10 Years Of Angadi Theru Vasantha Balan Shares Lot Of Secrets

சூப்பர் மார்க்கெட் கவிதைகள் 

 

1.   கடை கடையாக 
கையேந்தும் மூதாட்டியிடம் 
ஒரு அழுகல் கனியைக் 
கொடுக்கச் சொல்கிறார் 
முதலாளி 

 

2.   மூன்று வகை திராட்சைகளிலும் 
ஒவ்வொன்று எடுத்து 
ருசித்துப் பார்த்தேன் 
ச்சீ.. ச்சீ…  இந்த பழம் 
புளிக்கிறது 

3.   எதற்கெடுத்தாலும் 
என்னையே அழைக்கிறார் 
‘கண்மணி கண்மணி’ என்று 
வெகு உரிமையாக. 
சம்பளம் வாங்கிய உடன் 
வேறு கடைக்கு மாறவேண்டும் 

 

4.  ராணி அக்கா 

நேற்று இரவு அழுதுகொண்டே 

கடையை விட்டுப் போனாள் 

இன்று புதிதாக ஒரு 

பதின் பருவத்தினள்

வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள்