காதலுக்கு மரியாதை – டும்டும் மேளம் கல்யாணம் !
காதலிக்கு மரியாதை – அச்சம் ஆசை வெட்கம்
காதலனுக்கு மரியாதை – வேலியைத் தாண்டாத வரை
மனைவிக்கு மரியாதை – மடியில் தூங்கும் குழந்தை
கணவனுக்கு மரியாதை – பையில் காசு இருக்கும் வரை
தங்கைக்கு மரியாதை – அண்ணன் வாழ வைப்பான் என்பது

அண்ணனுக்கு மரியாதை – மலர் போல் தங்கையைக் காப்பது
தாய்க்கு மரியாதை – மகன் வைக்கும் கொள்ளி
தந்தைக்கு மரியாதை – மகன் பிடிக்கும் பிண்டம்
தம்பிக்கு மரியாதை – அண்ணன் இல்லை என்றால்
மாமனுக்கு மரியாதை – தாயம் விழும் வரை
அத்தைக்கு மரியாதை – பெண்ணைக் கொடுக்கும் வரை
மகளுக்கு மரியாதை – தனியா வீட்டுக்கு வராதவரை
மகனுக்கு மரியாதை – மருமகள் வீட்டுக்கு வரும்வரை
ஆண்டவனுக்கு மரியாதை – கவலை மனசில் இருக்கும்வரை
அதாவது உசிரு உடம்பில் இருக்கும்வரை !!
