உலக வரைபடத்தில் இல்லாத நிலப்பரப்பு திடீரென்று கடல் அடிமட்டத்திலிருந்து மேலே முளைத்தது – புதிய தீவு ஒன்று பிறந்தது!!
தீவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஸர்ட்ஸீ (surtsey).
பிறந்த வருடம் 1967ல்.
இடம் ஐஸ்லாண்ட் நாட்டின் தென்கோடி எல்லை.
ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்குப் பிறகு
ஸர்ட்ஸீ தீவு ஐஸ்லாண்ட் – தென்கோடியில் ஸர்ட்ஸீ
வட அட்லாண்ட்டிக் கடலில் மட்டத்திலிருந்து கீழே 130 மீட்டரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தரை மட்டத்திற்கு நவம்பர் 1963ல் வெளிவந்து 1967 ஜூன் வரை நீடித்தது. 2.7 சதுர கிமீ-ல் இருந்த நிலப் பரப்பு தற்போது அலை அரிப்பினால் 1.3 சதுர கிமீ-ல் குறைந்து காணப்படுகிறது.
ஸர்ட்ஸீயின் பெயருக்கு, இயற்கையை வழிபட்டு வந்த பழங்கால ஸ்காண்டினேவியாவின் நார்ஸ் மிதாலஜியில் அனல் அல்லது பூதத் தீவு என்று பொருள்.
முதலில் எரிமலையின் மூன்று வாய்கள் மூலமாக ஏற்பட்ட வெடிப்புகள் கடைசியில் ஒன்றாக இணைந்து இந்த தீவு உருவானது. 130 மீ கடலுக்கு அடியில் சாதாரணமாக ஏற்படும் வெடிப்புகள் பல திசைகளில் சிதறி தண்ணீர் அழுத்தத்தினால் நனைக்கப்பட்டு பரவி விலகிவிடும். தொடர்ந்து வெடிப்புகள் நீடித்தால் அதன் மூலமாய் வெளிவரும் உருகிய உலோகக் கலவைகளினால் மேடுகள் கிளம்பும். வெடிப்புகளினால் கட்டுப்படுத்த இயலாத மேடுகள் பெரிதாகிப் பெரிதாகி கடல் மேல் மட்டத்திற்கு மேலே வந்துவிடும்.
1964ம் ஆண்டில் தண்ணீர் கலவையினால் நிகழ்ந்த வெடிப்புகளின் வாய்களை தண்ணீர் வெகு எளிதில் செல்ல இயலாததால் எரிமலையின் வீரியம் குறையத் தொடங்கியது. அப்போது எரிமலை குழம்புகளின் ஊற்றுகள் மற்றும் ஆறுகளின் செயற்பாடுகள் தொடங்க ஆரம்பித்தன. இறுக்கமற்ற எரிமலை சாம்பல்களும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பாறைகளும் எரிமலை குழம்புகளினால் மூடப்பட்டு தீவு கடல் அலைகளினால் அடித்துக்கொண்டு போகவிடாமல் காப்பாற்றப்பட்டது. எரிமலை 1967 ஜூனில் சாந்தம் அடைந்தது. இப்போது வருடா வருடம் ஸர்ட்ஸீ 1.0 ஹெக்டேர் நிலத்தை இழந்து வருகிறது. இழந்த நிலம் எரிமலை குழம்பினால் மூடப்படாத இறுக்கமற்ற பாறைகளும் சாம்பல்களுமாகும்! குழம்பினால் முற்றிலும் மூடப்பட்ட இத்தீவு மறைய இப்போது வாய்ப்பில்லை.
பல்லுயிர் பெருக்கத்தைப் (biodiversity) பற்றி ஆராய இத் தீவு முதல் நிலையான உதாரணம். பாறைகளில் 1967ம் வருட இறுதியில் பாசி மற்றும் பூக்கள் இல்லாத செடிகளும் தென்பட ஆரம்பித்தன. 2008ம் ஆண்டு 69 வகையான செடி கொடிகள் தென்பட்டு கடைசியில் 30 மட்டுமே இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்தாபனமாயின. இடம் மாறும்(migratory) பறவைகள் தீவில் கூடு கட்ட ஆரம்பித்தன. இதனால் மண்ணின் தரம் உயர ஆரம்பித்தது. புதிய புதிய செடி இனங்கள் வருடத்திற்கு 5 வீதம் உண்டாகின்றன. பறவைகளின் பெருக்கம் தீவின் செடிகொடிகளின் பெருக்கத்திற்கு உதவின. இப்போது 12 வகையான பறவைக் கூட்டங்கள் இங்கு கூடு கட்ட வருகின்றன. பஃபின், ஸீல் மற்றும் ஸ்டார் மீன்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து காற்றினால் தள்ளப்பட்டு மற்றும் அதன் பலத்தினாலேயே வந்த பறக்கும் பூச்சிகள், மரக்கிளைகளில் தங்கி மிதந்து வந்தவைகள், கரையில் ஒதுங்கிய கடலில் செத்த உயிரினங்கள் மூலமாகவும் இன்று 663 பூச்சிகள் முக்கியமாக உண்ணிகள் கணக்கிடப்பட்டுள்ளன.


பஃபின் ஸீல்
ஆராய்ச்சியாளர்கள் வசிக்கும் குடில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தீவில் வாழ எவருக்கும் அனுமதி கிடையாது. ஐஸ்லாண்ட் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல இயலாது.
தற்சமயம் UNESCOவினால் அங்கீகரிக்கப்பட்டு காப்பாற்றப்படும் தீவாக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!




