Image result for ஓவியன் தூரிகை

ஓவியன் தூரிகை

வண்ணத்தில் மூழ்கி

வண்ண ஓவியமானது !

 

வீணையின் தந்திகளில்

விரல்கள் உறவாடி

இன்னிசையானது !

 

கவிஞன் எழுதுகோல்

வார்த்தையுடன் விளையாடி

இனிய கவிதையானது !

 

கடல் அலைகள் மேகத்தில்

கலந்து பேசி உறவாடி

கொட்டும் மழையானது!

 

விண்ணில் சிறகடித்து

ஒற்றைச் சிறகோடு

சுற்றிய வெண்புறா

வன்முறைக்கு விடை கொடு

அன்புக்கு இடம் கொடு

உண்மைக்கு உயிர் கொடு

அமைதிக்கு கை கொடு

மௌனமாகப் பேசி

மண்ணுலகில்

சமாதானச் சின்னமானது !