பெங்களூரில் 6 வயது பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த அந்தப் பாவிகளை எப்படித் தண்டிப்பது? இந்தக் கொடுமைக்கு வேற வழியே இல்லையா?

எப்போது  பேப்பரைத் திருப்பினாலும் கற்பழிப்பு, பாலியல் கொடுமைகள்!

டெல்லியில் அன்று ஒரு நிர்பயா! காட்டுத்தீ  போல பரவியது. அதற்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிராக இந்த மாதிரிக் கொடுமைகள்! இன்று பெங்களூரில்! இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது குறைச்சல் இல்லை!

எந்த மாநிலத்தில் இது அதிகம்?! சிறுவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை தரலாமா கூடாதா? இந்தியாவில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பலாத்காரம் நிகழ்கிறது! இப்படி எத்தனையோ   புள்ளி விவரங்கள்!

image

இதற்கு நாம் தீர்வு காண எங்கே போவது?

திரைப்படத் துறையினர் – இவர்கள் தான் மூலப் பொருள் -மூல  காரணம் என்ற மாபெரும் குற்றச்சாட்டு!

அரசியல்வாதிகள் – இவர்கள் தான் இதற்கு ஆரம்ப காரணம் ! இரவினில் ஆட்டம் பகலிலும் ஆட்டம் இது தான் இவர்கள் உலகம்!

காவல்துறை – இவர்கள் பாலுக்குக் காவலா பூனைக்குத் தோழனா?

ஆசிரியர்கள் – அவர்கள் சிறுமியரைக் கூட விடுவதில்லை 

ஆன்மீக வாதிகள் – அறையில் ஆடியவர்கள் இப்போது அம்பலத்தில் ஆடுகிறார்கள்!

மாணவர்கள் – டேட்டிங் என்ற பெயரில் அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கிறார்கள்!

அலுவலகங்கள் – ஒரு காலத்தில் அரச புரசலாக இருந்தது இன்று அதனாலென்ன? இருப்பது சில நாள் அனுபவிப்போமே என்கிறார்கள் 

ஐ‌டி கம்பெனிகள் – இவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமும் வாய்ப்பும்  பயணங்களும் இவர்கள் செய்வதைத் தவறு என்று எண்ண  முடியாதபடி செய்து விடுகின்றன!

கிராமங்கள் – வெளியே வராமல் இவை தொடர்ந்து நடக்கின்றன! அவற்றைத் தவிர சில பஞ்சாயத்துக்களும் இதையே தீர்ப்பாகத் தருகின்றன.

நீதித்துறைகள் – உயர்ந்த இடங்களிலும் இவ்வகை வியாதி பரவியிருக்கிறது. 

சமுதாயத்தில் பரவியிருக்கும் இந்த நச்சு வேரை  எப்படிக் களையெடுப்பது? மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமா? இன்டெர்நெட்டில் பொங்கிய விஷமா? அல்லது இது தான் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும்  மாறி வரும் சமுதாயத்திற்கும்  நாம் தரும் விலையா?

பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றத்திற்கு முக்கிய உடந்தை-  கள்,சாராயம்,மது,கஞ்சா,போதைப் பொருள்கள்! மற்றும் ஆபாசக் களஞ்சியங்கள்! இவற்றிற்குத் தடையிடுங்கள்! பாலியல் குற்றங்கள் பாதியாகக் குறைந்துவிடும்!

பெண்களே! நீங்களே சொல்லுங்கள்! இந்தக் கொடுமை தீர வேறு என்ன வழி இருக்கிறது! 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி

ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 

தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா