
கிரிக்கெட்டில் 20-20 மிகவும் பிரபலமல்லவா?
அதைப்போல உங்கள் வாழ்க்கையில் தினமும் செய்ய வேண்டிய பெரிய பிராஜக்ட் அல்லது பொழுது போக்கு அம்சம் அல்லது படிப்பது , எழுதுவது இப்படி எதையாவது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் செய்ய வேண்டி யிருந்தால் உபயோகப்படுத்துங்கள் டெக்னிக் 20 – 20 -20 .
இதற்குப் பெயர் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர் .
உதாரணமாக நீங்கள் ஒரு பெரிய நாவல் எழுத் திட்டமிட்டிருக்கிறீர்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறீர்கள். வீட்டில் உங்களுக்கு ஒரு மணிநேரம் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
அது நிச்சயம் கிடைக்காது. உங்கள் மனைவியோ, குழந்தையோ உங்களுக்கு அதைக் கட்டாயம் தரப்போவதில்லை. நீங்களும் ஒரு மணி நேரம் வீட்டின் மற்ற வேலையிலிருந்து தப்பிக்கலாம் என்றால் அது நியாயமில்லை.
இதற்கு என்ன வழி?
உங்கள் தேவையை மூன்று பாகங்களாகப் பிரியுங்கள். ஒரு மணியை 20-20-20 நிமிடங்களாகப் பிரியுங்கள். உங்கள் இல்லத்தாரை காலையில் 20 நிமிடம் மதியம் 20 நிமிடம் இரவு 20 நிமிடம் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் தானே என்று அவர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். நீங்களும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.
அப்பறம் என்ன?
நீங்கள் மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுவது போல 20 நிமிடம் மிகுந்த கவனத்துடன் உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள்!
இதற்குப் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர். போமோடோரோ என்பது சாதாரண அடுப்படியில் உபயோகப் படுத்தப்படும் அலாரம் மணி.
அதை இருபது நிமிடத்துக்கு அலாரம் அடிக்க வைத்துவிட்டு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்!
நீங்கள் சாதனையாளராகலாம்!
