13/25
கல்கி இதழில் 1992ல் பரிசு பெற்ற கவிதை

பனி சிந்தும் முகத்தினில்கட்டிக்கரும்பினைத் தட்டிப் பிழிந்த இதழ்
அவள் தந்த சுகத்தினை அள்ளிக் குடித்து தன் தாகம் தீர்த்த இதழ் – இனி
இன்ப இணைப்பினை இருவர் அடைந்திட முந்திப் பிறந்த இதழ் – அவன்
கொண்ட மனைவியின் கட்டுக் கவினுடல் பட்டுத் துடித்த இதழ் !
பொருள் இல்லை என்றவர்க்கு இல்லை என்று உரைத்து மெல்ல மடிந்த இதழ் – பணத்
தொல்லை இல்லையென கொள்ளை இன்பமது பொங்கி வழிந்த இதழ் – இனி
வெள்ளை உள்ளமதில் உண்மை உள்ளதென தெள்ளக் காட்டும் இதழ் – அழும்
பிள்ளை மகிழ்ந்திட தாய் அமிழ்து அருந்திடும் பால் மணம் தோய்ந்த இதழ் !
நல் மண்ணதில் பொன்னைக் கொழித்திடும் உழவன் பெருமிதம் படர்ந்த இதழ் – அவன்
கண்ணினுள் மணியவள் காதல் கிழத்தி பெய் மழை பொழியும் இதழ் – நல்
எண்ணமில் கயவன் வஞ்சக மனத்தவன் நஞ்சு மொழி பிறக்கும் இதழ் – நல்
வண்ணமே பேசி மக்களையே ( ஏ ) மாற்றும் அரசியல் வாதியின் இதழ் !!

