image

ஏப்ரல் 25, இந்தியாவின் அருகாமை நாடான நேபாளத்தில் மிகவும் கடுமையான பூகம்பம் தாக்கியது. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் பட்டு வீடுகளை இழந்து உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல பாரம்பரியம்  மிக்க கட்டிடங்கள் இடிந்து போயின. 

தொடர் நிலநடுக்கம் , கடும் மழை போன்றவை மீட்புப் பணியைத் தாமதப் படுத்தவும் செய்தன. இதன்  எதிரொலியாக  எவரெஸ்டில் பனிப்புயல் வேறு. சுற்றுலாப் பயணிகளின் தவிப்பு!

இந்திய அரசு முழு மூச்சில் உதவிப் பணியில் ஈடுபட்டுள்ளது. 

20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு நலமாக வந்தனர்.

விஞ்ஞானிகள் இப்போது சொல்கிறார்கள்- நேபாளம் நிலநடுக்கத்தால்  தாக்கப்படும் என்பது முன்பே தெரிந்தது என்று. விஞ்ஞானிகளே! இனி இது போன்றவற்றைச் சற்று உரக்கச் சொல்லுங்கள்! மக்களாகிய நாமும் அவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்போம்!!  

குவிகமும் இயற்கை அளித்த வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதோடு ஐயாயிரம் ரூபாயை நமது பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளது. 


ஆண்டு : 2                                                                   மாதம் : 5

image

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா

பக்கம் – 24