16/25

ஆறு மனமே ஆறு அந்த ஆறுமுகன் பேர் கூறு
ஆறு தலை கொண்ட ஆறுமுகன் ஆறுதலைத் தருவான்
ஆறு ஒரு நதி – ஆறு ஒரு வழி – ஆறு ஒரு எண்
ஆறு ஒரு வினை – காயங்கள் ஆறும் – சூடும் ஆறும்
ஆறு என்றால் வழி – வழி காட்டுபவன் ஆறுமுகன்
ஆறுமுகனின் அழகை அருணகிரியார் சொல்கிறார்
ஏறுமயில் ஏறும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
ஈசனுக்கு ஓதும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
அடியவரை காக்கும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
நெடியவேல் பிடிக்கும் முகம் – அறுமுகத்தில் ஒன்று
சூரனை அழித்த முகம் – அறுமுகத்தில் ஒன்று
வள்ளியை மணந்த முகம் – அறுமுகத்தில் ஒன்று
வழிகாட்டல் என்ற மரபு தமிழ் இலக்கியத்தில் தனி பாணி
ஆற்றுப் படுத்துதல் என்ற அழகான பெயர் அதற்கு
பரிசில் பெற்ற புலவன் பரிசு பெற வரும் புலவனுக்கு
ஆற்றுப் படுத்திய பாடல்கள் தமிழில் பற்பல
சிறு பாணன் பாடினான் சிறு பாணாற்றுப்படை
பெரும் பாணன் பாடினான் பெரும் பாணாற்றுப்படை
நக்கீரர் உருகிப் பாடினார் முரு காற்றுப்படை
பொருநரை வேண்டிப் பாடினார் பொருநராற்றுப்படை
சீனியர் ஜூனியருக்குச் சொல்வது அமெரிக்காற்றுப்படை
பெண்ணுக்குத் தோழிகள் சொல்வது இரவாற்றுப் படை
படம் பார்த்து விமரிசனம் எழுதுவது சினிமாற்றுப் படை
சென்னையில் வழி கேட்டால் கிடைப்பது தப்பாற்றுப்படை
2Gக்கு மேல் 3G வருவது ஊழலாற்றுப்படை !
