ஒரு வருடம் !
பன்னிரண்டு நிகழ்வுகள் !
சிறார் முதல் சிகரங்கள் வரை எல்லோரும் மகிழ்ந்து, குவிந்து, மையமாக இருந்த காரணத்தால் குவிகம் இலக்கியவாசல் மகிழ்வுடன் பெருமிதமும் கொள்ளுகிறது.
குவிகம் இலக்கிய வாசல் துவக்கவிழா – இலக்கியமும் நகைச்சுவையும் – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு, ஜெயபாஸ்கரன் அவர்கள் முன்னிலையில்
இரண்டாவது நிகழ்வு – தி ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிக் கலந்துரையாடல்
மூன்றாம் நிகழ்வு – பிரபஞ்சன் அவர்களின் நேர்காணல்
நான்காம் நிகழ்வு – சிறுகதைச் சிறுவிழா
ஐந்தாம் நிகழ்வு – முகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம்
ஆறாவது நிகழ்வு – திரைப்படப் பாடல்களில் கவிநயம்
ஏழாவது நிகழ்வு – சாரு நிவேதிதா தலைமையில் “அசோகமித்திரன் படைப்புகள்”
எட்டாவது நிகழ்வு – ஸ்ரீஜாவின் தன் வரலாற்றுப் புதினம் பற்றிய உரை
ஒன்பதாவது நிகழ்வு – அழகிய சிங்கரின் நேர்பக்கம் – நூல் அறிமுகம்
பத்தாவது நிகழ்வு – ரவி தமிழ்வாணன் தலைமையில் “புத்தக உலகம்” பற்றிய ஆய்வு
பதினோராம் நிகழ்வு – பாம்பே கண்ணன் தலைமையில் பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்’ கலந்துரையாடல்
பன்னிரெண்டாம் நிகழ்வு – ஞானி தலைமையில் நாடகம் – “நேற்று இன்று நாளை” பற்றிய உரை
ஆண்டு விழா நிகழ்வைப் பற்றிக் குவிகத்தின் விளக்கம்:
குவிகம் இலக்கியவாசலின் ஆண்டு விழா, ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் “இயல் இசை நாடகம்” என்ற தலைப்பில் அரங்கம் நிறைந்த திருவிழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

சிறார்களின் வில்லுப்பாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

எழுத்துலக சிகரங்கள் திரு அசோகமித்திரன் மற்றும் திரு இந்திரா பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது

திரு சுந்தரராஜன் தனது வரவேற்புரையில் கடந்த பன்னிரண்டு
மாதங்களில் குவிகம் இலக்கியவாசல் நிகழ்த்திய பன்னிரண்டு சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக எடுத்துரைத்தார். இலக்கியத்தில் நகைச்சுவை என்ற முதல் நிகழ்ச்சியிலிருந்து
நேர்காணல், கலந்துரையாடல், புத்தக அறிமுகம், சரித்திர நாவல் படைத்த அனுபவங்கள், கவியரங்கம், புத்தக உலகம், சிறுகதை சிறுவிழா என்று இதுவரை நடந்துள்ள விவரங்களைத் தெரிவித்தார்.
திரு அழகியசிங்கர், திரு மியூசிக் கண்ணன் மற்றும் திருமதி லதா ரகுநாதன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களைப் பற்றிப் பேசினார்கள்.

திரு அசோகமித்திரன், திரு இந்திரா பார்த்தசாரதி இருவரும் குவிகம் இலக்கியவாசலைப் பாராட்டியதுடன் இன்றைய இலக்கியத்தைப் பற்றித் தங்கள் கருத்துரைகளையும் எடுத்துரைத்தனர். நாடகத்தை இறுதி வரையிலும் கண்டுகளித்துத் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.
திருமதி தாரிணி கணேஷ் நாடகமாக்கி இயக்கிய திரு கோமல் சுவாமிநாதனின் சிறுகதையின் “மனித உறவுகள் ” பாரா ட்டுகள் பெற்றது.

திரு கோமல் சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் அவரது புதல்வன் திரு ரவியும் விழாவில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. முந்திய நிகழ்வுகளைச் சிறப்புற நடத்தித் தந்த திரு பாம்பே கண்ணன், திரு ரவி தமிழ்வாணன், திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
சிறப்புரைகள், வில்லுப்பாட்டு மற்றும் நாடகத்தின் ஒளிவடிவங்களைக் கீழே குறிப்பிட்டுள்ள வலைப்பூவில் காணலாம்.
http://ilakkiyavaasal.blogspot.in/
வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
இனி இரண்டாம் ஆண்டு இனிதே தொடங்குகிறது !

