- அறைக்கிறியே


அரைக் கீரையை அறைக்கிறியே
அம்மியில் மனசை அறைக்கிறியே
முளைக் கீரையே முளைக்கிறியே
காதலை நெஞ்சில் முளைக்கிறியே
கடையிறியே கடையிறியே
பருப்புக் கீரையை கடையிறியே
முறுக்கிறியே முறுக்கிறியே
முருங்கைக் காயை முறுக்கிறியே
நெருக்கிறியே நெருக்கிறியே
கயிற்றுக் கட்டிலில் நெருக்கிறியே
உருக்கிறியே உருக்கிறியே
இரும்பு மனசை உருக்கிறியே
வறுக்கிறியே வறுக்கிறியே
வாளை மீனை வறுக்கிறியே
நறுக்கிறியே நறுக்கிறியே
ஆசையைக் கிள்ளி நறுக்கிறியே
வெறுக்கிறியே வெறுக்கிறியே
எட்டிப் போனா வெறுக்கிறியே
மொறைக்கிறியே மொறைக்கிறியே
கிட்ட வந்தா மொறைக்கிறியே
தருகிறியே தருகிறியே
உன்னையே எனக்குத் தருகிறியே
மருகிறியே மருகிறியே
மடியில் மயங்கி சரிகிறியே
சொருகிறியே சொருகிறியே
இடுப்பு மடிப்பில் சொருகிறியே
பருகிறியே பருகிறியே
இதழை இதழால் பருகிறியே
உருகிறியே உருகிறியே
குச்சிஐஸ் போல உருகிறியே
திருகிறியே திருகிறியே
நெஞ்சில் ஆசையைத் திருகிறியே !!
