
குப்பையும் செத்தையும் நீக்காச் சென்னையில்
அப்பித் தீர்த்த மழை
ஏரியில் வீட்டைக் கட்டிய சென்னைக்கு
பேரிடர் தந்த மழை
பிளாஸ்டிக் மயமான சென்னைத் தெருக்களில்
எலாஸ்டிக் ஆன மழை
தாழ்வு இடங்களில் தங்கிடும் மக்களின்
வாழ்வு பறித்த மழை
தூர்வாரா குட்டைகள் உள்ள சென்னையில்
சேறு பரப்பிய மழை
சாக்கடை சரியாய் அமைக்காச் சென்னையில்
சீக்காய் வந்த மழை.
போக்கிடம் இல்லா தண்ணீர் சென்னையை
சாக்கடை ஆக்கிய மழை
வானம் பொடித்துக் கொட்டி சென்னையின்
மானம் பறித்த மழை
பட்டாலும் புத்தியில்லா சென்னை மக்களை
முட்டா ளாக்கிய மழை
துருப்பிடித்த அரசு எந்திரங்கள் எல்லாம்
கருவருக்கச் செய்த மழை
