குவிகம்  இல்லத்தில் வாரம் தோறும் ஞாயிறு மாலையில் அளவளாவல் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனால் இது கொரானா காலம். நான்கு சுவார்களுக்கு மத்தியில் அனைவரும் இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. அறிவு பூரணமான செய்கையும் கூட. 

அப்படியானால்  அளவளாவல்? 

வழக்கம்போல ஏன் வழக்கத்தைவிடச்  சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 

எப்படி? ஜூம் என்ற செயலி மூலம் நம் கணினிகளை  இணைத்து வீடியோ ஆடியோ கலந்துரையாடல் நடத்தலாம் என்று தீர்மானித்தோம். 

நூறு பேர் கூட கலந்து கொள்ள முடியுமாம். 

இதை குவிகம் மின்னளவளாவல் என்று   குறிப்பிடுகிறோம் . 

   

அதன்படி நம் குவிகம் நண்பர்கள் கவிதை வாசிப்பு நிகழ்வு மார்ச் 22 அன்று நடைபெற்றது . 

கவிதையை ஒருவர் படிக்க மற்றவர்கள் அதை விமர்சனம் செய்தது நிறைவாக இருந்தது. 

அதன் ஆடியோ வடிவை இந்த வலைப்பக்கத்தகில் கேட்கலாம். 

https://www.podbean.com/media/share/pb-d6mvs-d6db41?utm_campaign=w_share_ep&utm_medium=dlink&utm_source=w_share

 

 

மார்ச் 29

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு சிறுகதைப் பற்றி நிறைய நண்பர்கள் மின்னளவளாவலில் பேசினார்கள்.  

 

 

ஏப்ரல் 5

இந்த வாரம் தமிழ் இனி என்ற குறும்படத்தைப்  பற்றி அழகாக விமர்சித்தோம் . 

ஏப்ரல் 12 

பிரபல   எழுத்தாளர் , தொலைக்காட்சி நாடக எழுத்தாளர் பா ராகவன்  அவர்களுடன் நேர்காணல். நாம் கேள்விக் கணைகளைத் தொடுக்க அவர் பதில் கூறியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.  

 

இனி வரும் வாரங்களில் இன்னும் தரமான சிறப்பான சம்பவங்கள் மின்னளவளாவலில் வர இருக்கின்றன.