
உன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொடும்போது
மதுவுண்ட மயக்கமே இனிமை இனிமை
உன்னுருவம் நிழலாடும் கள்ளுண்ட என்னுள்ளம்
களிப்புடனே குதிப்பதுவும் புதுமை புதுமை !
ஈரவிதழ் ரோஜாவை சுற்றிவரும் வண்டானேன்
கயல்விழியை பூசிநிற்கும் குளிர்ச்சிமிகு மையானேன்
கன்னங்கரு கூந்தலையே அளைக்கின்ற சீப்பானேன்
தேமதுரக் குரலினிலே இணைந்துவரும் இசையானேன்..!
கட்டான மேனியின் வழுவழுப்பும் நானல்லவோ
எடுப்பான மார்பகத்தின் துடிப்புமது நானல்லவோ
அன்னநடை மெல்லிடையின் அழகான அசைவானேன்
நாணத்தால் கன்னங்கள் நிறம்மாற சிவப்பானேன்..!
எனக்காக நீயும் உனக்காக நானுமாய்
ஏழேழு ஜன்மங்கள் தொடர்ந்துவரும் சொந்தமடி
ஈருடல் ஓருயிர் பெண்ணே பெண்ணே
நீவேறு நான்வேறு இல்லையடி கண்ணே..!
