மே 2014
பூ : ஒன்று ———————- இதழ் : ஆறு

இந்தியாவில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் நாள் மே 16.
ஆம் அன்று தான் நமது தலைவிதி நிர்ணயிக்கப் படப் போகிறது.
மோடி,ராகுல்,சோனியா,மம்தா,ஜெயலலிதா,கருணாநிதி, மாயாவதி, முலாயம் , நிதிஷ் ,லாலு ,கேஜ்ரிவால் ,சரத் பவார்,மற்றும் பலர் இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் யாரை எப்படி எவ்வாறு செக் மேட் செய்யப்போகிறார்கள் என்பது தான் நாம் ஆவலோடு காண இருக்கும் விளையாட்டின் முடிவு. அது வரும் வரை நாம் விரல்களில் சிலுவையிட்டுக் காத்திருப்போம்.
—————————————————————-
சென்னையிலும் தமிழகத்தின் மற்ற இடங்களிலும் கத்திரி வெயில் தொடங்கியதும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நான்கைந்து நாட்களாக மழை பெய்கிறது. இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
—————————————————————–
ஜூன் 8 முதல் 14 வரை பொன்னியின் செல்வன் நாடகத்தை மியூஸிக் அகாடமியில் 15 வருடங்களுக்குப் பிறகு அரங்கேற்றப் போகிறார்கள். நாடகத்தில் சிறப்பு அம்சங்களை அடுத்த குவிகம் இதழில் எதிர் பார்க்கலாம்.
