\
இது 2030 வது வருடம். இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவர் செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் வேற்றுக் கிரகவாசி. பெயர் அங்காரகன்.
பூமியை ஆக்ரமிக்க ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வருகின்றனர். எட்டு வில்லன்கள் – ஜாக்கி சான், அஜீத், விஜய், ஆமிர்கான், மகேஷ் பாபு, பிருத்விராஜ், டாம்க்ரூஸ், பிராட் பிட். எப்படி மற்ற கிரக வாசிகளையெல்லாம் சண்டையில் தோற்கடித்து விரட்டிவிடுகிறார் என்பது தான் ஷங்கரின் அருமையான கதை .
கடைசியில் ரஜினியும் வேற்றுக்கிரகவாசியாகையால் அவரும் போகவேண்டும் என்று பூமியில் மக்கள் போராட அப்போது அவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. ரஜினி உண்மையில் மங்கள்யானில் சென்ற பூமிநாதன் என்ற நம்மவர். மற்ற கிரகங்கள் பூமியைக் கைப்பற்றப்போவதை அறிந்து காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் அங்காரகனைக் கொன்றுவிட்டு அவன் வடிவில் வருகிறார். கடைசியில் உண்மை அங்காரகன் -அட்டகாசமான வில்லன் பத்துத் தலைகளுடன் வந்து பூமிநாதனுடன் மோத வருகிறான். அது வேறு யாரும் இல்லை . கமல் தான்.
ஹீரோயின் ஹாலிவுட்டிலிருந்து வந்த அழகுப் பதுமை. ஷங்கரின் பிரும்மாண்ட படம் அது. இந்தியாவின் எல்லாமொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியான படம்.
போதுமா நம்ம ரீல்?
அது சரி. உண்மையில் 2030இல் நாம் எப்படி இருப்போம்?
கிப்லிங்கர் என்பவர் சொல்லுகிறார். இது உண்மை தான்.

சென்ட் வாசனை, டெக்னாலஜி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகும் !
நன்றாகத் தூங்க வைக்கும் புது கணினிமயமாக்கப்பட்ட படுக்கை
நம் குளிர்சாதனப்பெட்டியே தேவையான சாமான்களை வரவழைக்கும்
வயல்களை விட அடுக்கு அடுக்கான உயரங்களில் உணவுப் பொருட்கள் விளையும் – விளைச்சல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இருக்காது.
டிரோன்கள் சாமான்களை உங்கள் வீட்டு வாசலிலேயே பட்டுவாடா செய்யும்
உங்கள் வை ஃபை ரவுட்டர் மற்ற எல்லாப் பொருட்களையும் இயக்கும்.
நடமாடும் வீட்டு உபயோகச் சாமான்கள் (நடமாடும் படுக்கை, கட்டில்)
டிரைவர் இல்லாத கார்
அதிவேகத்தில் பறக்கும் ஆகாயவிமானங்கள்
கைரேகை கையெழுத்து பாஸ்வோர்ட் இல்லாமல் முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் சாதனம்
சாவிகளே இல்லாமல் போய்விடும். டிஜிட்டல் சாதனத்தினால் திறக்கலாம் மூடலாம்.
மாயக் கண்ணாடி அணிந்துகொண்டு வர்சுவலாக எங்கு வேண்டுமானாலும் போகலாம்- அதாவது பார்க்கலாம்.
இயற்கை வாயு, காற்று, சூரிய ஒளி, போன்றவற்றால் சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.
விட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பேட்டரியில் சேமித்து வைக்கும் வசதி
குளிக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் உபயோகிக்கும் முறை
உங்கள் ஆரோக்கியத்தைச் சரியாகக் கண்காணிக்க மைக்ரோ சிப் உடலில் பொருத்தப்படும்.
உங்களுக்குத் தேவையான பிரத்தியேகமான மருந்துகள் கிடைக்கும்
சோதனைச் சாலையில் தயாரித்த உங்கள் உடல் உபகரணங்கள் தயாராக இருக்கும்.
நீங்கள் பேசுவதை உங்கள் போன் பதிவு செய்யும்
எல்லா பரிமாற்றமும் மின்னணு மூலமே நடக்கும். பணம்,செக்,கிரெடிட் கார்ட் எல்லாம் மறைந்துவிடும்.





