இவர்தான் சின்னப்பிள்ளை!

 

மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை.
அவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருக்கிறது. 
யார் அந்த சின்னப்பிள்ளை? 

அவர் என்ன சாதனைகள் செய்தார்? 

எதற்காக இந்தப் பட்டம் ?

கடன்கள்

களஞ்சியம் என்ற மகளிர் சுய உதவிக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

களஞ்சியம்

 

  • மகளிர் சுய உதவிக்குழு துவக்கும்போது பதினான்கு மகளிர்கொண்ட சுய உதவிக்குழுவிற்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாயிரம் மகளிர்க்குத் தலைவியானார்.
  • ஏழு மாநில மகளிர் களஞ்சிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
  • தற்போது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம், ராஜஸ்தான்  மத்தியப் பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்று நாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இக்கூட்டமைப்புக்குள் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ எட்டு இலட்சம் மகளிர்.
எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றாலும்,  தன்னம்பிக்கையின் காரணமாக அந்த நாள்முதல் இன்றுவரை தன் கிராமத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களின் வாழ்வியல் உரிமைக்காகப் போராடும் சாதனைப் பெண்ணாக இவர் விளங்குகிறார்
சின்னப்பிள்ளை
இப்படிப்பட்ட இவர் இங்கு இருப்பதால்  தமிழகம் இன்று பெருமை பெறுகிறது !