
பாரததேசத்தில் சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, முக்கிய குருமார்கள் மூவர்.
அத்வைத சித்தாந்தத்தின் மூலவர் ஆதி சங்கரர்
விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடி ராமானுஜர்
துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர்
பூஜ்யகுரு ராமானுஜரின் (1017-1137) 1000 வது ஜெயந்தி அடுத்த ஆண்டு 2017ல் வருகிறது.
பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றியவர்.
ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர்.
தாழ்த்தப்பட்டவர்களை அன்றைக்கே கோயிலுக்குள் அழைத்துச் சென்ற புரட்சியாளர்.
மதத்தில் புரட்சி செய்த மகான்.
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை “எவருக்கும் வெளியிடக்கூடாது” என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார்.
ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார்.
இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, இது குருவின் சொல்லுக்குத் துரோகமிழைப்பதாகும் என்றும், இதற்கு நரகம் புக நேரிடும் என்றார்.
இராமானுஜரோ, எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கு செல்வதும் பாக்கியமே என்றார்.
முடிவில் தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டுத் திவ்ய மந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார்.
இப்போதும் உடையவர் ராமானுஜரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.
ராமானுஜரைப் பற்றி விஜய் டிவியில் வந்த ஒரு பாடல் காட்சியைப் பார்த்துப் பரவசம் அடையுங்கள். ( நன்றி யூ டியூப் )
