Image result for school admission in chennai vijayadashami i

 

‘ஐ ஆம் ஸாரி மேடம்… நான் எத்தனை தடவை
சொல்றது? எங்க ரூல்ஸ்படி எல்.கே.ஜி. அட்மிஷனுக்குக்
குழந்தைக்கு மூன்று வருடம் பத்து மாதம் வயதாகி
யிருக்கணும். உங்க குழந்தைக்கு மூன்று வருடம் ஒம்பது
மாதம் தான் ஆகியிருக்கு. ஸோ.. ஒரு மாதம் ஷார்ட்.
அட்மிஷன் கொடுப்பதற்கில்லை..’ என்று அடித்துக் கூறினாள்
பிரின்ஸிபால்.

சுபாஷ் நகர் கான்வென்ட். தன் பெண்ணிற்கு அட்மிஷன்
வாங்குவதற்காகச் சென்றிருந்த சுமதி, பிரின்ஸிபாலின்
முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்-
திருந்தாள். அவள் பக்கத்தில் பிரமித்துப் போய் உட்கார்ந்-
திருந்தாள் அவள் தோழி வனஜா. பெயர் பெற்ற லேடீஸ்
கிளப்பின் பிரஸிடென்ட்.

‘ஸிஸ்டர்.. நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. இந்த ஒரு
மாதம் ஷார்ட்டேஜுக்காக அவளுக்கு ஒரு வருடம் வீணாப்
போய் விடும். நீங்க மனது வெச்சா கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணலாம்..’ என்றாள் சுமதி தன்னை சமாளித்துக் கொண்டு
சிறிது கெஞ்சலாக.

‘என்ன நீங்க..? சொன்னதையே திருப்பித் திருப்பிச்
சொல்லிக்கிட்டு..? மூன்று மாதம் பத்து மாதம் முடிஞ்ச
குழந்தைக பல பேர் கியூவிலே நின்னுட்டிருக்காங்க… அவங்-
களுக்கெல்லாம் நான் அட்மிஷன் கொடுத்தாகணும்..”

இதுவரை பேசாமலிருந்த வனஜா, ‘ஸிஸ்டர்.. சுமதியுடைய
முதல் குழந்தை உங்க ஸ்கூலில்தான் படிக்குது.. ஸோ.. அவ
இரண்டாவது பெண்ணையும் இங்கேயே சேர்க்கப் பிரியப்-
படறா.. இரண்டு பேரும் சேர்ந்து ஸ்கூலுக்கு வந்துட்டுப்
போகலாம் பாருங்க..’ என்றாள் மெதுவாக.

‘ஐ ஆம் ஸாரி.. அதுக்கு நான் என்ன செய்யறது..? எங்க
ஸ்கூலிலே அட்மிட் பண்ணிக்க முடியாது.. வேறே ஏதாவது
ஸ்கூலிலே டிரை பண்ணிப் பாருங்க.. ஈ·ப் யூ ஆர் ஸோ
பர்ட்டிகுலர், பெரிய பெண்ணுடைய டி.ஸி.யையும் வாங்கிக்-
கிட்டு அந்தப் பள்ளிக் கூடத்திலியே சேர்த்துடுங்க. ஸோ..
ரெண்டு பெண்களும் சேர்ந்தே ஸ்கூலுக்குப் போகலாம்’
என்றாள் பிரின்ஸிபால் சிறிது எகத்தாளத்தோடும், இறுமாப்-
போடும்.

வனஜாவின் முகம் கோபத்தால் சிறிது மாறியது. சுமதி
நிதானத்தோடு இருக்கும்படி அவள் கையைப் பிடித்து
அமுக்கினாள்.

மேலெழுந்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
வனஜா, ‘ஸிஸ்டர்.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
நீங்கள் அட்மிஷன் கொடுத்துள்ள ஐம்பது ஸ்டூடண்ட்ஸில்
அட்லீஸ்ட் இருபது ஸ்டூடண்ட்ஸ்க்காவது நீங்க விதிச்ச
வயத விட கம்மியாத்தான் இருக்கும். அவங்க ·பால்ஸ்
பர்த் ஸர்டி·பிகெட் வாங்கிட்டு வந்து குழந்தைகளைச் சேர்த்தி
யிருக்காங்க.. ஆனா இந்த சுமதி ரொம்ப நேர்மையா குழந்-
தையின் சரியான பிறந்த தேதியைக் கொடுத்து பர்த் ஸர்டி-
·பிகெட் வாங்கிட்டு வந்திருக்கா.. பட், இந்த ஒரே ஒரு
மாத ஷார்ட்டேஜுக்காக எங்க குழந்தைக்கு அட்மிஷன்
இல்லை. இதைக் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா..?’
என்றாள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக.

‘அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நாங்க
ரெகார்டுபடிதான் போக முடியும்’ என்றாள் பிரின்ஸிபால்
முடிவாக.

சில நிமிடங்கள் யோசனையோடு உட்கார்ந்திருந்த
வனஜா, ‘ஸிஸ்டர்.. ஈ·ப் யூ டோன்ட் மைன்ட்.. கொஞ்சம்
டெலிபோனை யூஸ் பண்ணிக்கலாமா..? என்று கேட்டாள்.

‘ம்..’ என்ற பதில் வந்தது பிரின்ஸிபாலிடமிருந்து.

யாரிடம் பேசப் போகிறாள் என்ற திகைப்போடும்,
ஆவலோடும் உட்கார்ந்திருந்தாள் சுமதி.

டெலிபோன் நம்பர்களைச் சுழட்டிய வனஜா, சில
வினாடிகள் காத்திருந்து விட்டு, ‘ஹலோ.. ஆன்டி, எப்படி
இருக்கீங்க.. நான் வனஜா பேசறேன். ஸி. எம். இருக்காரா?
கொஞ்சம் கனெக்ஷன் கொடுக்கறீங்களா..’ என்று கூறிக்
காத்திருந்தாள்.

‘ஹலோ ஸார்.. நான் வனஜா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா? உங்க வெளி நாடு ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது..?’

‘ …. ‘

‘ஓ.. வெரிகுட்.. நான் இப்ப சுபாஷ்நகர் கான்வென்டி-
லிருந்து பேசறேன். ஒரு சின்ன பிராப்ளம்….’

‘ ….’

‘சேச்சே… அப்படி ஒண்ணுமில்லே.. ப்ராப்ளமில்-
லேன்னாலும் ·போன் பண்ணுவேன். இந்த ரெண்டு மாசமா
ஒரே பிசி.. என் பிரண்டு சுமதியுடைய ஸெகன்ட் டாட்ட-
ருக்கு அட்மிஷனுக்காக வந்தோம். ஆனா ஒரு மாசம்
ஏஜ் ஷார்ட்டேஜுங்கறாங்க..’

‘…..’

‘என்ன..? மூணு வயது நாலு மாதக் குழந்தைகளையும்
இவங்க சேர்த்துக்கிட்டிருக்காங்களா..? உங்களுக்கு
கம்ப்ளெயின்ட் வந்துருக்கா.. அப்போ ஏன் இந்தக்
குழந்தையை மட்டும் சேர்த்துக்க மாட்டேங்கறாங்க..?’

‘….’

‘சரி, நாங்களும் ரிப்போர்ட் பண்ணறோம்.. எஜுகேஷன்
மினிஸ்டருக்கு ஒரு லெட்டர் அனுப்பிச்சிட்டு உங்களுக்கும்
ஒரு காபி அனுப்பறோம்.. நாளைக்கு வந்து நான் உங்களைப்பார்க்கறேன்..’ என்று டெலி·போனை வைத்து விட்டு, ‘தாங்க்யூ ஸிஸ்டர்.. வா சுமதி போகலாம்..’ என்று எழுந்தாள் வனஜா

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த
பிரின்ஸிபாலின் முகம் வெளிறி யிருந்தது.

‘ஒரு நிமிஷம்.. நீங்க ஏன் ஸி. எம். லெவலுக்கு போயிட்
டீங்க..? ஸி. எம்.மைத் தெரியும்னு முன்னாலேயே சொல்லக்
கூடாதா..? இந்தம்மாவின் குழந்தைக்கு அட்மிஷன் கொடுக்-
கிறேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்.. ஸி.எம். கிட்டே சொல்லி
ஏதோ எங்க ஸ்கூலைப்பத்தி கம்ப்ளெய்ன்ட்ஸ்னு சொன்னீங்-
களே.. அதைப் பத்தி ஸிவியரா ஆக்ஷன் எடுக்காம பார்த்-
துக்கணும்’ என்றாள் பிரின்ஸிபால் அழாக் குறையாக.

வனஜா பெருமையோடு சுமதியைப் பார்த்துச் சிரித்துக்
கொண்டே அமர்ந்தாள்.

சுமதிக்கும், வனஜாவிற்கும் ராஜோபசார மரியாதை
நடந்தது.

குழந்தையின் அட்மிஷன் ·பீஸைக் கட்டிவிட்டு
வெளியே வந்த சுமதி, ‘வனஜா இதுவரை எங்கிட்டே நீ
சொன்னதேயில்லையே, உனக்கு ஸி. எம். மைத்
தெரியும்னு. நீ இந்த ஏரியாவுலேயே பெரிய லேடீஸ்
கிளப் பிரஸிடென்ட்னு தெரியும்.. அதனால்தான் நானே
உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆனா உனக்கு
சீ·ப் மினிஸ்டரைத் தெரியும்னு தெரியாது..’ என்றாள்.

வனஜா கடகடவென்று சிரித்தாள். ‘சீ·ப் மினிஸ்-
டரையாவது… தெரியறதாவது.. ஏதோ ஒரு நம்பரைச்
சுழற்றினேன். எங்கேஜ்ட் ஸவுன்ட் வந்தது. சீ·ப்
மினிஸ்டர் கிட்டே பேசற மாதிரி ஒரு டயலாக். அவ்வளவு-
தான். உன் பெண்ணுக்கு அட்மிஷன். இந்தக் காலத்துலே
நேர்மைக்கும், உண்மைக்கும் விலையே இல்லே..’

திகைத்து நின்றாள் சுமதி.

நேர்மையே உன் நிறம் என்ன…?