சீரியல் தரும் பாடம்..!

‘குழப்பங்களிலோ, சங்கடங்களிலோ உழன்றால் அந்த
அகிலாண்டேசுவரியையும், மகேசுவரனையும் மனதார
வேண்டிக் கொண்டால் குழப்பங்களும், சங்கடங்களும் ஓடிப்
போய்விடும். ‘தேவி போற்றி.. பெருமானே போற்றி..’ என்று
வேண்டிக் கொண்டால் ஓடோடி வந்து குறைதீர்ப்பார்கள்’
என்றார் குருஜி.
கேட்டுக் கொண்டிருந்த எனக்குப் புல்லரித்தது. பக்தகோடிகள் நிரம்பிய அந்த ஹாலே நிசப்தமாய் இருந்தது.
எனக்கு அடுத்த இருக்கையில் இருந்த என் சுட்டிப்பெண்
மிதிலா, ‘அப்பா, இந்த குருஜி சன் டி.வி.யில் ஏழு மணிக்கு
வர ‘விநாயகர்’ சீரியல் பார்க்கறதில்லைன்னு நினைக்கிறேன்.
அங்கே சிவபெருமானும், உமாதேவியும் அசுரர்கள் கொடுக்கிற
நெருக்கடிகளாலும், குழப்பங்களாலும், சங்கடங்களாலும்
தவிக்கும் தவிப்பு இருக்கே.. அப்பப்பா.. அவர்களை நாமதான் போய்க் காப்பாத்தணும் போலிருக்கு. அவர்களுக்கு
அவர்களுடைய பிராப்ளங்களையே தீர்க்க முடியலே..
நமக்கு ஹெல்ப் பண்ண வரப் போறாங்களா என்ன..?’
என்றாள் மெதுவாக.
பக்கத்திலிருந்த பார்வையாளர்கள் மிதிலாவின் பேச்சைக்
கேட்டு மெதுவாகச் சிரித்தனர்.
நான் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்தேன்.
கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:-
அப்பா : இன்னிக்கு சாயந்தரம் போய் அந்த பல் டாக்டர்கிட்டே பல்லைக் காட்டிட்டு ஆயிரம் ரூபாய்
அழுதுட்டு வரணும்..!
மகள் : என்னப்பா… இன்னும் புரியாம பேசிட்டிருக்கியே..
நம்மகிட்டே வேலை செய்யறவங்க பல் இளிச்சிட்டுத்
தலையைச் சொறிந்தா நாமதானே காசு
கொடுக்கறோம். அதேமாதிரி டாக்டர்கிட்டே
நீ பல்லைக் காட்டினா அவர்தானே உனக்கப்
பணம் தரணும்.
