
பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 02.10.2016 ல் சிறப்பாக ஜம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.காந்திஜயந்தி விழா,லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள், தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் பிறந்தநாள்,பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கும் விழா ஆக ஐம்பெரும்விழாவாக குடந்தை திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
பாபநாசம் திரு.வீ.ப.க.மூர்த்தி அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த ஜம்பெரும்விழாவினைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதை அறிந்து மண்ணின் மைந்தரான குவிகம் ஆசிரியரும் நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஆன்மீகம்,அரசியல்,தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பொதுமக்கள் என ஒட்டு மொத்த இந்தியாவை நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ததை மிகவும் மன மகிழ்வுடன் பாராட்டிப் பேசினார். காந்தி, காமராஜ்,சாஸ்திரி,டி.வி.ஆர் ஆகியோரின் பொதுவான சிறப்பு அவர்களின் “எளிமை”. மாணவர்கள் அவர்கள் காட்டிய நல் வழியில் பயணித்து வெற்றி பெற வாழ்த்தி பரிசுகளையும், கல்வி உதவித்தொகையும் வழங்கினார்.
கவிப்பேரொளி நீரை.அத்திப்பூ அவர்கள் கலந்துகொண்டு கவிதை தென்றலால் அனைவரையும் பாராட்டி மகிழ்வித்தார்.
பாபநாசம் பேரூராட்சித் தலைவர் திரு.கருணாநிதி, ரோட்டரி சங்கத்தார் , அரிமா சங்கத்தார் , நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் , கவிஞர் ராஜேந்திரன் , மற்றும் பொதுமக்களில் பலர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
ஆபிதீன் மெட்ரிக்பள்ளி ‘தாளாளர் ‘ திரு.அமீர்ஜான் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்
– குவிகம் சிறப்பு செய்தியாளர் தரும.இராசேந்திரன் , பாபநாசம்.



இலக்கிய வாசல் ஆசிரியரின் களப்பணியில் தமிழ் தாத்தா உ.வெ.சா. நினைவு இல்லம் பற்றிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் அருமை. நன்றி
LikeLike