





நீர்வீழ்ச்சிகளை மலையின் உச்சியிலிருந்து கீழே தரைமட்டத்தில் கொட்டுவதைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்! நில மட்டத்தின் கீழ் ஆரம்பித்து மிக ஆழமாக பூமிக்குக் கீழே கொட்டும் நீர்வீழ்ச்சியை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா?
அப்படி ஓர் நீர்வீழ்ச்சி நேபாளத்தில் காஸ்கி டிஸ்ட்ரிக்கில் பொகாரோ என்னும் இடத்தில் இருக்கிறது! அது டேவிஸ் ஃபால்ஸ் என்று அழைக்கப்படும்.
அது எப்படி நேபாளத்தில் ஓர் ஆங்கிலப் பெயரால் அழைக்கப்படுகிறது என்னும் கேள்வி உங்கள் மனதில் எழலாம்! இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து விழும் ஆதாரமான தண்ணீர் ஃபேவா என்னும் ஏரியில் ஆரம்பிக்கிறது. பொகாரோவில் வந்தடையும்போது மலையைத் துளைத்து நிலமட்டதிற்குக் கீழ் ப்ரவாகமாக குகைப் பாதையில் செல்லத் தொடங்குகிறது. குகைப் பாதையின் ஆழம் சுமார் 500 அடி(150 மீட்டர்). பின்னர் தரைமட்டத்திற்கு கீழ் 100 அடியில் குப்தேஷ்வர் மகாதேவ் என்னும் மற்றொரு குகையின் வழியாக ஓட ஆரம்பிக்கிறது!
1960ம் வருடம் குகைப் பாதையைப்பற்றி அறியாமல் டேவி என்னும் ஒரு ஸ்விஸ் நாட்டுப் பெண்ணும் அவள் கணவனும் நீந்தி மகிழ்ந்து கொண்டிருக்கும்போது தேவி என்ற அந்தப் பெண் குகைப் பாதையில் சிக்கி நீரில் அமிழ்ந்து கொல்லப்பட்டாள். அவளின் சடலம் மூன்று நாட்களுக்குப் பிறகு மிகுந்த முயற்சிக்குப்பின் கிடைத்தது.
டேவியின் பெண்ணின் பெற்றோர் அந்த இடத்திற்கு ‘டேவிஸ் ஃபால்ஸ்’ என்று பெயர் வைக்க விண்ணப்பித்து அப்பெயரே அந்த அருவிக்கு நிலைத்தது!
நீர்வீழ்ச்சி நேபாளத்தில் ‘பாதாளே சாங்கொ’(தரைமட்டத்திற்கு கீழே உள்ள நீர்வீழ்ச்சி) எனவும் ஆழைக்கப்படுகிறது!
அதன் அழகை இந்த you tubeன் மூலம் கண்டு களியுங்கள்:
