
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசியல் வானில் மறக்கமுடியாத நட்சத்திரத் தலைவர்கள் ராஜாஜி, காமராஜ், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா.
இவர்களைப்போல மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவர்கள் இனி தோன்றுவார்களா என்பது ஒரு முக்கியமான கேள்விக்குறி !
அவர்களில், இந்த மாதம் 7ஆம் தேதி நம்மை விட்டு மறைந்து சென்ற கலைஞர் மிகவும் வித்தியாசமானவர்.
சாமான்யர்
நாத்திகர்
தமிழ் வித்தகர்
கவிஞர்
கலைஞர்
கதாசிரியர்
ராஜதந்திரி
இவர் அரசை இந்திராகாந்தி அரசு பதவி நீக்கம் செய்தது.
அதே இந்திராகாந்தி துணைகொண்டு எம் ஜி ஆர் அரசை இவர் பதவி நீக்கம் செய்தார்.
எம் ஜி ராமச்சந்திரனால் 13 வருடம் வனவாசம் சென்றார்.
எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகுதான் இவரால் கோட்டையைப் பிடிக்க முடிந்தது.
நாட்டு மக்களை உடன் பிறப்பாகக் கருதினார் – நாட்டுக்குத் தலைவரானார்
தன் மக்களுக்கே நாடு என்று கருதினார் – பாசத்தந்தையானார்
தன் துணையின்றி காங்கிரஸ் இந்தியாவை ஆளமுடியாது என்ற நிலைக்கு தி மு காவைக் கொண்டுவந்தார்
அந்த எதேச்சாதிகாரத்தில் பல ஊழல்கள் பிறக்க வழி வந்தன.
ஆனாலும் இவரை ஊழல் வழக்கில் கைது செய்யமுடியவில்லை
மாறாக இவர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை செல்லவைத்தார்
இவருக்குத் தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தன .
ஆனாலும் தோல்வியில் துவளாதவர்.
எழுதிக்கொண்டே போகலாம் கலைஞரின் நெஞ்சின் நீதியை!
முடிந்தது ஒரு சகாப்தம்.
சரித்திரம் படைத்த கலைஞரின் இறுதி ஊர்வலக்காட்சியின் காணொளி இங்கே ! ( நன்றி : நியூஸ் கிளிட்ஸ் )
கலைஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது படித்த கவிதை இரங்கற்பா மிகவும் பிரபலமானது. அதையும் எம் ஜி ஆர் அவர்கள் இறந்தபோது அவர் பேசிய பேச்சும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மிகச் சிறந்த வரிகள்
LikeLike
நன்றி
LikeLiked by 1 person