13 வது சென்னை உலகத் திரைப்பட விழா சென்னை உட்லெண்ட்ஸ் திரையரங்கில் ஜனவர் 6, 2016இல் மாலை 6.00 மணி அளவில் துவங்கப்பட்டது.
தமிழ்ப்படங்கள் (போட்டிக்காக) 12
இந்தியப் படவரிசையில் 10,
கே பாலசந்தருக்குக் காணிக்கையாக 8
பஸ்டர் கேடன் பட வரிசையில் 6
ஜெர்மனி , டென்மார்க், வெனுஜுலா , சீனா, ஆகிய 50 உலக நாடுகளிலிருந்து மொத்தம் 183 படங்கள் திரையிடப்படுகின்றன.
இவற்றுள் ,அகாதமிக்குப் பரிந்துரைக்கப்பட்ட 16 படங்கள், பெர்லின் திரைப்படவிழா பரிசு பெற்ற 10 படங்கள், கேன்ஸ் பரிசு பெற்ற 6 படங்கள், மற்றும் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற 22 படங்கள் அடங்கும்.
சுகாசினி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, தாணு ராய் உதவி இயக்குனர், இந்தியத் திரைப்பட பனோரமா முன்னிலையில் டி தங்கராஜ் , சென்னை திரைப்பட விழாவின் இயக்குனர் வாழ்த்துரை கூற , நடிகர் சங்கம் நிர்வாகிகளில் ஒருவரான கார்த்தி கலந்துகொள்ள , ஹெல்முட் ஷிப்பர் , ஜெர்மானிய இயக்குனர் பகிர்ந்து கொள்ள விழா இனிது துவங்கப்பட்டது.
ஹெல்முட் ஷிப்பர் இயக்கிப் பெர்லின் விழாவில் பரிசுபெற்ற விக்டோரியா திரைப்படம் துவக்கவிழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வந்திருந்த 800 பிரதிநிதிகளுக்காகப் போட்டுக் காட்டப்பட்டது.
இவற்றிலிருந்து எத்தனை படங்களை உள்வாங்கி வடை சுடப்போகிறோம் என்பது தெரியவில்லை.


