
எட்டும் வரை எட்டு அதி உயரம் தனை தொட்டு
எட்டும் வரை சுற்று புது உலகம் தனை சுற்று
எட்டு திசைகள் ! எட்டு திக்குகள் !
எட்டு பாலகர் ! எட்டு சித்திகள் !
தேவகியின் எட்டாம் மைந்தன் கிருஷ்ணன் !
கங்கையின் எட்டாம் புத்திரன் பீஷ்மன் !
வாகன ஓட்டிகள் வெறுக்கும் எண் எட்டு
உரிமை வழங்க எட்டு போடச் சொல்வதாலா ?
பாமர மக்கள் வெறுக்கும் திதியும் எட்டு
எட்டு எட்டு என்று சுட்டிக் காட்டுவதாலா ?
கொட்டடி பெண்ணே ! எட்டிலே கொட்டடி பெண்ணே !
ஒரெட்டில் முகவெட்டு ஈரெட்டில் மார்கட்டு
மூவெட்டில் பால்புகட்டு நாலெட்டில் நூல் பகற்று
ஐயெட்டில் முன்னேற்று ஆறெட்டில் வழி காட்டு
ஏழெட்டில் அமைதி காட்டு எட்டெட்டில் பற்றை ஓட்டு

கொட்டடா பொன்னா எட்டிலே கொட்டடா பொன்னா
ஓரெட்டில் விளையாட்டு ஈரெட்டில் கல்வி கற்று
மூவெட்டில் பணம் ஈட்டு நாலெட்டில் பொருள் ஈட்டு
ஐயெட்டில் அறிவு ஏற்று ஆறெட்டில் சிகரம் தொட்டு
ஏழெட்டில் வழி காட்டு எட்டெட்டில் பற்றை ஓட்டு ! !
பக்கம் 17/25
