சாந்தஸ்வரூபன் அள்ளிக் கொடுக்கும் வள்ளள் பிரான்

 உலகே உடலாய் அமைந்த சர்வேஸ்வரன் எவராலும்  அறியப்படாதவர்     

 அவர் உடல் பட்ட சுடுகாட்டுச் சாம்பலைத் தேவரும் சிரசில் கொள்வர்

யானை ஏறும் இந்திரனும் எருதில் பவனி வரும் சிவனின் பாதம் பணிவன்

பிறப்பில்லை என்ற  சொல் உண்மையுடைத்து ஆதி அந்தமில்லாதவர் அவர்

 உமது கூற்று சரியோ தவறோ பொருட்டில்லை, என்மனம் அவரையே நாடும்

தோழி, இவர் சொன்னது சொல்லவிழைவது எதுவும்எனக்குத் தேவையில்லை”   

 

கோபித்த பார்வதியை  சிவவடிவு காட்டி நகைமுகத்துடன் கரம் பற்றினார்

வெட்கமும் அச்சமும் சேர  பார்வதி மலையைச் சேர்ந்த நதிபோல் நின்றாள்

‘தவம் செய்து எனை அடைந்தாய், நான் உன் அடிமை’ என சிவபிரான் கூற

பெறர்க்கரிய பேறு பெற்ற பார்வதி செய்தவத்தின் பலன் முழுதும் பெற்றாள்  

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

கொரானா காலத்தில்  புத்தகக் கண்காட்சி ! 

நடத்த முடியுமா? 

திரை  அரங்குகளைத் திறக்கவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் இந்தக் காலத்தில் திமு திமு என்று ஆட்கள் குவியும் புத்தகக் கண்காட்சியை  எப்படி நடத்துவது ? 

மக்கள் எப்படி வருவார்கள்? 

அரசு அனுமதி வழங்குமா? 

வழங்கும் !

காரணம் இது  மெய் நிகர் புத்தகக் கண்காட்சி ! 

VIRTUAL BOOK FAIR  !!!!

 

 

இதைக் கொண்டுவருபவர்கள் 

மற்றும் பலர்! 

இந்த மெய் நிகர் கண்காட்சி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற ஒரு கருத்துப் பறிமாற்றத்திற்கு செப்டம்பர் 26 அன்று நமது குவிகம் சார்பில் ஏற்பாடு செய்தோம். 

சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தியும் அவரது புதல்வர் கார்த்திகேயனும் கலந்துகொண்டு இணையம் மூலம் எப்படி  இந்தப் புத்தகக் கண்காட்சி செயல்படும் என்பது பற்றி  ZOOM மூலம் விளக்கினார்கள் ! 

அமேசான் போன்ற மின்வணிக இணைய தளங்களில் புத்தகங்களை விற்பதில் பலவித பிரச்சினைகள் இருப்பதாக புதிப்பாளர்கள் கருதுகிறார்கள்.  அதில் குறைந்த விலை உள்ள புத்தகங்களைப் பதிவு செய்து விற்றால் நஷ்டம்தான் வரும்.   மேலும்  விற்பனைத்தொகை உடனே வராது.

புத்தகக் காட்சிக்குச் செல்ல இயலாதவர்கள், பல்வேறு காரணங்களால் அதைத் தவறவிட்டவர்கள் எதிர்காலத்தில் இந்த வசதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 இருந்த இடத்திலிருந்தே அவர்கள் புத்தகங்களை வாங்க இந்த ஏற்பாடு வசதியாக இருக்கும்.

வருடத்தின் 365 நாட்களிலும் ஒரு நாளின் 24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும் என்பதால் எப்போது நினைத்தாலும் புத்தகங்களை வாங்கலாம்.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை இந்தத்  தளத்தில் விற்க 10 புத்தகங்களுக்கு 3000 ரூபாய் செலுத்தவேண்டும். 1500 புத்தகங்களுக்கு 50000  ரூபாய் செலுத்தவேண்டும்.   

மெய்நிகர் புத்தகக் காட்சியில் அச்சுப் புத்தகம், மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என்று முழுவதுமே புத்தகம் விற்பனை மட்டுமே நடைபெறும். அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெறும். அதனால் புத்தக விற்பனை அதிக அளவில் நடைபெறும்

பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் இவர்களுக்குப் பாலமாக இந்த அமைப்பு இருக்கும்.

இதில் பங்கேற்கும் அனைவருக்குமே தனைத்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும். அதற்குத் தேவையான கட்டண நுழைவு வாயில் வசதி (payment gateway option) ஒருங்கிணைப்பு (integration) இருக்கும்.

கொரானாப் பெருந்தொற்று காலத்தில் முன்னைவிட இணையம் வழியாகப் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வாய்ப்பை அனைவரும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதுதான் இதன்  முதன்மை நோக்கம்.

மெய்நிகர் புத்தகக் கண்காட்சி  அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கீழ்க்கண்ட சுட்டியில் மெய்நிகர் புத்தகக்காட்சி குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றப்பட்டுள்ளன. 

 http://thevirtualbookfair.com/

1) Technical Advantages :
http://thevirtualbookfair.com/adv-tam.html
http://thevirtualbookfair.com/adv-eng.html

2) Trade Benefits :
http://thevirtualbookfair.com/beni-tam.html
http://thevirtualbookfair.com/beni-eng.html

3)Subscriber Guidelines :
http://thevirtualbookfair.com/subs-tam.html
http://thevirtualbookfair.com/subs-eng.html

4)FAQs:
http://thevirtualbookfair.com/faq-tam.html
http://thevirtualbookfair.com/faq-eng.html

குவிகம் இலக்கியவாசல்

குவிகம் பற்றி சக பத்திரிகையாளர் விமர்சனம்:  

குவிகம் புதிய இதழில்  சில படைப்புகள் வாசித்தேன்
பெண்ணியம் பேசும் கவிதை மிக யதார்த்தம்
குண்டலகேசியை தில்லைவேந்தன் சிறப்பாகப் படம்பிடிக்கிறார்.
தாகூரின் நாட்டிய வழிபாடு மற்றும் ஆதிசங்கரர் பற்றிய கட்டுரைகள் புதிய செய்திகளைச் சொல்கின்றன.
108 வடைகள் கதைபோலில்லை. சொந்த அனுபவமாக மிளிர்கிறது.
ஆல்பம் ரேவதி ராமச்சந்திரன் சிறுகதையின் முடிவில் சேட்ஜின் மரணம் நெஞ்சைப் பிழிகிறது

வளவதுரையன் 

 

 

 

 

 

குவிகம் பொக்கிஷம் – துறவு – சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)

கலைமகள், வைகாசி 1943.

நன்றி- சுருதி வலைப்பக்கம்

Posted by என் செல்வராஜ் at 20:16:00

ஈழத்தில் போற்றுதலுக்குறிய எழுத்தாளர்களில் சம்மந்தன் என்கிற திருஞான சம்மந்தனும் ஒருவர். (1913-95)

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[ இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் “சம்பந்தன் சிறுகதை மலராக” அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.

1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதத் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.

1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் “சம்பந்தன் விருது” எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

 

சுருதி : எனக்குப் பிடித்த சிறுகதைகள் (7)

 

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறுவகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அனுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக் கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.

ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற, கனைக்கிற, சத்தங்கள். யானைகள் பிளிறுகிற பேரொலிகள். வெட்டு, குத்து, கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.

அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.

பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.

திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப்பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.

பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.

“குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.

இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார்.
“இங்கே எதைக் காண்கிறாய்?”

சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”

கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழிவிட்டது.

கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, “அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இப்பொழுது இல்லை, சுவாமி.”
“பசி?”

“அதுவுமில்லை.”

மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.

அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.

புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஓர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.

அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், “அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். “சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”

அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள் : “சுவாமி, எதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”

அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்போழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.

அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு “உட்காருங்கள்’ என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.

அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள் : “சுவாமி பாவிகளுக்கு ஒருநாளும் விமோசனம் கிடைக்காதா?”

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து “நீயும் உட்கார்” என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள்.

பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”

“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?”

இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது : “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறது என்பதை நீ அறியாயா?”

“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.

அவர் ஒருமாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார் : “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”

அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.

பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார் : “அப்பனே, எழுந்திரு. போகவேண்டும்.”

ஒருவர்பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள்.

அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ‘ஏன் இது?’ என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.

“அங்கே நுழைந்தாயே, அதனால்தான்”

இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.

“பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சிலசமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.

அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். ’இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் – எங்கோ ஒரு மூலையில் – என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.’

ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.

“குழந்தாய்!”

அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது.

“சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.

“களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்”

மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.

பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார் : “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?”

“ஆம்” என்று தலையசைத்தார் இளையவர்.

“இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”

மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

“உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”

இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவே பேசினார்.

“அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”

இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.

”குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!”

அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.

தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.

அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு பெரியவர் தாய் போல் மாறி, “ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!’ என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.

இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ‘இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?’ என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

’இந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே’ என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
‘அன்றைக்கே, அவன் வந்தபோது ‘இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. ‘சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?

அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.

வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ‘இனி வேண்டாம்’ என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.

வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே, காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ‘சுவாமி வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டி நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.

மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். ‘சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.’

அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.

‘சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?’

அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.

‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.’

காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர் கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.

‘அம்மா, இது என்ன கோலம்?’

அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.

அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.’

அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.

அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

Why did Tesla say that 3, 6, and 9 was the key to the universe? - QuoraFrisson 3 6 9 - Home | Facebook369 Logo - AnimationXpressWhat is the significance of 3, 6, and 9 in Indian mythology? - Quora

எண் ஜோதிடம். 3, 6, 9

ஜோதிடமா ? வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது.

இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர்கள் எல்லாம் முழு மேக்கப்புடன், கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு T V முன் அமர்ந்து பேசியதைப் பார்த்தோம்.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பாலாறு நாட்டில் ஓடும் என்றார்கள்.
இரண்டாம் அரை வருடத்தில் தேனாறு ஓடும் என்றார்கள்.
பாவம் இன்று பலருக்கு குடி நீரே கிடைக்க வில்லை.

ஜோதிட கலை தவறா என்றால், இல்லை. சரியாக கணிப்பவர்கள் யாரும் இல்லை.
நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai News
நுனிப்புல் மேய்ந்து, நம் முகம் படித்தே நம் பிரச்சனையையும், எதிர்காலத்தையும் சொல்லி விடுவார்கள்.

More of Physiognomy than astrology.

ஆனால் வாழ்க்கையில் கஷ்டம் என்று ஜோதிடம் பார்க்க வருபவர்க்கு ஆறு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் என ஆறுதல் கூறி நம்பிக்கை அளிக்கும் ஜோதிடர்களின் சேவையும் தேவையே.

நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரமும், வளர்ச்சியும்.

ஜோதிடக் கலையை உலகிற்கு அளித்து, ஜனணம் முதல் மரணம் வரை துல்லியமாக கணக்கிட்டு சொன்ன மஹான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

எண் ஜோதிடம் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏதோ ஒரு எண், நம்ம வாழ்க்கையில் நுழைந்து நல்லது செய்ய முடியுமா என யோசித்துக் கொண்டிருந்த பொழுது, அறிவியல் விஞ்ஞானி நிக்கோலாஸ் டெஸ்லா அவசரம், அவசரமாக ஓடி வந்து 3, 6, 9 என்ற எண்களால் முடியும் என்கிறார்.

டெஸ்லாவை படித்த பின் யோசித்துப் பார்த்தால் அவ் எண்களில் ஏதோ இரகசியம் உள்ளது போல தோன்றுகிறது.

Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள்3,6,9 என்ற எண்களில் அப்படி என்ன பெரிய அதிசயம் ஒளிந்திருக்க போகிறது என்று சத்தமாக கேட்க வேண்டாம்.

அது கல்லறையில் உறங்கும் விஞ்ஞானி டெஸ்லா காதில் விழுந்தால் அவர் மனது கஷ்டப்படும்.

அவ்வெண்களின் மீது அவ்வளவு காதல் அவருக்கு.

விவேகானந்தரை பெரிதும் மதித்த டெஸ்லா நம் வேத சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்.

டெஸ்லா தனது வாழ்நாள் முழுதும் விசித்திரமான முறையில் அவ் எண்களை பயன்படுத்தினார்.

டெஸ்லா தான் தங்கி இருந்த விடுதிக்குள் நுழையும் முன்னர் வெளியே 3 முறை சுற்றி விட்டு பின்னர்தான் உள்ளே செல்வாராம்.

தான் தங்கும் அறை கூட 3 ஆல் வகுபடும் எண்ணைக் கொண்டதாகத்தான் தேர்ந்தெடுப்பாராம்.

நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்! - Mullai Newsஒரு படி மேலே போய் தான் சாப்பிடும் தட்டை 18 நாப்கின்கள் கொண்டு துடைப்பாராம்.

இயற்கையைப் போலவே கணிதமும் நம்மால் உருவாக்கப் படவில்லை.
அவற்றின் பல பரிமாணங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு தெரிவிக்கப் பட்டன.

எடிசன் போன்றோரால் ஏமாற்றப் பட்ட டெஸ்லா தன் கண்டு பிடிப்புகள் எதையும் முறையாக ஆவணப்படுத்த வில்லை.

அவரது மூளையின் ஒரு மூலையில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த கண்டு பிடிப்புகள் அனைத்தும் அவரோடே அழிந்து விட்டன.

ஒரு வேலை ஆவணப் படுத்தி இருந்தால் அவர் கூற்றான “ If you only knew the magnificence of the 3, 6 and 9, then you would have a key to the universe.” என்பதின் உண்மை உலகிற்கு தெரிந்து இருக்கும்.

சற்று யோசித்தால் அவர் கூற்றில் ஏதோ, உண்மை இருப்பது போலவும் தெரிகிறது.

நம் முன்னோர் காரணம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்தது இல்லை.

கீழே கண்டவை அனைத்தும் 3 ன் பெருக்கமாக அமைந்ததற்கு ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்?

தமிழ் வருடங்கள். 60
வருடத்திற்கு 12 மாதங்கள்,
நாளுக்கு 60 நாளிகைகள்,
24 மணிகள்,
60 நிமிடங்கள்,
60 விநாடிகள்.
12 அங்குலம் 1 அடி
3 அடிகள். 1 கஜம்

வட்டத்தில் 360 டிகிரிகள்.

சிவன், விஷ்ணு, பிரம்மா மும் மூர்த்திகள் உடன் உறைபவர்கள்
பார்வதி, லெக்ஷ்மி, சரஸ்வதி
அசுரர்களை ஒடுக்க அவதரித்தவன் ஆறுமுகன்.

Holy Bible கூறுவது God, Jesus and Holy Spirit.
எகிப்தியரின் புராணம் பேசுவதும் 3 கடவுள்கள் ( சொர்க்கம் , பூமி, நரகம் ஆகியவற்றின் பிரதி நிதிகள்).

Atom ( அணு) தன்னுள் அடக்கியது புரட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என மூன்று பகுதிகள்.

27 நட்சத்திரங்கள்(9)
9 கிரகங்கள். 12 ராசிகள் . கூடவே நவாம்சம்.
9 X 12= 108

இந்து மதம், புத்த மதம், சமணமதம், யோகா ஆகியவற்றில் 108 க்கு தனி சிறப்பு.

108 திவ்ய தேசங்கள், விருந்தாவனத்தில் 108 கோபியர்கள். 12 ஆழ்வார்கள்.
இமயம் முதல் குமரி வரை சக்தி பீடங்கள் 108
108 உபநிடதங்கள்
18 புராணங்கள்
சிவனின் பூத கணங்கள் 108
ஜப மாலையில் 108 மணிகள்,
அர்ச்சனைகள் 108 அல்லது 1008.( அஸ்டோத்திரம், சகஸ்ரநாமம்)

ஜைனர்கள் கர்மாவை அடையும் வழிகள் 108.

பௌத்தர்களுக்கு அடக்க வேண்டிய உணர்வுகள் ( earthly temptations) 108 .
பௌத்தர்கள் 108 முறை மணி அடித்து புத்தாண்டை வரவேற்பார்களாம். ஜப்பானிலும் இதுவே பழக்கமாம்.
முக்கிய சடங்குகள் 9 துறவிகள் கொண்டுதான் நடக்குமாம்.
சீனர்களின் சொர்க்க கோபுரம் 9 வளையங்களால் சூழப்பட்டுள்ளதாம்.
சீனர்கள் 36 மணிகள் கொண்ட மூன்று மாலைகளை வைத்து ஜெபிப்பார்களாம்.
பௌத்த ஆலயம் 108 படிகளுடன், 108 புத்த விக்கிரகங்களை கொண்டதாக இருக்குமாம்.

இஸ்லாத்தில் 108 என்ற எண்னே இறைவனை குறிக்கும்.
அவர்களின் ஜப மாலையிலும் 108 மணிகளே.
இஸ்லாமியர்க்கு புனித தளங்கள் 3 ( மெக்கா, மெதீனா, ஜெருசலேம்).
அவர்களின் (Belief) நம்பிக்கைகள் 6.

யோகாவில் சூரிய நமஸ்காரம் துவங்கி 108 நமஸ்காரங்கள்.

நாட்டிய சாஸ்திரத்தில் நாட்டிய
அமைப்புகள் 108

ஆன்மாவிற்கு 108 ஆசைகளும் 108 எதிர் பார்ப்புகளும் இருக்குமாம். பட்டியலிட்டு உள்ளார்கள்.

பூமியின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 108 மடங்கு பெரியதாம்.

பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம், அவைகளின் விட்டத்தை போல 108 மடங்காம்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள். 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216.
சமஸ்கிருத வார்த்தைகள் ஆண் பால்54, பெண்பால் 54 என மொத்தம் 108.

சூரிய ஒளி கடக்கும் வேகம் விநாடிக்கு 186282 மைல்கள் (9)

ஈக்வேட்டரில் பூமியின் சுற்றளவு 21600 நாட்டிகல் மைல்கள்(9).

ஆரோக்யமான இதயம் துடிப்பது நிமிடத்திற்கு 60 தடவைகள்.
வெளி விடும் மூச்சு நிமிடத்திற்கு 15 தடவைகள்.
பகலில் 10800, இரவில் 10800 தடவைகள்.
உடம்பின் துவாரங்கள் 9 (ஒன்பது வாயிற் குடில்)
அன்னையின் கருவறையில் நாம் வசித்த காலம் 9 மாதங்கள்.
உடம்பில் 108 சூட்சுமங்கள் ( Nerve Points) மர்ம நாடிகள்.
அவை உடலின் 9 முக்கிய பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவாம்.

நவ மணிகள், நவ தாண்யம், நவ ராத்திரிகள்
நவ ரசம், நவ பாஷாணம். நவ நதிகள்,
நவ நிதிகள், நவ சக்திகள், நவாம்சம்,
நவ பிரம்மாக்கள், நவ திருப்பதிகள், நவ கைலாயம், நவ ஜோதி, நவ வீரர்கள், நவ அபிஷேகங்கள், நவ லோகம், நவ திரவியங்கள், நவ சிவ விரதங்கள், நவ சந்தி தாளங்கள், நவ குணங்கள், நவ குண்டலங்கள், நவ பக்தி, நவ சக்கரங்கள் இன்னும், இன்னும்.

ஆம்புலன்ஸ் கூட 108 தான்.
மனுஷனுக்கு 1008 வேலை, 1008 பிரச்சனைகள்.
9, பாவம் ஒரு சிலரை தவறாகவும் குறிப்பிடுகிறது.
தங்கம், பிளாட்டினம் 999 மார்க்.

தாய விளையாட்டில் 6,12 விழுந்தால்தான் பாதுகாப்பாக கட்டத்தை அடையலாமாம்.
ஆறும், பணிரெண்டும் என் பேத்தி வேண்டுகிறாள்.

ஆடு புலி ஆட்டத்தில் 3 புலிகள் 15 ஆடுகளுடன் ஆடுகிறாள்.

இன்னும் எவ்வளவோ. அனைத்தும் தற்செயலாகவா அமைந்திருக்கும்?

கூகுளாரிடம் கேட்டால் இந்த எண்களை கணிதமாகவும், விஞ்ஞானமாகவும் விவரிக்கிறார்.

என் அறிவுக்கு சற்று அதிகம்.

3, 6, 9 களில் ஏதோ இரகசியம், ஏதோ சிறப்பு இருப்பதை கண்களை மூடி ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.

3,6,9 விதியை மாற்றும் ஜோதிட எண்கள் அல்ல.
அனைவர்க்கும் நல்லது செய்யும் புனித எண்கள்.

நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்.

(எனக்கு 69 வது வயது துவங்கும் இன்று என் மகனுக்கு  36 வயது முடிவடைகிறது.
3,6,9 எண்கள் என்னுடன் பயனித்து நல்லவை மிகவே செய்துள்ளது.

இவ்வாண்டும் நல்லது மிக நடக்கும் என நம்புகிறேன்.)

’நெருப்பில் ஒரு நகரம் ’ – மலையாளத்தில் ஐசக் ஈப்பன் தமிழில் மீனா

மலையாள மொழி இலக்கிய உலகில் ஐசக் ஈப்பன் சிறுகதை ,நாவல்,கட்டுரையாசிரியர்  என்று பன்முகம் கொண்ட  படைப்பாளி.

அவருடைய படைப்புகள் பதினாறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

பல படைப்புகள் ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

ஈவிஜி புரஸ்காரம், தகழி விருது,அபுதாபி சக்தி விருது,கொட்டாரகாரா தம்பிரான் விருது ,எஸ்.கே .பொட்டேகாட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

’நெருப்பில் ஒரு நகரம் ’ என்ற அவரது சிறுகதை சாதி,மத,இனப் பின்னணியில் மாறி வரும் மனித வாழ்க்கை, சமுதாய அழிவிற்கு இட்டுச் செல்கிற  நிலையைக் கருவாகக் கொண்டதாகும்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் தாம் அனுபவித்த கல்லூரி வாழ்க்கை,வாழ்ந்த நகரம் ஆகியன வெவ்வேறு  மதம் சார்ந்த மூன்று நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.பல ஆண்டுகள் கழிந்த பிறகும், ஒரு முறையாவது அந்த நகரத்திற்குப் போய் வரவேண்டுமென்ற ஆசை அவர்களைத் தூண்ட ,ஆழ்ந்த திட்டமிடலுக்குப் பின்னர் மூவரும்பழையஎதிர்பார்ப்புகளோடு பயணிக்கின்றனர். தோற்றத்தில் மட்டுமின்றிச் செயல்பாடுகளிலும் நகரம் முழுவதுமாக மாறிப் போயிருக்கிறது. மதங்களால் மாறுபட்ட நெருங்கிய மூன்று நண்பர்களைப் பார்க்க நகரம் தயாராக இல்லை.அங்கு வளர்ந்து விட்ட மதப்பின்னணியிலான அபிப்ராயங்கள், தூண்டப்படும் எதிர்ப்புகள் ஆகியன மனித வாழ்க்கையைச் சின்னா பின்னப்படுத்துவதை  அவர்கள் பார்க்கின்றனர்.

மத, இன ,மொழிவேறுபாடின்றி தாங்கள் வாழ்ந்த அந்த நாட்களுக்கும், இன்று  பரவியிருக்கின்ற  எண்ணங்களுக்குமான வேறுபாடு நகரங்கள் அழிந்து போவதற்கான சூழலை உருவாக்குவதை அறிந்து ’எதுவும் செய்ய முடியாத ’நிலையில் வருத்தத்தோடு திரும்புவதாக  கதை அமைகிறது. 

இந்த கதையைத் தரவிரக்கம் செய்து கொள்ள கீழே கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1KZVewZgZZFaH5nz3EZkBMHs_3QjOWBVF/view?usp=sharing

தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -இரண்டாம் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

दो देशों को मीठे राष्ट्रगान देने वाले दुनिया के पहले कवि - Agniban

( இந்த நாடகம்  மகான்  தாகூர் அவர்கள்  எழுதித் தயாரித்த   நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல்  ஒரு திரைப்படமாகவும்  தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக  அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )

 

Natir Puja is the only film directed by Rabindranath Tagore. | by Bollywoodirect | Medium 

iஇதன் முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பில் செல்லவும்)

https://kuvikam.com/2020/09/15/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/

 

உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.

 

அரசி: பிட்சுணியே, கேள். எனது மகன் சித்ரா ஒரு புதுப்பெயரைத் தரித்துக்  கொண்டுள்ளானாமே, அது என்ன என்று உனக்குத் தெரியுமா?

பிட்சுணி: ஆம்! குசலசீலா என்பதே அது.

அரசி: (தனக்குத்தானே) தனது தாய் இட்டு அழைத்த பெயர் புனிதமற்றது என்று நினைத்தானோ என்னவோ- வெகு சுலபமாக அதனை உதறித்தள்ளி விட்டான்!

பிட்சுணி: மகாராணி, தாங்கள் விரும்பினால், தங்களைக் காண அவனை அழைத்து வருகிறேன்.

அரசி: நான் விரும்பினாலா? என்ன வெட்கக்கேடு. அவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்த நானே உன்னிடம் ‘அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா’ எனக்கூற வேண்டுமா?

பிட்சுணி: அப்படியானால், நான் சென்றுவரட்டுமா?

அரசி: கொஞ்சம் இரு. நீ அவனை சிலசமயம் பார்ப்பாய் அல்லவா?

பிட்சுணி: ஆம்.

அரசி: சரி- ஒருமுறை மட்டும்… அவன் மட்டும் சரி என்றால் – இல்லை, வேண்டாம்; ஒன்றுமில்லை!

பிட்சுணி: நான் அவனிடம் சொல்கிறேன். அப்போது ஒருவேளை நீங்கள் அவனைக் காண முடியும்.

 

          உத்பலா செல்கிறாள்.

 

அரசி: ஒருவேளை! ஒருவேளை! நான் எனது இதயத்தின் ரத்தத்தை அவனுக்கு  ஊட்டியபோது ‘ஒருவேளை’ என ஒன்று இருந்ததில்லையே! ஒரு தாயிடம் பட்ட கடனுக்கான உரிமை இத்தனை சுருங்கி, ‘ஒருவேளை’யில்      தொக்கி நிற்கிறதே!

 இதுவே அவர்களின் மதம்! (கூப்பிடுகிறாள்) மல்லிகா!

                                        (மல்லிகா உள்ளே வருகிறாள்)

மல்லிகா: மகாராணி!

அரசி: இளவரசன் அஜாதசத்ரு பற்றிய செய்தி ஏதேனும் உண்டா?

மல்லிகா: ஆம். அவர் தேவதத்தனை அழைத்துவரச் சென்றுள்ளார். மூன்று ரத்தினங்கள் எனும்  மதத்தின் ஒரு சிறு    துரும்பைக்கூட அவர் இந்த நாட்டில் விட்டுவைக்க மாட்டார்.

அரசி: கோழை! அரசாளத் தைரியமற்ற அரசன்! புத்தரின் போதனைகள் வலிமையற்றவை என்பதற்கு எனது வாழ்வே சான்றாக நிற்கின்றது. இருப்பினும் அவனுக்கு, பிரயோசனமற்ற அற்பனான  தேவதத்தனைக் கூப்பிடாமல் அவற்றை எதிர்க்கத் திராணியில்லை.

மல்லிகா: யாரிடம் அதிகம்  பொருள் உள்ளதோ அவர்களிடமே பயமும் மிகுதியாக உள்ளது, மகாராணி. அவர் இந்த நாட்டுக்கு உரிமைகொண்டவராக இருப்பதனால் வலிமையுள்ள மற்றவர்களுடன் சமாதானமாக   இருப்பதனையே தைரியமற்ற அவர் விரும்புகிறார். புத்தபிரானின் சீடர்களுடன் அவர் மிகவும் இணக்கமாக இருப்பதனால், பயம்கொண்டு, தேவதத்தனின் சீடர்களுடனும் மேலும் இணக்கமாக இருக்க விழைகிறார். விதியின் வலிமையைத் தகர்க்க இரட்டைப் பாதுகாப்பை இரு பக்கங்களிலிருந்தும் பெற நினைக்கிறார்

அரசி: ஐயோ! எனது விதி இவ்வாறு ஒன்றுமில்லாமல் போயிற்றே! என்னிடமும் ஒன்றுமில்லை; பொய்மையைத்     துணைக்குச் சேர்த்துக்கொள்ளும்  கோழைத்தன்மையும் எனக்கு வேண்டியிருக்கவில்லை!

மல்லிகா: மகாராணி, தாங்கள் இப்போது நமது பிட்சுணியைப் போலப் பேசுகிறீர்கள். ‘நமது ராஜ்யத்தின் அரசி    ஆசிர்வதிக்கப்பட்டவள்; ஏனெனில் அவள் புத்தபிரானின் கருணையால் நம்மை மாயைகளுடன் பிணைக்கும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவள்,’ என அவள் கூறுவாள்.

அரசி: இந்த வார்த்தை ஜாலங்கள் எனக்குக் கோபத்தையே வருவிக்கின்றன! இந்தப்  பொய்மையான       உண்மைகளை நீயே நினைத்து மகிழ்ந்துகொள், என்னை  மண்ணுடன் பிணைக்கும் தொடர்புகளைத் திரும்பக் கொடுத்துவிடு. அதன்பின்பு நான் எனது விளக்குகளை அசோகமரத்தினடியே உள்ள வழிபாட்டுப்  பீடத்தில் ஏற்றுகிறேன்; திரும்பவும் நூறு பிட்சுக்களுக்கு உணவளிக்கிறேன்; அவர்களுடைய ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு நாளும் எனது அரண்மனையில் ஒலிக்கட்டும். அதனைச் செய்ய முடியாவிட்டால் பின்பு தேவதத்தன் வரட்டும்; அவன் உண்மையுள்ளவனா இல்லையா என எனக்கு  அக்கறையில்லை. நான் சென்று, காணும் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள்  வருகிறார்களா எனப் பார்க்கிறேன்.

 அவர்கள் செல்கிறார்கள்.

 நாட்டியமங்கை ஸ்ரீமதி தனது வீணையை ஏந்தியபடி வருகிறாள். தனது விரிப்பினைப் புல்தரையின்மீது     விரித்தவள், தனது மாணவிகளை அழைக்கிறாள்.

 ஸ்ரீமதி: நேரமாகி விட்டது. வாருங்கள் (அவள் அமர்ந்து கொண்டு பாடுகிறாள்)

                          இரவின் மௌனமான அமைதியில் என்ன ரகசியம் என்னை வந்தடைந்தது!

                          நான் அறியேனே!

                          அது விழித்திருத்தலா, அது உறங்கியிருத்தலா?

                          நான் அறியேனே!

 

          மாலதி என்னும் கிராமத்துப் பெண்ணொருத்தி நுழைகிறாள்.

 மாலதி: நீங்கள் தான் ஸ்ரீமதியா?

ஸ்ரீமதி: ஆம். உனக்கு என்ன வேண்டும்?

மாலதி: உங்களிடமிருந்து நான் சங்கீதம் கற்றுக்கொள்ளலாமென்று சொன்னார்கள்.

ஸ்ரீமதி: நான் முன்பு எப்போதாவது உன்னை இந்த அரண்மனையில்  பார்த்திருக்கிறேனா?

மாலதி: நான் இப்போதுதான் எனது கிராமத்திலிருந்து வருகிறேன். என் பெயர் மாலதி.

ஸ்ரீமதி: எதற்காக வந்தாய், குழந்தாய்? உனக்கு மிகுதியான நேரம் இருக்கின்றதா? அங்கு நீ பூஜைக்குரிய           மலர்போல இருந்தாய்; கடவுள்களும் மகிழ்ந்தனர். இங்கு கேளிக்கை எனப்படும் மாலையில் தொடுத்த ஒரு பூவாக இருப்பாய்; வக்கிரமான பிசாசுகள் உன்னைப்பார்த்து நகைக்கும். நீ பாடல்களைக் கற்றுக்கொள்ளவா வந்திருக்கிறாய்? நீ வேண்டுவது அதுமட்டும்தானா?

மாலதி: நான் உண்மையைக் கூறட்டுமா? எனது எதிர்பார்ப்புகள் மிக அதிகமானவை;  ஆனால் அதைப்பற்றிப்பேச என்னால் இயலவில்லை.

ஸ்ரீமதி: ஓ! அப்படியா? ஒருநாள் அரசியாகும் வெற்றுக்கனவினைக் காண்கிறாய்! உனது  முந்திய பிறவியின் பாவங்கள் போதுமானவையாக இருந்தால், அக்கனவு  பூர்த்தியானாலும் ஆகும். கானகத்துப் பறவை ஒன்று தங்கக்கூண்டிலிருக்க ஆசைப்பட்டால், கெட்ட தேவதைகள் அதன் சிறகுகளில் குடியேறும். உனது  காட்டிற்குத் திரும்பிப் போய்விடு! இன்னும் தாமதம் செய்யாதே!

மாலதி: சகோதரி,  சொல்வது எனக்குப் புரியவில்லை!

ஸ்ரீமதி: மகிழ்ச்சியற்ற பெண்ணே! கையிலணியும் ஒரு கங்கணத்திற்காக பிணிக்கும்  சங்கிலியை ஏன் தேடியலைகிறாய்?

மாலதி: நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்! நான் விளக்குகிறேன். புத்தபிரான் இந்த  நந்தவனத்திற்கு         ஒருமுறை வந்து இந்த அசோகமரத்தடியே அமர்ந்தார் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இடத்தில் மகாராஜா ஒரு வழிபாட்டு  மேடையைக் கட்டினார்.

ஸ்ரீமதி: உண்மைதான்!

மாலதி: ஒவ்வொருநாள் மாலையிலும் இளவரசிகள் தங்கள் நிவேதனப் பொருள்களுடன் அங்கு வருகின்றனர்  எனவும் கூறுகிறார்கள். அத்தகைய உயர்வான சலுகையை  நான் எதிர்பார்க்கவில்லை; ஆனால் நான் அந்த வழிபாட்டு மேடையைப்  பெருக்கிச் சுத்தமாக வைக்கலாம் அல்லவா? அந்தவொரு நம்பிக்கையே  உங்களுடைய பாடும்பெண்களின் குழுவில் சேர்வதற்கு  என்னை இங்கு அழைத்து  வந்தது.

ஸ்ரீமதி: வா சகோதரி, நான் மகிழ்ச்சியடைகிறேன். இளவரசிகளின் வழிபாட்டு தீபங்கள் வெளிச்சத்தைவிட       அதிகமாகப் புகையையே வெளிவிடுகின்றன; அவை உனது  புனிதமான தொடுதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் எது உன்னை இவ்வாறு  எண்ணவைத்தது?

 

 (தொடரும்)

 

 

 

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் ஜெர்மன் மூலம் தமிழில் கிருஷ்ணமூர்த்தி

Fact Check: Is this a photo of Mahatma Gandhi's assassination?

There Was No Time For Emotions': PTI Journalist Recalls How Gandhi's Assassination Was Reported

When newspapers across the world mourned the loss of Mahatma Gandhi | Gandhi's Last Days

வாசிப்போம் வாசிப்போம்: முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)

தோட்டா            நான்காவது வினாடி முடிவடைந்து விட்டது, காந்தி. இன்னும் ஒரு வினாடி காலம் தான் நீ உயிர் வாழமுடியும்.. நான்.உள் இதய அறையில் தங்கி உறங்குவதற்குச் சிறந்த இடம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படாமல் இரு காந்தி! ஆறுதல் அடைந்து விடு. மகாத்மா! இன்னும் ஒரு விநாடியில் நாம் இருவருமே அமைதியில் ஆழ்ந்து விடுவோம்!  

குரல்       :        கரம்சந்த் காந்தி, இன்னும் ஒரு வினாடிகாலம் இருக்கிறது, உனக்கு. பயணத்தைத் தொடர்! நாம் பறந்து செல்லவேண்டிய பாதை வெகுதூரத்தில் உள்ளது. காற்று மண்டலம், அழுத்தம் குறைவானது! உன்னைத் தயார் செய்து கொள்! 

காந்தி :      நாம் மிக உயரத்தில் பறந்து மேலும் மேலும் மேலே சென்று கொண்டிருக்கிறோம். பூமி என்று ஒன்று இருப்பது கண்களுக்கு புலப்படவில்லையே! 

குரல்       :        (சிரித்து) பூமி என்றால் என்ன? மேல் நோக்கிப் பார்?   

காந்தி      :        முடியவில்லையே, பேரொளி கண்களை கூசுகிறது. கண்களை மூடிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

குரல்       :      (சிரித்துவிட்டு அந்தப் பேரொளியின் முன்னால் இன்னும் மூன்று மண்டலங்கள் இருக்கின்றன. நாம் அதில் நுழைந்து செல்ல வேண்டும்.     

காந்தி      :      குரலே, அதோ என்ன அது? மேகக் கூட்டங்கள் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டு இவ்வளவு உயரத்தில் எப்படி மேகங்கள் இருக்க முடியும் என்று கூறமுடியுமா?           

குரல்       :        வாழ்க்கையின் குழம்பிப்போன கடவுள்கள் அவை. மேலும் இந்த கடவுள்களை தொற்றிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் தியானம் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டு பேரொளியின் வாயில்படி வரைகூட வரமுடியாமல் நின்று விட்டவர்கள்.    

காந்தி      :        நான் இவர்களுடன் இருக்க வேண்டுமா?              

குரல்       :        நாம் முதல் திரையை ஊடுருவி வந்துவிட்டோம்!

 காந்தி     :        ஓ, என் குரலே! பேரொளி எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது?              

குரல்       :        இன்னும் ஒரு போர்வைத் திரை அதன்முன் உள்ளது. இதோ பார், நாம் அதை ஊடுருவிச் செல்கிறோம். 

காந்தி      :        என்ன அங்கே, இலேசான மேகங்கள் போன்று ?      

குரல்       :        தியானம் என்ன என்று அறிந்திருந்த ஆன்மாக்கள் அவை. எனினும் மகா அமைதியினுள் போகும் வழியைக் கண்டு கொள்ள இயலாதவை. இந்த உயரத்தில் இவை இலேசான மேகங்களாக இப்போது நின்று கொண்டிருக்கின்றன. 

காந்தி      :        நான் இங்கு இந்த ஆத்மாக்களுடன் தான் இருக்கப் போகிறேனோ?              

குரல்       :        நாம் தொடர்ந்து ஊடுருவிச் செல்ல வேண்டும்.       

காந்தி      :        மூன்று அடுக்கு போர்வை மண்டலம் கிழிந்து விட்டது. ஓ, என்னைக் காப்பாற்று என்குரலே! எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது இந்தப் பேரொளி? 

குரல்       :        (சிரிக்கிறது) அந்த ஒளி சாத்வீகமானது!.      

காந்தி      :        என்னை சுட்டு எரிக்கும் பயங்கரமான ஒன்றாக அது இருக்கும்போது எப்படி அது சாத்வீகமாக இருக்க முடியும்?      

குரல்       :      அது உன்னை சுடுகிறது. ஆனால் அதில் நீ தீய்ந்துபோகமாட்டாய். பயங்கரமாக இருந்தாலும் அந்த ஒளி சாத்வீகமானது. மேலே அண்ணாந்து பார், காந்தி!     

காந்தி      :        முடியவில்லை என்னால், கண்களை ஒளி குருடாக்குகிறது.       

குரல்       :        உன்னால் முடியும், கரம்சந்த் காந்தி!   

காந்தி      :      எவ்வளவு சாத்வீகமாக ஒளி இருக்கிறது? எவ்வளவு பயங்கரமாகவும் இது இருக்கிறது? அது குளிர்ச்சியான ஒரு நெருப்பு! அமைதியான ஒளியால் ஆன புயல்! இவ்வாறான ஒளியை நான் இதுவரை என் வாழ்வில் கண்டதில்லை, என் குரலே!       

குரல்       :        பயணத்தைத் தொடர்ந்து மேலே போக வேண்டும் காந்தி !  நாம் செல்லவேண்டிய பாதை மிக நீளமானது. இன்னும் அரை வினாடிகாலம் தான் எஞ்சியிருக்கிறது.    

காந்தி      :        சற்றுப்பொறு! என் குரலே, நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன். மூச்சு திணீறுகிறது. கண்கள் சக்தியை இழந்துவிட்டன. எதிரில் உள்ள வெளிச்சவெளியில் கறும் புள்ளிகளைக் காண்கிறேன். 

குரல்       :        (சிரித்து) அவை கரும்புள்ளிகள் அல்ல காந்தி, நட்சத்திரங்கள். 

காந்தி      :        கரு நட்சத்திரங்கள்!!!

குரல்       :        பேரொளியின் முன் இருண்டிருக்கும் நட்சத்திரங்கள். சிந்தனை மனதை ஒருநிலையில் நிறுத்தி தியானம், பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் வாயிலாக அமைதி மண்டலத்தை அடைந்த ஆன்மாக்கள் அவை. நிரந்தரமாக மௌன நட்சத்திரங்களாக இங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

காந்தி      :        இங்கேயே இருந்துவிட அனுமதிப்பாயா, என்குரலே!      

குரல்       :        நாம் இவற்றைக் கடந்து இன்னும் மேலே போக வேண்டும்.      

காந்தி      :        அங்கே என்ன இருக்கிறது? 

குரல்       :      (லேசாகச் சிரித்து) அங்கு நுழைவாயில் ஒன்று இருக்கிறது.     

காந்தி      :      நுழைவாயிலா?   

குரல்       :        நுழைவாயிலுக்கு பின்னால் பெரிய பணியாளர்கள் இருக்கிறார்களாம். முதலில் அவருடைய இருதயத்தினுள் இருந்து வெளியே சென்று மீண்டும் அவரிடமே அழைக்கப்பட்ட தியாகிகளாக!      

காந்தி :      பெரிய பணியாளர்கள் இருக்கும் இடத்திற்குள் நுழைய எப்படி எனக்குத் தைரியம் வரும்? நான் மிகவும் பலஹீனமானவன்  கோழை! மோசமானவன். பல முக்கிய சந்தர்ப்பங்களின் நான் ஆத்ம பலமின்றி பலஹீனமாகச் செயல் பட்டிருக்கிறேன். அவர்களின் கால்களைத் தொட்டு முத்தமிடக் கூட அருகதையில்லாதவன்.   

குரல்       :        நீ பலஹீனமானவனாக இருந்திருக் கலாம். முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆத்மபலமின்றி நீ செயல்பட்டிருக்கக் கூடும். ஆனால் உன் மனோதிடம் உறுதியாகத்தான் இருந்தது. அங்கே, மேலே ஒளியில் உள்ள அவர், இக்காலத்தில் உன்னைவிடச் சிறந்த தூதுவன் ஒருவனைக் காணவில்லை என்பதை மட்டும் நான் அறிவேன். உன் ஆயுளின் முடிவின் மூலம் நீ ரட்சிக்கப் பட்டிருக்கிறாய்! 

                              ஆனந்தப்படு, மகாத்மா! அங்கே பார்! கதவு தானாகவே திறந்து கொள்கிறது!  

காந்தி      :        உன்னைப் பின்பற்றி வருகிறேன், என் குரலே!       

                              (லேசாக இசையை புகுத்தவும்)    

குரல்       :  வேகமாக, இன்னும் வேகமாக! கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்!      

                              அவை உன் காலடியில் வீழ்ந்து பெரும் ஒளியில் மினுமினுப்பதைப் பார்.      

                           சொர்க்கத்தின் அளவை நிர்ணயிக்கும் சித்திரங்களைப் பார்!                அந்த வெண்ணிற நதியை – உங்கள் அந்தணர்களால் ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் அந்த வெண்ணதியைப் பார்!        

                              பலகோடி ஆண்டுகளாக இருந்து கொண்டு  பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்காகவும் இனி பிறவி எடுக்கப் போகிறவர் களுக்காகவும் முடிவில்லாத பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் நட்சத்திரங்களைப் பார்! |   

                              (இசை முடிவடைகிறது)     

காந்தி      :        யாராவது அவர்களின் பிரார்த்தனையைக் கேட்கிறார்களா?     

குரல்       :        இல்லை என்றால் பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைத்து இருக்குமா?     

காந்தி      :        நான் வேண்டிக் கொள்வதற்கு அனுமதி உண்டா ?            

குரல்       :        மற்றவர்களின் நலனுக்காகக் கெஞ்சி, பரிந்து பேசுபவர்கள் வாழும் மண்டலத்தின் வழியாகப் போகும் வரை அனுமதி இருக்கிறது. 

காந்தி      :        அதற்குப் பின்பு – – – ?               

குரல்       :        எனக்குத் தெரியாத ஒன்று!      

காந்தி :        அப்படி என்றால் பிரார்த்தனை செய்ய எனக்கு விருப்பமாக இருக்கிறது.

குரல்   தாராளமாக காந்தி! மோகன்தாஸ் கரம்சந்த் . . . நீ பிரார்த்தனை செய்! இன்னும் கால் வினாடி நேரம் உனக்கு இருக்கிறது.

காந்தி      :        ஓ, என் குரலே, என் கைகளை அசைக்க முடியவில்லையே! பிரார்த்தனை செய்வதற்கு என் கைகளை ஒன்றாகக் கூப்பிக் கொள்ள முடியவில்லையே!      

குரல்       :        நான் இப்போது உன் கைகளைத் தொடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன.

காந்தி :        என் உதடுகளை அசைக்க முடியவில்லையே!      

குரல்       :        நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன். இப்போது அவை பலமடைந்து விட்டன. 

காந்தி      :        கண்கள் பழுதடைந்து இருக்கின்றனவே! பேரொளியை என்னால் பார்க்கமுடியவில்லையே!   

குரல்       :        உன் கண்களை முத்தமிடுகிறேன். இப்போது நீ பேரொளியை பார்க்கமுடியும்.      

                              (இடைவெளி)    

காந்தி      :        (மெதுவாக) நீ . – . உன்னை எப்படி அழைக்கவேண்டும் என்று சொல்கிறாய்?    

குரல்       :        பேரொளியில் உள்ளவனே!       

காந்தி      :        பேரொளியில் உள்ளவனே! நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொண்டிருக்கிறாய்! உன் குரலை என் இருப்பிடத்திற்கு அனுப்பிவைத்தாய்!    

                              பல முக்கிய விஷயங்களில் அவைகளைத் தீர்மானிக்க வேண்டிருந்த வேளைகளில் நான் உறுதி படைத்த மனதுடன் செயல் படவில்லை.

 நான் பலஹீனமானவன், நான் அற்ப உள்ளம் படைத்தவன்,

உன்முன் இருக்கும் உயர்ந்த நட்சத்திரங்கள் முன்பும் நான் எவ்விதமான கருணைக்கும் லாயக்கற்றவன்.  

                              என்னுடைய மனோதிடத்திற்காகவும் எனக்கு தகுதியற்ற முறையில் மரணம் நேர்ந்த விதத்திற்காகவும் மட்டுமே கௌரவிக்கப் பட்டிருக்கிறேன்.       

                              என்னிடம் கருணைகாட்டு, பயங்கரமான பேரொளியே!        

                              ஆனால் தகுதிகள் ஏதும் இல்லாத, பலஹீனமான உள்ளத்தில் கொடிய எண்ணங்கள் நிறைந்த மனிதனாக நீ என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ளவில்லை. பதிலாக, தூதனாக அழைக்கிறாய்!  

                              ஓ, ஒளியில் உள்ளவனே!    

                              மனவலியினுடனும், சொல்ல முடியாத துன்பங்களுடனும் எல்லாவிதமான கேவலமான மனநிலைகளுடனும் தற்போது என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா மனிதர்களையும் என் பலமற்ற கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தவிதத் தடையும் சொல்லாமல் அவர்களை ஏற்றுக்கொள்!        

                              வெறுப்பினால் மட்டும் நிறைந்த, எதையும் புரிந்து. கொள்ளும் திறனற்ற என் கொலையாளியின் ஆன்மாவைக் கொண்டுவந்திருக்கிறேன்.    

                              அவனை ஆசிர்வதித்து எந்தவிதத்  தடையும் சொல்லாமல் அவனை ஏற்றுக் கொள்!  

            பல மடங்கு துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை என் கைகளில் ஏந்தி உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.      

                              பட்டினியால் வாடுபவர்களையும் மனவலியினால் வாடுபவர்களையும், விதவைகளையும், பிச்சைக் காரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.        

                              அவர்கள் எல்லோரையும் ஆசிர்வதித்து தடைஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்!        

                              யார் யாரெல்லாம் வன்முறைக்கு ஆளாக்கப் படுகின்றார்களோ அவர்களை எல்லாம் உன் முன் கொண்டு வந்திருக்கிறேன்.

           ஏழைகளுக்குள் பரம ஏழைகளானவர்களாக இருப்பவர்களையும் உன்னிடம் கொண்டு வந்திருக்கிறேன்.       

                              அவர்களை ஆசிர்வதித்து எந்தத் தடையும் சொல்லாமல் அவர்களை மிக்க அன்புடன் ஏற்றுக் கொள்!    

                              உன் மாபெரும் தூதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் மிகச் சாமானியன் என்று எனக்குத் தெரியும்.  

                              ஆனால் என் காலத்தில் இருந்த துயரங்களும் துன்பங்களும் அவர்கள் காலத்தில் இருந்ததை விடக் கொடியவை.       

                              ஓ, ஒளியில் இருப்பவனே! ஒரு புதிய தூதனை உன் இதயத்திற்கு ஏற்ற ஒருவனை அனுப்பிவை!   என்னை விடப் பலமுள்ளவனை என்னைவிடத் தைரியசாலி ஒருவனை அனுப்பிவை!    

                              உன் ஒளியைப் போல் சாந்தமானவனாகவும் பயங்கரமானவனாகவும் உள்ள ஒருவனை அனுப்பிவை!  

                              அப்படிப்பட்ட ஒருவன் கால்களைத் தொட்டு முத்தமிட வேண்டும்!      

                              பின்பு அமைதியாகவும் ஆனந்தமாகவும் வெறுமையில் என்னை நானே கரைத்துக் கொள்வேன்!        

                              ஓ, ஒளியில் உள்ளவனே, என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்!    

                               (மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              (மிக மெல்லிய குரலில்) என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்!    

                              மணி ஓசை, உரக்க, எதிரொலியுடன்      

                              இடைவெளி     

அறிவிப்பாளர் அந்தச் சிறிய பறவை வெண்மேகத்தினுள் உட்புகுகிறது! யமுனை நதி மீண்டும் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது. காந்தியின் தலை சற்றுத் தாழ்ந்து சாய்ந்தது! அவர் வீழ்ந்து படுத்திருந்த மண்மேடு சுக்கு நூறாக உடைந்து சிதறியது.       

                              பண்டிட் நேரு டாக்டரைப் பார்த்தார்! அவர் லேசாகத் தலையை ஆட்டினார்!       

                              உடனே பண்டிட் நேரு எழுந்து நின்றார்.       

நேரு :        என் குழந்தைகளே! எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை! மகாத்மா காந்தி, நம் தந்தை மரணம் எய்திவிட்டார்!       

                              (பக்திப் பாடல் இசை) 

 

முற்றும் 

 குண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்

 குண்டலகேசியின் கதை 2

குண்டலகேசி | மௌவல் தமிழ் இலக்கியம்

முன் கதைச் சுருக்கம் : 

குண்டலகேசியின் முதல் பாகத்தைப்  படிக்க இங்கே சொடுக்குங்கள் !

https://wp.me/p6XoTi-3sg

 

இயற்கை அழகும்,செல்வ வளமும், சமயப் பொறையும், வணிகச் சிறப்பும் கொண்டது பூம்புகார்  நகரம். இந்நகரின் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை. அழகும், அறிவும், அன்பும்,  அருளும் நிறைந்தவள். இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும்  சென்று கொண்டிருந்த இவள் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களை இனிக் காண்போம்:

குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube

பத்திரையின் தாய் இறத்தல்

 

சிறந்திடும் இன்ப வாழ்வில்
     திருப்பமும் வந்த தம்மா.
அறந்திகழ் அன்புத் தெய்வம்
     அன்னையும் மறைந்தாள் ஓர்நாள்.
பிறழ்ந்தது கனவு, தன்னைப்
     பெற்றவள் பிரிவி னாலே
உறைந்தனள் துன்பத் தாலே
      ஊழ்வலி அறிந்தார் யாரே?

           பத்திரை வளர்தல்

தாயவள் பிரிவால் வாடித்
     தவித்தனள் பத்தி ரையாள்.
சேயவள் மகிழ்ச்சி கொள்ளச்
     செல்லமாய் வளர்த்தான் தந்தை.
ஆயநற் கலைகள் எல்லாம்
      அறிந்திடும் வழிகள் செய்தான்.
தூயவள் அவளும் காலம்
     சுழன்றிட வளர்ந்து வந்தாள்.

ஆற்றினில் ஆடி,  வீழும்
     அருவியில் குளித்துத் தென்றல்
காற்றினைப் போல்தி ரிந்து,
     கவலைகள்  தமைம றந்தாள்.
மாற்றுப்பொன் போன்றாள் செல்வ
       வளங்களைப் பெற்று வாழ்ந்தாள்
சாற்றிடும்  அவள்சொல் கேட்டுத்
     தந்தையும் நடந்து கொண்டான்

          பத்திரையின் அழகு

ஓவியப் பாவை அன்னாள்
     ஒளியுமிழ் மின்னல் கண்ணாள்
கூவிடும்  குயில்போல் சொற்கள்
      கொண்டனள்  புருவ  விற்கள்
பூவென மலர்மு கத்தாள்
      பொன்னென ஒளிர்கு ணத்தாள்
காவியத்  தலைவி  என்று
      காண்பவர் வியப்பார் நின்று.

  மாடத்தில் இருந்து  பத்திரை கண்டவை

ஆனதோர் நாளில் அன்னாள்
     அழகுமா ளிகையின் மாடம்
தானதில் சென்றாள் தன்னைச்
     சார்ந்திடும் தோழி யோடு.
வானமும் முகிலும் சோலை
     வனப்புடை நிலமும்  கண்டாள்.
தேனுணும் வண்டாய் உள்ளம்
      சிலிர்த்திட உவகை கொண்டாள்.

அப்புறமும், இப்புறமும் மக்கள் செல்லும்
     ஆளரவம் மிகுதெருவோ யாரும் இன்றித்
துப்புரவாய்க் காட்சிதரும் விந்தை கண்டாள்
      துடிப்புடனே காரணத்தை அறிந்து கொள்ள
ஒப்பிமனம் தோழியினைக் கேட்டுப் பார்த்தாள்
     ஒன்றுமவள் அறியவில்லை. அந்த நேரம்
அப்பப்பா தெருவினிலே கண்ட  காட்சி
      அப்படியே குருதியினை உறைய வைக்கும்.

கள்வனைக் கொல்ல   இழுத்துச்  செல்லுதல்.

வழிப்பறி செய்வான்,  வம்புகள் செய்வான்,
          வன்மையும் திண்மையும் கொண்டான்
    வனப்புறு தோளன், சினத்துருக் காளன்
          வஞ்சகக் கொலைமிகு கொடியன்   
அழிப்பதும் உயிர்கள், அடிப்பதும் கொள்ளை
          அறிந்திடான் அன்பெனும் சொல்லை.
    அமைதியும் அறமும் நாட்டினில்  சிதைத்தான்
           அச்சமே மனங்களில் விதைத்தான்
பழிப்புறு கள்ளன் கயிற்றினால் கட்டிப்
           பாவியைக் கொலைக்களம் நோக்கிப்
    பத்திரை வாழும் தெருவழி இழுத்துப்
            பற்றியே காவலர் போனார்.        
கழிப்பதும் களைகள், காப்பதும் பயிர்கள்,
            காவலன்  மன்னவன்   கடமை.
    களவுடன் கொலையாம் கொடுமைசெய் காளன்
             கதையினை முடித்திட விரைந்தார். 

( கள்வனின் பெயர் – காளன். சத்துவான் என்றும் கூறுவதுண்டு)

கள்வன் மேல் பத்திரை காதல் கொள்ளுதல்

வடிவதன் அழகும்   புறமொளிர்   விறலும்
      மயக்கிட  உருகினள் பேதை.    
கொடியவன்  அவன்மேல்  கொடியெனும்  கோதை
     கொண்டனள் உடனடிக் காதல்.
நெடியவல் விதியோ? வளைந்தநல் மதியோ?
     நெகிழ்ந்திடும்  இளமையின் சதியோ?        
மடியவே மன்னன் ஆணையும்  உளதால்
      வருந்தலே வாழ்க்கையின்  கதியோ?

      (புறமொளிர் விறல்- வீரத் தோற்றம்)

( தொடரும்)

 

தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன் | சொல்முகம் வாசகர் குழுமம்

( இந்த நாடகம்  மகான்  தாகூர் அவர்கள்  எழுதித் தயாரித்த   நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல்  ஒரு திரைப்படமாகவும்  தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக  அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நாம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )

கதை நிகழுமிடம்

Natir Puja: A Tale of Devotion and Sacrifice as Opposed to Jealousy and Tyranny

புத்தபிரான் ஒருமுறை மகதநாட்டரசன் பிம்பிசாரனின் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு அசோகமரத்தடியில் அமர்ந்து தமது உபதேசங்களைச் செய்தருளினார். அவருடைய பக்தனாகிவிட்ட அரசன் அந்தப் புனிதமான இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்தான்; தனது அரண்மனையைச் சேர்ந்த இளவரசிகள் ஒவ்வொரு மாலைநேரமும் தங்கள் வழிபாட்டுப் பொருள்களை அங்கு சமர்ப்பிக்க ஏற்பாடு செய்தான்.

பின்னொரு நாளில் தனது மகனான இளவரசன் அஜாதசத்ரு அரியணையில் அமர விரும்புகிறான் என அறிந்த அரசன் பிம்பிசாரன், மனப்பூர்வமாகத் தன் அரியணையை அவன்வசம் ஒப்புவித்துவிட்டு, அந்த நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்து வரலானான்.

அரசி லோகேஸ்வரி, முதலில் இந்தப்புதிய மதத்தைச் சார்ந்தவளாக இருந்தாள். ஆனால் இப்போது தனது கணவன் நாட்டைத் துறந்ததையும், அதனை மகனுக்குக் கொடுத்து விட்டதையும் தவறெனக் கருதியதனால் புத்தருடைய உபதேசங்களுக்கும் அந்த மதத்துக்கும் எதிராகச் செயல்படத் தலைப்பட்டாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தொடக்கக் காட்சி:

உபாலி எனும் புத்தபிட்சு, பாடிக்கொண்டே வருகிறார்.

உபாலி: யாரேனும் உள்ளீரா? தருமம் செய்யுங்கள், புத்தபிரானின் பெயரால் தருமம் செய்யுங்கள்!

ஸ்ரீமதி, அரண்மனையைச் சேர்ந்த ஒரு நாட்டிய மங்கை, காட்சியில் நுழைந்து அவரைப் பணிகிறாள். பிட்சு அவளை ஆசிர்வதிக்கிறார்.

(ஸ்ரீமதியிடம்) குழந்தாய், நீ யாரோ?

ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, நான் இந்த அரண்மனையின் நாட்டியமங்கை, தங்களுக்குப் பணிவிடை செய்ய வந்துள்ளேன்.

உபாலி: இந்த நகரில் நீ மட்டுமே விழித்துக் கொண்டுள்ளாயா?

ஸ்ரீமதி:  இளவரசிகள் இன்னும் உறங்கிக் கொண்டுள்ளனர்.

உபாலி: நான் கடவுளின் பெயரால் யாசகம் வேண்டி வந்துள்ளேன்.

ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, உள்ளே சென்று இளவரசிகளை அழைத்துவர எனக்கு  அனுமதி கொடுங்கள்.

உபாலி: நான் யாசிப்பது உன்னிடமிருந்தே!

ஸ்ரீமதி: அந்தோ ஐயா! நான் ஒரு அபாக்கியவதியான ஜீவன். கடவுளுக்காகத் தாங்கள் பெற்றுக்கொள்ளும் காணிக்கைகளில் என்னுடையது மிகவும் நாணத்திற்குரியதாக அமைந்துவிடும். எனக்கு உத்தரவிடுங்கள், தங்களுடைய பாத்திரத்தில் நான் எதனை இடுவது?

உபாலி: உன்னிடமுள்ள உயர்வான பொருளையே தானம்செய்.

ஸ்ரீமதி: என்னிடம் உள்ளவற்றில் எது மிகவும் உயர்ந்ததென நான் அறியேன் ஐயா!

உபாலி: உண்மை. ஆனால் கடவுளின் கருணை உன்னிடத்தில் முழுமையாக உள்ளது. அதனால் அவருக்குத் தெரியும்.

ஸ்ரீமதி: கடவுளே மனமுவந்து என்னிடமிருந்து அதனை எடுத்துக் கொள்வாராக- இதுவே தங்களது ஆசிர்வாதமாகவும் இருக்கட்டும், வணக்கத்திற்குரியவரே!

உபாலி: அவ்வாறே ஆகட்டும், குழந்தாய். மலர்கள் நிறைந்த வனத்தில் தன்னையே ஒப்புதல்கொடுத்துள்ள பருவங்களின் அரசனான வசந்தம் விழித்தெழும்போது நீ  பூஜைக்கு அளிக்கும் மலர்களை அவர் ஏற்றுக் கொள்வார். உனது நாள் வந்துவிட்டது – இதுவே நான் தரும் செய்தி. நீ உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள்!

ஸ்ரீமதி: நான் அந்த நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். (குனிந்து அவரைப் பணிகிறாள்)

அவர்கள் செல்கிறார்கள்; உடனே தொடர்ந்து அரசகுமாரிகள் நுழைகிறார்கள்.

அரசகுமாரிகள்: (வாயிலைப் பார்த்தவண்ணம்) இவ்வாறு வெளியேற வேண்டாம், ஐயா. எங்கள் காணிக்கைகளை ஏற்று மகிழுங்கள்.

(ஒருவருக்கொருவர்) ஓ, என்ன துர்ப்பாக்கியம்! அவர் சென்றுவிட்டார்.

ரத்னாவளி: இதில் என்ன தாபம், வாசவி? பிச்சை எடுப்பவர்களுக்குத் தான் குறைவில்லையே. கொடுப்பவர்களே குறைந்து விட்டனர்.

நந்தா: இல்லை ரத்னா. ஒருவருடைய காணிக்கைகளைச் செலுத்த சரியானவரைக் கண்டுபிடிக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்று நாம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம்.

(அனைவரும் வெளியேறுகிறார்கள்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

அங்கம்-1

காட்சியிடம்: அரசியின் நந்தவனம்

அரசமாதா லோகேஸ்வரி, உத்பலா எனும் பிட்சுணி, பிட்சை எடுத்து வாழும் புத்தமத சகோதரி ஒருத்தி ஆகியோர் இவ்விடத்தில் நுழைகின்றனர்.

அரசி: ஓ! பேரரசர் பிம்பிசாரர் என்னை இன்னும் நினைவு வைத்திருக்கிறாரா?

பிட்சுணி: ஆம். அதுவே நான் கொணரும் செய்தி.

அரசி: இன்று அசோகமரத்தடியிலுள்ள வழிபாட்டு மேடையிலிருந்து காணிக்கைகளை அவர் எடுத்துக் கொள்வார் அல்லவா? அதனால்தான் என் நினைவு வந்ததோ?

பிட்சுணி: ஆம். இன்றிரவு வசந்தகாலத்துப் பூர்ணிமை!

அரசி: ஆனால் யாரை அவர்கள் வழிபடுகிறார்கள்?

பிட்சுணி: உங்களுக்கு நன்றாகத் தெரியும்! இந்த இரவில் நாம் புத்தபிரானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதுண்டல்லவா?

அரசி: செல்லுங்கள், எனது வழிபாடு நிறைவடைந்து விட்டதென்று என் கணவரிடம் சென்று கூறுங்கள். மற்றவர்கள் தங்கள் மலர்களையும் தீபங்களையும் அவருடைய வழிபாட்டு மேடையில் சமர்ப்பிக்கட்டும்- நான் எனது உலகத்தையே காலிசெய்து விட்டேன்.

பிட்சுணி: இவை என்ன தகாத சொற்கள், மகாராணி?

அரசி: அவர்கள் எனது ஒரே மகனான இளவரசன் சித்ராவை வஞ்சித்துக் கவர்ந்து சென்றுவிட்டனர்.    அவன் பிச்சைக்காரனின் (பிட்சுவின்) உறுதிமொழியை எடுத்துக் கொண்டான்- இன்னும் அவர்கள் எனது வழிபாட்டை எதிர்பார்க்கின்றனரா? ஒரு கொடியை அதன் அடிவேரை அறித்தெறிந்துவிட்டு, அதனிடம் என்ன தைரியத்தில் மலர்களை எதிர்பார்க்கலாம்?

பிட்சுணி: நீங்கள் அவனைக் கொடுத்து விட்டீர்கள், இழக்கவில்லை. ஒருகாலத்தில் அவனை நீங்கள் உங்கள் கரங்களில் ஏந்தியிருந்தீர்கள்; இப்போது இந்த உலகத்தின் நன்மைக்காகக் கொடுத்துள்ளீர்கள்.

அரசி: நல்ல பெண்மணியே, உனக்கென்று ஒரு மகன் உள்ளானா?

பிட்சுணி: இல்லை.

அரசி: எப்போதாவது இருந்தானா?

பிட்சுணி: நான் இளமையிலேயே விதவையானவள்.

அரசி: அப்படியானால் மௌனமாக இரு. உன்னால் புரிந்துகொள்ள இயலாதவற்றைப் பற்றிப் பேசாதே.

பிட்சுணி: மகாராணி, இந்த உண்மை மதத்தை அரண்மனைக்குள் முதன்முதலாக வரவேற்றது தாங்களே! பின் எவ்வாறு இன்று…….

அரசி: ஆ! அவர்கள் இன்னும் அதனை நினைவில் வைத்துள்ளனரா? உங்கள் தலைவர் அதனை மறந்துவிட்டார் என எண்ணியிருந்தேன். தினமும் நான் எனது உணவை உண்ணுவதற்காகத்       தொடும் முன்பு பிட்சுவான தர்மருசி என்பவரை மதநெறி சம்பந்தமான புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டிக் கொள்வேன்: தினமும் நான் எனது உபவாசத்தை முடித்துக்கொள்ளும் முன்பு நூறு பிட்சுக்களுக்கு உணவளித்தேன். வருடந்தவறாமல், சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மழைக்காலம் முடிவடைந்ததும் மஞ்சள்நிற ஆடைகளை வழங்குவதனை எனது கடமையாகக் கொண்டிருந்தேன்.   புத்தரின் எதிரியான தேவதத்தனின் துர்ப்போதனைகளால் மக்களின் மனங்கள் அலைக்கழிக்கப்பட்டபோது, எனது நம்பிக்கையில் உறுதியாக நின்று, புத்தரை எங்களது நந்தவனத்திற்கு அழைத்துவந்து, அசோகமரத்தடியில் அமர்ந்து புனிதமான சொற்களைக் கூறுமாறு செய்வித்தேன். ஓ! கொடூரமான நன்றிகெட்டவனே!   இதுவா எனக்கான பரிசு? – விஷம்! எனக்கெதிராக         வெறுப்பில் எரிந்துகொண்டிருந்த பெண்களுக்கு, எனக்கு விஷம்வைக்கத் துணிந்தவர்களுக்கு என்னவாயிற்று? ஒன்றுமேயில்லை! அவர்களுடைய மகன்கள் இப்போதும் கூட அரசபோகத்தை அனுபவிக்கின்றனர்.

பிட்சுணி: மகாராணி! உண்மையின் மதிப்பை உலகின் வழக்கமான அளவுகோல்கொண்டு மதிப்பிடாதீர்கள்.     பொன்னுக்கும்  பகலின் ஒளிக்கும் விலை ஒன்றேதானா?

அரசி:  இளவரசன் அஜாதசத்ரு தனது விசுவாசத்தை தேவதத்தனிடம் ஒப்படைத்தபோது, நான் ஒரு முட்டாளைப்போல் நகைத்தேன். “அது ஒரு ஓட்டைக்கப்பல், ஏமாந்தவர்கள் மட்டுமே அதில் ஏறிச்சென்று கடலைக் கடக்க நினைப்பார்கள்,” என்றேன் நான். தேவதத்தனின் மந்திரதந்திரங்களின் துணைகொண்டு தன் தகப்பனார் உயிரோடு உள்ளபோதே அவரது அரியணையை அடைய எத்தனித்தான்     இளவரசன்; நானும், எனது நம்பிக்கைகளின் மீதுகொண்ட பெருமையால்  எனது  ஆசானின்  பெருமதிப்பு    இளவரசனின் அந்தஆசையைத் தடைசெய்துவிடும் எனக்கருதினேன். அத்தகைய அப்பழுக்கற்ற நம்பிக்கையால் நான் சாக்யசிங்கா எனும் புத்தபிரானை இங்குவர வேண்டினேன்- இந்த அரண்மனைக்கு வந்து  எனது கணவருக்குத் தன் ஆசிகளை அளிக்க வேண்டினேன். இருந்தும் கடைசியில் வென்றது யார்?

பிட்சுணி: வெற்றி தங்களுடையதே. வெளியுலகினை வெல்வதற்காகத் தங்கள் உள்ளத்தின் வெற்றியைப்   (ஆத்ம வெற்றியை) புறந்தள்ளாதீர்கள்.

அரசி: வெற்றி? என்னுடையாதா?

பிட்சுணி: தங்களுடையதே ஆகும். தன் மகனுக்காக மகாராஜா பிம்பிசாரன் என்று அரியணையை விட்டுக்கொடுத்தாரோ அன்றே அவர் வேறொரு அரியணையை அடைந்தார்.

அரசி: வேறொரு அரியணை? அது ஒரு மாயை, ஒரு க்ஷத்ரிய அரசனுக்கான அவமதிப்பு! என்னைப்பற்றி  எண்ணிப்பார்! இன்று நான் யார்? – கணவன் உயிரோடிருந்தும் ஒரு விதவை, ஒரு மகனைப் பெற்றிருந்தும் மலடி, எனது அரண்மனையிலேயே நான் நாடுகடத்தப்பட்டவள். இது நிச்சயமாக மாயையல்ல.  உனது மதத்தைச் சேராதவர்களால் நான் இகழப்படுபவளல்லவா? செல், இதனை உனது எஜமானரிடம் சென்று சொல் – உங்கள் இடிமுழக்கம் போலும் சக்தியான அவரிடம் சொல்! அவர் இப்போது எங்கே? அந்த ஏமாற்றுப் பேர்வழிகளை ஏன் அவருடைய மின்னலொளி தாக்கவில்லை?

பிட்சுணி: மகாராணி, இவையனைத்திலும் உண்மை எங்கே? நீங்கள் கடந்துசெல்லும் ஒரு கனவைப்பற்றிப்     பேசுகிறீர்கள். ஏமாற்றுக்காரர்கள் வேண்டுமளவு மட்டும் சிரிக்கட்டும்.

அரசி:  இது கனவாகவே இருக்கட்டும்; ஆனால் நான் விரும்பும் கனவல்ல. மற்ற கனவுகள் அனைத்தும் என் மனதில்  நாள்தோறும் குடியிருப்பவை- அவை செல்வங்கள், எனது மகன், அரசபோகம், பெருமை என்பன.    நீ,    தங்களது தலைகளைக் கர்வமாக உயர்த்திக்கொண்டு நடமாடும் மற்ற பெண்களிடம் சென்று உரையாடு, செல். அவர்கள் தாங்கள் காணும் கனவுகளின் மகிழ்ச்சியில் திளைக்கின்றர்களல்லவா? அவர்கள்  வழிபாட்டிற்கான பொருட்களைச் சமர்ப்பிக்க வரட்டும், பார்க்கலாம்.

பிட்சுணி: அப்படியானால் நான் சென்றுவருகிறேன்.

அரசி: சென்றுவா, ஆனால் அவர்கள் முட்டாள்களல்ல என நினைவிலிருத்திக்கொள்; நான்தான் முட்டாளாக       இருந்தேன். அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் அவர்கள் புத்தபிரானை நம்பவில்லை. சாக்யசிங்கரின் கருணையால் அவர்கள் தீண்டப்படவில்லை; அதனால் அவர்கள் பாதுகாப்பாக,  ஆம் பாதுகாப்பாக உள்ளனர். ஏன் மௌனமாக நிற்கிறாய்? இதுவே உனது பொறுமை என நீ பாசாங்கு செய்கின்றாயா?

பிட்சுணி: நான் சொல்ல என்ன இருக்கிறது? எனது உள்ளம் கோபத்தின் வயப்பட்டுவிடுமோ என்று என்னையே பற்றி நான் அச்சங்கொள்கிறேன்.

அரசி: இன்னும் உனது இரக்கம்கொள்வது போன்ற நடிப்பும் மன்னிப்பும் என்னைப்போன்றவளிடமா? உன் அமைதியான வறட்டுக் கர்வம் என்னால் தாங்க முடியாதது. என்னை விட்டுச்செல்.

உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.

 

(தொடரும்)

சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

சங்கரவிஜயம்-2

சூரியனுக்கு வெளிச்சம் தந்த சங்கரர்

ஆதி சங்கரர்..
இந்த அவதார புருஷரது சரித்திரம், அவரது படைப்புகள், அவரது போதனைகள் என்று பல பரிமாணங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த திவ்விய நிகழ்வுகள் தொடர்கிறது.

இராமனைப்பற்றி தியாகராஜ ஸ்வாமிகள் இசையோடு பாடினார்..
மானிடருக்கு இது இசையமுதாக அமைந்தது..

அதுபோல்..

சங்கரரைப் பற்றி நமது நண்பர் இலக்கியவாதி ‘அசோக் சுப்பிரமணியம்’ எழுதுகிறார்.
குவிகம் வாசகர்களுக்கு இது ஞானஅமுதாக அமையட்டும்.
இனி அசோக்கின் வார்த்தைகள்:..’யாரோவின் கண்பார்வையில்’
*************************************************************************************************************************************
சங்கர திக்விஜயம் தொடர்கிறது..

துறவை நோக்கி:

அவருக்கு எட்டுவயது பூர்த்தியாகும் காலமும் வந்தது.

சங்கரனுக்கு திருமணம் செய்யும் நோக்கத்தில் தாயிருக்க, துறவறம் ஏற்கும் எண்ணத்தில் இளம் சங்கரர் இருந்தார்.
தன்னுடைய பணி உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்று அவதார புருடரான ஆச்சாரியருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?
ஆனால் தாயின் முழு சம்மதமில்லாமல் துறவியாக முடியாதே!

Sri Adi Shankara – Some Incidents | Arise Bharatஒரு நாள் நதியில் நீராட இறங்குகையில் அவரது காலை ஒரு முதலைப் பற்றிக்கொண்டது. கரையில் இருந்த தாய் கலங்கித் துடித்தாள். தன்னால் காப்பாற்ற முடியாத இயலாமையில் கதறினாள். சங்கரரோ சலனமே இல்லாமல் தாயிடம், தனக்குத் துறவறத்துக்கு அனுமதி கொடுத்தால், அது இருக்கும் ஜன்மாவைத் தொலைத்துப் புது ஜன்மம் எடுப்பதற்குச் சமமென்றும், அப்போது முதலைத் தன்னை விட்டுவிடும் என்று சொன்னார். தாயும் வேறு வழியில்லாமல், எங்கோ உயிரோடு இருந்தால் சரி என்று நினைத்து அனுமதி கொடுத்துவிட்டாள். அக்கணமே முதலைக் காலை விட்டது. சங்கரர் ஆற்றில் இருந்தபடியே ப்ரைஷோசாரணம் என்னும் முறைப்படி, குருமுகமாக அல்லாமல் தானே வரித்துக்கொண்டார் துறவை! முன்னரொரு சாபத்தினால் முதலையாயிருந்த கந்தர்வனுக்கும் சாப விமோசனமாயிற்று.

ஆசானைத் தேடி:

தனக்கு முறையாக துறவறம் வழங்குதற்குத் தக்க ஆசாரியரைத் தேடி, சங்கரர் அன்னையை விட்டு அந்த சிறுவயதிலேயே கால் நடையாகவே நர்மதைக் கரையினை அடைந்து அங்கு கோவிந்தபாதரைக் கண்டார். அப்போது நர்மதையில் பெருவெள்ளம் ஏற்பட்டு கிராமங்களையெல்லாம் மூழ்கடித்துகொண்டிருக்க, அதை தன் கமண்டலத்தில் அடக்கினார்.. இதையே காவிரிக்கு அகத்தியர் செய்த புராணக்கதையொன்றும் உண்டு.
கமண்டலத்துக்கு இப்படி ஒரு பயனுண்டு போலும்!

 

குரு கோவிந்தபாதர் | Dinamalarசமாதி கலைந்து எழுந்த கோவிந்தபாதர் எதிரில் நின்றுகொண்டிருந்த சிறுவனைப் பார்த்து, “யார்நீ” என்று வினவவும், அதற்குப் பதிலாக, அந்தகால, பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி பாகவதர் காலப் படங்கள்போல பாட்டாலேயே பதில் சொன்னார் சங்கரர். அவர் சொன்ன விடைப் பாடல் பத்தும் நிர்வாண தசகம் எனப்படும். அது சொல்லும் உயரிய கருத்து, “நான் உடம்பல்ல; இதிலுள்ள எதுவுமல்ல; நான் அகண்ட சச்சிதானந்த பிரம்மமே” என்பதாகும். குரு பரம்பரைக்கே மூலவரான தக்ஷிணாமூர்த்தியே சாட்சாத் சங்கரராக அவதாரம் பண்ணியிருக்கையில் அவருக்கு குரு தேவையா என்று கேள்வி எழும்.. கிருஷ்ண பரமாத்வுக்கு சந்தீபனி குருவாக இருக்கவில்லையா? பரமசிவனுக்கே முருகன் குருவாக இருக்கவில்லையா? குருவின் மகிமையை உலகுக்கு உணர்த்தப் பரமனே நடத்திய நாடகம்தான் எல்லாம். அவரின் உத்திரவால் பிரும்ம சூத்திரம், உபநிஷத்துக்கள், கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் இவற்றுக்கெல்லாம் பாஷ்யம் எழுதினார் சங்கரர். கங்கைக்கரையில் முதியவர் உருத்தாங்கி தன்னோடு வாது புரிந்த வியாசராலேயே இவருடைய உரைகளுக்கு அங்கீகாரமும் பெற்றார்.

ஒருமுறை நான்கு நாய்களுடன் சண்டாளன் வடிவில் வந்த பரமசிவனை, யாரென்று அறியாமல், “விலகிப்போ” என்றார். அவ்வடிவில் இருந்த சிவனாரோ சிரித்து, “ஊருக்குத்தான் உபதேசம் போலிருக்கிறதே! நீர் விலகிப் போ என்றது, உடலையா, ஆன்மாவையா” என்று கேட்கவும், விக்கித்து, வந்திருப்பது சண்டாள உரு தாங்கிய பரமசிவனாரே என்று உணர்ந்து “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து சுலோகங்களைச் சொல்லவும், சிவனார் தன் வேடத்தை நீங்கி அவருக்கு காட்சியும், அருளும் தந்து மறைந்தார்.

72 மதங்களைச் சுருக்கி ஆறாக்கி ஆறு தந்த வரலாறு:

சங்கரின் காலத்தில் 72 மதங்கள் இருந்தனவாம். இவையெல்லாம் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, பல தீய சடங்குகளைக் கொண்டு, ஸனாததர்மத்தைச் சீர்குலைப்பதாக இருந்ததால் ஆச்சாரியர் அவதாரம் செய்து, அவற்றில் பலவற்றையும் கண்டனம் செய்து, நெறிசெய்து ஷண்மதத்தை நிர்மாணித்தார். இவற்றை
கணபதியை வழிபடும் காணாபத்யம்
முருகனை வழிபடும் கௌமாரம்
சக்தியை வழிபடும் சாக்தம்
சிவனை வழிபடும் சைவம்
விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம்
மற்றும் சூரியன் உள்ளிட்ட நவக்ரஹ தேவதையரை வணங்கும் சௌரம் என்பர்.

வந்த சீடர்களும் பெற்ற சீடர்களும்:

Adi Shankara With Disciples - Arsha Drishtiசோழ தேசத்தைச் சார்ந்த சனந்தனர் என்பவர் சங்கரர் பதினாறு வயது பாலத் துறவியாக காசியில் இருந்தபோது, அவரிடம் சீடராக வந்து சேர்ந்தார். ஒரு சமயம் சங்கரரது சீடர்களில் யாருக்கு அவரிடம் மிகுந்த ஈடுபாடு என்பதில் ஒரு போட்டி இருந்தது. இதை ஊகித்து உணர்ந்த சங்கரர், சனந்தரின் மேன்மையைக் காட்டவேண்டி, ஆற்றின் மறுகரையில் இருந்தவரை அழைக்க, அவர் அப்படியே ஓடிவர, அவரது ஒவ்வொரு அடிக்கும் கீழ் ஒரு பதுமம் தோன்றி அவரைத் தாங்கிற்றாம்! அந்த அளவுக்கு அவருடைய குருபக்தி இருந்ததாம். ஒரு கணமும் சிந்தியாமல் ஆற்றிலே இறங்கிவிட்டார். அன்றிலிருந்து அவருக்குப் பத்மபாதர் என்று பெயர். மற்றொரு சமயம் சங்கரரை நரபலியிட இருந்த காபாலிகனிடமிருந்து காப்பாற்ற, அவரது இஷ்டதெய்வமான நரசிம்ம மூர்த்தியே அவர்மேல் இறங்கியதாகவும் ஒரு கதையிருக்கிறது. இவரைச் சிருங்ககிரியின் முதல் ஆசாரியராகக் கருதுகிறார்கள்

பிரயாகையில் இருந்த மீமாம்சை என்னும் கர்மமார்க்க வித்தகரான குமாரிலபட்டரைச் சென்றவருக்கு, அவரோ, ஒரு பிராயச்சித்ததின் காரணமாக, உமித் தீயில் தன்னையே சுட்டுப் பொசுக்கிக்கொண்டு உயிர் தியாகம் செய்ய முனைந்திருந்ததைக் கண்டு, வருந்தினார். அவரோ சங்கரரின் ஒளியைப் பார்த்து, உண்மையின் தரிசனத்தைக் கண்டவராகத், மாஹிஷ்மதி நகரில் மீமாம்ஸை போதகராக இருக்கும் தன்னுடைய சீடரான மண்டன மிசிரரைச் சென்று, அவரை ஞானமார்க்கமான அத்வைதத்திற்குத் திருப்பும் படி வேண்டினார்.

சங்கர் மண்டனமிசிரோடு வாது புரிந்ததும், மண்டனரின் மனைவியாம் சரசவாணியே அதற்கு நடுவராக இருந்ததும் பெருங்கதை! எழுதினால் இரண்டு குவிகம் இதழே தேவைப்படும்! அதனால் அந்த வாதிலே மண்டன மிசிரரை வென்று அவரைத் தன்னுடைய சீடராக சுரேஸ்வரர் என்ற நாமகரணம் சூட்டி ஏற்றுக்கொண்டார். இவரை காஞ்சி, சிருங்ககிரி, மற்றும் துவாரகை மடங்களின் சரித்திர நூல்கள் தங்கள் ஆசார்ய பரம்பரையில் சொல்லிக்கொண்டாலும், இவர் மூன்றுக்குமே இப்போது ஒரு “கன்சல்ட்டண்ட்” என்ற முறையில் இயங்கியிருக்கலாம்! தவிரவும் கிருஹஸ்தராக இருந்ததால் மடத்தின் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. சங்கர மடங்களின் ஆச்சாரியர்கள் எல்லோருமே நைட்டிகம் எனப்படும் முழு பிரம்மச்சாரிகளே!

ஹஸ்தாமலகர், ஒரு ஊமை அந்தணச் சிறுவனாக சங்கரரிடம் அழைத்துவரப்பட்டார். அவரைப் பார்த்து, “நீ யாரப்பா” என்று சங்கரர் வினவ, அவரோ, உடனடியாக வாய் மலர்ந்தார் – “ நான் மனிதன் இல்லை; யட்சனில்லை; பிரும்மச்சாரியில்லை; கிருகஸ்தனும் இல்லை; துறவியுமில்லை. ஆனால் ஞானமே வடிவான மெய்ப்பொருள்” என்ற பொருளில் பனிரெண்டு சுலோகங்களாக. அவரைச் சீடராகக் கொண்டதுமல்லாமல், அவருடைய சுலோகங்களுக்கு சங்கரரே பாஷ்யம் எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. குருவே மெச்சிய சீடன்! அதற்கு “ஹஸ்தாமலகீய பாஷ்யம்” என்று பெயர்.

பின்னாளில் தோடகர் என்று அறியப்பட போகிற “கிரி” படிப்பில் சுமார்! ஆனால் குரு பக்தியில் உச்சமாக இருந்தவரைக் கண்டால் மற்ற மாணவர்களுக்கு இளக்காரம். அவனுடைய மகிமையை அவர்கள் உணர்ந்துகொள்ள ஒருநாள் அவர் வரும் வரை பாடம் எடுக்காமல் இருந்தாராம் ஆசாரியர். என்ன இந்த மக்கு மாணவனுக்காகவா ஆசாரியர் காத்துக்கொண்டிருப்பது, என்று மற்றவர்கள் நினைக்கும்போதே, ஆசாரியரைப் பற்றி தோடக விருத்தமாகப் பாடிக்கொண்டு வந்தாராம் அவர். மற்றவர்களைப் பார்த்து ஆச்சாரியர் பார்த்த பார்வையிலேயே அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்களா என்ன! அவரைத் தோடகர் என்றே அழைக்கலானார்.

இவரே கைலைக்குச் சென்று முக்தி அடைந்தார் என்று சிலர் கூறுவர்; காஞ்சியிலே சர்வக்ஞ பீடம் ஏறி அம்மடத்தின் முதல் ஆச்சாரியராக இருந்தார் என்று காஞ்சிமடச் சரித்திரக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன.

இவருடை 32 வயதிற்குள் இவர் எழுதிக் குவித்த சுலோகங்கள் ஏராளம். குறிப்பாக அழகு வெள்ளமாகிய சௌந்தர்ய லஹரி, சுப்ரமணிய புஜங்கம், பஜகோவிந்தம், மனீஷா பஞ்சகம், கணேசபுஜங்கம், மீனாக்ஷி பஞ்சகம், என்று பிரபலமாக அறியப்பட்ட சுலோகங்களோடு, மொத்தமாக 80க்கு மேற்பட்ட சுலோகத் தொகுப்புகளை அளித்திருக்கிறார் ஆச்சாரியர். விளக்கவுரைகளென (பாஷ்யங்கள்) பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அந்தப் பட்டியல்வேறு.. அப்பப்பா! அந்த ஞானக்கடல் பயணிக்காத ஞானப் பாதையே இல்லை. ஆச்சாரியப் பரம்பரையின் முதற்புள்ளி.. முற்றுப்புள்ளியும் அவரேதான்! ஆதியும் அவரே! அந்தமும் அவரே!

ஆதிசங்கரரின் உபதேசச் சுருக்கம்:

இவருடைய உபதேச பஞ்சகம் என்ற நூலே இவர் விட்டுச்சென்ற உபதேசங்களின் சுருக்கமாகக் கருதப்படுகிறது. இவ்வைந்தும் சுருக்கமாக:

  1. வேதம் படிக்கப்படட்டும்; கர்மாக்கள் செய்யப்படட்டும்; அதனால் ஈசன்மேல் பக்தி வளரட்டும்
  2. ஆத்மாவைக் காணும் விருப்பம் உண்டாகட்டும்
  3. சாதுக்கள் சேர்க்கையும் பரம்பொருள் நாட்டமும் உண்டாகட்டும்
  4. “நான் பிரும்மமாயிருக்கிறேன்” என்ற தியானம் இடையறாது இருக்கட்டும்
  5. தனியிருந்து பரம்பொருளானது அறியப்படட்டும்!

அவருடைய அத்வைத சித்தாந்தத்தின் சாரமே, “ஆத்மா ஒன்று; அதுவே சத்தியம்; மற்றவையெல்லாம் மித்தியை” என்பதே!

ஆதி சங்கரரின் சரித்திரத்தை ஆழமாக அறிய ஒரு சிலப் பக்கங்கள் நிச்சயமாகப் போதாது; அந்த ஞானக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முனைவது, முத்தின் முளையாவது கிட்டாதா என்ற நப்பாசையில்தான்.

மேலும் அறிய விரும்பினால், நஜன் அவர்கள் எழுதி பிரதிபா பிரசுரம் வெளியிட்ட “ஹரிஹர ஆச்சார்யர்கள்” என்ற புத்தகத்தையோ, அல்லது தெய்வத்தின் குரல் ஐந்தாவது பாகத்தையோ நாடுங்கள்.

சம்ப்ரதாயமாக சங்கரர் சம்பந்தமாக எழுதியோ, பேசியோ முடிக்கும்போது, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!” என்பது வழக்கம்..
அவ்வழக்கப்படி, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!”

*************************************************************************************************************************************
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.

சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி எழுதியதால் புனிதம் அடைகிறது. இனி வேறு கதைகளுடன் விரைவில் சந்திப்போம்..

குமார சம்பவம் – எஸ் எஸ்

ஐந்தாம் சர்க்கம்

chinnuadhithya – Page 330 – A smile is a curve that straightens everything

 

காணாமல் போன கனவுகள்: ஹரியும், சிவனும் ஒன்றென உணர்த்தும் ஆடித்தபசுமதன் எரிந்தது  தன்  அழகின் தோல்வியென பார்வதி கலங்கி நின்றனள்

சிவனின் அன்பு பெறத்  தவமே நல்ல வழி எனத் திடமாய் நம்பினள்      

தாய் மேனையோ மகளின் தவ எண்ணத்தை மாற்ற விழைந்தாள்

பார்வதியின் தளிர்மேனி தவத்தைத் தாங்காதென நயந்து சொல்லினள்

மன உறுதி கொண்ட பார்வதியின்  முன் தாயவள்  தோற்றுப் போனாள்

தவவாழ்வில் தான் செல்ல தந்தையிடம் அனுமதியை வேண்டி நின்றாள்      

மகளின் மனமறிந்த இமயவன் ஆசிதர  மயிலுறையும் சிகரம் சென்றாள்

மாலைகளை நீக்கி மரவுரியைத் உடல் அணிந்து தவக் கோலம் பூண்டாள்

அலங்காரம் இன்றி பார்வதி இருந்தாலும்  அழகில் குறைவின்றி இருந்தாள்  

முப்புரிக் கயிற்றை கட்டிய அவளிடை மேலும் கன்னிச் சிவந்தது

அழகையும் ஆட்டத்தையும் நீக்கி தர்ப்பையும் ஜபமாலையும்  கொண்டனள்

தரையிலே படுத்து  கைகளையே   தலையணையாய்க்  கொண்டாள்

அசைவைக் கொடியிடமும் பார்வையை மானிடத்தும் அடைக்கலம் தந்தனள்

 தவ இல்லம் சுற்றி  மரங்கள்  நட்டு நேசமுடன் அதற்கு நீரையும் வார்த்தனள்

மான்களின்  அச்சம் போக்கிட அவளும்  அன்புடன் அவற்றைப்   போற்றினள்   

பனிமலை தன்னில் மும்முறை குளித்து நாள்முழுதும் ஜபத்தில் இருந்தனள்

பார்வதி அமைத்த ஆஸ்ரமத் தூய்மை தவத்திற்கே கிடைத்த பெருமையை   

தவத்தின் பலனை விரைவில் பெற்றிட கடுந்தவம் புரியவும் தலைப்பட்டாள்

தங்கத் தாமரை மேனி தவத்தின் கடுமைகளைத் தாங்கும் வலிமை பெற்றது

 

 

பிரதோஷ மகிமை – chinnuadhithyaகோடையில் நெருப்பின் மத்தியில் சூரியனை நோக்கித்  தவமிருந்தாள் 

சூரியன் சுட்டெரித்தும் தாமரை மலர் போல சோபையுடன் இருந்தாள்

மேக மழையும் சந்திர கிரணங்களும் அவள் உண்ணும் உணவாயின

பஞ்சாக்னி தகித்த அவளது  உடலில்  மழைநீர் தெறிக்க  ஆவிதெறித்தது

நிஷ்டையில் பார்வதி அமர்ந்திட மழையும் அவளுடள் பொங்கி வழிந்தது     

பெருமழை நாளிலும் குளிர்ந்த பாறையில் அமர்ந்து கடுந்தவம் புரிந்தனள்

கடும்பனிப் பொழுதும்  கழுத்தளவு நீரில் நின்று கோரத்தவம் செய்தனள்

தாமரைகள் அருகிய குளத்தில் தாமரை  மலரென  தவமேற் கொண்டனள்

தாமே விழும் இலைகளையும் உண்ணாது அபர்ணா என பெயரும்  பெற்றாள்

தளிர் மேனியாள் பார்வதி  தவவலிமையில்  மகரிஷிகளையும் வென்றனள்   

 

கடுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்

தேஜஸ் கூடிய  பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்

பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார்