
இளையாளே வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்
அர்ஜூன் போல ஒரு ஆம்படையான் கிடைச்சா அவளுக்கு எதுக்குத் தாலி?
ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம் இதுல அத்திலிபித்திலி வேறையா?
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப் போகிறானாம்.
உடையவரே நக்கரார் ; .இதில உத்திராட்சக் கொட்டை போட்டவருக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் வேணுமாம்!

என்ன இடம்டா இது! எருமைமாடு கண்ணு போட்ட மாதிரி இருக்குது!
நல்ல நாள் பாத்து நாசமாப் போனேன்!
ஆசை தோசை அப்பளம் வடை
காக்கைக்கு இருந்தா பறக்கும் போது தெரிஞ்சிருக்கும்!
முதல் நாள் வாழை இலை ; ரெண்டாம் நாள் தையல் இலை;
மூன்றாம் நாள் வாடா எலே போடா எலே
சாமியாரும் சாமியாரும் உரசினா சாம்பல் தான் கொட்டும்
உச்சந் தலையிலே செருப்பால அடிச்ச மாதிரி இருக்குன்னேன்!
நாய்க்கு வேலையுமில்லை நிக்க நேரமுமில்லை
வாயில பல்லைப் போட்டுப் பேசாதே !
முடி உள்ள மகராசி அள்ளி முடிஞ்சுக்கிறா!
ஏணி மடைன்னா நூணி மடைங்க்ரான்!
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.
ஊருக்குன்னு ஒரு தேவிடியா அவ யாருக்குன்னு ஆடுவா?
அரச மரத்தைச் சுத்தி வந்த உடனே அடி வயித்தைத் தொட்டுப் பாத்தாளாம்
கும்பகோணத்தில கூழ் குடிக்க கொடவாசல்லேர்ந்து குனிஞ்சுகிட்டுப் போனானாம்!
பகல்லே பசுமாடு தெரியாது; ராத்திரி எங்கே எருமை மாடு தெரியப் போகுது?
ஏரிமேல கோவிச்சுக்கிட்டு கால் கழுவாமப் போனானாம்!
செருப்பாலே அடிச்சு பட்டால தொடச்சானாம்!
தானும் தொட மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டிலே வைச்சாலும் வாலைக் குழைச்சிக்கிட்டு கண்டதைத் திங்கப் போகும்!
பாவி போன இடம் பாதாளம்!
மூக்கில்லா ராஜ்யத்தில் முறிமூக்கன் ராஜாவாம்!
பாப்பாரப் பிள்ளை நண்டு பிடிச்சா மாதிரி!
வெளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம்!
அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!
மேயப் போற மாட்டுக்குக் கொம்பில புல்லைக் கட்டினானாம்!
அவிசாரியாப் போனாலும் முகராசி வேணும்!
.
இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேக்குறான்!
குண்டு சட்டியில குதிரை ஒட்டாதே!
கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிஞ்சிக்கிட்டானாம்
சொகம் எங்கடான்னா சொறியிர இடத்திலேன்னானாம் .
சட்டியில இருந்தாத்தான் ஆப்பையில வரும்
இருக்கிறது ரெண்டு ஆப்பை ரெண்டும் கழண்டாப்பை!
ஆறெல்லாம் பாலா ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்!

பக்கம் 18/25
