சென்ற மாதம் அம்மானையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினோம்.
![]()
அதெல்லாம் சரி , நாமும் ஒரு அம்மானை எழுதுவோமே என்று ஆரம்பித்ததன் விளைவு இந்தப் பாடல்.
பாடல் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் என்றதும் வார்த்தைகள் தாமே வந்துவிழுந்தன.

தன்னுடல் பொருள்ஆவி அனைத்தையும் நாட்டுக்குத்
தந்தவர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர்
என்றுமவர் பணம்பெண் பொருளையும் நாடார்
அன்னவரை வணங்கி ஆடுகின்றேன் அம்மானை
கர்மவீரர் ஆனாலும் தேர்தலிலே தோற்றாரே
காரணம் என்னவென்று சொல்லடீநீ அம்மானை
தேர்தலில் தோற்றது அவரல்ல நாம்தாமென
கர்மத்தைப் புரிந்து ஆடடிநீ அம்மானை
