
1917 ஜனவரி 17 இல் பிறந்த எம்ஜிஆர் , தமிழகத்தை – தமிழ்த் திரைத் துறையை – தமிழக மக்கள் மனத்தை பல ஆண்டுகளாக ஆண்டவர்.
அவர் பேசுவது நீண்ட சொற்கள் என்பார்கள்!
அவர் நடிப்பது நாட்டிய நாடகம் என்பார்கள்!
அவர் பழகுவது தன் இமேஜை வளர்க்க என்பார்கள்!
அவர் அரசியலில் முதிர்ச்சி அடையாதவர் என்பார்கள்!
ஆனால் பேசுவதில், நடிப்பதில் , பழகுவதில், அரசியலில் மாபெரும் வெற்றியாளராக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை!!!
67இல் குண்டடிபட்ட பிறகு அவர் தொட்டதெல்லாம் வெற்றி!
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
என்று நம்மைப் பார்த்துப் பாடியவர்.
டாக்டர் , பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், பாரத், பாரத ரத்னா என்று பட்டங்களுக்குப் புகழ் சேர்த்தவர்.
அவர் ஒரு சகாப்தம்!
