இறைவி படம் பார்த்தேன்!

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த மணிரத்னம் தான்.

கதையும் வசனமும் ஒரு மாதிரி இருந்தாலும் சொல்லும் விதம் அல்ட்ரா புதுசு.

பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு . வித்தியாசமாக இருக்கிறது. என்பதே என் பதில்!

நம் எதிர்பார்ப்புகளை மீறிப் பாத்திரங்கள் பயணிக்கின்றன.

“ஆண் -நெடில் பெண் குறில் – என்ன கேவலமான மனிதர்கள் நாம்’ என்று ஒரு ஆண் சொல்லும் போது ஆண்கள் கை தட்டுகிறார்கள். டைரக்டருக்கு வெற்றி ! படம் வெற்றியடையுமா? தெரியவில்லை.

Inspired by Sujatha’s Jannal malar என்று சொல்கிறார். மணி சாரின் ஆயுத எழுத்து வாசனை கொஞ்சம் அடிக்கிறதோ?

‘பெட்டிக்கு வெளியே’ எண்ணங்கள் நிறைந்த படம்.

முதலில் அதன் டிரைலர் பாருங்கள்!! அப்புறம் புதுயுகம் டிவியில் பத்திரிகை ஆசிரியர் மதன் கார்த்திக் சுப்புராஜை பேட்டி கண்டதின் யூட்யூப்  வடிவம் பாருங்கள்!

 

 

 

மொத்தத்தில் அக்கினித் திராவகம்