நன்றி: ஹிந்து
அவரது மிக பிரபலமான நகுமோமு என்ற பாடல் இதோ!
அவரது பாடலைக் கேட்க ஒரு நாள் போதுமா?
(சரி, இந்த தேவ கானத்தை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியிருந்தால் எப்படியிருக்கும்? கேட்கவேண்டுமா?
சென்னை: பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) சென்னையில் காலமானார்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் கிராமத்தில் பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவர் 6 வயதில் கச்சேரி செய்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர். கர்நாடக சங்கீதத்தின் அச்சாணிகளில் ஒருவர்.
அவர் தெலுங்கு பக்த பிரகலாதாவில் நாரதராக நடித்து, அத்துடன் நடிப்புத் தொழிலுக்கு முழுக்குப் போட்டவர். சதி சாவித்திரி என்ற படத்தில் பாடியிருக்கிறார்.
ஜி வி அய்யர் சம்ஸ்கிருதத்தில் தயாரித்த ஆதி சங்கராச்சார்யா , ராமனுஜாச்சார்யா , மாத்வாச்சார்யா படத்துக்கு இசை அமைத்தார். ஹம்ஸகீதே என்ற கன்னடப் படத்திற்கு இசை அமைத்ததற்காகத் தேசிய விருது பெற்றார். மாத்வாச்சார்யா படத்திற்கு இசைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
அவரது முதல் தமிழ் சினிமா பாடல் ஸ்ரீதரின் கலைக்கோயில் படத்தில் 1964இல் பாடிய “தங்க ரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தான். அதைக் கேட்கவேண்டுமா? கீழே உள்ள ஆடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்!
கவிக்குயில் படத்தில் அவர் பாடிய “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் மிகப் பிரபலம் ஆகும். இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய” ஒரு நாள் போதுமா” உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகின.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசை அமைத்தும் உள்ளார்.
ஸரஸ்ரீ மற்றும் சுமுகம் ராகங்களை அறிமுகம் செய்தார்.
எண்ணற்ற கீர்த்தனைகளையும் தில்லானாக்களையும் வடிவமைத்தவர்.
மத்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
