![]()
ராபர்ட் பிராஸ்டின் கவிதை வரிகளை சுஜாதா தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.
ஆம் . நேருவிற்குப் பிடித்த Miles to go before I sleep என்ற வரிகளை எழுதியவர் தான் ராபர்ட் பிராஸ்ட் .

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்
தக்ஷிணாமூர்தியின் கவிதைகளில் இரண்டு :
கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்.
தனக்குரிமை இல்லாதாள் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது
சுஜாதாவே எழுதிய நேரிசை வெண்பா !
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெல்ல நடக்கின்றார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
மீசா மறைந்து எமர்ஜென்சி விட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லோரும்
……………. குடிக்க வாரும். .
இன்னும் வரலாம்
