
தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டல்லவா?
தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாதரின் தமிழில் நம் அனைவருக்கும் பங்கும் உரிமையும் பாசமும் மரியாதையும் எப்போதும் இருக்கவேண்டும்!
அவர் பிறந்த உத்தமநாதபுரத்திற்குக் ( கும்பகோணம் -தஞ்சை செல்லும் வழியில் பாபநாசத்தில் இறங்கி அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் செல்லவேண்டும் ) குவிகம் நண்பர்கள் வட்டம் சென்று தாத்தாவின் நினைவிடத்தைக் கண்டு – வணங்கி – ஆராதித்துவிட்டு வந்தது.
தமிழக அரசு அவர் இருந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி வைத்திருக்கிறது. அதற்காக அனந்த கோடி நன்றி.
அவர் இல்லை என்றால் இன்று தமிழில் இருக்கும் எண்ணற்ற சங்கப் பாடல்கள் எல்லாம் நம் கண்களுக்குத் தென்படாமலேயே போயிருக்கும். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் , சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் இத்தனை அழகாக நமக்குக் கிடைத்திருக்காது.
அங்கே எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்!


அவரது வரலாற்றை ஒரு சிறிய நாடகமாக அமைத்திருக்கிறார்கள். பார்த்து அவர் பெருமையை உணருங்கள்!!



